Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்
ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்
ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்
Ebook109 pages35 minutes

ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தப் பனி நிற பிய்ட் கார் தென்னந்தோப்புக்கு நடுவில் போடப்பட்டிருந்த செம்மண் ரோட்டில் சீரான வேகத்தில் ஓடி தொலைவில் மரங்களுக்கு மத்தியில் தெரிந்த கட்டிடத்தை நோக்கிப் போனது. இறுகின முகத்தோடும், தீர்க்கமான யோசனையோடும் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள் பஞ்சமி.
 பஞ்சமிக்கு இருபத்தைந்து வயது. லேசாய் பழுத்த தக்காளி நிறம். ஒவ்வொரு மாதமும் ப்யூட்டி பார்லர்க்காக இரண்டாயிரம் ரூபாயை செலவழிப்பவள். உடம்பு எல்லா பக்கமும் 'கிண்'ணென்று ஆரோக்கியம் காட்டியது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் காதம்பரி பேப்பர் போர்ட்ஸ் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டைரக்டரான ரகுநாதனுக்கு வாழ்க்கைப்பட்டவள். பஞ்சமியின் பூர்வாசிரமத்தை கிளறினால் கொஞ்சம் முடை நாற்றம் கிளம்பும். பஞ்சமியின் அம்மா ரேணு என்கிற ரேணுகாம்பாள் ஒரு ( கர்நாடக ஸ்டேட்டின் ) கிராமத்திலிருந்து சினிமா ஆசையால் மெட்ராஸ்க்கு ஓடி வந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஒரு மூன்றாந்தர டைரக்டருக்கு சின்ன வீடாக இரண்டு வருஷம் குடித்தனம் பண்ணினதில் பஞ்சமி அவதரித்தாள். அவள் அவதரித்த ஒரு வருஷத்திற்குள் டைரக்டர் மண்டையைப் போட அடுத்த வருஷம் அம்மாக்காரி ரேணு ரத்தப்புற்றுக்கு பலியாக பஞ்சமி ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் யாராலோ சேர்க்கப்பட்டாள். பஞ்சமிக்கு படிப்பு வந்தது. அரசாங்க மான்யத் தொகையில் ஒரு டிகிரியை முடிப்பதற்குள் உடம்பு பாலீஷ் போட்ட ஆப்பிள் சைஸுக்கு வந்தது. காதம்பரி பேப்பர் போர்ட்ஸுக்கு இண்டர்வ்யூக்காக போனவள் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் ரகுநாதனின் மனதை நொறுங்கப் பண்ணி இல்வாழ்க்கையில் பார்ட்னராய் இணைந்தாள். ரகுநாதனின் அப்பா சப்தகிரிக்கு பஞ்சமியின்... பூர்வாசிரமம் மனசை நெருடினாலும், மகன் ஆசைப்பட்டதற்காகவும், பஞ்சமியின் புத்திசாலித்தனத்திற்காகவும் அவளை மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்தார்.
 செம்மண் பாதை முடிந்து போயிருக்க. கட்டிடத்தின் காம்பெளண்ட் குறுக்கிட்டது. காரை நிறுத்தி ஹாரனை சப்தித்தாள் பஞ்சமி.தென்னை மட்டைகளை இழுத்து போட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞன் ஒடி வந்தான், கரனை கரனையாய் கைகளும், கால்களும் இழைத்த பலகை மாதிரியான மார்பும் வியர்வையில் மினுமினுத்தது. தூக்கிக் கட்டியிருந்த லுங்கியை அவசர அவசரமாய் கீழே இறக்கிவிட்டபடி கேட்டை அகலமாய் திறந்து விட்டான்.
 "வணக்கம்மா."
 அவனுடைய வணக்கத்தை சட்டை செய்யாமல் காரை உள்ளே செலுத்திக் கொண்டுபோய் மட்டை வேய்ந்த போர்டிகோவுக்கு கீழே நிறுத்தினாள். இறங்கினாள். கண்களை கவ்வியிருந்த குளிர்கண்ணாடியை கழற்றி பிளவுஸின் இடைவெளியில் சொருகிக் கொண்டு படியேறினாள்.
 "கனகு..."
 "அம்மா..."
 "தேங்காய் லோடு இன்னிக்கு எத்தனை போச்சு...?"
 "எட்டு லாரிம்மா..."
 "வேலை செஞ்ச ஆட்களெல்லாம் போயிட்டாங்களா?"
 "போயிட்டாங்கம்மா..."
 "கூலி...?"
 "குடுத்தாச்சம்மா."
 "பெரியவரோ... சின்னவரோ... போன் பண்ணியிருந்தாங்களா...?"
 "இல்லேம்மா..."
 முன்னறையிலிருந்த சோபாவுக்கு போய் சாய்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டாள் பஞ்சமி. நெற்றி வியர்த்திருக்க கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்டாள்.
 "அம்மா... செவ்விளநீ வெட்டித்தரட்டுங்களா?"இப்ப வேண்டாம். கொஞ்ச நேரம் போகட்டும்... அந்த லாரி லோடு விபரங்களை டயரியில்தானே குறிச்சுவெச்சுருக்கே...?"
 "ஆமாம்மா."
 "போய் கொண்டா... அவன் கொண்டு வந்து கொடுத்தான்."
 பஞ்சமி டயரியைப் புரட்டிக்கொண்டே கேட்டாள். "குளிச்சியா. கனகு...?"
 "இல்லேம்மா..."
 "போய்... தோட்டத்து கிணத்துல நல்லா குளிச்சுட்டு வா..."
 "அ... ம்... மா..."
 "சொன்னது காதுல விழலையா...? போய் குளிச்சுட்டு வா..." பஞ்சமி எரிந்து விழுந்ததும் கனகு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும் பஞ்சமி டயரியை மூடி வைத்துவிட்டு அறையின் மூலையிலிருந்த டெலிபோனை நோக்கிப் போனாள். ரிஸீவரை எடுத்துக் கொண்டு டயலைச் சுழற்றி மறுமுனையில் ரிஸீவர்எ டுக்கப்பட்டதும் பேசினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224365418
ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்

Read more from Geeye Publications

Related to ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்

Related ebooks

Related categories

Reviews for ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம் - Geeye Publications

    1

    அந்த ராத்திரி நேரத்தில் நான்கு மூலைகளிலும் கறுப்புத் தடவி வந்த அந்த தந்தி, ஹாஸ்டல் வார்டன் மதர் மார்ட்டினோவை பீதி கொள்ள வைத்தது. வாசல் கதவுக்கு சரியாய் நின்ற அந்த டெலிகிராபிக் ஆசாமியிடம் கேட்டாள். மேலுதட்டில் வியர்வை அரும்ப.

    டெலிகிராம் யாருக்கு கிருஷ்ணன்?

    அவன் சொன்னான்.

    மிஸ் ரம்பா. செக்கண்ட் பி.ஏ.எக்னாமிக்ஸ்... டெலிகிராமை நாளைக்கு காலையிலதான் கொண்டு வந்து கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா டெலிகிராம்ல கெட்ட விஷயம். அதான் உடனே வந்தேன்.

    மதர் மார்ட்டினோ கை நடுங்க கையெழுத்திட்டுவிட்டு டெலிகிராமை வாங்கிக் கொள்ள டெலிகிராபிக் கிருஷ்ணன் நான் வர்றேன் மதர் - என்று சொல்லி நகர்ந்தான்.

    மதர் தந்தியின் வாயைப் பிரித்தாள். வாய் பிளந்ததும் சினிமாஸ்கோப் அகலத்தில் அந்த இளஞ்சிவப்பு காகிதம் விரித்து டைப் அடித்து ஒட்டப்பட்டிருந்த வாசகங்களைக் காட்டின.

    MOTHER EXPIRED. START IMMEDIATELY - SOMU UNCLE.

    மதர் மார்ட்டினோ சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள்.

    மணி 12. 20.

    பக்கத்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஆயா பொன்னம்மாவை தொட்டு எழுப்பினாள்.

    பொன்னம்மா...

    அவள் ‘திடும்’மென்று கண்விழித்து மதர் மார்ட்டினோவைப் பார்த்ததும் அம்மா என்று அரக்க பரக்க எழுந்து நின்றாள். மார்ட்டினோ சொன்னாள்.

    போய் ரம்பாவை கூட்டிகிட்டு வா...

    அவள் தலையைச் சொறிந்தாள்.

    எந்த ரம்பாம்மா?

    ஏ’ பிளாக் நாற்பத்தியொன்னாம் நெம்பர் ரூம்ல சிவப்பா ஒரு பொண்ணு இருக்குமே... அந்தப் பொண்ணைத்தான்... போய் கூட்டிகிட்டு வா...

    இ...இந்நேரத்துலஎதுக்கம்மா?, சொல்றேன். போய் கூட்டிகிட்டு வா...

    பொன்னம்மா அவிழ்ந்து போன தன் கூந்தலை இரண்டு கைகளாலும் வாரி முடிச்சிட்டுக் கொண்டே வராந்தாவில் வேகவேகமாய் விசுக்விசுக்கென்னு நடந்து போனாள்.

    ஐந்து நிமிஷம் கழித்து

    கலவரமான ரம்பாவோடு வந்தாள். ரம்பாவுக்கு இருபத்தியோரு வயது இருக்கலாம். நல்ல சிவப்பு நிறமாக இருந்தாலும் கொஞ்சம் அழகில் தவறியிருந்தாள். தூக்கலான உதடுகளும், புடைத்த மாதிரியான நெற்றியும், சராசரி அழகுக்கும் கீழே அவளைத் தள்ளியிருந்த்து. காஞ்சிபுரத்தில் வீடு. அவள் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் இருக்கும் போதே அவளுடைய. அப்பா ‘அமரர்’ பதவிக்கு ஆசைப்பட்டுவிட முப்பத்தேழாவது வயதிலேயே ரம்பாவின் அம்மாவுக்கு சுமங்கலி பதவியிலிருந்து டிபிரமோஷன்.

    மதர்...

    கண்களில் மிச்சமிருந்த தூக்கக் கலக்கத்தோடும் கொஞ்சம் பயத்தோடும் மதர் மார்ட்டினோவை நெருங்கி நின்றாள். மார்ட்டினோ அவள் தோளைத் தட்டிக் கொடுத்தாள். மெல்லிய குரலில் கேட்டாள்.

    அம்மாவுக்கு உடம்பு செளகரியம் இல்லாம இருந்ததா?

    ரம்பா திடுக்கிட்டாள்.

    எதுக்காக கேக்கறீங்க மதர்...

    மதர் கையில் மறைத்து வைத்திருந்த தந்தியை நீட்ட அதை பதட்டமாய் வாங்கி பார்த்தாள் ரம்பா...

    தந்தி வாசகம் அவளை நொறுக்க சட்டென்று உடைந்து முகம் விகாரப்பட்டு ‘அம்மா’ என்று அவஸ்தையாய் வீறிட்டு கண்களில் நீரை மளமளவென்று காட்டினாள்.

    மதர் அவளை நெருங்கி முதுகின் மேல் கையை வைத்தாள்.

    இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை கர்த்தர் உனக்கு தரட்டும்.

    ரம்பா அழுகையை அடக்கி விம்மலை மென்று கொண்டே சொன்னாள்.

    மதர்! நா... நான்... இ... இப்பவே... புறப்படணும்.

    எப்படிம்மா போவே...? இந்நேரத்துக்கு காஞ்சிபுரம் போக உனக்கு பஸ் இருக்குமா...?

    புடவைத் தலைப்பால் கண்களினின்றும் பீறிட்ட கண்ணீரை ஒற்றிக்கொண்டாள் ரம்பா..."

    திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் போயிட்டா... காஞ்சிபுரம் மார்க்கமா போகிற ஏதாவது ஒரு பஸ்ஸை பிடிச்சுடுவேன் மதர்.

    துணைக்கு யாரையாவது கூட்டிட்டுபோறியா?

    வேண்டாம் மதர்... மெட்ராஸிலிருந்து காஞ்சிபுரம் போக துணை எதுக்கு? ஒன்றரை மணி நேர ஜர்ணிதானே...? நானே போயிடுவேன்.

    பஸ் ஸ்டாண்ட் போய் பஸ்ஸில் ஏறிட்டா பயமில்லை. பஸ் ஸ்டாண்ட் வரைக்குமாவது உனக்கு துணை வேணும்மா.

    வே... வேண்டாம் மதர்... நானே போயிடுவேன்.

    "நோ... நோ...! பொன்னம்மா...! வாட்ச்மேன் நரசய்யாவைக் கூப்பிடு.’’

    மதர் மார்ட்டினோ சொல்ல பொன்னம்மா இருட்டில் வாசற்படி இறங்கி காம்பௌண்ட் கேட்டைநோக்கிப் போனாள். மதர் ரம்பாவை ஏறிட்டாள்.

    அம்மாவுக்கு இப்போ என்ன வயசு...?

    நாற்பத்திரெண்டு... மதர்...

    போனவாரம் ஊருக்கு போயிருந்தப்போ... அம்மா நல்லாத்தானே இருந்தாங்க...?

    "ஆமா... மதர்...’’

    இப்போ திடீர்ன்னு எப்படி?

    அம்மாவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும்.

    அது யாரு சோமுஅங்கிள்!

    பக்கத்து வீட்டுக்காரர். சொன்ன ரம்பா விசும்ப, மதர் மறுபடியும் அவளுடைய தோளைத் தட்டினாள்.

    இதோ பாரம்மா ரம்பா! நமக்கு வேண்டியவங்க இறந்துபோனா... அந்த துக்கத்தை தாங்கிக்கிறது கஷ்டம்தான். இறப்புங்கிறது இயற்கையா வர்ற ஒண்ணு. அது எல்லோருக்குமே உண்டுங்கிற உண்மையை மனசுல நிறுத்தி வெச்சிகிட்டா... இந்த துயரத்தோட கனம் குறையும்...

    மதர் மார்ட்டினோ சொல்லிக் கொண்டிருக்கும்போதே

    வாட்ச்மேன் நரசய்யா வேகவேகமாய் ஓடி வந்தான், பவ்யமாய் மார்புக்கு குறுக்காய் கைகளைக் கட்டி தள்ளி நின்று அம்மா என்றான்.

    மதர் அவளை ஏறிட்டாள்.

    நரசய்யா! இந்த பொண்ணோட அம்மா காலமாயிட்டதா தந்தி வந்திருக்கு... பொண்ணுக்கு ஊரு காஞ்சிபுரம். இந்நேரத்துக்கு பஸ் ஸ்டாண்ட் போனா காஞ்சிபுரம் போகிற பஸ் கிடைக்குமா?

    வேண்டிய பஸ் கிடைக்கும்மா

    நீ இந்தப் பொண்ணை கூட்டிகிட்டு போய்... திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் விட்டுட்டு வர்றியா...!

    சரிங்கம்மா...

    பஸ்ஸில ஏத்திட்டுதான் வரணும்... சொன்ன மதர்,

    Enjoying the preview?
    Page 1 of 1