Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சத்தமில்லாத நயாகரா
சத்தமில்லாத நயாகரா
சத்தமில்லாத நயாகரா
Ebook139 pages33 minutes

சத்தமில்லாத நயாகரா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரவக்காட்டை கார் தாண்டியபோது மணி 7-45.
 நீலகிரியையே ஒரு கறுப்பு பெட்ஷீட்டால் போர்த்திவிட்ட மாதிரி இருட்டு,
 அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் பிறையை மேற்குத் திசை எப்போதோ தின்று ஏப்பம் விட்டிருந்தது. ஸ்விட்சைத் தட்டி விட்ட மாதிரி எல்லா நட்சத்திரங்களும் வானக் கறுப்பில் ஜோராய் மின்னின. காரின் ஹெட்லைட் பீறிட்ட வெளிச்சம் பனிப்புகையை அறுத்து வழிகொடுக்க, கார் ஜிவ்வென்று வளைவுகளில் வழுக்கியது.
 பாலசுந்தரம் ஸ்டீரியங்கை நிதானமாய் கையாண்டார். வயிற்றுக்குள் போன ஸ்காட்ச் விஸ்கி இப்போதுதான் கண்ணைத் திறந்து பார்க்க ஆரம்பித்திருந்தது. போதை புகையாய் மேலே எழும்பி, பாலசுந்தரத்தின் கண்ணுக்குள்ளும், தலைக்குள்ளும் 'விர்' என்றது.
 இந்த 'கிக் அவருக்குக் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. குவார்ட்டர் விஸ்கி உள்ளே போனாலும் சந்தோஷம் காட்டாத அவர் கண்கள், இந்த ரெண்டு பெக் விஸ்கிக்கு ஏராளமான சந்தோஷம் காட்டியது.
 உடம்பு பூராவும் பட்டு நூல் இழைகிற சைஸில் அந்தக் குறு குறுப்பு, மனசில் ஓடிய அதீதமான சந்தோஷத்தை மனைவியிடம் காட்ட எண்ணினார் பாலசுந்தரம்.
 "என்ன சிவகாமி... அப்படி தள்ளிப் போய் ஓரமாய் உட்கார்ந்திருக்கே...? பக்கத்துலே வந்து மோதுற மாதிரி உட்காரேன்... உடம்பு சூட்டுல குளிர் ஓடிடும்..."நான் இப்படியே உட்கார்ந்திருக்கேன்... நீங்க கண்ணை ரோட்டு மேல வெச்சு கவனமா காரை ஓட்டுங்க... வீட்ல போய் பொண்டாட்டியைக் கொஞ்சிக்கலாம்... நான் ராத்திரியோட ராத்திரியா எங்கேயும் பரதேசம் போயிடமாட்டேன்..."
 "இந்த இதுதானே வேண்டாங்கிறது! வா, இப்படி வந்து உட்காரு... நீயும் நானும் தனியா இப்படி வரணுங்கிறதுக்காகத்தானே டிரைவரை வேண்டாம்னு சொல்லிட்டு காரை நான் எடுத்தேன்... ம்... வா... தோளைத் தேய்ச்ச மாதிரி உட்காரு..."
 சிவகாமி உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுக் கொஞ்சமும் அசையாமல், கண்ணாடி வழியே நேர் பார்வையோடு ரோட்டைப் பார்த்துக் கொண்டு வந்தாள். காரை ஒரு வளைவில் திருப்பி, சீரான ரோட்டுக்கு வந்ததும் சிவகாமியின் தோள்பட்டையைப் பிடித்தார் பாலசுந்தரம்.
 "சீ! விடுங்க... உங்களுக்குக் காலம் நேரம் தெரியாம வேகம் வரும். அடுத்த வாரம் உங்க மகளுக்குக் கல்யாணம்... இந்த சேஷ்டையை எல்லாம் நிப்பாட்டிக்குங்க..."
 விஸ்கி வாசனையோடு சிரித்தார் பாலசுந்தரம்.
 "ஒரு ஆம்பிளைக்கு ரெண்டு பருவத்துல ஆசை வருமாம். மொதல்ல இருபதுல... அப்புறம் அம்பதுல... இது எனக்கு ரெண்டாவது பருவம். இருப்பதைக் காட்டிலும் அம்பதுலதான் வேகம் அதிகமாய்…"
 "பேத்தாம வாங்க..."
 "உனக்கு எம்பேர்ல ஒரு கோபம் இருக்கும்னு நினைக்கிறேன்... அதான் இப்படி எதுக்கெடுத்தாலும் 'சள்ளு புள்ளு'ன்னு எரிஞ்சு விழறே...?"
 "ஒரு கோபமும் இல்லே..."
 "இல்லே... உன்னோட அடிமனசுல ஒரு கோபம் இருக்கு. அதை வெளிக்காட்டாமே அப்படியே நீ அடக்கி வெச்சிருக்கே... உன்னோட கோபம் என்னான்னு நான் சொல்லட்டுமா...?"
 "ம்...""உன்னோட தம்பி முருகேசனுக்கு நர்மதாவைக் கட்டித் தரலைங்கிற கோபம் உனக்கு நிறைய இருக்கு. ஆனா, நீ வெளியே சொல்லாமே இருக்கே... சரிதானே...?" -
 "நான் கோபப்பட்டு என்ன பிரயோஜனம்...? என்னோட தம்பி முருகேசன் நல்லவன்தான்... கண்ணுக்கும் லட்சணமாத்தான் இருக்கான். அவனோட சொந்த உழைப்புல முன்னேறி மேட்டுப்பாளையத்துல ஒரு சைக்கிள் மார்ட் வெச்சு நடத்திட்டு வர்றான்... கார், பங்களான்னு எந்த வசதியும் இல்லாம கிராமத்துலே இருக்கிற அவனுக்கு உங்க பொண்ணைக் கட்டி வெப்பீங்களா என்ன...? அதை நான் எதிர்பார்க்கிறதும் முட்டாள்தனம்தான்... நீங்க ரொம்பவும் சாதாரணமாயிருந்த காலத்துல என்னைப் பொண் பார்க்க வந்தீங்க... கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... இப்போ உங்களுக்கு இருக்கிற இந்த வசதி அப்போ இருந்ததுன்னா என்னைப் பார்க்க வந்திருப்பீங்களா... உங்க அந்தஸ்துக்குத் தகுந்த மாதிரி ஒரு பஞ்சு வியாபாரியோட பொண்ணைப் பார்க்கப் போயிருப்பீங்க..."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223002413
சத்தமில்லாத நயாகரா

Read more from Rajeshkumar

Related to சத்தமில்லாத நயாகரா

Related ebooks

Reviews for சத்தமில்லாத நயாகரா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சத்தமில்லாத நயாகரா - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    "சோடா கலந்த ஸ்காட்ச் விஸ்கி புனல் வடிவ டம்ளரில் பொன்னிறமாய் ததும்ப, ஆர்வமாய் அதைத் தொடப் போனார் பாலசுந்தரம்.

    டேய்... பாலு... வேண்டாண்டா... இப்ப நீ கன்ஸ்யூம் பண்ணியிருக்கிறதே அதிகம். ஒரு ஸ்மாலும் ஒரு லார்ஜும் கணிசமாக எடுத்திருக்கே பேசாமே கையைக் கட்டிக்கிட்டு உட்காரு.

    எதிரே சோபாவில் சாய்ந்திருந்த ரங்கராஜன், டம்ளரை நோக்கி நீண்ட பாலசுந்தரத்தின் கையை அழுத்தமாய்ப் பற்றினார். பாலசுந்தரம் குழந்தைத்தனமாய் சிணுங்கினார். டம்ளரைப் பிடுங்க முயன்றார்.

    போடா... கிக்கே தெரியலை...!

    இந்த ஊட்டிக் குளிர்லே ஸ்காட்ச் நிதானமாத்தான் வேலை செய்யும்... மகளோட கல்யாணத்துக்காகக் கூப்பிட வந்திருக்கே... இன்னும் சில நிமிஷத்திலே கோயமுத்தூர் புறப்பட்டுப் போகப் போறே! டிரைவரைக் கூட்டிட்டு வந்திருந்தாலும் பரவாயில்லை. இந்த பாட்டிலையே உன் பக்கமா நகர்த்தி வெச்சுடுவேன்... ஆனா நீயோ பெண்டாட்டியைப் பக்கத்துல உட்கார வெச்சுக்கிட்டு ஷெல்ப் டிரைவ் பண்ணிட்டு வந்திருக்கே...! திரும்பிப் போறப்போ ஒழுங்கா டிரைவ் பண்ணிட்டுப் போகவேண்டாமா...?

    எல்லாம் பண்ணுவேன்... குடுடா... - தலை லேசாய் சுழல் ஆரம்பித்திருந்த பாலசுந்தரம், ரங்கராஜன் தடுக்கத் தடுக்க, அந்தப் பொன்னிறத் திரவம் அசைந்து கொண்டிருந்த டம்ளரை எடுத்து ஒரே மூச்சில் உறிஞ்சினார்.

    பாலசுந்தரம் ஐந்து பத்து வருஷத்தைத் தாண்டியிருந்தார். அளவான நரை கிராப், அதை சிரத்தையாய் எண்ணெய் போட்டு சீவி முன் மண்டையில் உள்வாங்கியிருந்த வழுக்கையை ரொம்பவும் சாமர்த்தியமாய் மறைத்திருந்தார். மைனஸோ, பிளஸோ கொஞ்சம் தடிமனான மூக்குக்கண்ணாடியை மாட்டியிருந்தார். பிரேமில் தங்கம் டாலடித்தது. விழுந்துவிட்டவை போக வாயிலிருந்த இருபத்தி மூன்று பற்களில் ஆரோக்கியமாய்ச் சிரித்தார்.

    குஜராத்தி நிறம் பஞ்சாபி உயரம். பஞ்சு மார்க்கெட் பிஸினஸில் லட்சங்களை சுலபமாய் சம்பாதித்தவர். ராஜாஜிக்கும், மகாத்மா காந்திக்கும் பாலசுந்தரத்தைப் பிடிக்காது. காரணம், மதுப் பிரியர் காலையில் பெட்காபிக்குப் பதிலாய் மெஸரரில் ஒரு பெக்கை வார்த்து. மனைவி சிவகாமிக்குத் தெரியாமல் விழுங்குபவர். அடுத்த புதன் கிழமை ஒரு மருமகனை எடுக்கப்போகிறவர். அதற்காகக் கடந்த பத்து நாட்களாய், ஊர் ஊராய் மனைவியோடு காரில் சுற்றி, நெருங்கின சொந்தத்திலிருந்து தூரத்துச் சொந்தம்வரை கல்யாண அழைப்பை விடுத்துக் கொண்டிருப்பவர்.

    பாலசுந்தரத்தின் வயதில் இருந்த ரங்கராஜன் தொழில் முறையில் நிரம்பவும் சிநேகிதம். ஒருத்தர்க்குத் தெரியாமல் இன்னொருத்தர் புதிதாய் ஸ்பெக்ஸ் கூட மாற்றிக் கொள்ள முடியாது. ரங்கராஜன் தொந்தி வளர்த்து கொஞ்சம் குள்ளமாய தெரிந்தார். தலை ரோமம் பூராவும் காலேஜில் படிக்கும்போதே காணாமல் போய், இந்த நிமிஷம் கழுவிவிட்ட மொசைக் தரையாய் வழுக்கை. தொண்டைக்குள் நெருப்பு மாதிரி எரிந்து கொண்டு போன ஸ்காட்சை சமாதானப்படுத்துவதற்காக, நெய்யில் வறுபட்டு மிளகுத்தூளில் புரண்டிருந்த முந்திரிப்பருப்பு நான்கைந்தை எடுத்து வாயில் போட்டு அரைத்தார் பாலசுந்தரம்.

    அறையின் கதவருகே, சிவகாமியின் கனமான குரல் கேட்டது.

    என்ன... இன்னுமா நீங்க புறப்படலை...? பாலசுந்தரம் எழ முற்பட்டு, மறுபடியும் தலைசுற்றியதால் அப்படியே 'பொத்' என்று சோபாவில் உட்கார்ந்தார்.

    இதோ வந்துட்டேன் சிவகாமி... புறப்பட வேண்டியதுதான்.

    அவர் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், உள்ளே வந்த சிவகாமி திக்கென்று அதிர்ந்தாள். அகலமான முகத்தில் ஏராளமாய் கோபப்பட்டுக் கத்தினாள்.

    என்னங்க... குடிச்சீங்களா...?

    இ... இ... இல்லையே.

    வாசம் வருது...

    அ... அது... பெயிண்ட் வாசனை... ரங்கராஜன் பங்களா பூராவும் புதுசா பெயிண்ட் பண்ணியிருக்கான்... அதான் அந்த வார்னிஷ் வாசனை... வார்னிஷ் சில சமயம் அசப்புல விஸ்கி மாதிரி வாசனையடிக்கும்... இல்லடா ரங்கராஜா...?

    சிவகாமி, ரங்கராஜனின் பக்கமாய்த் திரும்பினாள்.

    குரல் கமறக் கேட்டாள்.

    இந்த இருட்டிட்டு வர்ற வேளையில் காரை ஓட்டப்போற அவர்க்கு எதுக்கண்ணா அந்த நாத்தம் புடிச்ச தண்ணிய ஊத்திக் குடுத்தீங்க... புத்தி நிதானமா இருக்கிற நேரத்திலேயே காரை கண்டபடி ஓட்டுவாரு... மிதப்புல இருந்துட்டா வேற வினையே வேண்டாம்...

    ரங்கராஜன் தன் வழுக்கையை ஒரு அசட்டு இளிப்போடு சொரிந்தார்.

    ஸாரிம்மா... நான் என்ன சொல்லியும் ஓம் புருஷன் கேக்கலை... பயப்படாம போம்மா... கொஞ்சமாத்தான் சாப்பிட்ருக்கான்...

    உள்ளறையிலிருந்து ஒரு சின்னப் புயலாய் வந்தாள் ரங்கராஜனின் மனைவி பத்மாவதி. கோபம் கண்களில் தெறிக்கக் கணவனைப் பார்த்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1