Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Software Kuttrangal!
Software Kuttrangal!
Software Kuttrangal!
Ebook141 pages51 minutes

Software Kuttrangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அலுவலக வேலையாக வெளியில் சென்றிருந்த நிர்மல், அந்த வேலை சீக்கிரமே முடிந்து விட, தன் நண்பர் ஜகதீஷ் என்னும் கம்ப்யூட்டர் பித்தனைக் காணச் செல்கிறான். அவன், தான் கண்டுபிடித்த புதிய சாப்ட்வேர் பற்றி சொல்கிறான். “இந்த சாப்ட்வேரில் உன் மொபைல் நெம்பரைப் போட்டால் நீ இறக்கும் நாளை காட்டும்” என்று.
நிர்மல் அதைச் சொல்ல, ஜகதீஷ் அடுத்த வாரத்தில் ஒரு நாளை அவன் டெத் டேட் என்கிறான். ஆரம்பத்தில் அதைக் கண்டு கொள்ளாத நிர்மல் நாள் நெருங்க நெருங்க பயந்து, அந்த நெம்பரை சரண்டர் செய்கிறான். அந்த நம்பர் வேறு ஒருவனுக்கு போய் விட, அந்த வேறொருவன் குறிப்பிட்ட நாளில் இறக்கினான்.
ஆச்சரியமான நிர்மல் ஜகதீஷைப் பாராட்டச் செல்கிறான். இந்த முறை தன் உறவினனான தியாகுவை உடன் அழைத்துச் செல்கிறான். அப்போது ஜகதீஷ், “நீ பிறந்த ஊர், பிறந்த தேதி, பிறந்த நேரத்தைச் சொன்னான் உன் போன ஜென்ம மனைவி இப்போது எங்கு பிறந்துள்ளாள் என்பதை என் சாப்ட்வேர் சொல்லும்” என்கிறான். நிர்மல் அதை அவாய்ட் செய்யும் விதமாய் வெளியேறுகிறான்.
ஆனால், தியாகு மறுநாளே ஜகதிஷிடம் சென்று அந்த விபரங்களைச் சொல்லி, தன் போன ஜென்ம மனைவியை இப்போது காண விரும்புவதாச் சொல்கிறான்.
அதன் விளைவாய் அவன் சந்திக்கும் நிகழ்வுகளை சுவாரஸியமாக்கியுள்ளார் ஆசிரியர்.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580130005253
Software Kuttrangal!

Read more from Mukil Dinakaran

Related to Software Kuttrangal!

Related ebooks

Related categories

Reviews for Software Kuttrangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Software Kuttrangal! - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாப்ட்வேர் குற்றங்கள்!

    Software Kuttrangal!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 1

    மிஸ்டர் நிர்மல்! ரிசப்ஷனில் அமர்ந்திருந்த அந்த அழகுப் பதுமை, தன் லிப்ஸ்டிக் உதடுகளை அழகாகச் சுழித்து அழைக்க,

    விஸிட்டர்ஸ் சோபாவில் அமர்ந்திருந்த நிர்மல், அவசரமாய் எழுந்து, யெஸ் மேடம்! என்றான்.

    உங்களை ஜி.எம். கூப்பிடறார்! என்று சொல்லி ஜென்ரல் மேனேஜரின் அறையைத் தன் சந்தனக்கட்டை கைகளால் காட்ட,

    தேங்க் யூ மேடம்! என்றபடி அவள் கை காட்டிய அறையை நோக்கி நடந்தான் நிர்மல். இவள் ஏன் சினி ஃபீல்டுக்குப் போகாமல், இங்க உட்கார்ந்து ரிசப்ஷனிஸ்ட் வேலை பார்த்திட்டிருக்கா…? ஹூம்… இவ மட்டும் சென்னையில் இருந்து… ஏதாவதொரு டைரக்டரின் கண்களில் பட்டிருந்தால்… இன்னேரம் பெரிய ஹீரோயினாகி, ஃபீல்டையே கலக்கிட்டிருப்பா…! ப்ச்… என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, சத்தமில்லாத பெருமூச்சொன்றை பிரசவித்துவிட்டு, ஜி.எம்-மின் அறைக்கதவை நாசூக்காக ஒரு விரலில் தட்டினான்.

    யெஸ்… கம் இன்! உள்ளிருந்து ஒரு கரகரக் குரல் அவனை வரவேற்க,

    நிதானமாய்க் கதவைத் திறந்துக்கொண்டு, பவ்யமாய் உள்ளே நுழைந்து, உள்ளே அந்த அறையின் மத்தியில் போடப்பட்டிருந்த பெரிய மேஜைக்குப் பின் அமர்ந்திருந்த வழுக்கை மண்டை ஜி.எம்-மைப் பார்த்து, குட் மார்னிங் சார் என்றான்.

    அவர் தன் இருக்கைக்கு எதிரிலிருந்த குஷன் சேரைக் காட்ட, தேங்க் யூ சார்! சொல்லியபடி அமர்ந்தான்.

    நீங்க… ரகோத்தமன் எண்டர்பிரைசஸ் தானே…?" கம்ப்யூட்டர் மானிட்டரில் விழிகளைப் பதித்துக் கொண்டே ஜி.எம். கேட்டார்.

    ஆமாம் சார்! என்றான்.

    உங்களோட பர்ச்சேஸ் ஆர்டரை நேத்திக்கே கையெழுத்துப் போட்டு அனுப்பிட்டேனே…? ம்ம்ம்… நீங்க பர்ச்சேஸ் செக்ஷன்ல சுமதின்னு ஒரு ஸ்டாப் இருப்பாங்க… அவங்ககிட்டக் கேட்டு வாங்கிக்கங்க!

    ஓ… தேங்க் யூ சார்! என்றபடி நிர்மல் எழ,

    டெலிவரி டைம்… ஒன் வீக் போட்டிருக்கேன்…! பட், நீங்க அதுக்கு முன்னாடியே குடுக்க முயற்சி பண்ணுங்க… என்ன? ஜி.எம். தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி துடைத்துக்கொண்டே சொன்னார்.

    கண்டிப்பா சார்! சொல்லிவிட்டு ஜி.எம். அறையிலிருந்து வெளியே வந்த நிர்மல், மீண்டும் அந்த ரிசப்ஷனிஸ்டிடம் சென்றான்.

    மேடம்… பர்ச்சேஸ் செக்ஷன்?

    இப்படியே லெப்ட்ல போனீங்கன்னா… மாடிப்படி வரும். அதுக்கு ரைட் சைடுல… போர்டே போட்டிருக்கும்! என்றாள்.

    அவளுக்கு ஒரு தேங்க் யூவை கொடுத்துவிட்டு லெப்ட் சைடில் நடந்தான். இவளெல்லாம் ரெகுலரா பியூட்டி பார்லர் போவாள் போலிருக்கு! இல்லேன்னா இவ்வளவு அழகா இருக்க சான்ஸே இல்லை! தனக்குள் பேசிக்கொண்டே சென்றான்.

    பர்ச்சேஸ் செக்ஷனுக்குள் நுழைந்ததும், அங்கு முதல் மேஜையில் அமர்ந்திருந்த ஒல்லிப் பெண்ணிடம், இங்க… மிஸ். சுமதி? என்று நிர்மல் கேட்க,

    யெஸ்… நான்தான்! என்றாள் அந்த ஒல்லிப் பெண்.

    ‘பொசுக்’கென்றானது நிர்மலுக்கு. ச்சே… ஆண்டவனுக்கு ஏன் இப்படியொரு ஓரவஞ்சனை… அங்க ரிசப்ஷன்ல இருக்கற பெண்ணுக்கு அழகை அள்ளித் தந்திட்டு, இங்க பர்ச்சேஸ்ல இருக்கற இந்தப் பொண்ணுக்கு அதைக் கிள்ளித் தந்திருக்கானே… இது எப்படி நியாயமாகும்…? ஏ… ஆண்டவா…? படைப்பு வேலையைப் பண்ணும்போது கொஞ்சம் பேலன்ஸ் பண்ணிப் பண்ணுப்பா! அவன் மனம் அப்பெண்ணுக்காய் இறைவனிடம் பேசியது.

    சார்… உங்களுக்கு என்ன வேணும்? அப்பெண் மீண்டும் கேட்டதும், சட்டென்று சுயநினைவுக்கு வந்த நிர்மல், வந்து… நான் ரகோத்தன் எண்டர்பிரைசஸ்… சொன்னான்.

    ஓ… உங்க ஆர்டர் ரெடியாயிருக்கு! என்றவள் தன் மேஜையின் முதல் டிராயரைத் திறந்து அதிலிருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் தந்தாள்.

    அங்கும் ஒரு தேங்க் யூவை வினியோகித்து விட்டு, அங்கிருந்து வெளியேறி ரிசப்ஷனுக்கு வந்து, இன்னொரு முறை அந்த ரிசப்ஷன் அழகியை பார்வையிட்டு விட்டு, டூ வீலர் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

    பைக்கின் மிரரில் தொங்க விட்டிருந்த தன் ஹெல்மெட்டை எடுத்துத் தலையில் மாட்டிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

    மதிய உணவிற்காக வயிறு பசி விண்ணப்பம் போட, போகும் வழியில் ஏதாவதொரு மெஸ் தென்படுகிறதா? என்று இருபுறமும் பார்த்துக்கொண்டே பைக்கைச் செலுத்தினான்.

    அமுதா மெஸ் என்ற போர்டு கண்ணில்பட, அந்தக் கடையை ஆராய்ந்தான். ம்ம்… பரவாயில்லை… டீஸண்டாகவே இருக்கு! என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, அந்த மெஸ்ஸின் எதிரே தன் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றான்…

    பதினைந்தே நிமிடத்தில் லன்ச்சை முடித்துவிட்டு வெளியே வந்தவன், மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்தான்.

    மணி இரண்டு பத்து.

    பரவாயில்லை… எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே வந்த வேலையை முடித்து விட்டேன்…! ம்ம்ம்… இப்பவே ஆபீஸ் போகணுமா…? எப்படியும் வர நாலஞ்சு மணிநேரம் ஆகும்னுதான் டைம் ஆபீஸ்ல சொல்லிட்டு வந்திருக்கேன்… யோசித்தான். பேசாம பக்கத்துல ஏதாவது தியேட்டர் இருந்தா போயி ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அப்புறமா ஆபீஸ் போகலாம்… ஆனா இங்க பக்கத்துல எந்த தியேட்டருமே இருக்கற மாதிரி தெரியலையே…? ம்… என்ன பண்ணலாம்?

    அப்போதுதான் அவன் மூளையில் ‘பளிச்’சென்று அந்த எண்ணம் தோன்றியது. அட… நம்ம ஜகதீஷ் இங்கதானே எங்கியோ தன்னோட ‘சாப்ட்வேர் சொல்யூஸன்’ கம்பெனி வெச்சிருக்கான்… அவனைப் போய்ப் பார்த்து… அவன்கூட கொஞ்சம்நேரம் பேசிவிட்டுப் போகலாமே?

    ‘பர…பர’வென்று மொபைலில் தேடி, அந்த ஜகதீஷின் எண்ணுக்கு டயல் செய்தான்.

    காலர் டியூனாக கர்ரே… முர்ரே…வென்று ஏதோ ஒரு இங்கிலீஷ் பாடல் இரண்டு வினாடிகள் ஒலித்த பின், ஹல்லோ… ஜகதீஷ் ஹியர்! லைனுக்கு வந்தான் ஜகதீஷ்.

    டேய் ஜகதீஷ்… நான் நிர்மல் பேசறேண்டா!

    ஓ… வாட் எ சர்ப்ரைஸ்…? எப்படிடா இருக்கே…? எங்கிருந்துடா பேசறே?

    நல்லாயிருக்கேன்… இங்க கோவை புதூர் ஏரியாவுக்கு கம்பெனி வேலையா வந்தேன்… வந்த இடத்துல வேலை சீக்கிரமே முடிஞ்சிட்டுது… அப்ப உன்னோட ஞாபகம் வந்திச்சு… சரி… இதுவரைக்கும் வந்தாச்சு, உன்னையும் ஒரு பார்வை பார்த்திட்டுப் போகலாம்னுதான் கூப்பிட்டேன்…! நீ இப்ப எங்க இருக்கே…? கம்பெனிலதானே இருக்கே?

    பாரு… அப்பவும் நீ என்னைப் பார்க்கன்னு வரலை… ஆபீஸ் வேலைக்காக வந்திட்டு அப்படியே என்னையும் பார்க்க வர்றே…? அப்படித்தானே? மறுமுனையில் ஜகதீஷ் சொல்ல,

    கோவிச்சுக்காதம்மா… உன்னோட கம்பெனி எங்க இருக்குன்னு சொல்லு உடனே வந்திடறேன்! நிர்மல் சமாளித்தான்.

    இப்ப நீ எந்த இடத்துல நின்னிட்டிருக்கே… அதைச் சொல்லு முதல்ல? ஜகதீஷ் கேட்டான்.

    "ம்ம்ம்… இங்க

    Enjoying the preview?
    Page 1 of 1