Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Nizhalum Naanthane?
Un Nizhalum Naanthane?
Un Nizhalum Naanthane?
Ebook159 pages53 minutes

Un Nizhalum Naanthane?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வளரும் எழுத்தாளன் சீனிவாசன், ஒரு பதிப்பகத்தாரைப் பார்க்க தன்னுடைய படைப்புக்களையெல்லாம் ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்துக் கொண்டு மைசூர் பஸ்ஸில் ஏறுகிறான்.

இரவுப் பயணத்தில் பஸ் ஒரு தேநீர் விடுதியில் நிற்க, அந்த விடுதிக்குப் பின்னால் இயற்கை உபாதைக்காக சென்ற சீனிவாசன் அங்கிருந்த கிணற்றில் விழுந்து விடுகிறான்.

அதைக் கண்டு கொள்ளாமல் புறப்பட்ட பேருந்து மைசூரை அடைந்ததும், சீனிவாசனின் பக்கத்து சீட் காரன் சீனிவாசனின் பெரிய சூட்கேஸை எடுத்துக் கொண்டு போகிறான்.

பெரிய ஆசையுடன் அதை திறந்து பார்த்தவன் ஒரே காகிதங்களாய் இருக்க சலிப்பாகிறான். ஆனால், அவற்றின் பயனைக் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொண்டதும் சீனிவாசன் படைப்புக்களை தன் பெயரில் வெளியிட்டு பிரபலமாகிறான். வெறும் “குமார்” எழுத்தாளர் “ரோஜாக் குமார்” ஆகின்றான்.

அவன் பெயரில் வெளியான படைப்புக்கள் அனைத்தும் தன் காதலன் சீனிவாசனுடையது என்று அடையாளம் கண்டு கொண்ட நந்தினி குமாரைத் தேடி வருகிறாள்…

மீதி… நாவலுக்குள்….

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580130007279
Un Nizhalum Naanthane?

Read more from Mukil Dinakaran

Related to Un Nizhalum Naanthane?

Related ebooks

Reviews for Un Nizhalum Naanthane?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Nizhalum Naanthane? - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    உன் நிழலும் நான்தானே?

    Un Nizhalum Naanthane?

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 1

    இரவு 9.45.

    கோயமுத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் பரபரப்பாயிருந்தது. சென்னை செல்லும் ஆம்னி பஸ்களுக்கு ஆட்களைப் பிடிக்க, கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கும் இளைஞர்கள், கண்ணில் படுவோரிடமெல்லாம், சென்னையா சார்?...சென்னையா சார்? என்று கேட்டுக் கொண்டிருக்க,

    ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்து விட்ட பயணிகள் தோள்களில் பேக்கைச் சுமந்து கொண்டு காத்திருந்தனர். அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் இத்யாதிகளை வாங்கி வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

    திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மைசூரை நோக்கிச் செல்லும் அந்த பஸ் புறப்படத் தயாராயிருந்தது.

    டாட்டா சொல்ல வந்தவர்கள் அந்த பஸ்ஸின் ஜன்னலுக்குக் கீழே நின்று கடைசி நேர வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தனர்.

    உடம்பை பத்திரமா பார்த்துக்கப்பா!...தவறாம சனிக்கிழமை எண்ணை தேய்ச்சுக் குளிச்சிடு!...எப்பப் பாரு செல்போனையும்...லாப்டாப்பையும் நோண்டிக்கிட்டு தூக்கம் கெடாதே! இது ஒரு தாய் வாலிப மகனிடம்.

    மாப்பிள்ளையின் மனசு கோணாம நடந்துக்கம்மா!...நம்ம வீட்டுல இருந்த மாதிரி போற இடத்திலேயும் விளையாட்டுத்தனமாய் இருக்காதே!..மாமனார்...மாமியார் கிட்டே இரைஞ்சு பேசாதே!...மொபைலைக் கொஞ்சமா யூஸ் பண்ணு! புதிதாய்ப் புருசன் வீடு செல்லும் மகளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

    இரண்டு கைகளிலும் தின்பண்டப் பொட்டலங்களைத் தூக்கிக் கொண்டு, அவசர அவசரமாய் வந்து பஸ்ஸில் ஏறினார் ஒரு திருநெல்வேலிக்கார அண்ணாச்சி. அவர் சரியான தின்னிப் பண்டாரம் என்பதை அவரது தொப்பை ஆதாரத்துடன் நிரூபித்தது.

    சரியாக 9-50க்கு பஸ் கிளம்பியது.

    கண்டக்டர் தலைகளை எண்ணினார்.

    சிக்னலில் சில நிமிடங்கள் நிறுத்தி, சிக்னல் விழுந்ததும் ஆக்ஸிலேட்டரை மிதித்தார் டிரைவர்.

    பஸ் சத்தி ரோட்டைத் தொட்டு வேகம் பிடித்தது.

    அந்த நேரத்திலும் சத்தி ரோட்டில் ஜன நெரிசல் அதிகமாகவேயிருந்தது. கூட்டத்தைக் குறைக்கும் நோக்கத்தில் மேலே கட்டப்பட்ட பாலத்தில் குறைவாகவே வாகனங்கள் ஓடின.

    நகரத்தின் நெரிசல்களைக் கடந்ததும் பஸ் சீரான வேகத்தில் பறந்தது.

    கண்டக்டர் டிக்கெட் வினியோகத்தை முடித்து விட்டு, டிரைவர் அருகில் வந்து, இன்ஜின் மேல் அமர்ந்து அரட்டையைத் துவங்கினார்.

    அண்ணே...நேத்திக்கு நம்ம சோமு தொந்தரவு தாங்க முடியாம அவன் கூட ஒரு படத்துக்குப் போனேன்!...ஹும்...பாடாவதிப் படம்!... காசைக் குடுத்து கடி நாயை வாங்கிட்டு வந்து முதல் கடியை நாமே வாங்கிக்கற மாதிரி...காசைக் குடுத்து தலைவலியை வாங்கிட்டு வந்தோம்! கண்டக்டர் அங்கலாய்க்க,

    ஹா...ஹா...ஹா...அப்படி என்ன படம் அண்ணே? ரோட்டைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டார் டிரைவர்.

    புலி....பேசாம எலின்னு வெச்சிருக்கலாம்

    என்னண்ணா?...நம்ம விஜய் படமாச்சே?...அவரு படம் எப்பவுமே நல்லாத்தானே இருக்கும்!... ஹார்ன் அடித்தபடி சொன்னார் டிரைவர்.

    அதென்னவோ சரிதான்!...குடுக்கற காசுக்கு வஞ்சகமில்லாம இருக்கும்...ஆனா இந்தப் படம் குழந்தைக பார்க்கற...அம்புலிமாமா படம் மாதிரியல்ல இருக்கு!... குறுக்கே புகுந்த ஒரு டூ வீலர்க்காரனைப் பார்த்து டேய்ய்ய்ய்...குருட்டு மூதேவி கத்தினார் கண்டக்டர்.

    அப்ப ஜாலியா இருக்கும்!னு சொல்லுங்க!...ஜோடி யாரு?

    கமலஹாசன் பொண்ணு...ஹும்...அதுக்கு நடிக்க வாய்ப்பேயில்லை!...சும்மா வருது...ஆடுது...போகுது...அவ்வளவுதான்

    விஜய் படத்துல பாட்டுக நல்லாயிருக்குமே? என்று டிரைவர் சொல்ல,

    பாட்டுக இருக்குது!...ஆனா நல்லா இருக்குது!ன்னு சொல்ல முடியாது!...ஏன்னா..ஒரு வார்த்தை கூடப் புரியலை!...அதுக்கு கோணங்கித்தனமான ஆட்டம்...கோமாளித்தனமான டிரஸ்...ஹூம்...எல்லாம் எம்.ஜி.ஆர்....சிவாஜி காலத்தோட போச்சு!...அப்பெல்லாம் மணிமணியான பாட்டுக...மனசைத் தாலாட்டற மாதிரியல்ல வரும்? கண்டக்டர் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

    இவர்களின் உரையாடலைக் கேட்டபடி, ஜன்னலுக்கு வெளியே வேகமாய்க் கடந்து செல்லும் தந்திக் கம்பங்களையும், வீடுகளையும், வெளிச்சப் புள்ளிகளையும் ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.

    அவன்?

    சீ.சீ.வாசன். சீதாராமனின் மகன் சீனிவாசன் என்பதன் சுருக்கம். வளரும் எழுத்தாளன்.

    பல வருடங்களுக்கு முன் கல்லூரி மேகஸைனில் அவனது சிறுகதை வெளியானதிலிருந்தே ஒரு பெரிய எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற தாகம் அவனுக்குள் எழுந்தது.

    விளைவு?...தொடர்ந்து சிறுகதைகளை எழுதிக் குவித்தான்.

    பல்வேறு பத்திரிக்கைகளுக்கு அவற்றை அனுப்பி பாதி ஏழையானான். ம்ஹும்...ஒன்று கூடப் பிரசுரமாகவில்லை.

    மனம் நொந்தான். இனிமேல், பேனாவையே தொடுவதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தவனை ஊக்கப் படுத்தும் விதமாய் அது நடந்தது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு, அதிர்ஷ்டவசமாகவோ...இல்லை எதேச்சையாகவோ அவனுடைய சிறுகதையொன்று ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையில் வெளி வர, அடங்கிப் போயிருந்த எழுத்து தாகம் மீண்டும் எழுந்தது.

    எழுதிக் குவித்து, காகித மலையையே உருவாக்கினான்.

    அதன் பலனாய் உள்ளூரில் மட்டும் உலா வரும் சில சிற்றிதழ்களில் அவனுடைய கதைகள் அவ்வப்போது தலை காட்டின. சில இலக்கிய அமைப்புக்கள் அவனையும் ஒரு இலக்கியவாதியாய் நினைத்து தங்கள் விழாக்களுக்கு அவனை அழைத்து சிறப்புச் செய்தன.

    எங்காவது...எப்போதாவது...யாராவது ஒருவர் இவனை, என்ன எழுத்தாளரே...சௌக்கியமா? என்று கேட்டு விட்டால், பாரத ரத்னா அவார்டே கிடைத்து விட்டது போல் மகிழ்வான்.

    ஜன்னல் வழியாக குளிர் காற்று பஸ்ஸிற்குள் புகுந்து நெஞ்சுப் பகுதியில் ஊசியாய்க் குத்த ஆரம்பித்ததும், ஷட்டரை இறக்கி விட்டான்.

    பஸ்ஸினுள் ஒற்றை விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய ஒளியில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். சீனிவாசனுக்கு மட்டும் உறக்கம் பிடிக்கவில்லை. கண்களை மூடி மூடி முயற்சித்துப் பார்த்தான். ம்ஹும்...பிரயோஜனமேயில்லை. அவனுக்கு, அவன் வீட்டில்...அவன் அறையில்...அவனது பெட்டில் தூங்கினால் மட்டுமே முழுமையான உறக்கம் கிடைக்கும்.

    ப்ச்...ஏதாவது புத்தகம் படிக்கலாம்ன்னா...இந்த மங்கல் வெளிச்சத்தில் அதுவும் முடியாது! சலித்துக் கொண்டான்.

    அவஸ்தையுடன் அமர்ந்திருந்தவன், சிறிது நேரத்தில் அவனையுமறியாமல் உறக்க தேவதையின் கைகளைப் பற்றினான்.

    ஆனால், அந்த உறக்கத்திற்கும் அல்பாயிசானது.

    திடீரென பஸ் குலுங்கலுடன் நிற்க, திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

    பஸ்ஸிற்குள் பட...படவென விளக்குகள் எரிந்தன.

    பஸ் பதினஞ்சு நிமிஷம் நிற்கும்...டீ...காபி...சாப்பிடறவங்க போய் சாப்பிட்டுட்டு வந்திடுங்க!...லேட் பண்ணிடாதீங்க!... கண்டக்டர் அறிவித்தபடி பஸ்ஸிலிருந்து இறங்கி, புரோட்ட கடையை நோக்கி ஓடினார். டிரைவர் அவரைத் தொடர்ந்து ஓட, ரெண்டு பேருக்கும் இலவச புரோட்டா என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சீனிவாசன்.

    பஸ்ஸில் பாதிப் பேர் வெளியேறினர்.

    சீனிவாசன், இறங்கிப் போகலாமா?...வேண்டாமா? என்கிற யோசனையில் அமர்ந்திருந்தான்.

    அவன் நாக்கு மட்டும் டீக்கு ஏங்கி, டேய்...எழுத்தாளா...கொஞ்சம் டீ வாங்கி ஊத்துடா என்று கெஞ்ச, மெல்ல எழுந்தான்.

    சார்...டீக்கு டோக்கன் வாங்கிட்டு வாங்க டீ மாஸ்டர் கை காட்டிய இடத்திற்குச் சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1