Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanneriley Thaamarai Poo
Thanneriley Thaamarai Poo
Thanneriley Thaamarai Poo
Ebook345 pages2 hours

Thanneriley Thaamarai Poo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தண்ணீரிலே தாமரையாய் மிதக்கும், இவளின் வாழ்க்கைப் பயணம் அவ்வளவு எளிதாய் அமையவில்லை. சுய மரியாதையுடன், தன்னிலை மாறத் தன்மையுடன் வாழும் வாழ்க்கையில் இவள் சந்திக்கும் சவால்கள், அவமானங்கள், போராட்டங்களை இவை அனைத்தையும் எதிர்க்கொண்டு தனிப்பறவை ஆன இவள், தன் சுய கௌரவத்தை காப்பற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி மாலை சூடினவா? இல்லை காய்ந்து சருகாய் போனதா? படிக்கலாமா… வாருங்கள்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606485
Thanneriley Thaamarai Poo

Read more from R. Manimala

Related to Thanneriley Thaamarai Poo

Related ebooks

Reviews for Thanneriley Thaamarai Poo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanneriley Thaamarai Poo - R. Manimala

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தண்ணீரிலே தாமரைப் பூ

    Thanneriley Thaamarai Poo

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    "வாலிபப் பருவம்…

    வாழ்க்கையின் வசந்தம்!

    ஆசைகள் ஓடம்…

    அனுபவம் பாடம்!

    உன்னிடம் உலகம்…

    உணரட்டும் இதயம்!"

    விடியலின் பின்னே… இருள் ஒளிந்துகொள்ள இடம் தேடியது. மார்கழிக்கே உரிய அதிக பிரசங்கித்தனமான குளிர்… காற்றில் உறைந்திருந்தது. யாரோ, எங்கேயோ… குளிர்காய டயர்களை போட்டு தீமூட்டுகிறார்கள் போலும். அந்த வாசத்தின் மாசு காற்றில் கலந்திருந்தது.

    மைதிலி சேலையை இழுத்து செருகி… வாசலில் பெரிதாய் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அதிகாலையில் குளித்து விட்டிருக்கிறாள் என்பதை கூந்தல் நுனியில் முடிந்திருந்த கொண்டையும், அதிலிருந்து சொட்டிய நீர்… நனைந்திருந்த இடுப்பு சேலையும் சொல்லியது.

    மைதிலி அந்த வீட்டின் மருமகள். லக்ஷ்மி பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டாள். சரிவர துடைக்காமல்… அவசர அவசரமாய் சேலையை சுற்றிக்கொண்டு வந்துவிட்டாள்.

    கிச்சனிற்குள் நுழைந்தவள் உளுத்தம் பருப்பையும், கடலை பருப்பையும் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற போட்டுவிட்டு நகர்ந்தாள்.

    வாயில் பிரஷ்ஷுடன் எதிர்பட்டான் ரவீந்திரன். அந்த வீட்டின் மூத்த பிள்ளை.

    என்னம்மா இது? என்றான் நெற்றி சுருங்க.

    என்னப்பா? என்றாள் புரியாமல்.

    நேத்தெல்லாம் வீஸிங் ப்ராப்ளத்தால… எவ்வளவு சிரமப்பட்டே? விடியம்பற எந்திரிச்சி… பச்சை தண்ணியிலே குளிச்சாகணும்னு இங்கே யாரு அடம்பிடிச்சாங்க? என்றான் அக்கறை கலந்த கோபத்துடன்.

    லக்ஷ்மி சத்தம் வராமல் சிரித்தாள்.

    இதுக்குத்தானா? நான் என்னவோ, ஏதோன்னு மிரண்டுட்டேன்!

    எட்டு மணிக்கு எந்திரிச்சாதான் என்ன?

    பழகிப்போச்சு ரவி! சட்டுனு மாத்திக்க முடியாது. அதுவும் இன்னைக்கு முக்கியமான நாள் வேற! எப்படி லேட்டா எந்திரிக்க முடியும்?

    முக்கியமான நாளா? என்னம்மா விஷயம்?

    கொஞ்சநேரம் யோசிச்சிட்டிரு… தன்னாலே விளங்கிடும். எனக்கு வேலையிருக்கு! என்று புதிர் போட்டுவிட்டு சென்றாள்.

    யோசனையுடன் தோளை குலுக்கிக்கொண்டு பாத்ரூம் நோக்கிச் சென்றான் ரவீந்திரன்.

    துளசி மாடத்தில் விளக்கேற்றி, கைகூப்பி, கண்மூடி வணங்கிய லக்ஷ்மியின் உதடு முணுமுணுத்தது.

    அவள் கண் திறக்கும் வரை காத்திருந்த மைதிலி, கோலம் போட்டுமுடித்த மாவு கிண்ணத்துடன் நின்றிருந்தாள்.

    கண் திறந்தாள் லக்ஷ்மி.

    என்ன அத்தை இது? நேத்தெல்லாம் காய்ச்சல் இருந்துச்சே? தலைக்கு தண்ணிய ஊத்திக்கிட்டு பனியில நிக்கறீங்க?

    என் பிள்ளைக்கேத்த பொண்டாட்டி! இப்பதான் ரவிகிட்டே இவ்வளவு டோஸ் வாங்கிட்டு வந்தேன். இப்ப நீ ஆரம்பிச்சிட்டியா? போம்மா… வடைக்கு ஊறப்போட்டிருக்கேன். ஒண்ணும் பாதியுமா அரைச்சு வச்சிடு!

    வடைக்கா?

    வடை மட்டுமல்லே! கேரட் அல்வா, பால் கொழுக்கட்டை, பாசந்தி எல்லாம் பண்ணனும். கேரட்டை கொஞ்சம் துருவி வச்சிடும்மா!

    இன்னைக்கு என்ன விசேஷம் அத்தே? வியப்பாய் கேட்டாள். யோசிச்சு பாரு! பிடிபடலேன்னா… பொறுத்திரு தன்னாலே தெரிஞ்சிடும்!

    என்னத்தே… சஸ்பென்ஸா?

    ஏன் கூடாதா? என்று சிரித்தாள்.

    ஒருவேளை மதுமதிய பொண்ணு பார்க்க வர்றாங்களோ?

    இந்த வீட்டு மருமகள் நீ! இந்த மாதிரி பெரிய விஷயமெல்லாம் உனக்குத் தெரியாம நடந்திடுமா மைதிலி? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே! மாமா பூஜையை முடிச்சிட்டாரா?

    லேசில வெளியே வந்திடுவாரா என்ன? அதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு அத்தே! என்று சிரித்தபடி சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

    கொல்லைப்புறத்தில் மலர்ந்திருந்த பவள மல்லிகையின் வாசம் நாசியை தொட்டது. அந்த ரம்மியமான வாசத்தை ரசித்தபடி… பூஜையறையை நோக்கி நடந்தாள்.

    நடக்கையில் லேசாய் மூச்சிரைத்தது. பல வருடங்களாக அவளுக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தது. மஞ்சள் பூசிய வட்ட முகத்தில்… குங்குமப்பொட்டு தெய்வீகக் களையை தந்திருந்தது. நாற்பத்தியெட்டு வயதான லக்ஷ்மிக்கு நரைகூட ஒரு அழகை கொடுத்திருந்தது.

    மெல்ல பூஜையறையை எட்டிப் பார்த்தாள். நெற்றியிலும், மார்பிலும் பட்டையாய் திருநீற்றை அப்பிக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்த விஜயராகவனின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.

    ஆறிரு திண்புயத்து, அழகிய மார்பில்

    பல்பூஷணமும் பதக்கமும் தரித்து…

    கந்தசஷ்டியை வரிபிசகாது பாடிக்கொண்டிருந்தார் விஜயராகவன். ரெயில்வேயில் சூப்பர்வைசராகப் பணிபுரிபவர். ஐம்பத்திரண்டு வயது. பூஜை முடித்து, தினமும் வாக்கிங் போவதை வழக்கமாய் வைத்திருந்தார். போய்விட்டு வந்ததும் ஒரு குளியல் போடும் விஜயராகவன் மிக கண்டிப்பானவர். பால் வாங்கி வரும் பொறுப்பு அவருடையது.

    ஒரு வழியாய் பூஜையை முடித்துவிட்டு, வெளியே வந்தவர்… மனைவியை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தவர்‚

    அந்தப் பார்வையை புரிந்துகொண்டவளாய் அலுப்பாய் மூச்சுவிட்டுக் கொண்டாள்.

    சரி… சரி… புரியுது. உடம்பு முடியாதப்ப… ஏன் இந்த குளிர்ல பச்சை தண்ணியிலே குளிச்சேன்னு கேக்க வர்றீங்க! அப்படித்தானே? எனக்கு நேத்தே உடம்பு சரியாகிப்போச்சுங்க. தவிர கோவிலுக்குப் போய் ஒரே ஒரு அர்ச்சனை பண்ணனும். அதுக்காகத்தான்… என்றிழுத்தாள்.

    கோவிலுக்கா? இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே!

    இன்னைக்கு மதுமதியோட பிறந்த நாள்.

    ஓஹோ… அதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? என்ன… உன் அருமை பொண்ணுக்காக… அம்மனுக்கு பாலாபிஷேகம் பண்ணப் போறியாக்கும்… போ… போ! என்றார் கிண்டலாய்.

    ஏங்க… இப்படியெல்லாம் பேசறீங்க? அவ யாரு? நம்ம பொண்ணு!

    உன் பொண்ணுன்னு சொல்லு! காலங்கார்த்தால அவளைப்பத்தி பேசி என்னை மூட்-அவுட் ஆக்காதே! போய்டு…! கோவிலுக்குப் போய்… என் பொண்ணுக்கு இனியாவது நல்ல புத்திய தா… தாயேன்னு வேண்டிக்க… போ!

    லக்ஷ்மி வாயை மூடிக்கொண்டாள். இதற்குமேல் வாயைத் திறந்தால்… பிரயோஜனமாயிருக்காது என்று அவளுக்குத் தெரியும்.

    அந்த சட்டையை எடு! என்றார்.

    எடுத்துக் கொடுத்தாள்.

    அணிந்துகொண்டு கிளம்பினார்.

    என்னங்க?

    என்ன?

    கொஞ்சம் கூடுதலா பால் தேவைப்படுது!

    என்ன உன் பொண்ணுக்கு பாலாபிஷேகம் பண்ணப்போறியா?

    உங்களால முடியலேன்னா… சொல்லிடுங்க… நானே வாங்கிக்கறேன்… பிறந்தநாளும் அதுவுமா அவளை ஏன் இப்படி கரிச்சுக்கொட்டறீங்க? என்றாள் முகம் சுருங்க.

    பொத்துக்கிட்டு வந்திடுமே! எல்லாம் நீ குடுக்கிற இடம்டி! அதான் இந்த ஆட்டம் போடறா! என்றவர் செருப்பை மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார்.

    லக்ஷ்மி பெருமூச்சு விட்டாள்.

    லக்ஷ்மி வீட்டிற்கு பக்கத்திலேயே இருந்த அம்மன் கோவிலுக்கு சென்று வந்தாள்.

    விஜயராகவன் வந்து விட்டிருந்தார். கிச்சனிலிருந்து வந்த நெய் வாசம் வீட்டை சூழ்ந்துகொண்டது.

    ஆமா… அந்த அடங்காபிடாரிக்கு இது ஒண்ணுதான் குறைச்சல். ஏய் மஞ்சு… இந்தா… இதைக் கொண்டுபோய் உங்கம்மாகிட்டே கொடு! என்று பால்பாக்கெட்டுகள் அடங்கிய பிளாஸ்டிக் கவரை தன் சின்ன மகளிடம் நீட்டினார்.

    அப்போதுதான் எழுந்து வந்திருந்த பதினெட்டு வயது மஞ்சுளா கொட்டாவி விட்டபடி கைநீட்டி வாங்கினாள்.

    விஜயராகவன் கவரை தராமல் மகளையும், சுவற்று கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.

    அந்த பார்வையின் உஷ்ணத்தை தாங்கமுடியாமல் தலைகவிழ்ந்துக் கொண்டாள் மஞ்சு.

    இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு?

    வந்து… வந்து…!

    எந்த சாக்குபோக்கும் சொல்லாதே! அது எனக்குப் பிடிக்காது. நீ ரெண்டு மணிக்கு தூங்கினாக்கூட காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சடணும்னு சொன்னேனா… இல்லையா?

    அ… ஆமாப்பா… இனி இப்படி நடக்காது! என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு.

    அந்த தறுதலை மாதிரி நீயும் கெட்டுப்போகாதே! இந்தா…! என்று கவரை கொடுத்துவிட்டு நடந்தார்.

    ‘சே… வீடா இது? அப்பா ரெயில்வேயில வேலை பார்க்கிறாரா? ஆர்மியில வேலை பார்க்கிறாரா? விடியற்காலைலதான் சூப்பர் சூப்பர் கனவெல்லாம் வருது. ஒரு ஆறு மணி வரைக்குமாவது நிம்மதியா தூங்க விடலாமில்லே?’ மனதிற்குள் பொருமிக்கொண்டே அம்மாவைத் தேடி கிச்சனிற்குள் போனாள்.

    வாடி… இப்பதான் எந்திரிச்சியா? உங்கப்பா வர்றதுக்குள்ளே… குளிச்சிட்டு வந்திடு! மெல்லிய தீயில் அல்வாவை கிண்டியபடி சொன்னாள்.

    எல்லாம் மாட்டிக்கிட்டாச்சு. இந்தா பால்! என்று விசனமாய் சமையல் மேடை மேல் அமர்ந்தாள்.

    நல்லா வாங்கி கட்டிக்கிட்டியா?

    உனக்கு கிண்டலா இருக்கா? எப்படிதான் இவரை கட்டிக்கிட்டு முப்பது வருஷமா குடும்பம் நடத்தறியோ… யாமறியேன் பராபரமே!

    வெட்டியா பேசிட்டிருக்காம… ஆக வேண்டிய வேலைய கவனி!

    அப்பான்னா எப்படி இருக்கணும்? ஜாலியா சிரிச்சு, பேசி… ஜோக்கடிச்சுக்கிட்டு… கலகலன்னு இருக்கணும். இவர் மட்டும் ஏம்மா இப்படி இருக்கார்?

    ஆராய்ச்சி பண்ண இதுவா நேரம்? போய் மதுவை எழுப்பிவிடு!

    மதுதாம்மா கரெக்ட்! நம்மளை மாதிரி பயந்து நடுங்காம… தனக்கு பிடிச்சதை… தோன்றதை, ஆர்ப்பாட்டமில்லாம செஞ்சு முடிச்சுக்கறா! நானும் அவளை மாதிரி இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா, தைரியம்தான் வரமாட்டேங்குது!

    போதும்டி… இந்த வீட்ல ரெண்டு கட்சியே போதும். இதை சமாளிக்கவே பிராணன் போகுது. நீ வேற ஆரம்பிச்சிடாதே! அப்பா வர்ற மாதிரியிருக்கு! கழுத்தை வளைத்து எட்டிப் பார்த்தாள் லக்ஷ்மி.

    எங்கே? என்று திடுக்கிட்டு இறங்கியவளைப் பார்த்து சத்தமின்றி சிரித்தாள்.

    என்ன பயங்காட்டறியா?

    போடி… போய் மதுவை எழுப்பிவிடு!

    மனைவி கொடுத்த காபியை வாங்கிக்கொண்ட விஜயராகவன் படித்துக்கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்தார்.

    ஈவ்னிங் ஏதாவது பார்ட்டி உண்டா? நம்ம வீட்லே?

    பார்ட்டியா… நம்ம வீட்லேயா? எதுக்குங்க? என்றாள் புரியாமல்.

    நீ பெத்த குலவிளக்குக்கு பிறந்த நாளாச்சே? நாகரீகமான உன் பொண்ணு திடீர்திடீர்னு ஏதாவது செய்வாங்களே… அதான் கேட்டேன்! என்றார் நக்கலாக.

    லக்ஷ்மி பதிலேதும் கூறாமல் அறையை விட்டு வெளியே வந்தாள்.

    விஜயராகவனும் விடுவதாயில்லை. அவள் பின்னேயே வந்தார்.

    லக்ஷ்மி மதுமதியின் அறைக்குள் சென்றாள்.

    கட்டிலில் படுக்கை கலையாமல் இருந்தது. படித்து கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஆங்கில நாவலைப் போலவே… கட்டிலை விட்டு தரையில் குப்புற கவிழ்ந்து படுத்திருந்தாள் மதுமதி.

    நீயே பார்! மணியென்ன? ஏழாகப் போகுது. இன்னும் தூங்கிட்டிருக்கு… தரித்திரம்… தரித்திரம் இதெல்லாம் எப்படி உருப்படப்போகுது? எப்படி படுத்துகிடக்கு பார்! லாரியில் அடிபட்ட நாய் மாதிரி!

    ஏன் இப்படியெல்லாம் அபசகுனமா பேசறீங்க? என்ற லக்ஷ்மியின் கண்கள் கலங்கியது.

    ஹல்லோ டாடி… குட்மார்னிங்! என்றபடி கண்களை திறந்தாள்… அந்த இதிகாச முக அழகி!

    என்னப்பா? இவ்ளோ சீக்கிரம் குளிச்சு… டிரஸ் பண்ணிட்டு… எங்கே கிளம்பறே? அபிராமி ஆச்சர்யமாய் கேட்க… ‘என்ன பதில் சொல்லுவது’ என்று சங்கடமாய் அம்மாவைப் பார்த்தான் ஷியாம்.

    வந்தும்மா… அஃபிஷியலா… அர்ஜென்ட்டா… ஒருத்தரை பார்க்க வேண்டியிருக்கு!

    டிபன்?

    வந்து சாப்பிட்டுக்கறேம்மா! என்றவன் அதற்குமேல் நிற்காமல்… பைக்கில் ஆரோகணித்து உசுப்பிவிட்டு புறப்பட்டான்.

    அம்மா… அண்ணன் எங்கே? காபியோடு வந்தாள் தங்கை உத்ரா.

    யாரையோ பார்க்கப்போறேன்னுட்டு அவசரமா கிளம்பிப்போறான்.

    காபி கேட்டுச்சே! எடுத்துக்கிட்டு வர்றதுக்குள்ளே அப்படியென்ன அவசரம்?

    வந்தா… நீயே கேட்டுக்க… என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள் அபிராமி.

    வேறு வழியின்றிதானே குடிக்க ஆரம்பித்தாள் உத்ரா.

    பைக்கை ஸ்டான்ட் போட்டுவிட்டு, செருப்பை கழற்றி, டோக்கன் வாங்கிக்கொண்டு அர்ச்சனை தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தான் ஷியாம்.

    கூட்டம் அதிகமில்லை.

    ஐயர் தட்டை வாங்கிக்கொண்டார்.

    அர்ச்சனை யார் பேருக்கு?

    பேரு மதுமதி! சிவகோத்திரம், அஸ்வினி நட்சத்திரம் என்றான் ஷியாம்.

    2

    "இமையெனும் கதவை

    இதழ்களால் திறந்து

    இதயத்தில் நுழைந்து

    இழைவது காதல்!"

    அர்ச்சனை தட்டுடன் உள்ளே நுழைந்த ஷியாம் எதிர்பட்ட அம்மாவிடம், இந்தாம்மா… என்று பிரசாத தட்டை நீட்டினான்.

    மகனை தலை முதல் கால் வரை ஆச்சர்யமாய் பார்த்தாள் அபிராமி.

    என்னம்மா அப்படி பார்க்கறே? நான்தான் உன் மகன் ஷியாம்! என்றான் கேலியாய்.

    அதுசரி… நீ எங்கே போய்ட்டு வர்றே?

    கோவிலுக்கு!

    யாரையோ பார்க்கணும்னு போனே?

    ஸ்ஸ்… என்று நாக்கை கடித்துக்கொண்ட ஷியாம் தன் அவசர புத்தியை நொந்துகொண்டான்.

    ‘அர்ச்சனை தட்டுடன் வந்து வகையாய் மாட்டிக்கொண்டாயிற்று! இப்ப தப்பிக்கணுமே!’

    அ… ஆமாம்… பார்த்துட்டுதான் வர்றேன். கோவில்லதான் எனக்காக காத்திருந்தார். அப்படியே உள்ளே போய்… ஒரு அர்ச்சனை பண்ணிடலாம்னு… ஆமா… தெரியாமதான் கேட்கறேன்… கோவிலுக்குப் போறது பெரிய தப்பா?

    நான் தப்புன்னு சொல்லலியேப்பா! எங்கே போய்ட்டு வர்றேன்னுதானே கேட்டேன்? அதுக்கேன் இவ்வளவு பதட்டப்படறே? என்றாள் அபிராமி.

    அம்மா தன்னை உன்னிப்பாய் கவனிப்பதுபோல தோன்ற… பேச்சை மாற்றினான்.

    டிபன் ரெடியாம்மா? எடுத்து வை… பசிக்குது!

    அபிராமி அகன்றாள்.

    எங்கேண்ணா போய்ட்டே… காபி எடுத்துக்கிட்டு வர்றதுக்குள்ளே? கல்லூரிக்கு தயாராகிக்கொண்டிருந்த உத்ரா எதிரே வந்தாள்.

    உனக்கு மாப்பிள்ளை பார்க்க! என்றான் பட்டென்று.

    அண்ணா! என்றாள் அதிர்ச்சியாய்.

    கடுப்படிக்காதே உத்ரா! ஆளாளுக்கு போட்டு உலுக்கி எடுக்கறீங்க… கோவிலுக்கு போய் என் ஃப்ரண்டை பார்த்துட்டு வர்றேன் போதுமா?

    அப்ப… மாப்பிள்ளை பார்க்கலியா? என்றாள் சுருதி குறைந்த தொனியில்.

    அட… என் குட்டி சனியனே! அவ்வளவு அவசரமா உனக்கு? என்று தலையில் செல்லமாய் குட்டினான்.

    ஷியாம் டைனிங்டேபிளின் முன் அமர்ந்தான். உத்ராவும் பக்கத்தில் அமர்ந்தாள். அபிராமி அவர்களுக்கு பரிமாறிவிட்டு நகர்ந்தாள்.

    எல்லாம் உன் நன்மைக்காகத் தான்!

    என் நன்மைக்கா?

    ஆமாம்! சீக்கிரமா மாப்பிள்ளை பார்த்தியானா… உன் ரூட் க்ளியராகுமில்லையா?

    என் ரூட்டா? எனக்கென்ன அவசரம்? என் கல்யாணத்தைப் பத்தி நான் யோசிச்சே பார்க்கலே…

    அப்ப… மதுமதிய?

    மதுமதி? உத்ரா… உ…உனக்கு எப்படி? என்றான் உச்சமாய் அதிர்ந்து, முகம் வெளுக்க.

    சாப்பிடறப்ப என்ன பேச்சு? உத்ரா உனக்கு காலேஜுக்கு நேரமாகலே? பேசாம சாப்பிடு! அபிராமி அவர்களருகே ஒரு அதட்டலை போட்டுவிட்டு நகர்ந்தாள்.

    அப்பா சாப்பிட வரலியாம்மா? என்று கேட்டான் ஷியாம். அவர் எப்பவோ சாப்பிட்டாச்சு. கடைக்கு கிளம்பிட்டிருக்கார்! என்றவள் போய்விட்டாள்.

    அம்மா அகன்றதும், தங்கையின் பக்கம் திரும்பினான். சொல்லு உத்ரா…?

    என்ன சொல்லணும்? நீதான் சொல்லணும். எவ்வளவு நாளா நடக்குது?

    எது?

    நடிக்காதேண்ணா! எனக்கு எல்லாம் தெரியும். இன்னைக்கு உன் ரூம்ல, ரொம்ப காஸ்ட்லியா, அழகான பர்த்டே க்ரீட்டிங் கார்டு மதுமதி பேர் போட்டிருந்ததை பார்த்தேன்… திறந்து பார்க்கறது தப்புதான். அநாகரீகம்தான். பட், இதே மாதிரி என் ரூம்ல நீ பார்த்திருந்தா… என்ன பண்ணியிருப்பியோ… அதையேதான் நானும் பண்ணினேன். ஸோ, திறந்து பார்த்தேன். ஐ… லவ் யூ… ஐ லவ் யூன்னு பாட்டு பாடற அந்த மியூஸிகல் கார்டுல உன் ஹார்ட் தெரிஞ்சுது… ஸோ, இன்னைக்கு அந்த மதுமதியோட பர்த்டே… அதுக்காக மெனக்கெட்டு கோவிலுக்குப்போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்திருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன். அம்… ஐ… கரெக்ட்? இட்லியை விண்டு சட்னியில் தொட்டு வாயில் போட்டுக்கொண்டாள் உத்ரா.

    தங்கைக்கு விஷயம் தெரிந்துவிட்ட அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் வாயடைத்துப் போயிருந்தான் ஷியாம்.

    சாமிகிட்ட என்ன வேண்டிகிட்டே? உனக்கும், மதுமதிக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னா?

    உத்ரா… சத்தமா பேசாதே! யார் காதிலேயாவது விழுந்திடப்போகுது!

    விழட்டுமே! அப்படியாவது சீக்கிரமா இந்த வீட்டுக்கு அண்ணி வரட்டுமே!

    அவ்வளவு அவசரம் எனக்கில்லே! முதல்ல உனக்கு ஆன பிறகுதான் எனக்கு!

    எனக்கு ரொம்ப ஆச்சர்யமாயிருக்குண்ணா!

    எதுக்கு?

    ரொம்ப அடக்க ஒடுக்கமா சாமியார் மாதிரி இருந்தியே… நீ போய் எப்படி லவ்வு கிவ்வுன்னு வம்பிலே மாட்டிக்கிட்டே?

    நேரமாச்சு… காலேஜுக்கு கிளம்பு!

    பேச்சை மாத்தறியா? நான் உன்னை விடற மாதிரியில்லை! என் அண்ணிய பத்தி ஃபுல் டீடெய்ல்ஸ் சொன்னாதான் நான் உன்னை விடுவேன்!

    என்ன பிளாக்மெயில் பண்றியா? ஆளைவிடு! எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு! என்று எழுந்துகொண்டான் ஷியாம்.

    நேரமாய்டுச்சேன்னு விடறேன். ஆனா, ஈவ்னிங் எனக்கு எல்லா விஷயமும் சொல்றே… ஓக்கே!?

    நல்ல நேரத்திலேயும் ஒரு கெட்ட நேரம்! உன்கிட்டே மாட்டிக்கிட்டேன்!

    என்ன உத்ரா… நீ இன்னும் கிளம்பலே? என்று கேட்டபடி வந்தார் பாண்டியன்.

    சொந்தமாய் மின்ட்டில் டிம்பர் டிப்போ வைத்திருப்பவர். கறாரும், கண்டிப்புமான மனிதர்.

    இ… இதோப்பா… கிளம்பிட்டேன் என்று அவசர அவசரமாய் கையை கழுவிக்கொண்டு எழுந்தாள்.

    ஷ்யாமும் கிளம்ப தயாரானான்.

    ஷியாம்… ஒரு நிமிஷம்! என்றார் பாண்டியன்.

    ‘கடவுளே… இவர் என்ன கேட்கப் போகிறாரோ?’

    என்னப்பா?

    ஆபீஸ் போறச்சே… டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்கும் போய்ட்டுப் போ! போன் அவுட் ஆஃப் ஆர்டராகி பத்து நாளாச்சு. ஏழெட்டு கம்ப்ளைண்ட்டும் கொடுத்தாச்சு. இன்னும் சரிபண்ணக் காணோம்!

    சரிப்பா… சொல்லிடறேன்… என்று விரைவாய் பைக்கை கிளப்பினான்.

    அண்ணா… ஒரு நிமிஷம்! புத்தகங்களை அணைத்தபடி ஓடோடி வந்தாள் உத்ரா.

    ஸாரி… உத்ரா! நான் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வரைக்கும் போய்ட்டு போகணும். உன்னை என்னால ட்ராப் பண்ண முடியாது!

    இடுப்பில் கை வைத்தபடி முறைத்தாள் உத்ரா.

    உன்கிட்ட யாரு இப்ப லிஃப்ட் கேட்டா? நான் கேட்க வந்த விஷயமே வேற! என்றாள் குரலை தாழ்த்தி.

    என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு.

    இன்னைக்கு மதுமதிக்கு பர்த்டே பிரசன்டேஷன் என்ன தரப்போறே?

    ஏய்… அப்பா பார்க்கிறார்! என்றான் அடிக்குரலில்.

    காதிலே விழாது… சொல்லு!

    நீ என்னை மாட்டிவிடப் போறே?

    பயந்து நடுங்காதேண்ணா! இப்படி பயந்தா… காதல்ல ஜெயிக்க முடியாது. சொல்லு என்ன தரப்போறே?

    இன்னும் டிஸைட் பண்ணலே!

    நான் பண்ணிட்டேன். நீ என்ன பண்றே? நேரே பேங்குக்கு போறே! ஒரு நல்ல அமவுண்ட்டை ட்ராப் பண்ணிக்கிட்டு லலிதா ஜூவல்லரி போறே! அங்கே மதுமதிக்கும், எனக்குமாக ரெண்டு ரிங் வாங்கறே!

    உனக்குமா? என்ன விளையாடறியா? என்றான் அதிர்ச்சியுடன்.

    மிரட்டாதே! சொல்றபடி செய்… இல்லேன்னா விஷயத்தை போட்டு உடைச்சிடுவேன் என்றாள் காஷுவலாய்.

    சரியான பிள்ளைபூச்சிடி நீ என்றவன் முனகிக்கொண்டே வண்டியை கிளப்ப… உத்ரா வாய்விட்டு சிரித்தாள்.

    ஷ்யாமின் பைக்… பேங்க் நோக்கி விரைந்தது.

    ***

    ‘எல்லோரும் எந்திரிச்சாச்சா?’ சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடி எழுந்தாள் மதுமதி.

    விடிஞ்சு பத்து மணி நேரமாச்சு. உனக்கு மட்டும் விடியவே விடியாதா? என்றார் கோபமாக விஜயராகவன்.

    மது… முதல்ல குளிக்க வா! மேற்கொண்டு கணவரை பேசவிடாமலிருக்க மகளின் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்

    Enjoying the preview?
    Page 1 of 1