Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மாண்புமிகு இந்தியன்
மாண்புமிகு இந்தியன்
மாண்புமிகு இந்தியன்
Ebook187 pages44 minutes

மாண்புமிகு இந்தியன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிதுனும், பல்லவியும் அதிர்ச்சியோடு முக்தாவைப் பார்த்தார்கள்.
 அவர் குண்டு பாய்ந்த அதிர்ச்சியிலும், வேகத்திலும் ரோலிங் நாற்காலியை விட்டுச் சரிந்து மேஜைக்குக் கீழே தரையில் உருண்டிருந்தார். வேகமாய் அவருக்கு அருகில் ஓடினார்கள்.
 முக்தா துப்பாக்கித் தோட்டா பாய்ந்திருந்த இடது தோள்பட்டையை வலதுகையால் அழுத்திப் பிடித்த படி தரையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். '
 அவருடைய விரலிடுக்குகள் வழியாக ரத்தம் பிறிட்டுக் கொண்டு வந்து கோட்துணியை செங்காவி நிறத்துக்கு மாற்றிக் கொண்டிருந்தது.
 மிதுன் பரபரப்பாய்க் கத்தினான்.
 "பல்லவி... நீ இவருக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணு... துப்பாக்கி தோட்டா அறைக்கு பின்பக்கமாக இருந்து வந்த மாதிரித்தான் இருந்தது. நான் போய்ப் பார்க்கிறேன்..."
 ஃப்ளஷ் டோரைத் தள்ளிக்கொண்டு வெளி வராந்தாவில் ஓடினான் மிதுன்.
 விநாடிக்குள் வராந்தா முடிவை எட்டிப் பிடித்து, பின்பக்க புல்வெளிக்குள் தாவினான்.
 சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டான்.
 எந்தவிதமான மனித நடமாட்டமும் அந்தப் பக்கம் தென்படவில்லை.
 ஆங்காங்கே புல்வெளிக்கு மத்தியில் திட்டுத் திட்டாய் க்ரோட்டன்ஸ் செடிகள் மட்டும் புதர் மாதிரி அசைந்து கொண்டிருந்தன

சுட்டவன் அந்தப் புதர்களில் பதுங்கிப் பதுங்கிக் கூட மறைந்திருக்கலாம்.
 தோல்வி முகத்தோடு மீண்டும் வராந்தாவுக்கு வந்தான்.
 அவனுடைய தடதட வென்ற ஓட்டத்தைப்பார்த்து பதட்டமாகி பி.ஏ. கல்யாணராம் பின்னாலேயே வந்திருந்தார்.
 "மிஸ்டன் மிதுன்... என்னாயிற்று...? பேட்டி எடுக்காமல் ஏன் திடீரென்று இந்த வராந்தா வழியாக வேகமாகப் போவீர்கள்...?"
 பதட்டமான ஆங்கிலத்தில் அவருக்கு பதில் சொன்னான் மிதுன்.
 "டைரக்டரை யாரோ துப்பாக்கியால் சுட்டு விட்டார்கள்... பல்லவி அவருக்கு முதலுதவி சிகிச்சை தந்து கொண்டிருக்கிறாள். தோட்டா அறையின் பின்பக்கமிருந்து வந்ததால் ஆளைத் தேடி நான் இந்த வராந்தாவில் வேகமாச் சென்றேன்..."
 மிதுகளின் பரபரப்பு கல்யாணராமையும் தொற்றிக் கொண்டது
 "ஆள் கிடைத்தானா...?"
 "இல்லை. செடிப் புதர் மறைவுகளைப் பயன்படுத்தி ஆள் நழுவி விட்டிருக்கலாம்..."
 இருவரும் வேகமாய் முக்தாவின் அறையைத் தொட்டார்கள்
 பல்லவி இருவரையும் பார்த்து விட்டு குரல் கொடுத்தாள்
 "நிறைய ரத்தம் வெளியே போய் விட்டது... அதனால் மயங்கி விழுந்து விட்டார். இவரை உடனே ஹாஸ்பிட்டல் கொண்டு செல்வது நல்லது..."
 கல்யாணராம் பரபரப்போடு சொன்னார்.
 "மிஸ்டர் மிதுன்... இண்டர்காமில் டூ ஒன் எய்ட்டை தொடர்பு கொண்டு விபரத்தைச் சொல்லுங்கள். அது பர்சனல் டிபார்ட்மென்ட்... இந்த வளாகத்திற்குள் எப்போதும் தயாராய் நிறுத்தி வைத்திருக்கும் ஆம்புலன்ஸ் வண்டியை அவர்கள் அனுப்பி வைப்பார்கள்... நான் செக்யூரிட்டியை அலர்ட் செய்கிறேன்..."மிதுன் முக்தாவின் மேஜை மேலிருந்த இன்டர்காமை உயிரூட்டிக் கொண்டிருக்க -
 கல்யாண்ராம் தன்னுடைய கேபினுக்குப் பாய்ந்து - அங்கிருந்த இன்டர்காம் மூலம் செக்யூரிட்டி ஆபீசைத் தொடர்பு கொண்டார்.
 "ஹலோ... செக்யூரிட்டி கேபின்..."
 "சீஃப் செக்யூரிட்டி ஆபீசரைப் பேசச் சொல்லுங்கள்... அவசரம்..."
 விநாடிகளில் ரிசீவர் கை மாறியது.
 சீஃப் செக்யூரிட்டி ஆபீசர் வீர்சிங் கரகரத்த குரலுடன் லைனுக்கு வந்தார்.
 "ஹலோ..."
 "நான் கல்யாண்ராம் பேசுகிறேன்..."
 "சொல்லுங்கள் ஸார்... உங்கள் குரல் பதட்டமாக உள்ளதே...? எனிதிங் ராங்...?"
 "எஸ். டைரக்டரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அவர் மயிரிழையில் தப்பியுள்ளார்..."
 "மை காட்..."
 "கடவுளைக் கூப்பிட்டுப் புண்ணியமில்லை செக்யூரிட்டி பலவீனமடைந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது..."
 "அப்படியில்லை ஸார்..."
 "பின் எப்படி...? கொலைகாரன் துப்பாக்கியால் சுட முயன்றிருக்கிறான்... துப்பாக்கி எப்படி உள்ளே வந்தது...?"
 "ஈ, காக்கை கூட தீவிர சோதனைக்குப் பிறகுதான் இந்த கேம்பஸுக்குள் நுழைய முடியும். பலமான கண்காணிப்புடன்தான் இருக்கிறோம் ஸார்... அதையும் மீறி எவனோ துப்பாக்கியோடு உள்ளே நழைந்திருக்கிறான் என்றால் அதிர்ச்சியாகத்தான் உள்ளது..."
 "செக்யூரிட்டி பலவீனமடையவில்லை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டுமென்றால் ஒரு காரியம் செய்யுங்க ள்...என்ன செய்ய வேண்டும்...?"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223483472
மாண்புமிகு இந்தியன்

Read more from Rajeshkumar

Related to மாண்புமிகு இந்தியன்

Related ebooks

Related categories

Reviews for மாண்புமிகு இந்தியன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மாண்புமிகு இந்தியன் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் லட்சக்கணக்கான செங்கற்களால் உருவாகி பல கட்டிடங்களாக உருவெடுத்து நூறு ஏக்கர் பரப்பில் விஸ்தாரமாக உட்கார்ந்திருந்தது. அதன் ஓர் உயரமான கட்டிடத்தின் உச்சியில் வெட்டவெளியில் அடித்த காற்றுக்கு உற்சாகமாய் மூவர்ணக்கொடி பறந்து கொண்டிருந்தது.

    ஆராய்ச்சிக் கழகத்தின் நான்கு பக்கங்களிலும் காம்பெளண்டு சுவர்கள் பிரம்மாண்டமாய் எழுந்து வால் பிடித்துக்கொண்டு போயிருக்க, சுவர்களின் மேல் பகுதிகளில் கண்ணாடித் துண்டுகளும் அதற்கு மேல் முள்வேலியும் தெரிந்தன. முள்வேலியின் ஓரங்களில் போகன் வில்லாக்கன் கோஷ்டி கோஷ்டியாய் கலர் கலராய் பூத்துக் கொட்டியிருந்தன.

    மிதுனும், பல்லவியும் தீவிரமான செக்யூரிடி சோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

    இருபத்தைந்து வயதுக்கு மிகவும் கிட்டத்தில் இருந்த மிதுன் சற்றே திடகாத்ரமாக உயரமாக இருந்தான். சாயம் போன ஜீன்ஸும் அவனுடைய உடம்புக்கு பொருத்தமில்லாத சர்ட்டும் அணிந்திருந்தான். சர்ட்டின் பெரிய பாக்கெட்டிலிருந்து கங்காரு குட்டியாய் மைக்ரோ டேப் ரிக்கார்டர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவனோடு இணைந்து நடக்கும் இருபத்திமுன்று வயது பல்லவி ஏறக்குறைய மிதுனின் காஸ்ட்யூமில் இருந்தாள். இருவருமே தமிழகத்தின் முன்னணி பத்திரிகையொன்றில் பரபரப்பாய் குப்பைக் கொட்டிக் கொண்டிருப்பவர்கள்.

    சாம்பல் நிற சிமெண்ட் பேவ்மெண்டில் ஆராய்ச்சிக் கழக அலுவலக கட்டிடத்தை நோக்கி இருவரும் மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்க பல்லவி கேட்டாள்,

    மிதுன்... இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்குள்ளே நுழைஞ்சிருக்கோம், வந்ததுக்கு ஏதாவது உபயோகமான ந்யூஸ் கிடைக்குமா?

    மிதுன் புன்னகைத்தான்.

    இதோ பார் பல்லவி! நாம் இங்கே வெறுமனே வேடிக்கை பார்க்கிறதுக்காக வரலை. நமக்குக் கிடைச்ச ஒரு தகவல் உண்மையாக இருக்குமா... இல்லை அது வெறும் ஹேஸ்யம்தானான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான் இங்கே வந்திருக்கோம்.

    அதெல்லாம் சரிதான். பட் இந்த ஸ்பேஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் டைரக்டர் அவ்வளவு சுலபத்துல வாயைத் திறக்கமாட்டாராமே... ஏதாவது முக்கியமான ந்யூஸ் இருந்தா அவரே ப்ரஸ் பீப்பிளைக் கூப்பிட்டு உட்கார வெச்சு விஷயத்தை டிக்டேட் பண்ணி அனுப்பி விடுவாராமே... மற்றபடி எந்த ஒரு பத்திரிகையாளரும் அந்த டைரக்டரை பர்சனலா மீட் பண்ண முடியாதாமே...?

    கவலைப்படாதே...! இன்னிக்கு அவரை மீட் பண்ணிடலாம். நாமதான் ஏற்கெனவே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டோமே...

    பல்லவி சிரித்தாள்.

    நாம அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறது டைரக்டர்கிட்ட கிடையாது மிதுன். அவரோட பி.ஏ. கிட்டே.

    ஸோ வாட்... பி.ஏ. கிட்ட பேசறமாதிரி பேசினா டைரக்டர்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கலாம்.

    எனக்கென்னமோ நம்பிக்கையில்லை. டைரக்டரோட பி.ஏ. உன்னையும், என்னையும் பார்த்ததும் ஒரு 'ஹலோ' சொல்லி உட்கார வெச்சு டீயும், பிஸ்கெட்டும்! கொடுத்து எதையாவது பேசி அனுப்பி வெச்சுடப் போறார். நாம் எதிர்பார்த்து வந்த தகவல் கிடைக்கப் போறதில்லை. பி.ஏ. கிட்ட. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறதுக்குள்ளே உன்னைப்பிடி என்னைப்பிடின்னு எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம், டைரக்டரைப் பார்த்துப் பேசலாமான்னு பி.ஏ. கிட்ட கேட்டா அவர் என்ன சொல்வார் தெரியுமா?

    என்ன சொல்லுவார்?

    வெரி ஸாரி... நீங்க எதைப் பேசறதாக இருந்தாலும் என்கிட்டயே பேசுங்கன்னு சொல்லப் போறார்.

    நோ பல்லவி...! எனக்கு நம்பிக்கையிருக்கு. டைரக்டரைக் கேக்காமே பி.ஏ. நமக்கு அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்திருக்கமாட்டார். நாம் பி.ஏ.வையும் பார்க்கப் போறோம், டைரக்டரையும் பார்க்கப் போறோம்.

    அப்படி பார்த்துட்டோம்ன்னு வையுங்க மிதுன், ஸ்பேஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் டைரக்டர் முக்தாவை முதல் முதலா தனிப்பேட்டி எடுத்த பெருமை நம்ம ரெண்டு பேர்க்குத்தான் கிடைக்கும் இல்லையா...?

    ஷ்யூர்... ஷ்யூர்.

    மிதுன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு பெருமையோடு தலையசைத்த விநாடி கண்ணாடி வேய்ந்த ஆபீஸ் கட்டிடம் பிரம்மாண்டமாய் பக்கத்தில் வந்திருந்தது. அந்த காம்பெளண்டின் ஒவ்வொரு மில்லிமீட்டர் பரப்பிலும் நிசப்தம் கனமாய் பரவியிருந்தது. ரிசப்ஷனும் அதற்கு விதிவிலக்காக இல்லை. அவ்வப்போது கிசுகிசுப்பான சப்தத்தில் இண்டர்காம் மட்டும் முனகியது.

    பாப் கூந்தலோடும், லிப்ஸ்டிக் பூச்சோடும் தெரிந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் இண்டர்காம் ரிஸீவரை எடுத்து கிசுகிசுப்பான குரலில் பேசிவிட்டு தன் மேஜையில் இருந்த பெண்டியம் கம்ப்யூட்டரிடம் கவனத்தைத் தொடர்ந்தாள்.

    மிதுனும், பல்லவியும் அவளை நெருங்கி நிற்க, அவள் நிமிர்ந்தாள். ஈறுகள் ஆரோக்யமாக தெரிய சிரித்து எஸ் என்றாள்.

    மிதுன் சொன்னான்.

    டைரக்டரின் பி.ஏ. மிஸ்டர் கல்யாண்ராமைப் பார்க்க வேண்டும்.

    என்ன விஷயமாய்...?

    டைரக்டரை பேட்டி எடுப்பது சம்பந்தமாய் அவரிடம் பேச வேண்டும்...

    நீங்கள் ப்ரஸ் பீப்பிளா?

    ஆமாம்...

    எந்தப் பத்திரிகையிலிருந்து வருகிறீர்கள் என்று சொல்ல முடியுமா...?

    தமிழ் போஸ்ட்...

    டைரக்டர் தனிப்பட்ட முறையில் பேட்டி தர மாட்டாரே?

    பி.ஏ. வரச் சொல்லியிருந்தார்.

    அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தாரா?

    எஸ்...

    ப்ளீஸ்... கிவ் மீ கால் லெட்டர்.

    அவர் லெட்டர் ஏதும் அனுப்பவில்லை எங்களுக்கு மத்தியில் டெலிபோனில் கான்வர்சேஷன் மட்டுமே நடந்தது.

    உங்கள் விசிட்டிங் கார்டைக் கொடுங்கள்.

    மிதுன் கொடுத்தான். ரிசப்ஷனிஸ்ட் வாங்கிக்கொண்டே சொன்னாள். ஒரு இரண்டு நிமிஷம் அந்த சோபாவில் உட்காருங்கள். நான் மிஸ்டர் கல்யாண்ராமைத் தொடர்புகொண்டு பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தருகிறேன். ப்ளீஸ் பீ ஸீட்டட்...?"

    இருவரும் உயர் ரக சோபாக்களில் புதைந்து கொண்டபின் பல்லவி, மிதுனின் பக்கமாய் தலையை மட்டும் சாய்த்து மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

    மிதுன்...

    ம்...

    இங்கே வேலை நடக்குதா என்ன...?

    ஏன் அப்படி கேட்கிற...?

    இங்கே ஒரு சத்தத்தையும் காணோமே. கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும் ஒரு, ஆள்கூட இல்லையே?

    மிதுன் மெல்லச் சிரித்தான்.

    'ஸோ'ன்னு இரைச்சல் கேட்க இது என்ன ஜின்னிங் ஃபேக்டரியா...? இங்கே நடக்கிறது பூராவும் ப்ரெய்ன் ஒர்க். இங்கே ஒரு ஆணியடிக்கிற சத்தம்கூட கேட்காது. பெரும்பாலான வேலைகளை கம்ப்யூட்டரே பண்ணி முடிச்சுடறதுனால ஆட்களும் ரொம்பக் குறைவு. புதுசா ஒரு நபர் இங்கே வந்தா பாலைவனத்துல மாட்டிகிட்ட மாதிரி தான் இருக்கும்.

    அதுக்காக இப்படியா ஒரு ரிசர்ச் ஸ்பேஸ் சென்டர் மயானபூமி மாதிரி இருக்கும்? இங்கே வேலை செய்யற ரிசப்ஷனிஸ்ட்டைப் பார்த்தாக்கூட ஒரு பொண்ணு மாதிரி தெரியலை.

    பின்னே...!

    "ஒரு அழகான

    Enjoying the preview?
    Page 1 of 1