Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் உயிரின் உயிரே...
என் உயிரின் உயிரே...
என் உயிரின் உயிரே...
Ebook211 pages1 hour

என் உயிரின் உயிரே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ப்போது திவ்யபிரியா, அவளது தாய் மரகதமும் ரொம்பவே கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தனர்! 


அவளுடைய தந்தை இருந்த வரை ஓரளவு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தனர்! 


தந்தைக்கு நுரையீரல் புற்றுநோய் வர...


தலையில் தீ விழுந்த கணக்காய் கலங்கினாள், திவ்யபிரியாவின் தாய் மரகதம். 


மரகதம் மருத்துவ செலவிற்குப் பணமில்லாமல் கஷ்டப்பட்டாள். 


சொந்த பந்தங்களிடம் கடன் கேட்டு கையேந்தினாள்.


ஒருவரும் மனமிரங்கவில்லை!


கடைசியாய் குடியிருக்கும் வீட்டை விற்க முடிவு செய்தாள். 


அவளின் நிலைமையை... சூழ்நிலையை உணர்ந்து அடிமாட்டு விலைக்கு கேட்டனர். 


வீட்டைவிட கணவனின் உயிர் அவளுக்கு முக்கியமாய்ப்பட... அநியாய விலைக்கு விற்றுவிட்டு... வைத்தியம் பார்த்தாள். 


கடைசியில் புற்று நோயின் தீவிரம் தாங்காமல் செத்தே விட்டார். 


மரகதமும், திவ்யபிரியாவும் கத்தினார்கள்!


கதறினார்கள்!


விழுந்து புரண்டார்கள்!


துடிதுடித்தார்கள்!


எத்தனை கதறினாலும்... துடித்தாலும்... விழுந்து புரண்டாலும் இறந்தவர் மீண்டும் உயிருடன் திரும்புவார்களா? 


அவரின் மருத்துவ செலவிற்கும், இறுதி சடங்கிற்கும் எல்லாப் பணத்தையும் செலவழித்து... உயிரோடு இருந்த  இருவருக்கும் மிஞ்சியது ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே! 


மரகதம் அந்தத் தொகையை வங்கியில் போட்டாள்.


அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியிலும்...


வீட்டிலேயே ஊறுகாய், வடகம், வற்றல் எனப்போட்டு வெயிலில் அலைந்து, திரிந்து விற்று கிடைக்கும் சொற்பத் தொகையிலும்... வாடகை வீட்டில் குடித்தனத்தைத் தொடங்கி... கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். 


தந்தை இறந்த சமயம் திவ்யபிரியா பனிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாள்! 


தந்தையின் மரணம் தந்த சோகத்திலும்... தன்னைத்தேற்றிக் கொண்டு... முழு மூச்சாய் கல்வியில் சிந்தையைச் செலுத்த... 


திவ்யபிரியா அந்த பள்ளிக்கே முதல் மதிப்பெண் பெற்று தேறினாள். மாவட்டத்திலும் முதலாவதாய் வந்தாள்! 


பள்ளியில் பாராட்டினார்கள்!


பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார்கள்!


இவ்வளவு புகழ்ச்சிகளுக்கும், மரியாதைகளுக்கும், மதிப்புகளுக்கும்... கொஞ்சம் கூட தலைக்கணமே இல்லாமல் இருந்தாள், திவ்யபிரியா! 


அன்று அம்மாவிடம் தயங்கித் தயங்கி போய் நின்றாள். 


“என்ன, திவ்யா?”


“கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கணும்மா!” பயந்தபடி கேட்க... 


“எதுக்கு?”


மரகதம் கோபமாய் கேட்டாள்.


“மேலே படிக்கணுமில்லையா?”


“படிச்சது போதும், திவ்யா!” பட்டென்று பதில் அம்மாவிடமிருந்து வர... திவ்யா ஆடிப்போனாள். 


“அம்மா நான் மேலே படிக்கணும்!”


“உன்னை காலேஜிக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைக்க நம்மகிட்ட நிறைய காசா இருக்கு?” 


“அம்மா...”


“இருக்கற தொகையும் செலவழிச்சிட்டா... உன் எதிர்காலத்துக்கு என்ன செய்ய?” 


“அம்மா...”


“நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னா உனக்கு நான் என்ன செய்வேன்? சொல்லு? எப்படி ஒருத்தன்கிட்ட உன்னை ஒப்படைப்பேன்! அதுக்குப் பணம் வேணுமில்லையா? அந்தக் கொஞ்ச காசையும் கரைச்சிட்டா நல்லாயிருக்குமா?” 


மரகதம் வேகமாய் படபடக்க...


“அம்மா... என்னை டாக்டருக்கோ... இஞ்சினியருக்கோ படிக்க வையுன்னு கேட்கலே! எனக்கும் அந்த அளவு ஆசையில்லே!... 


ஒரு சாதாரண டிகிரி மட்டும் படிக்க வையும்மா! அந்த ஐம்பதாயிரத்தில் நீ கையே வைக்க வேண்டாம்!” 


“பணத்துக்கு என்ன செய்வது?”


மரகதம் புருவம் உயர்த்தி கேட்க... 


“ஸ்காலர்ஷிப்ல படிச்சுடுவேன்!”


“அப்படின்னா...?”


“அரசாங்கம் உதவிப் பணம் தரும்! அடுத்ததா ஏதாவது தொண்டு நிறுவனங்க கிட்ட உதவி கேட்டால் என்னைப் படிக்க வைப்பாங்க! 


உன்னோட செலவு வெறும் புத்தகம்... நோட்... பேனா தாம்மா! மற்ற பொண்ணுங்க மாதிரி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணும்... நகை போட்டுக்கணும்... மேக்கப் பண்ணிக்கணும்... ஸ்கூட்டியில ஜம்முன்னு போகணும்னு எல்லாம் எனக்கு ஆசையில்லேம்மா!


பக்கத்துல இருக்க காலேஜ்னா ஒரு சைக்கிள் போதும்! அதுகூட வேணாம்மா நான் நடந்தே போயிடறேன்!” 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 7, 2024
என் உயிரின் உயிரே...

Read more from ஆர்.மகேஸ்வரி

Related to என் உயிரின் உயிரே...

Related ebooks

Reviews for என் உயிரின் உயிரே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் உயிரின் உயிரே... - ஆர்.மகேஸ்வரி

    1

    தாயின் கருவறையிலிருந்து வெளிவர அடம்பிடிக்கும் குழந்தையாய் சூரியன் இருக்க... வான மங்கை இன்னும் சூரியனைப் பிரசவிக்காத... விடியற்காலை நேரம்!

    நீலகிரி மலைக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் மணி மகுடமான அற்புதமான ஊட்டி!

    பனிக்காற்று ஜிலுஜிலு தென்றலாய் வீசியது!

    பஸ்ஸிலிருந்து குழந்தையோடு இறங்கினாள்!

    ‘அவள்...?’

    ‘திவ்யபிரியா!’

    திவ்யபிரியாவின் உள்ளம் மரத்துவிட்டது போல... உடலும் மரத்து குளிரே தெரியாமல் இருக்க... ஆனால், அவள் கையிலிருந்த சின்னஞ்சிறு கைக்குழந்தை குளிரில் நடுங்கியது!

    திவ்யபிரியா அதனை ஆசையுடன் கட்டியணைத்து... முத்தமிட்டு... வாஞ்சையுடன் மார்போடு தழுவிக் கொண்டாள்!

    குளிருக்கு அடக்கமாய் தாயோடு ஒட்டிய குழந்தை... தாயின் மென்மையான அணைப்பில்... மயிலிறகு தீண்டலில்... குழந்தை நிம்மதியாய், மீண்டும் உறங்கிவிட்டது!

    சின்னப் பெட்டியை கையிலெடுத்துக் கொண்டு நடந்தாள்.

    எந்த நம்பிக்கையில் வேலை கிடைக்கும் என்று அநாதையாய் சென்னையில் இருந்து வந்தாள் என்றே தெரியாமல் தவிப்போடு நடந்தாள்.

    வேறு போக்கிடம் இல்லாமல்... சின்னக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு... வேலைக்கும் போக முடியாமல்... தவியாய் தவித்தவளுக்கு... அந்த விளம்பரம் பெருங்கடலில் தத்தளித்தவளுக்கு கரைச்சேர்க்க உதவும்... மரக் கட்டையாய் தெரிந்தது!

    ‘மனநிலை சரியில்லாத இளைஞரைப் பார்த்துக்கொள்ள... வயதானவர்களோ அல்லது விதவைகளோ விண்ணப்பிக்கவும்!’

    ‘நல்ல சம்பளத்தோடு தங்குமிடம் இலவசம்!’ என்று ஊட்டியைச் சேர்ந்தவர்கள்... தங்கள் முகவரி கொடுத்து... விளம்பரம் செய்து இருந்தனர்.

    திவ்யபிரியாவும் விண்ணப்பித்தாள்!

    உடனே நேர்முகத் தேர்விற்கு வருமாறு கடிதம் அனுப்பியிருந்தனர்.

    இவளுக்கு இந்த வேலை கிடைப்பது சந்தேகம் என்றாலும் துணிச்சலோடு புறப்பட்டு விட்டாள்!

    வயதானவர்கள் தேவையென்று இருக்க... இவ்வளவு சின்ன வயதுக்காரிக்கு... இந்த வேலையைத் தருவார்களா...?

    ஆனாலும் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு கிளம்பி விட்டாள்.

    ‘தான் ஒரு விதவை’ என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டு!

    எவ்வளவு பிரச்சனைகள்...?

    எவ்வளவு மான அவமானம்?

    எத்தனை இழப்புகள்...?

    எத்தனை கொடுமைகள்...?

    எத்தனை வலிகள்...?

    எத்தகைய ஆறாத வடுக்கள்?

    எண்ணிடலங்கா சித்ரவதைகள்...?

    அத்தனையிலும் மாட்டி... புயலில் சிக்கியவள் கணக்காய் அலைமோதி... மூழ்கி... மூச்சுத் திணறி... கஷ்டப்பட்டு சிவக்குமாரைப் பெற்றும் எடுத்து விட்டாள்!

    புயலிலும்... பூகம்பத்திலும்... சுனாமியிலும்... சூறாவளியிலும் சிக்கி, தவித்து, வெந்து, நொந்து... கடைசியாய் கரைச் சேர்ந்தவளாய் நிம்மதியாய் மூச்சுவிட...

    அவளுக்கு எதிர்கால வாழ்க்கை இருட்டாய் மிரட்டியது!

    திக்குத் தெரியாத காட்டில்...

    தீயிக்கும் இடையில்...

    சிக்குண்டவளாய், வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது... இந்த விளம்பரம்... தனது எதிர்கால வாழ்வின் இருளைத் துடைத்தெறிய வந்த... வெளிச்சமாய் தெரிந்தது!

    அவர்களின் கையில், காலில் விழுந்து... தன் நிலைமையை எடுத்துச் சொல்லி... கண்ணீர் மல்க, கதறியழுது... கெஞ்சியாவது... இந்த வேலையில் புகுந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியோடே... ஊட்டி மண்ணில் காலை வைத்தாள்!

    இதயத்திற்குள் வேதனையலைகள் புரட்டிப் போட்டது!

    அலையலையாய் எத்தனையோ கேள்விகள்... அவளின் மனதை கிழித்தெறிந்தது!

    ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நரக வாழ்க்கை?’

    ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனை மேல் சோதனைகளும், சுமைகளும்?

    ‘ஏன் நான் மட்டும் இந்த சமுதாயத்தில் மற்றவர்களைப் போல மகிழ்ச்சியாய் வாழ கொடுப்பனை இல்லாமல் தவிக்கிறேன்?’

    ‘தனியொருவளாய் இருந்தாலும் பரவாயில்லை... குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வேன்...?’

    ‘எனக்கே ஒரு எதிர்காலம் இல்லையெனும்போது... குழந்தைக்கு எப்படி நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்?’

    ‘நான் என்ன பாவம் செய்தேன்?’

    ‘எதற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை?’

    "இந்தக் குழந்தை எந்த ஜென்மத்தில் செய்த பாவத்தை அனுபவிக்க என் வயிற்றில் வந்து பிறந்தது?’

    ‘தப்பே செய்யாத இந்தக் குழந்தையும் என்னோடு தண்டனையைப் பெற வேண்டுமா?

    ‘இப்புவியில் தாயும் சேயும் அந்த அளவா வரம் வாங்கிப் பிறந்துள்ளோம்?

    "இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவிக்கவா இப்புவியில் நான் பெண்ணாய் பிறந்தேன்?’

    ‘பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை அனுபவித்த எனக்கு இனி மலர்ந்து மணம் வீசப் போகிறோம் என்று சந்தோசித்தபோது இப்படியா மொட்டிலேயே நான் கருகி சாம்பலாக வேண்டும்?’

    ‘நான் அப்படி ஒரு பழிபாவத்தையா செய்தேன், இறைவா...?’

    ‘என்னால் தாங்க முடியும் என்றுதான் இவ்வளவு நரக வேதனையைக் கொடுத்தாயா, கடவுளே?’

    ‘அப்படி ஒரு நாளிலும், நட்சத்திரத்திலுமா நான் ஜனித்தேன்?’

    ‘நான் ஜனித்தது இப்படி உயிரோடு மரணிக்கவா?’

    இங்கு வருவதற்கு கடைசியாய் அந்த நகையை விற்று எடுத்துக் கொண்டு... கடவுளின் மேல் பாரத்தைப்போட்டு... சொற்ப தொகையோடு... கட்டித் தங்கமாய் ஜொலித்த சிவாவோடு பயணப்பட்டு விட்டாள்.

    அம்மா ஆசையாசையாய் சிறுக சேர்த்து வாங்கிப் போட்ட கழுத்துச் செயினை விற்க மனசேயில்லை! நகைக் கடையில் கழற்றிக் கொடுக்கும்போது... கண்ணீரோடு தேம்பி விட்டாள்!

    கடைக்காரனின் மனமே நெகிழ்ந்து விட்டது!

    நகையின் சரியான மதிப்புத் தொகையை கொடுத்தனுப்பினான்.

    ஆட்டோ ஒன்று அவளருகே வந்து நின்றது.

    எங்கேம்மா போகணும்? என்று சொன்ன ஆட்டோக்காரர் இத்தனை காலையிலேயே குளித்து... காக்கியுடை அணிந்து... அதற்கு மேலே ஸ்வெட்டரும்... தலைக்கு குல்லாயும் அணிந்திருந்தார்.

    நெற்றி நிறைய விபூதியும், குங்குமமும்!

    அதனைக் கண்ட திவ்யபிரியா பயம் போய்... விலாசம் சொன்னாள்.

    ரொம்ப தொலைவும்மா! நூறு ரூபாய் ஆகும்! பரவாயில்லையா?

    அதுல குறைக்க முடியாதா, சார்?

    திவ்யபிரியாவின் மெலிந்த தோற்றம்... நலிந்த குரலைக் கேட்டு ஆட்டோக்காரருக்கு அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

    உனக்காக ஐம்பது ரூபாய்க்கு வரேன்!

    ரொம்ப நன்றி, சார்!

    நீதாம்மா முதல் சவாரி! ஏறி உட்காரம்மா! ரோடு குண்டும் குழியுமா இருக்கும்! குழந்தையை விட்டுடப் போறே! ஜாக்கிரதையா பிடிச்சிக்கோம்மா!

    ஒரு தந்தையின் பாசத்தோடு கூற... சட்டென்று கண்களில் நீர் பூத்தது!

    நானும் மெல்லவே போறேம்மா, மகளே!

    மரணித்த தந்தையை உயிரோடு கண்டாற்போல உணர்ந்தாள்!

    ஆட்டோ சீரான வேகத்தில் சென்றது! அவளது மனமோ பஸ்ஸோ... விமானமோ... இரயிலோ ஏறாமல் கடந்த காலத்திற்கு இலவசமாய் பயணித்தது!

    அவளின் கடந்த காலம் கண்ணில் தெரிய...

    நெஞ்சம் ரணமாய் வலித்தாலும்... வலிக்க வலிக்க ஏடு புரட்டினாள்!

    2

    அப்போது திவ்யபிரியா, அவளது தாய் மரகதமும் ரொம்பவே கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தனர்!

    அவளுடைய தந்தை இருந்த வரை ஓரளவு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தனர்!

    தந்தைக்கு நுரையீரல் புற்றுநோய் வர...

    தலையில் தீ விழுந்த கணக்காய் கலங்கினாள், திவ்யபிரியாவின் தாய் மரகதம்.

    மரகதம் மருத்துவ செலவிற்குப் பணமில்லாமல் கஷ்டப்பட்டாள்.

    சொந்த பந்தங்களிடம் கடன் கேட்டு கையேந்தினாள்.

    ஒருவரும் மனமிரங்கவில்லை!

    கடைசியாய் குடியிருக்கும் வீட்டை விற்க முடிவு செய்தாள்.

    அவளின் நிலைமையை... சூழ்நிலையை உணர்ந்து அடிமாட்டு விலைக்கு கேட்டனர்.

    வீட்டைவிட கணவனின் உயிர் அவளுக்கு முக்கியமாய்ப்பட... அநியாய விலைக்கு விற்றுவிட்டு... வைத்தியம் பார்த்தாள்.

    கடைசியில் புற்று நோயின் தீவிரம் தாங்காமல் செத்தே விட்டார்.

    மரகதமும், திவ்யபிரியாவும் கத்தினார்கள்!

    கதறினார்கள்!

    விழுந்து புரண்டார்கள்!

    துடிதுடித்தார்கள்!

    எத்தனை கதறினாலும்... துடித்தாலும்... விழுந்து புரண்டாலும் இறந்தவர் மீண்டும் உயிருடன் திரும்புவார்களா?

    அவரின் மருத்துவ செலவிற்கும், இறுதி சடங்கிற்கும் எல்லாப் பணத்தையும் செலவழித்து... உயிரோடு இருந்த இருவருக்கும் மிஞ்சியது ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே!

    மரகதம் அந்தத் தொகையை வங்கியில் போட்டாள்.

    அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டியிலும்...

    வீட்டிலேயே ஊறுகாய், வடகம், வற்றல் எனப்போட்டு வெயிலில் அலைந்து, திரிந்து விற்று கிடைக்கும் சொற்பத் தொகையிலும்... வாடகை வீட்டில் குடித்தனத்தைத் தொடங்கி... கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்.

    தந்தை இறந்த சமயம் திவ்யபிரியா பனிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாள்!

    தந்தையின் மரணம் தந்த சோகத்திலும்... தன்னைத்தேற்றிக் கொண்டு... முழு மூச்சாய் கல்வியில் சிந்தையைச் செலுத்த...

    திவ்யபிரியா அந்த பள்ளிக்கே முதல் மதிப்பெண் பெற்று தேறினாள். மாவட்டத்திலும் முதலாவதாய் வந்தாள்!

    பள்ளியில் பாராட்டினார்கள்!

    பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தார்கள்!

    இவ்வளவு புகழ்ச்சிகளுக்கும், மரியாதைகளுக்கும், மதிப்புகளுக்கும்... கொஞ்சம் கூட தலைக்கணமே இல்லாமல் இருந்தாள், திவ்யபிரியா!

    அன்று அம்மாவிடம் தயங்கித் தயங்கி போய் நின்றாள்.

    என்ன, திவ்யா?

    கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கணும்மா! பயந்தபடி கேட்க...

    எதுக்கு?

    மரகதம் கோபமாய் கேட்டாள்.

    மேலே படிக்கணுமில்லையா?

    படிச்சது போதும், திவ்யா! பட்டென்று பதில் அம்மாவிடமிருந்து வர... திவ்யா ஆடிப்போனாள்.

    அம்மா நான் மேலே படிக்கணும்!

    உன்னை காலேஜிக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைக்க நம்மகிட்ட நிறைய காசா இருக்கு?

    அம்மா...

    இருக்கற தொகையும் செலவழிச்சிட்டா... உன் எதிர்காலத்துக்கு என்ன செய்ய?

    அம்மா...

    நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னா உனக்கு நான் என்ன செய்வேன்? சொல்லு? எப்படி ஒருத்தன்கிட்ட உன்னை ஒப்படைப்பேன்! அதுக்குப் பணம் வேணுமில்லையா? அந்தக் கொஞ்ச காசையும் கரைச்சிட்டா நல்லாயிருக்குமா?

    மரகதம் வேகமாய் படபடக்க...

    "அம்மா... என்னை டாக்டருக்கோ... இஞ்சினியருக்கோ படிக்க வையுன்னு கேட்கலே! எனக்கும் அந்த அளவு ஆசையில்லே!...

    ஒரு சாதாரண டிகிரி மட்டும் படிக்க வையும்மா! அந்த ஐம்பதாயிரத்தில் நீ கையே வைக்க வேண்டாம்!"

    பணத்துக்கு என்ன செய்வது?

    மரகதம் புருவம் உயர்த்தி கேட்க...

    ஸ்காலர்ஷிப்ல படிச்சுடுவேன்!

    அப்படின்னா...?

    "அரசாங்கம் உதவிப் பணம் தரும்! அடுத்ததா ஏதாவது தொண்டு நிறுவனங்க கிட்ட உதவி கேட்டால் என்னைப் படிக்க வைப்பாங்க!

    உன்னோட செலவு வெறும் புத்தகம்... நோட்... பேனா தாம்மா! மற்ற பொண்ணுங்க மாதிரி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணும்... நகை போட்டுக்கணும்... மேக்கப் பண்ணிக்கணும்... ஸ்கூட்டியில ஜம்முன்னு போகணும்னு எல்லாம் எனக்கு ஆசையில்லேம்மா!

    பக்கத்துல இருக்க காலேஜ்னா ஒரு சைக்கிள் போதும்! அதுகூட வேணாம்மா நான் நடந்தே போயிடறேன்!"

    சொன்னா கேட்க மாட்டே, திவ்யா? மரகதம் மிரட்ட...

    உனக்கு இப்போது போலவே எந்தக் கஷ்டமும் கொடுக்க மாட்டேன்!

    ஏன் திவ்யா உயிரை வாங்கறே?

    மரகதம் சத்தமாய் கேட்க...

    ப்ளீஸ்ம்மா... திவ்யா கண்ணீர் சிந்த கெஞ்ச...

    "அம்மா சொன்னால் கேட்கணும், திவ்யா! எதிர்த்துப் பேச எங்கே கத்துகிட்ட? நமக்குன்னு யார் இருக்கா? நமக்குன்னு இருக்க ஒரே உறவு... என் தம்பி சேகர் மட்டும் தான்! அந்த தறுதலையும் ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதை குடிச்சே அழிக்கறான்!...

    அவன் நம்ம பக்கத்துல இருந்தாலும் சண்டைப் போடலாம்! நான் சண்டை போடுவேன்னு பயந்தே தூரமாப் போய் தள்ளி இருக்கான்!...

    அதுவுமில்லாமல் அவன் நம்மிடம் வாங்கிப் போகாமல் இருந்தாலே போதும்! தடிமாடு கணக்காய் வளர்ந்துட்டு இருக்கான்! அவன் வரும்போதெல்லாம் ஐம்பது, நூறு, இருநூறுன்னு அவனுக்கு நாம் அறுக்கணும்!

    என் விதி கட்டினவரும் விட்டுட்டுப் போயிட்டார்! கூடப் பொறந்த பொறப்பும் சரியில்லே! நீயாவது ஒழுங்கா பேச்சு கேட்பேன்னு பார்த்தால் மேலே படிக்கணும்னு அடம் பிடிக்கறே!"

    மரகதம் வருத்தமாய் பேசினாள்.

    அம்மா... படிக்காமல் வீட்டில் என்ன செய்யட்டும்?

    திவ்யா கேட்க... மரகதம் எரிமலையாய் முறைத்தாள்.

    உனக்கு துணையா வடகம், ஊறுகாய்ன்னு போடச் சொல்றீயா? அதை எடுத்துட்டு வீதி வீதியா விற்கச் சொல்றீயா?

    உனக்கு திமிரா, திவ்யா? என்ன பேச்சு பேசறே?

    "நான் படிக்காமல் வீட்டில் இருந்தால் என் வேலையும் அதுதானே?

    Enjoying the preview?
    Page 1 of 1