Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vinnai Thodalam Unthan Siragu
Vinnai Thodalam Unthan Siragu
Vinnai Thodalam Unthan Siragu
Ebook168 pages1 hour

Vinnai Thodalam Unthan Siragu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவன் பாலாஜி. உறவுகளாலும். நட்புகளாலும் பலவகைகளில் பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கிறான். ஆனால், கடைசி விநாடியில் ஏதோவொரு நிகழ்வு அவன் தற்கொலையைத் தடுத்து விட, புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அந்த முயற்சி தொடர்ந்து அவனுக்கு வெற்றிகளைத் தர, வாழ்க்கையில் உயருகிறான். சமூகத்தில் பெரும்புள்ளியாகிறான்.

ஆரம்ப காலகட்டங்களில் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், அவனிடம் வந்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கின்றனர், மனம் கோணாமல் அவர்களை ஏற்றுக் கொண்டு உதவுகிறான்.

தான் நொந்து போன காலத்தில் தனக்கு ஆறுதலாய் இருந்த குடும்பத்திற்கு உதவுகிறான்.

வாழ்க்கையில் நல்ல நேரம் என்பது மனிதனுக்கு கடைசி விநாடியில் கூட வரும், என்பதை உணர்த்தும் நேர்மறையான இந்தக் கதை நிச்சயம் வாசக நெஞ்சங்களில் நீங்கா இடம் பெறும் என்பது உறுதி.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004823
Vinnai Thodalam Unthan Siragu

Read more from Mukil Dinakaran

Related to Vinnai Thodalam Unthan Siragu

Related ebooks

Reviews for Vinnai Thodalam Unthan Siragu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vinnai Thodalam Unthan Siragu - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு

    Vinnai Thodalam Unthan Siragu

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 1

    அவன் பாலாஜி.

    காற்றில் பறந்து கொண்டிருந்த தலைமுடி அவனை பரட்டை என்கிற பாலாஜி ஆக்கியிருந்தது. முகத்தில் ஒரு வார தாடி. கண்கள் இடுங்கிப் போய், குழிக்குள் பதுங்கியிருந்தன. ஏனோதானோவென்று அவன் அணிந்திருந்த சட்டையும் பேண்ட்டும், அவனது விரக்தி மனநிலையை ஊருக்கெல்லாம் பறை சாற்றிக் கொண்டிருந்தன.

    பார்க் பெஞ்சில், கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்த அவனுடைய முகத்தில் மாலை நேர வெயில் மஞ்சள் பூசிக் கொண்டிருந்தது.

    அது ஞாயிறு மாலையானதால் பார்க்கில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது. குழந்தைகளுக்கான பகுதியிலிருந்து காச்... மூச்சென்று ஏக சத்தம். ஊஞ்சல்... சறுக்கு... சீசா பலகை... என எல்லாவற்றிலும் குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சில தின்னிப் பண்டாரக் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமின்றி, தங்கள் அம்மாமார்களை நச்சரித்து, எக்கச்சக்கமாய் தீனிகளை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு, நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

    சில செடி மறைவுகளிலிருந்து கிசு... கிசுவென்ற பேச்சு சப்தமும், அவ்வப்போது சில்லரைச் சிதறலாய் சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

    ஜோடி செட் ஆகாத விடலைப் பயல்கள், ஆங்காங்கே ஜோடி வேண்டி ஒற்றைக்காலில் கொக்கு போல் தவமிருந்தனர்.

    ஒன்றிரண்டு பெண்கள் தங்களின் லவ்வருக்காக நகம் கடித்தபடி காத்துக் கொண்டிருக்க, அவர்களையும் விடாமல் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன ஒற்றைக்கால் கொக்குகள். அவன் வராவிட்டால் என்ன? நாங்கள் இருக்கிறோம்? என்று சொல்லாமல் சொல்லியது அவர்கள் பார்வை.

    பார்க் காவலாளி ஏற்கனவே செடி மறைவுக் காதலர்களிடமிருந்து ஒரு அன்பளிப்புத் தொகையைப் பெற்றிருந்த காரணத்தால், தன் விசுவாசத்தைக் காட்டும் விதமாய், காதலர்கள் மறைந்திருக்கும் செடிகள் அருகே செல்லும் குழந்தைகளையும், வேறு சிலரையும் சின்சியராக விரட்டி விட்டார்.

    கொழுத்த பணக்காரர்களான சிலர் தங்களது பருத்த உடம்பினைப் பராமரிக்கும் விதமாய் வாக்கிங்கில் ஈடுபட்டிருக்க, இளைஞர்கள் சிலர் எப்படியும் அடுத்த முறை நிகழும் ஆணழகன் போட்டியில் நிச்சயமாக பரிசினை வென்றே ஆக வேண்டும் என்கிர தீவிர முனைப்பில், படு ஆவேசமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

    நடுத்தர வயது ஜொள் மாஸ்டர்கள் பார்க் பெஞ்சில் அமர்ந்து, கையில் ஏதோவொரு பாடாவதிப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதைப் படிப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டு, வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் பருத்த பணக்காரப் பெண்களின் உருண்டு திரண்ட அழகை திருட்டுத்தனமாய் விழியால் பருகிக் கொண்டிருந்தனர்.

    கண்ணெதிரில் தெரியும் காட்சிகளையெல்லாம், இறுகிய முகத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்த பாலாஜிக்கு, தன்னைத் தவிர இந்த உலகில் எல்லோருமே சந்தோஷமாய்... மகிழ்ச்சியாய்... உற்சாகமாய்... இருப்பதாய்ப் பட்டது.

    ஏன் எனக்கு மட்டும் இந்த உலகம் இப்படி கசக்கிறது...? யார் காரணம்...? என்ன காரணம்...? என் பிறப்பு தப்பா...? இல்லை வளர்ப்பு தப்பா...?

    சார்... முறுக்கு வேணுமா? கேட்டபடி தன் அருகில் வந்து நின்ற சிறுவனைப் பரிதாபமாய்ப் பார்த்து,

    வேண்டாம்ப்பா! என்றான் பாலாஜி.

    அவன் நகர்ந்ததும், ஹூம்... படிப்பிலும் ஜொலிக்கவில்லை... காதலிலும் ஜெயிக்கவில்லை... உத்தியோகத்திலும் உஷார் இல்லை... ச்சை...! ஏன்தான் பிறவியெடுத்தேனோ? விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு வெறுமையைப் பார்த்துப் புலம்பினான். உள்ளே, வாழ்க்கையின் மீதான வெறுப்பு அவனை விடாமல் பிறாண்டியது.

    அப்போது, அவனைப் பார்த்து சிநேகிதமாய் புன்னகைத்தபடி, அவனருகில் வந்தமர்ந்த அந்த இளைஞன் மிகவும் டீஸண்டாக... நாகரீகத்தனமாக இருந்தான். அவன் முகத்தில் படிப்புக்களை மின்னியது. அவன் ஆடையலங்காரத்தில் ஒரு உத்தியோக்ககளை தெரிந்தது. அவன் மீதிருந்து வீசிய நறுமணத்தில் அவனது பொருளாதாரக்களை தெரிந்தது.

    தானாக வலியச் சென்று அவனுடன் பேச விரும்பாத பாலாஜி, அவனாகப் பேசினால் மட்டுமே பதில் பேசுவது என்கிற தீர்மானத்தோடு பாறையாய் இறுகி அமர்ந்திருந்தான்.

    ஃபேமிலி மேன் ஆயிட்டாலே இந்த மாதிரி இடங்களுக்கெல்லாம் வந்து... தேவையில்லாம நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டியிருக்கு...! இல்லையா சார் அந்த இளைஞன் சன்னமான குரலில் சொல்ல,

    ஃபேமிலி மேனான அவன் தன் இளம் மனைவி, மற்றும் குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல், அங்கு வந்து, அவர்களை விளையாட அனுப்பி விட்டு, அவர்கள் திரும்பி வருவதற்காக காத்திருக்கிறான், என்பதைப் புரிந்து கொண்ட பாலாஜி, ஒரு வறட்டுப் புன்னகையை அவனுக்கு பதிலாய்த் தந்து விட்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

    அவன் மனம் அழுதது. என்ன கொடுமை இது...? என்னை விடச் சிறியவனாகத் தெரியுற இந்த இளைஞன் ஃபேமிலிமேன்...! நான்... இன்னிக்கு வரைக்கும் என் ஃபேமிலிக்கு ஆகாத மேன்...! காரணம்...? எனக்கு உத்தியோகமில்லை...! சம்பாத்தியமில்லை...! ச்சே!

    பாலாஜியின் பார்வை ஒரே இடத்தில் நிலைக் குத்தி அமர்ந்திருப்பதையும், அவன் தாடியையும், அவனது தீவிர சிந்தனையையும் கண்டு, வேறு விதமாய் நினைத்துக் கொண்ட அந்த இளைஞன், சார்... கவிஞரோ...? அமைதியாய் இருப்பதைப் பார்க்கும் போது உள்ளுக்குள்ளார ஏதோ கவிதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கு! என்றான்.

    அவனை ஓங்கி அறையலாம் போலிருந்த்து பாலாஜிக்கு.

    ஹூம்... அவனவன் வாழ்க்கையே வெறுத்துப் போய்... தொடர்ந்து வாழலாமா...? இல்லை பேசாம தற்கொலை பண்ணிக்கலாமா?ன்னு யோசிச்சிட்டிருக்கான்...! இவன் என்னடான்னா... கவிதை உருவாக்கிக்கிட்டு இருக்கீங்களா?ன்னு கேட்கறான்...! இவனை என்ன செய்ய...? என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டு, அந்த இளைஞனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாயிருந்தான் பாலாஜி.

    அப்போது,

    டாடி... எனக்கு ஐஸ் கிரீம் வேணும்! என்று கூவிக் கொண்டே ஓடி வந்தாள் ஒரு சிறுமி. இளைஞனின் முகம் அச்சிறுமியிடம் அப்படியே இருந்தது.

    அச்சிறுமியின் பின்னாலேயே வேக, வேகமாய் வந்த பெண், ச்சூ... எத்தனை தடவை சொல்றது... ஐஸ் கிரீமெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு என்று அச்சிறுமியை அதட்டி விட்டு, அந்த இளைஞனிடம் திரும்பி, ஏங்க என்னால உங்க மகளை அடக்க முடியவில்லை சாமி... நீங்களே அடக்குங்க! என்றாள். அவள் பேச்சில் சரி விகிதத்தில் கலந்திருந்த அன்னியோன்யமும், அதிகாரத் தொணியும் அவள்தான் அந்த இளைஞனின் மனைவி என்று உறுதி கூறின.

    தன்னை நெருங்கி வந்து தன்னுடன் ஒட்டிக் கொண்ட மகளின் தலையைத் தடவிக் கொடுத்த இளைஞன், திவ்யாக்குட்டி... போன தடவை உனக்கு ஃபீவர் வந்து... நீ உன்னோட ஸ்கூல் எக்ஸாம் கூட அட்டெண்ட் பண்ண முடியாமப் போச்சல்ல?

    ஆமாம்... ஆமாம்!

    அது எதனால தெரியுமா...? அப்ப நீ கேட்டியே!ன்னு சொல்லி நான் உனக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்ததுதான்! காரணம்! மகளின் கை விரல்களைப் பற்றி சொடுக்கு எடுத்தவாறே சொன்னான் அந்த இளைஞன்.

    அச்சிறுமி அதை ஆமோதிப்பது போல், தலையை மேலும், கீழும் ஆட்ட,

    யோசிச்சுப் பாரு...! அப்ப நீ எவ்வளவு சிரமப்பட்டே...? நீ மட்டுமா...? அம்மா... ராத்திரி பூராவும் தூங்காம உன் பக்கத்திலேயே உட்கார்ந்து உன்னை கவனிச்சிட்டாங்கல்ல...? நானும் ஆபீஸுக்கெல்லாம் லீவு போட்டுட்டு உன்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயி... ஊசியெல்லாம் போட்டு... ச்சே! நாம் எல்லோருமே எவ்வளவு கஷ்டப்பட்டோம்?

    ஆமாம் டாடி... உங்க ஆபீஸிலிருந்து கூட உங்களுக்குப் போன் பண்ணி ஆடிட் சமயத்துல லீவு போட்டுட்டீங்கன்னு திட்டினாங்களே...? எனக்குத் தெரியும் அதெல்லாம்!

    ஸோ... என்று அந்த இளைஞன் கிளைமாக்ஸ் வார்த்தைகளை சொல்ல வருவதற்குள், அச்சிறுமியே முந்திக் கொண்டு,

    நோ... டாட்...! எனக்கு ஐஸ் கிரீம் வேண்டாம் டாடி! என்றது.

    பார்த்துக் கொண்டிருந்த பாலாஜிக்கு வியப்பாயிருந்தது. அடடே... இந்த அப்ரோச்... வித்தியாசமாயிருக்கே...! ஐஸ் கிரீமுக்கு அடம் பிடித்த குழந்தையை... அதன் வாயாலேயே எனக்கு ஐஸ் கிரீம் வேண்டாம் டாடின்னு சொல்ல வெச்சுட்டானே இவன்!

    பாலாஜி அந்த இளைஞனையே குறு... குறு வென்று பார்த்தான்.

    என்ன சார் பார்க்கறீங்க... கவிதை எதுவும் தோணலையா? சிரித்தபடியே அந்த இளைஞன் கேட்க,

    விரக்தியாய்ச் சிரித்த பாலாஜி, ஹூம்... கவிதை எழுதுற மனநிலைல நானும் இல்லை...! என் வாழ்க்கையும் இல்லை...! என்று சொன்னான்.

    ஏன் பிரதர் அப்படி சொல்லறீங்க?

    "பின்னே...? வாழ்க்கைல தோல்விகளை மட்டுமே தொடர்ந்து, எல்லா

    Enjoying the preview?
    Page 1 of 1