Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ootha Colouru Helmet!
Ootha Colouru Helmet!
Ootha Colouru Helmet!
Ebook136 pages50 minutes

Ootha Colouru Helmet!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில், ரவுடி மாணவனான பச்சீஸ்வரன், மந்திரி மகனை எதிர்த்து நின்று வெல்கிறான். மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக பேராசிரியர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் அடிக்கடி மோதுகிறான். பிரின்ஸிபாலுடன் நேரடியாக மோதி அவரது வெறுப்பையும் சம்பாதிக்கிறான். அவனது தொந்தரவு தாங்க முடியாத ஒரு பேராசிரியர் தன் வேலையையே ராஜினாமா செய்து விட்டு, ஊரை விட்டே போகிறார்.
அவனைச் சுற்றி எதிரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இந்தச் சூழ்நிலையில், அவனைக் கொல்லப் போவதாக அவனது ஹாஸ்டல் அறைக்குள் ஒரு கடிதம் வந்து விழுகின்றது. அந்தக் கடிதத்தை எழுதியது யார்? என்பதைக் கண்டுபிடிக்க அவனும் அவனது சகாக்களும் முயற்சி செய்கின்றனர்.
ஒரு நாள், யாரும் எதிர்பாராத விதமாய் பச்சீஸ்வரன் சாலையோர மரத்தில் தூக்கில் தொங்குகிறான். அவன் தலையில் ஊதா நிற ஹெல்மெட் மாட்டப்பட்டிருக்கின்றது.
அது கொலையா?....தற்கொலையா?...கொலையென்றால் கொலையாளி யார்? என்பதை போலீஸ் துப்பறியும் விதத்தை மிகவும் சுவாரஸியமாக, ஒரு திரைப்படம் போல் கொண்டு சென்றிருக்கின்றார் நாவலாசிரியர்.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580130005247
Ootha Colouru Helmet!

Read more from Mukil Dinakaran

Related to Ootha Colouru Helmet!

Related ebooks

Related categories

Reviews for Ootha Colouru Helmet!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ootha Colouru Helmet! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    ஊதா கலரு ஹெல்மெட்!

    Ootha Colouru Helmet!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    கே.பி.எஸ்.ஆர்ட்ஸ் காலேஜ். முன்புறத்தில் கண்ணாடிச் சுவர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடம் சூரிய ஒளியில் தக... தகத்துக் கொண்டிருந்தது.

    நகரத்தை விட்டுத் தள்ளி அமைந்திருந்த போதிலும், அந்தக் கல்லூரி இன்று படு கலகலப்பாயிருந்தது. மாணவக் கும்பல் ஆங்காங்கே நின்று எதையோ சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்க, கல்லூரியின் அலுவலக ஊழியர்களும், ஆசிரியர்களும் சற்று அதிக டென்ஷனிலிருந்தனர்.

    காரணம்?

    மாணவர் மன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் முடிவதற்குள் எப்படியும் இரண்டு மூன்று வன்முறைகளாவது நிகழ்ந்து விடும் என்பதால் இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அது முடியும் நாள் வரை கல்லூரி வாசலில் ஒரு போலீஸ் வேன் நிரந்தரமாக நிறுத்தப்படும். கல்லூரிக்குள் வந்து போகும் வெளியாட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவர்.

    மரத்தடியில் தன் பைக்கை நிறுத்தி, அதன் முதுகில் படுத்திருந்தான் பச்சீஸ்வரன். அவனைச் சுற்றி அவன் சகாக்கள் நின்று கொண்டு தேர்தலைச் சந்திப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

    பச்சீஸ்வரன்!

    மதுரை மாவட்டத்தின் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவன். கிராமத்தில் இவன் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம், என்பதோடல்லாது இவன் தாத்தா... பாட்டனார்... முப்பாட்டனர் என எல்லோருமே காலம்காலமாய் அந்த ஊரின் நாட்டாமையாக இருந்து கோலோச்சியவர்கள். இவனுடைய தந்தை கொஞ்சமாய் அரசியல் செல்வாக்கும் கொண்டவர். அவரது கட்டளைப்படிதான் அந்த கிராமத்து மக்களின் மொத்த ஓட்டும் விழும் என்பதால் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கூட இவர்கள் வீடு தேடி வந்து போயிருக்கின்றனர். சொந்த ஊரில் செல்வாக்கு படைத்த குடும்பத்தின் வாரிசான பச்சீஸ்வரன் அதே செல்வாக்கை கல்லூரியிலும் பெற்றிருந்தான். படிப்பை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு, இன்னபிற விஷயங்களில் தன்னை முதன்மையாக்கிக் கொண்டிருந்தான்.

    பொழுது போக்காய் கல்லூரிக்கு வந்து போகும் இவனுடன் ஒரு கூட்டம் எப்போதும் ஒட்டிக் கொண்டேயிருக்கும். எல்லாம் இவன் வாங்கிக் கொடுக்கும் பீர் மற்றும் பிராந்தி சமாச்சாரங்களுக்காகத்தான் என்பது இவனுக்கும் தெரியும். அத்தோடு, பச்சீஸ்வரன் ஆள் என்கிற ஒரு முத்திரை அவர்களுக்கு அந்தக் கல்லூரிக்குள் ஒரு பெரிய பாதுகாப்பு வளையமாய் இருப்பதோடு, அவர்களைக் கண்டு மற்றவர்கள் பயப்படும்படியும் செய்வதால், எப்போதும் பச்சீஸ்வரனுடனேயே ஒட்டிக் கொண்டிருந்தனர் அந்த சகாக்கள்...

    பச்சீஸ்வரா! உடனே ஒரு நல்ல நாள் பார்த்து நாமினேஷன் பண்ணிடலாமா? இடது காதில் கடுக்கன் போட்டிருந்த இளம்வழுதி கேட்க,

    பண்ணலாம்... பண்ணலாம்! அதுக்கு முன்னாடி... நாம மொதல்ல சில விஷயங்களை முடிவு பண்ணலாம்! அதாவது யார்... யார்... என்னென்ன பதவிக்குப் போட்டி போடறது!ன்னு ஒரு தீர்மானம் பண்ணிட்டு அப்புறமா நாமினேஷன் பண்ணுவோம் பச்சீஸ்வரன் பைக் சாவியைச் சுழற்றியபடியே அலட்சியமாகச் சொன்னான்.

    இதிலென்ன சந்தேகம்? சேர்மெனுக்கு... பச்சீஸ்வரன்! செகரட்டரிக்கு...? என்று இழுத்தான் இளம்வழுதி.

    டேய்... டேய்... பொறுடா... நானே சொல்றேன்! தாடைப் பகுதியை வறட்... வறட் டென்று சொறிந்த பச்சீஸ்வரன், ம்ம்ம்... இளம்வழுதி... நம்ம ரங்கநாதன் செகரட்டரிக்கு நிக்கட்டும்! நீ வைஸ்-சேர்மெனுக்கு நின்னுடு! நான் சேர்மெனுக்கு நின்னுடறேன்! என்ன ஓ.கே.வா?

    எப்படியும் அவன் முடிவை யாரும் மறுக்கப் போவதில்லை என்பதும், மறுத்தால் அவர்களுக்கு மருத்துவச் செலவுதான் ஏற்படும், என்பதும் அவனுக்கும் தெரியும்... அந்தக் காக்காய்க் கூட்டத்திற்கும் தெரியும்.

    ஓ.கே! என்று கோரஸாய்க் கத்தி தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தது அந்தக் கூட்டம்.

    அது சரி... இது நம்ம அணி... எதிர் அணில யார் யார் நிப்பாங்க? பச்சீஸ்வரன் கேட்க,

    அதைப் பத்தி நமக்கென்ன பச்சீஸ்? எப்படியும் நாமதான் ஜெயிக்கப் போறோம்! என்றான் இளம்வழுதி.

    அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே?

    பின்னே? மிரட்டியே நமக்கு ஓட்டுப் போட வெச்சிவோமல்ல?

    பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி வாயில் வைத்தான் பச்சீஸ்வரன், பாய்ந்து வந்து அதைப் பற்ற வைத்தான் வருங்கால செகரட்டரி ரங்கநாதன். பச்சிஸ்வரனைக் காக்கா பிடிப்பதில் அவனுக்கும், அந்த இளம்வழுதிக்கும் எப்போதும் ஒரு போட்டி இருந்து கொண்டேயிருக்கும்.

    முதல் புகையை வெளியே விட்ட பச்சீஸ்வரன், மெல்லச் சொன்னான். டேய்! மினிஸ்டர் மகன்... கோபி... நிற்பான் போலத் தெரியுது!

    ப்ர்ர்ர்ர்ர்ர் என்று இளக்காரமாய்ச் சிரித்த ரங்கநாதன், பாவம்! அவனுக்கு டெபாசிட் காணாமப் போகப் போகுது!

    இல்லைடா... அவன் கொஞ்சம் ஸாப்ட் டைப்! பொண்ணுங்களை நல்ல அட்ராக்ட் பண்ணி வெச்சிருக்கான்! அதனால... பொண்ணுங்க ஓட்டெல்லாம் அவனுக்குத்தான் விழும்! நாம ரௌடித்தனம் பண்ணிப் பண்ணி பொண்ணுக கிட்ட கெட்ட பெயரைத்தான் சம்பாதிச்சு வெச்சிருக்கோம்! பச்சீஸ்வரன் புகையை மென்றபடியே சொன்னான்.

    அடடே! அப்பப் பொண்ணுங்க ஓட்டை அள்ளுறதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணணும்! என்ன பண்ணலாம்? ரங்கநாதன் தலையின் பின் புறம் தட்டியபடி யோசித்தான்.

    சில நிமிட அமைதிக்குப் பின்,

    என்னடா எல்லோரும் அமைதியாவே இருக்கீங்க? ஐடியா ஏதும் உதயமாகலையா? பச்சீஸ்வரன் கடைசி தம்மை இழுத்து, அந்த சிகரெட்டை எறிந்தவாறே கேட்டான்.

    ம்ம்ம்... வரவே மாட்டேங்குது தலை!

    அவன் பின் மண்டையில் ஓங்கி அடித்த பச்சீஸ்வரன், சரி... அதையும் நானே சொல்லித் தொலைக்கறேன்! என்றான்.

    சகாக்கள் அவன் சொல்லப் போவதைக் கேட்க, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டனர்.

    நம்ம அணி ஜெயிச்சா... நம்ம கல்லூரிக் காம்பௌண்டுக்குள்ளார ஒரு லேடீஸ் பியூட்டி பார்லர் கொண்டு வரப் போறோம்! மார்னிங் டைம்ல அவசர அவசரமா எந்திரிச்சு... அதே அவசரத்துல புறப்பட்டு... பஸ்ஸிலேயும்... டூ வீலர்லேயும்... அடிச்சுப் பிடிச்சு... நசுங்கி... கசங்கி... வந்து சேர்றதுக்குள்ளார நம்ம லேடி ஸ்டூடண்ட்ஸோட அரைகுறை மேக்கப்பெல்லாம் சுத்தமாக் கலைஞ்சு அரவாணி ரேஞ்சுக்கு ஆயிடறாங்க... அதனால அவங்கெல்லாம் காலைல வந்ததும் நேரா பியூட்டி பார்லர் போய்... டச்சப் பண்ணிட்டு கிளாஸுக்குப் போகலாம்! மறுபடியும்... எப்பவெல்லாம் டச்சப் தேவைப்படுதோ அப்பவெல்லாம் பியூட்டி பார்லருக்கு வந்து பண்ணிக்கலாம்! இதுல முக்கியமான விஷயம் என்னன்னா... எல்லாமே இலவசம்! சொல்லிவிட்டு பச்சீஸ்வரன் ஓங்கிச் சிரிக்க,

    காக்கா கூட்டம் கை தட்டி மகிழ்ந்தது.

    "சூப்பர்... சூப்பர் தலைவா! அரசியல்வாதிக கூட இப்படியொரு தேர்தல் வாக்குறுதியைக்

    Enjoying the preview?
    Page 1 of 1