Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panam Pagai Paasam
Panam Pagai Paasam
Panam Pagai Paasam
Ebook259 pages1 hour

Panam Pagai Paasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணம் பகை பாசம் இந்த மூன்றும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பது இக்கதையின் மூலம் விளங்குகிறது. பணம், பதவி இவை இரண்டிற்கும் ஆசைப்பட்டு தர்ஷினியின் வாழ்வில் விளையாடும் சிவகாமி. சந்திரசேகரர் தன் மகள்மேல் வைத்த அளவு கடந்த பாசமே, பாதகமாய் முடிந்ததன் பின்னணி என்ன? ஆதரவற்றவளாய் வாழ்வில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கும் தர்ஷினிக்கு, ஆதரவாய் இருந்து ராஜேஷ் செய்யும் செயல்கள் என்ன? வாசிப்போம் பணம் பகை பாசம்...

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580100709975
Panam Pagai Paasam

Read more from Indira Soundarajan

Related to Panam Pagai Paasam

Related ebooks

Reviews for Panam Pagai Paasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panam Pagai Paasam - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பணம் பகை பாசம்

    Panam Pagai Paasam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    1

    அழகான அந்த சிவப்பு நிற படகுக்கார் திருநெல்வேலி கடந்து ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காரின் உள்ளே பின் சீட்டில் அமர்ந்த நிலையில் லேப்டாப்பில் மெயில்களை பார்த்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி. முன்னாலே வெள்ளை யூனிபார்ம் அணிந்த டிரைவர் கணபதி காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

    கணபதிக்கு 45 வயதாகிறது. தர்ஷினிக்கு டிரைவராக வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் தர்ஷினிக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதெல்லாம் கணபதிக்கு நன்றாக தெரியும்.

    வெளியே குளிர்ந்த இயற்கைச் சூழல். பக்கவாட்டில் பரந்த சமவெளியில் ராட்சச விண்ட்மில் விசிறிகள் ஒரு மிதமான வேகத்தில் சுழன்றபடியே மின் உற்பத்தி செய்து கொண்டிருந்தன. தரைப்பரப்பே தெரியாதபடி பச்சை பொசிந்து கிடந்தது. இப்படிப்பட்ட இயற்கைச் சூழலை மிக விரும்புபவள் தர்ஷினி.

    ஆரல்வாய்மொழி விண்ட்மில் ஏரியாவில் அவள் பெயரில்கூட இரண்டு விண்ட்மில்கள் இருக்கின்றன. அதைப் பார்த்துவிட்டு நாகர்கோவிலுக்கு அப்பால் உள்ள மார்த்தாண்டம் என்கிற ஊரில் இருக்கும் அவளது தேன் பண்ணையைப் பார்க்கத்தான் காரில் போய்க் கொண்டிருந்தாள் தர்ஷினி. இந்த பகுதிப் பக்கம் வந்தாலே மிக உற்சாகமாகிவிடுவாள் தர்ஷினி. கார் ஏசியைக்கூட அணைக்கச் சொல்லிவிடுவாள். அப்போதுகூட சொன்னாள்.

    கணபதி... கொஞ்சம் ஏசியை கட் பண்ணிட்டு கண்ணாடியை இறக்கி விடுறீங்களா?

    மறுநொடியே கண்ணாடிகள் கீழிறங்கிட ஏசியும் அடக்கப்பட்டு வெளிக்காற்று உட்புக ஆரம்பித்தது. சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை விமானத்தில் வந்து பின் தூத்துக்குடியில் இருந்து கார் பயணம்.

    கிட்டத்தட்ட 6 மணி நேரமாக பயணித்தபடியே இருந்ததால் ஓர் அலுப்பு ஏற்பட்டு கைகளையும் பிசைந்து முறுக்கிவிட்டுக்கொண்டு வெளியே பார்த்தாள்.

    கேரளத்து சாயலில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே மண்ணாக நாகர்கோவிலின் புறநகர் பகுதிகள் கண்ணில் பட்டன. நல்ல குளுமை! வளமை!

    சென்னையில் வேளச்சேரியில் இருக்கிறது தர்ஷினியின் பங்களா. பங்களாவைச் சுற்றிலும் மிகவே நெருக்கமாக கட்டடங்கள். சாலையிலும் சொல்லி மாளாத டிராபிக். ஊர்ந்து ஊர்ந்துதான் செல்ல வேண்டும். ஏனோ அந்த டிராபிக் நெருக்கடி தர்ஷினிக்கு அப்போது ஞாபகம் வந்து நாகர்கோவிலின் இயற்கை அழகை வெகுவாக ரசிக்க வைத்தது.

    இப்படி அவள் அடிக்கடி வருபவள்தான். அப்படி வந்ததால்தான் ‘தர்ஷினி புராடெக்ட்ஸ்’ என்கிற நிறுவனத்தின் ஜேஎம்டியாக அவளால் இருக்கவும் முடிகிறது. புற அழகில் கண்கள் லயித்திருக்க கைபேசியில் ஒரு மெயிலுக்கான சிணுங்கல். உடனேயே குனிந்து தன் கைபேசியை திறந்து பார்க்கத் தொடங்கினாள் தர்ஷினி. குவாலிட்டி மேனேஜர் கருணாகரன் ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார்.

    மேடம்...

    நமது பிராண்ட் தேனில் கலப்படம் இருப்பதாக ஒருவர் புட்கார்ப்பரேஷனுக்கு புகாரளித்திருக்கிறார். அதற்கு சாட்சியாக தான் வாங்கிய தேன் பாட்டிலை லேபிற்கு அனுப்பி அதை பரிசோதித்த சோதனை முடிவுகளையும் இணைத்துள்ளார். நான் புட்கார்ப்பரேஷன் அலுவலகம் சென்று அந்த பாட்டிலை பார்த்தேன். அது நம் தயாரிப்பே அல்ல. நம் பெயரில் யாரோ போலியாக தயாரித்து மார்க்கெட்டும் செய்துள்ளனர். நம் பெயரைக் கெடுத்து நம் வியாபாரத்தை சரிப்பதுதான் அவர்கள் நோக்கம்.

    இது தொடர்பாக நானும் நம் ஜெனரல் மேனேஜரும் போலீஸ் கம்ப்ளைண்ட் தர தீர்மானித்துள்ளோம். உங்கள் கருத்துடன் அனுமதியையும் எதிர்பார்க்கிறேன்.

    குறிப்பை படித்த தர்ஷினியின் முகம் உடனே வாடியது. சூழலின் ஈரக்காற்றை மீறிக்கொண்டு அவளின் பிறைபோன்ற நெற்றியில் வியர்வை பூக்கத் தொடங்கியது. உடனேயே குறிப்பை அனுப்பிய கருணாகரனை அழைக்கத் தொடங்கினாள். அவரும் லைனில் வந்தார்.

    யெஸ் மேடம்...

    உங்க மெயிலைப் பார்த்தேன். முதல்லபோய் கம்ப்ளைண்ட் கொடுங்க. இந்த ட்யூப்ளிகேட்டை யார் செஞ்சாங்கன்னும் எனக்கு கட்டாயம் தெரியணும். போலீஸ் ஒரு பக்கம் விசாரிக்கட்டும், நாம ஏன் பிரைவேட் டிடெக்டிவ்வை இந்த விஷயத்துக்கு யூஸ் பண்ணக்கூடாது?

    அவசியமே இல்ல மேடம்... நமக்கு ஒரே எதிரிதான். அது ‘சூரியா புராடெக்ட்ஸ்’ சிவகாமி மேடம். என்னவோ தெரியல... நம்மளை அழிக்க அவங்க பலவிதமான குறுக்கு வழிகளில் போறாங்க. பலதடவை அவங்கள கையும்களவுமா பிடிச்சும் அவங்க திருந்துற மாதிரி தெரியல மேடம்...

    கருணாகரனின் பதில் தர்ஷினியை ஓர் ஆழமான பெருமூச்சை விடச்செய்தது. பின் பேசினாள்.

    ஆமா... இது எம்டிக்கு, ஐ மீன் என் அப்பாவுக்கு தெரியுமா?

    தெரியாது மேடம்...

    ஏன் அவர்கிட்ட சொல்லாம இருக்கீங்க?

    சார், சிவகாமி மேடம் பெயரைச் சொன்னாலே ரொம்பவே டென்ஷன் ஆயிடுறாரு... அது அவரை பார் வரை தள்ளிட்டுப் போயிடுது. பல தடவை நான் இதை பார்த்துட்டேன். அதனால் சிவகாமி மேடம் பிரச்னைன்னா சாரிடம் கொண்டே போறதில்லை மேடம்!

    கருணாகரனின் பதில் தர்ஷினிக்குள் ஆழமான ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேஷன். அப்புறம்... அந்த சிவகாமி மேடத்தை நான் சந்திக்கணும். கேன் யு கெட் ஹெர் அப்பாய்ன்ட்மெண்ட்?

    மேடம்...

    அதிர்ச்சியடையாதீங்க. ஏன் இப்படி எங்ககூட மோதுறீங்கன்னு நான் நேர்லயே கேட்டுடறேன். என்ன பதில் சொல்றாங்கன்னும் பார்க்கிறேனே?

    நாமதான் மேடம் அவங்களோட காம்ப்படிட்டர். அப்ப மோதத்தானே செய்வாங்க?

    மோத முடிவு செய்துட்டா தரத்துல மோது, விலைல மோது, இது என்ன டர்ட்டி கேம்?

    உங்க குற்றசாட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அது யாரோ, எவரோன்னா உங்களால என்ன மேடம் பண்ண முடியும்?

    கையும் களவுமா அவங்களப் பிடிச்சதா சொன்னீங்களே?

    பிடிச்சும் பிரயோஜனமில்ல மேடம்... நாம் பிடிச்ச ஆட்கள் பல்டி அடிச்சிட்டாங்க.

    அப்ப இதுக்கு என்னதான் முடிவு?

    நாம நம்ம ஹனிபிளான்ட்ல இருந்து குரோசரீஸ் யூனிட் வரை எல்லாத்தையும் மூடிடணும். அவங்க பிராண்ட் மட்டும்தான் மார்க்கெட்ல விற்கலாம். இதுதான் அவங்க எதிர்பார்க்கிற முடிவு...

    ரொம்பத்தான் பேராசை அவங்களுக்கு. இதை விடக்கூடாது கருணாகரன்.

    அதனாலதான் இந்த முறை போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு நம்ம கம்பெனி லாயரையும் பார்த்து லீகல் நோட்டீஸ் அனுப்பலாம்னு இருக்கோம்...

    ரைட்... முதல்ல அதை செய்யுங்க. அப்படியே நம்ப புராடெக்ட்ல கொஞ்சம்கூட குவாலிட்டி குறைஞ்சுடக்கூடாது. எல்லாரும் பொறுப்பா வேலையப் பாருங்க...

    மேடம்... இப்ப நீங்க நம்ப தேன் பண்ணைக்கு விசிட் அடிக்கப் போறதா ஜிஎம் சொன்னார். 25 டன்னுக்கு நமக்கு இந்த மாசம் ஆர்டர் இருக்கு... ஆனா நம்ப பண்ணைல கிடைக்கிறது பத்து டன் அளவுக்குத்தான். இன்னும் 15 டன் தேவைக்கு அங்க யார்க்கிட்டயாவது கிடைக்குமான்னு பாருங்க மேடம்...

    மார்க்கெட்டிங் மேனேஜர் என்கிட்ட பேசினார். இன்னிக்கு இங்க தங்கி அந்த விஷயத்தை நான் முடிக்காம வரப்போறதில்ல. டோன்ட் ஒர்ரி...

    தேங்க்யூ மேடம்...

    போனை தர்ஷினி கட் செய்தபோது, கார் அவளின் தேன் பண்ணைக்குள் நுழைந்திருந்தது. பண்ணையின் மெயின் பில்டிங் முன் கார் நிற்கவும் ஓடி வந்து காரின் கதவை திறந்தார் பண்ணையின் சூபர்வைசர் தாணுப்பிள்ளை.

    மிஸ்டர் பிள்ளை... எதுக்கு இப்படி கதவைத் திறந்துவிட்டு உங்கள தாழ்த்திக்கிறீங்க. இனி இப்படி நீங்க நடக்கவே கூடாது. நீங்க என் அப்பா மாதிரி... என்று சற்று கண்டிப்புடன் பேசினவளை பிள்ளையும் பார்த்து சற்று அசடுவழியச் சிரித்தார். பின் இது உங்க ஸ்தானத்துக்கு கொடுக்கிற மரியாதைம்மா... என்று சமாளித்தார்.

    நோ... இதெல்லாம் வெள்ளைக்காரத்தனம்! நான் நம்ப ஹிஸ்ட்ரியை டீப்பா வாசிச்சிருக்கேன். நம்மையெல்லாம் அடிமையா அவன் நடத்தின வரலாறு எனக்கு முழுசும் தெரியும். அவங்க 1947லேயே நம்ம நாட்டைவிட்டு போயிட்டாங்க. ஆனா அவங்க ஏற்படுத்திய தாக்கம் மட்டும் கொஞ்சம்கூட குறையவேயில்ல. காபி, டீ குடிக்கிறது, சார், மேடம்னு கூப்பிடுறது, குட்மார்னிங் சொல்றது, இப்படி அவங்க உருவாக்கின கலாசாரம் ரொம்ப ஆழமா இங்க பரவிக்கிடக்கு...

    தர்ஷினி பேசிக்கொண்டே மெயின் பில்டிங்கில் உள்ள தனது அறையை நோக்கி நடந்தாள். பின்தொடர்ந்தார் தாணுப்பிள்ளை.

    உள்ளே சிசிடிவி கேமரா உபயத்தில் பெரிய டிவி திரையில் பண்ணையின் எல்லா பாகங்களுமே பளிச்சென்று தெரிந்தன. கிட்டத்தட்ட 2 ஆயிரம் தேனீப் பெட்டிகள். ஒவ்வொரு பெட்டி அருகிலும் ஒரு பூச்செடி... கிட்டத்தட்ட எல்லாவகை பூச்செடிகளிலும் இருந்து பூக்களும் பூத்திருந்தன. இப்படி பெட்டிக்கு பக்கத்திலேயே பூச்செடிகளை வைத்தால் தேனுக்காக தேனீக்கள் வெகுதூரம் சென்று வரத்தேவையில்லை என்று அங்கேயே செடிகளை வளர்க்கும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தியவன் அந்த தேன் பண்ணையின் ஏப்பிக் கல்ச்சரிஸ்டான ராஜேஷ் என்பவன்.

    அவன் ஒவ்வொரு பெட்டியாய் திறந்து பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தான். அப்படி அவன் செய்வதை சிசிடிவி கேமரா வழியாக தன் அறைக்குள் இருக்கும் டிவி வழியாக பார்க்கத் தொடங்கியிருந்தாள் தர்ஷினி. தாணுப்பிள்ளையும் டிவியைப் பார்த்தார்.

    ராஜேஷ் வந்ததுல இருந்தே நம்ப தேன் பண்ணைதான் மேடம் இந்த ஏரியாவுல டாப். முன்னெல்லாம் 5 நாளைக்கு ஒரு தடவைதான் பெட்டியை திறந்து அடையை வெளியே எடுப்போம். இப்ப 3 நாளா மாறிடுச்சு. ஒரு பெட்டில சராசரியா 5 கிலோ தேன் கிடைக்குது... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தர்ஷினியின் முகத்தில் ஓர் அசுர மாறுதல். அவள் டிவி வழியாக பார்த்த காட்சியில் ராஜேஷ் நின்று பெட்டியை திறந்தபடி இருக்கையில் பக்கத்து பூமரத்தில் ஒரு படம் விரித்த நாகம்.

    அந்த நாகத்துக்கு முதுகைக்காட்டியபடி தேனீப் பெட்டியின் அடை ஸ்லேட்டை எடுத்து அதில் எவ்வளவு தேன் திரண்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். இவன் தாணுப்பிள்ளையின் அக்கா மகனும்கூட! தாணுப்பிள்பிள்ளையும் தர்ஷினியோடு அக்காட்சியைப் பார்த்தார்.

    அவன் கொஞ்சம் பின்னால் வந்தாலும் அந்த நாகம் முதுகைக் கொத்திவிடும்! நாகமும் சீறிய படியே காத்திருந்தது...

    2

    தர்ஷினி மிக வேகமாய் அந்த அறையிலிருந்து ராஜேஷ் இருக்கும் இடம் நோக்கி ஓடத் தொடங்கிட தாணுப்பிள்ளையும் உடன் ஓடினார்.

    பிள்ளை... தப்பா எதுவும் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க. என்னன்னு தெரியல. இன்னிக்கு நாளே நல்லபடியா இல்லை என்று முணுமுணுத்தபடிதான் ஓடினாள் தர்ஷினி, பிள்ளை அவளைக் கடந்து முன்னால் ஓடினார்.

    ஓடியபடியே, ராஜேஷ் உன் முதுகுக்குப் பின்னால பூமரத்துல பாம்பு படம் விரிச்சிக்கிட்டு நிக்குது. பின்னாலே போகாம முன்னால வா... என்றும் குரல் கொடுத்தார்.

    அவர் குரல் காதில் விழுந்த மாத்திரத்தில் ராஜேஷூம் வேகமாய் முன்வந்து, பின் திரும்பியும் பார்த்தான். பூமரத்தில் நாகம் படம் விரித்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் பிள்ளை முதலில் வர, தர்ஷினி பின்னால் வேகமாய் ஓடிவந்து சேர்ந்தாள்.

    ராஜேஷ் முகத்தில் சற்று அதிர்ச்சி. தர்ஷினியைப் பார்க்கவும், குட் மார்னிங் மேடம்... என்றான். அப்போது பாம்பும் படத்தை தழைத்து அந்த சரக்கொன்றை பூமரத்தில் இருந்து மறையத் தொடங்கியது. தர்ஷினியின் பார்வை அதன்மேல்தான் இருந்தது. அது கண்களைவிட்டு மறையவும்தான் திரும்பினாள். பிறகே ராஜேஷையும் பார்த்தாள்.

    குட்மார்னிங் மேடம்...

    குட்மார்னிங்...! எங்க பேட்மார்னிங் ஆயிருமோன்னு பயந்துட்டோம் ராஜேஷ். தேங்க்ஸ் டூ சிசிடிவி கேமரா. அது இருந்ததாலதான் டிவில பாம்பைப் பார்த்துட்டு ஓடிவந்து உங்களை எச்சரிக்க முடிஞ்சது!

    இது இங்க சகஜம் மேடம். தேன் பண்ணை, கோழிப் பண்ணைன்னாலே பாம்புகள் மோப்பம் பிடிச்சு வந்துடும். நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்.

    இப்ப மட்டும் உங்க மாமா குரல் கொடுக்கலைன்னா அவ்வளவுதான்...

    தர்ஷினி நடந்தபடியே பேச்சை வளர்த்தாள்.

    அப்கோர்ஸ்... எனக்கு ஆயுசு கெட்டி. அதுதான் மாமா ரூபத்துல வந்து காப்பாத்திடுச்சு அவனும் நடந்துகொண்டே சொன்னான்.

    இருந்தாலும் பயமா இருக்கு ராஜேஷ். ஒரு நல்ல பாம்பை என் லைப்ல இப்பத்தான் நான் நேர்ல பார்க்கிறேன்!

    விடுங்க மேடம்... நீங்க இப்ப இங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். நம்ப அவுட்புட்டும் இப்ப 30 சதவீதம் அதிகமாகியிருக்கு. மாமா சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்!

    சொன்னார்... எனக்கும் அதைக்கேட்டு ரொம்ப சந்தோஷம். கூடவே ஒரு வருத்தமான விஷயத்தையும் சொல்லப்போறேன்!

    என்ன மேடம் அது?

    ஆபீஸ்ல போய் பேசுவோமா?

    ப்ளீஸ் மேடம்...

    சொன்னபடியே தேன்பண்ணை கட்டடத்தில் தர்ஷினியின் ஏசி அறைக்குள் சென்று அவள் தம் சீட்டில் அமர்ந்த நிலையில் அவள் எதிரில் ராஜேஷூம், தாணுப்பிள்ளையும் அமர்ந்தனர்.

    என்ன மேடம் அந்த வருத்தமான விஷயம்?

    சூர்யா புட் புராடெக்ட்ஸ் நமக்கு போட்டியா பிசினஸ் பண்றது தெரியும்தானே?

    நல்லாத் தெரியும் மேடம். அவங்களால ஏதாவது பிரச்னையா?

    ஆமாம். நம்ப பிராண்டைப்போலவே டூப்ளிகேட்டை தயார் பண்ணி வெல்லம் கலந்து மார்க்கெட் பண்ணியிருக்காங்க...

    கம்ப்ளைண்ட் பண்ணலாமே மேடம்...

    எவிடென்ஸ் வேணுமே? ரொம்ப சாமர்த்தியமா பண்றாங்க. நாம மார்க்கெட் பண்ணவங்கள பிடிக்கலாம்னா ஆள் தலைமறைவாயிடுறாங்க. ஏஜென்சி அட்ரசை தேடிப்போனா அப்படி ஒரு ஏஜென்சியும் இல்லை. மீறிப் பிடிச்சாலும் சூரியா புராடெக்ட்ஸ் சிவகாமிய காட்டிக்கொடுக்க மாட்டேங்கிறாங்க!

    புரியுது மேடம்... நேர்மையா நடக்கறவங்களுக்கு ஒருவழிதான். ஆனா தப்பா நடக்கறவங்களுக்கு பல வழிகள்னு சொல்வாங்க. அது சரியாத்தான் இருக்கு.

    "நான் இப்ப இங்க வரும்போதுதான் குவாலிட்டி கண்ட்ரோல் டிபார்ட்மெண்ட்ல இருந்து மிஸ்டர் கருணாகரன் போன்

    Enjoying the preview?
    Page 1 of 1