Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூவே உன்னை நேசித்தேன்...
பூவே உன்னை நேசித்தேன்...
பூவே உன்னை நேசித்தேன்...
Ebook231 pages1 hour

பூவே உன்னை நேசித்தேன்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ல்வராயன் மலை!


அந்த மலைத்தாயின் மடியில்... சுகமாய்த் துயில்கொள்ளும் நிலமகளின் முகத்தில்... அன்பின் உயிர்நிலை மிளிர்கிறது! 


அழகிய மலையடிவாரக் கிராமம் 'சக்ரவர்த்திபுரம்!'


இயற்கையின் இனிய சூழலில் அமைந்திருக்கும்... அந்தச் சுந்தர பூமி... சொர்க்க பூமி... தன்னைக் காண வருவோரையெல்லாம்... பச்சைக் கம்பளம் விரித்து... குளுமையுடன் வரவேற்றுக் கொண்டிருக்கிறது! 


எங்கும் பசுமை!


எங்கும் செழுமை!


எங்கும் இனிமை! 


காண்போரின் கண்களைக் கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறாள், நிலமகள்! 


சிலுசிலுக்கும் சாரலும்... சலசலக்கும் காற்றும் நிலவும்... மலையும் மலைசார்ந்த, 'குறிஞ்சிப் பூமி!' 


இயற்கையும், மனிதனும் இணைந்து வாழ்கிற வாழ்க்கைக்கான சான்றாகச் 'சக்ரவர்த்திபுரம்' திகழ்கிறது! 


'அர்ஜுன் இயற்கை உயிராற்றல் வேளாண் பண்ணை' நம்மை அன்புடன் வரவேற்கும்! 


அர்ஜுன் எம்.எஸ்ஸி. அக்ரி முடித்து... வாழையைப் பற்றி ஆராய்ந்து விவசாயத்திலே டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளான்! 


இயற்கை வேளாண்மையை உயிர் மூச்சாய்க் கொண்டவன்! 


அங்கே அவனுக்கு ஐந்நூறு ஏக்கருக்கு மேல் விவசாய நிலமிருக்கிறது. 


வேற்றுமை பார்க்காது... வறுமையில் வாடும் 150 குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து... அதே நிலத்தில் ஸ்ட்ராங்கான வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறது. 


நிலம் அர்ஜுனுக்குச் சொந்தம்! அதில் உழுது, விதைத்து, அறுவடை செய்து உண்ணுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு!  


அவர்களுக்குக் காளை மாடு, பசுமாடுகள் வாங்க உதவி செய்து கொண்டிருக்கிறான்! 


அங்கு வசிக்கும் மக்களின் ஜீவ நாடியே அர்ஜுன் தான்! அவர்கள் எந்தக் குறையுமின்றி நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்! 


அவன் இருநூறு ஏக்கரில் விவசாயம் செய்கிறான்!


அந்த மக்களே... அவன் பண்ணையின் விவசாய வேலைகளுக்கு வருகிறார்கள்! 


நிறைவான கூலியைப் பெற்று இன்பமாய்ச் சுய கௌரவத்தோடு வாழ்கிறார்கள்! 


அவர்களின் பிள்ளைகள் படிக்கவே... தரமான பள்ளியைக் கட்டி... அருமையாய் நிர்வகித்து வருகிறான்! 


தொண்டுகள் பல ஆற்றி வருவதுடன்... அங்கே ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம், முதியோர்களுக் கான இல்லம் என்று செயல்படுகிறது! 


அங்குள்ளவர்கள் நோய் நொடி என்றால் இரண்டு கிலோ மீட்டர் பயணித்து எடுத்தவாய் நத்தம் பிரைமரி ஹெல்த் சென்டருக்கோ... அல்லது ஐந்து கிலோ மீட்டர் பயணித்துக் கச்சிராயபாளையம் பிரைமரி ஹெல்த் சென்டருக்கோ... அல்லது பெரிய நோய் என்றால் கள்ளக்குறிச்சி ஜி.ஹெச்சுக்கோ செல்ல வேண்டும். கள்ளக்குறிச்சிக்குப் போக வேண்டும் என்றால் பதினைந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டும்! 


அங்குள்ள மக்கள் ஆஸ்பத்திரிக்குக் கஷ்டப்பட்டுத்தான் செல்வர்! 


இல்லத்துக் குழந்தைகளுக்கும்... பெரியவர்களுக்கும்... ஒரு நோய் நொடியென்றால் அங்கேதான் அழைத்துச் செல்ல வேண்டும்! 


அந்தச் சிரமங்களையெல்லாம் பார்த்து... தானே ஆஸ்பத்திரியும் ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற... உடனே செயல்படுத்தினான். 


அதனால், அந்தக் கிராம மக்களுக்கும், இல்லத்தவர்களுக்குமாகவே... அந்த இலவச மருத்துவமனையைக் கட்டியுள்ளான்! 


இரண்டு டாக்டர்... இரண்டு நர்ஸ் போதும்.


அதற்கான நேர்முகத் தேர்வு பத்து மணிக்கு உள்ளது!


அதற்குள் பண்ணையையும்... அங்குள்ள மக்களையும் பார்த்து வர... பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான், அர்ஜுன். 


அர்ஜுன் அங்குள்ள மக்களுக்கு இறைவன்... தேவ தூதன் என்றே சொல்லலாம்! 


இயற்கை விரும்பி! இயற்கையை உயிராய் நேசிக்கிறான்! 


செயற்கை அவனுக்கு எதிரி!


இயற்கை உரங்களைப் பயன்படுத்தி... இயற்கை வேளாண்மை செய்து கொண்டிருக்கிறான்! 


ஒரு துளி இரசாயன விஷம் கலக்காமல்... மண் அங்கே புது ஜனனம் எடுத்துக் கன்னி கழியாத நிலமாய்க் காட்சியளிக்கிறது! 


அந்தப் பகுதி மக்களையும்... பிறகு விழுப்புரம் மாவட்டம் முழுவதையும் மாற்றியவன்... வெறியோடு சேலம், கடலூர் மாவட்டத்தையும் முற்றிலுமாய் இயற்கை வேளாண்மைக்கு மாற்றியுள்ளான்! 


மற்ற மாவட்டங்களையும் மாற்றுவதற்காகத் தீவிரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்! 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 7, 2024
பூவே உன்னை நேசித்தேன்...

Read more from ஆர்.மகேஸ்வரி

Related to பூவே உன்னை நேசித்தேன்...

Related ebooks

Reviews for பூவே உன்னை நேசித்தேன்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூவே உன்னை நேசித்தேன்... - ஆர்.மகேஸ்வரி

    1

    வானமென்னும் அரச சபையில்... நிலவுப் பேரரசி, அரியணையில் அமர்ந்து செங்கோலோச்சிக் கொண்டிருக்க... நட்சத்திர அமைச்சர்கள் அவரவர் இடத்தில் அமர்ந்து... சீரியசாய் விவாதித்துக் கொண்டிருந்தனர், பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்த இருட்டை எப்படி விரட்டுவ தென்று!

    இரவு 8.00 மணி!

    மொட்டை மாடியில் நின்று வானம், நிலவு, நட்சத்திரங்கள், வெண் மேகங்கள், கருமேகங்கள் என்று அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தாள், நேத்ரா!

    நேத்ரா... சமீபமாய் மருத்துவப் படிப்பை முடித்துள்ளாள்!

    எம்.பி.பி.எஸ். முடித்த கையோடு டி.ஜி.ஓ., முடித்து... இப்போது முழுமையான மகப்பேறு மருத்துவர், நேத்ரா!

    சிறு வயது முதற்கொண்டே அன்பையும், பண்பையும், பாசத்தையும், கருணையையும், சேவை மனப் பான்மையையும் ஊட்டி ஊட்டி வளர்த்துள்ளனர், பரணிதரன் - ஈஸ்வரி தம்பதியினர்!

    நேத்ரா... கருணை உள்ளத்திற்குச் சொந்தக்காரி.

    அவளுடைய தந்தை பரணிதரன் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரிகிறார்!

    தாய் ஈஸ்வரி ஹவுஸ் ஒய்ப்!

    இருவரிடமுமே... தங்களது மகளை டாக்டராக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது!

    நேத்ராவும் வளர வளர அதே குறிக்கோளோடு வளர்ந்தாள்!

    தான் டாக்டராகி... தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு வலிக்காமல் ஊசி போட வேண்டும்! சிறு சிறு மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதில் தோன்றியது! காரணம்? அவளுக்கு ஊசி போட்டுக் கொள்வது என்றால் அந்தச் சிறு வயதில் பயம்! பெரிய பெரிய மாத்திரைகளை விழுங்கக் கஷ்டப்படுவாள்! அம்மாத்திரைகள் தொண்டையில் சிக்கி... அதன் விளைவாய் வாந்தி எடுத்து... அம்மாவிடம் அடி வாங்கியிருக்கிறாள்!

    நேத்ரா... வளர வளர டாக்டர்களின் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் கண்டு மனம் வெகுண்டிருக்கிறாள்!

    நூறில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் டாக்டர் தொழிலை வியாபாரமாகச் செய்வதைக் கண்டு சினம் கொண்டிருக்கிறாள்!

    அதிலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்ச லட்சமாய்ச் செலவு செய்து பயின்று வந்த டாக்டர்கள்... போட்ட முதலை எடுப்பதற்காக... மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு... இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடு பாராமல்... அவர்களின் வியர்வையில் விளைந்த பணத்தைக் கொள்ளையடிப்பதையும்...

    தன்னிடம் வரும் நோயாளிகளிடம் இன்முகத்தோடு... நோய் பற்றியும்... அந்த நோயின் தன்மை பற்றியும்... அந்த நோய் எவ்வாறு வந்ததென்றும்... அதனைப் போக்கும் முறைகளையும்... விளக்கமாய் விவரிக்காமல்... அவர்கள் நோயாளிகள் என்று பாராமலும்... பரிதாபத்திற்கு உரியவர்கள் என்ற எண்ணமில்லாமலும்... அவர்களிடம் சிடுசிடுவென்று பேசி... முகத்தைக் கடுமையாய் வைத்துக் கொண்டு... கீழ்த்தரமாய்ப் பணமே குறியாய் நடந்து கொள்ளும் டாக்டர்களைக் கண்டு... நிறையவே அதிர்ச்சி அடைந்திருக்கிறாள், நேத்ரா!

    ‘கடவுளின் மறு அவதாரங்கள்தான், டாக்டர்கள்!’

    ‘போற உயிரையும் மீட்டுக் கொண்டு வரும்... அந்த உயிரைக் காக்கும் கிருஷ்ணனின் அவதாரங்கள், டாக்டர்கள்!’

    ‘அதை ஏன் நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்?’

    ‘சேவையின் பின்னே அவர்களின் குணம் பாதை போட்டுப் போகாமல்... பணத்தின் பின்னே போனது தான் காரணமா?’

    ‘பணம்தான் அவர்களின் மனதை மரிக்கச் செய்ததா?’

    ‘தான் டாக்டர் தொழிலை இன்முகத்தோடு செய்ய வேண்டும்! சேவை மனப்பான்மையோடு இலவச மருத்துவத்தை இல்லாத ஏழைகளுக்குச் செய்ய வேண்டும்!’ என்றெல்லாம் பெரிய பெரிய குறிக்கோள்களைத் தன்னுள் எடுத்துக் கொண்டுதான் மருத்துவக் கல்லூரியிலே அடியெடுத்து வைத்தாள், நேத்ரா!

    அதுவும் தனது தொழிலை எந்தவித வசதியும் இல்லாமல் வருந்தும் கிராம மக்களுக்கோ... அல்லது மலையக மக்களுக்கோ... அல்லது மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கோ... அர்ப்பணிக்க எண்ணினாள்.

    கொஞ்ச நாட்கள் டாக்டர் ஜெகதீஷ்கிட்ட பயிற்சி எடுத்துக்கோ, நேத்ரா!

    தந்தை பரணிதரன் சொல்ல...

    பயிற்சியெல்லாம் தேவையில்லேப்பா!

    நேத்ரா பட்டென்று சொன்னாள்.

    அவன் என் நண்பன்னு தெரியும்தானே?

    ஆமாம்!

    அவன் சிறந்த மருத்துவர்! ‘கைராசி மருத்துவர்’ ன்னு மக்கள்கிட்ட பெயர் எடுத்தவன்னு தெரியும்தானே?

    ஆமாம்ப்பா!

    உன் பெண்ணை ஹாஸ்பிட்டலுக்கு எப்போடா அனுப்பறேன்னு கேட்டு நச்சரிக்கறான்! அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?

    எனக்கு விருப்பமில்லேன்னு சொல்லிடுங்க!

    அவனிடம் போனால் கண்டிப்பா குணமாயிடும்ன்னு மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு!

    இருக்கட்டும்!

    பலதரப்பட்ட நோயின் தன்மையையும், சகிப்புத் தன்மையையும், பொறுமையையும் நீ அங்கே கற்றுக் கொள்ளலாம், நேத்ரா! நீ என்னம்மா சொல்றே?

    பொறுமை, சகிப்புத்தன்மை எல்லாவற்றையும் உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன்! எனக்குச் சிறு வயதிலிருந்து கற்பித்து இருக்கீங்க! நோய் பற்றியும், அதனைக் குணமாக்கும் முறை பற்றியும்... கல்லூரியிலேயே கற்றுக் கொண்டு வந்திருக்கேம்ப்பா!

    அவனுக்கு ஒரு நம்பிக்கையான ஆளு வேணுமாம்! அதான் உன்னை அழைக்கிறான்!

    வேற யாரையாவது அழைச்சிக்கச் சொல்லுங்க!

    "தவிர அவன்கிட்ட சிறப்பா வேலை பார்த்துட்டு இருந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி திருமணமாகிப் போயிட்டாங்களாம்! அந்த இடத்தை நிரப்பத்தான் உன்னை அழைக்கிறான்!

    ம்கூம்... நான் போகலே!

    படித்தது மருத்துவம்! ஆஸ்பிட்டலுக்கு வேலைக்குப் போகலேன்னால் என்ன அர்த்தம், நேத்ரா? பின்னே என்ன செய்யத் திட்டம்? வாடகைக்கு இடம் பார்க்கட்டுமா?

    எதுக்குப்பா?

    தனியா க்ளினிக் வைத்துப் பார்க்கத்தான்!

    "என்ன அவசரம்ப்பா? செய்யலாம்ப்பா! படித்து முடித்துவிட்டு வந்த அலுப்பு உடம்பிலேயும், மனசிலேயும் தொக்கி நிற்குது!...

    கொஞ்சம் அதைப் போக்கிட்டு... அப்புறமா எதையுமே சிந்திக்கலாமேப்பா!"

    இப்படி நேத்ரா சொல்ல...

    தாய் ஈஸ்வரி... கணவரின் அருகில் வந்தவள் சொன்னாள்.

    நேத்ரா சொல்வதிலும் நியாயம் இருக்காப்போலத்தான் தெரியுதுங்க!

    என்ன ஈஸ்வரி சொல்றே? பரணிதரன் கேட்டார்.

    பிள்ளை கஷ்டப்பட்டுப் படிச்சிட்டு வந்திருக்கா...

    ஆமாம்!

    கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்! மனதையும், புத்துணர்ச்சிக்குத் திருப்பட்டும்! பிறகு தொழிலைக் கவனிக்கட்டும்.

    ஈஸ்வரி அவ்வாறு சொல்ல... பரணிதரனும் யோசித்தார். பின்னர் மகளைப் பார்த்துக் கேட்டார்.

    நேத்ரா... பிறகு தொழிலைத் தனியே செய்ய விரும்பறீயா?

    ம்கூம்!

    இல்லே ஜெகதீஷ்கிட்ட கொஞ்ச நாட்கள் அஸிஸ்டெண்டா வொர்க் பண்ணலாம்னு நினைக்கறீயா?

    அப்பா... எல்லாத்தையுமே பிறகு யோசிக்கலாமே!

    நேத்ரா சின்ன முகம் சுருக்கிக் கெஞ்சலோடு கேட்க... சட்டென்று அந்தத் தந்தையின் உள்ளம் நெகிழ்ந்தது.

    உன் இஷ்டம், நேத்ரா! என்று சொல்ல வைத்தது.

    அப்பாவும், அவளும் பேசி ஒரு வாரமிருக்காது!

    அதற்குள் அந்த விளம்பரம்... அவளை ஈர்த்தது!

    ‘மலையடிவாரக் கிராமத்தில் சேவைக்காய் நிறுவியுள்ள... எங்களின் மருத்துவமனையில் பணிபுரிய... அன்புள்ளமும்... கருணையும் மிகுந்த மருத்துவர்களும், செவிலியர்களும் தேவை’ என்றும்...

    எந்த தேதியில் நேர்முகத் தேர்வு என்றும் கூறியிருந்தார்கள்.

    அந்த விளம்பரத்தைப் படித்தவுடன் நேத்ராவின் உடலும், மனமும் துள்ளி விட்டன!

    பரணிதரனிடம் அந்தச் செய்தியைக் காட்ட...

    என்னம்மா இப்படிச் சொல்றே? ரெஸ்ட் எடுத்துக்கணும்ன்னு சொன்னே! நானும் சந்தோசமா சம்மதிச்சேன்! இப்போ எங்களையெல்லாம் பிரிந்து முந்நூறு கிலோ மீட்டர் பயணித்து அந்த இண்டர்வியூக்குப் போகணுமாடா?

    என்னப்பா தப்பு?

    எங்களுக்கு நீ ஒரே செல்லப் பெண்! நினைவிருக்கட்டும்!

    உங்களை நான் அடுத்தது பெத்துக்க வேண்டாம்ன்னு சொல்லலையே!

    நேத்ரா சொல்லிவிட்டு முல்லையாய் மலர...

    பேச்சை மாத்தாதே, நேத்ரா! உன்னைப் பிரிந்து... நானும், உன் தாயும் எப்படி இருப்போம்? உன் திருமணம் வரையாவது நீ எங்களோடு இருக்கக் கூடாதா?

    அப்பா முகம் வாடிக் கேட்க...

    "எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டால் நீங்களும் அங்கே அருகிலுள்ள பள்ளிக்கு மாறுதல் வாங்கிட்டு வந்துடுங்கப்பா!...

    "இந்த ஜனநெருக்கடி... வாகனப்புகை... சுற்றுச்சூழல் மாசு, தூசு... ஆறாய் ஓடுற சாக்கடை... அசுத்தக் காற்று...

    அத்தனைக்கும் முழுக்குப் போட்டுட்டு அந்த மலையடிவாரக் கிராமத்துக்குப் போயிடலாம்!...

    இனிமேலாவது நகரத்தின் சந்தடியை விட்டுவிட்டு... அமைதியா... கொஞ்ச நாட்கள் வாழலாமேப்பா!"

    நேத்ரா தந்தையிடம் கெஞ்ச...

    அந்த வேலை எவ்வளவு நாட்களுக்கு நிரந்தரம்?

    ஏன் அப்படிச் சொல்றீங்க?

    உன்னை ஒருத்தனுக்குத் திருமணம் செய்து வைத்து... கண் குளிரப் பார்க்க வேண்டாமாடா, நேத்ரா?

    பரணிதரன் கண்களில் பெரும் ஆசையை வழிய விட்டுக் கேட்க...

    எனக்குத் திருமணம் தேவையில்லேப்பா!

    அவர் அதிர்ச்சியோடு பார்க்க...

    மருத்துவத் துறைக்கும், மக்கள் சமுதாயத்திற்கும்... என் எதிர்கால வாழ்க்கையை அர்ப்பணிக்கலாம் என்ற யோசனையில் இருக்கேம்ப்பா!

    நீ இப்படிப் பேசக் காரணம்... நீ இன்னும் உன் மனம் கவர்ந்தவனைச் சந்திக்காததால் தான்!

    அம்மா ஈஸ்வரி கொஞ்சம் கோபத்தோடு இடைப்புக...

    இதுநாள் வரை என்னை ஒரு ஆண் மகனும் கவர்ந்ததில்லை!

    அதுக்கு?

    இனியா ஒருவன் பிறக்கப் போறான்? நேத்ரா தாய்க்குப் பதிலடி கொடுக்க...

    "பிறக்கப் போறதில்லே! ஆனால், ஏற்கெனவே பிறந்து ராஜகுமாரன் போல வளர்ந்துட்டு இருப்பான், நேத்ரா!...

    அவன் எங்கே இருக்கானோ...?

    எப்போ உன் கண்ணில் படுவானோ...?

    உன் இதயத்தைத் திருடி சில்மிஷம் செய்வானோ...?

    அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!"

    ஈஸ்வரி குறைப்பட்டுக் கொள்ள...

    உனக்குக் கற்பனை வளம் ஜாஸ்திம்மா! நேத்ரா கூறிவிட்டுச் சத்தமாய்ச் சிரித்தாள்.

    நிச்சயமா, நேத்ரா! விரைவிலேயே உன் மன்மதன் உன் வழியில் வருவான்... உன் விழியில் விழுவான்!

    ஆஹா... என்ன கவிதை நயம்!

    அவனை நீ நெஞ்சார நேசிப்பாய்!

    ம்கூம்! தலையசைத்தாள், நேத்ரா.

    உன் நேசம்... திருமணம் என்ற அன்புப் பிணைப்பால் பிணைக்கப்படும்!

    அம்மா... போர் அடிக்காதேம்மா! ப்ளீஸ்...

    "நாங்களும் இனி உனக்குத் தீவிரமா மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபடப் போகிறோம்! உனக்கு அதில் எவனையாவது பிடிச்சிருந்தால் ஓ.கே. சொல்!...

    இந்த வேலை வேண்டாம்! தொலைதூரம் பயணித்து அந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும் வேண்டாம்!"

    ஈஸ்வரி கட்டளையாய்க் கூற...

    நேத்ராவிற்கு லேசாய்க் கோபம் எட்டிப் பார்த்தது.

    வேலை எனக்கே கிடைக்கும்ன்னு என்னம்மா நிச்சயம்? முயற்சி செய்து பார்ப்போமே!

    வேண்டாம்! ஈஸ்வரி சத்தம் போட்டாள்.

    எனக்கும், காடு, மலை, வனம்ன்னு சுத்தணும்ன்னு ஆசையா இருக்கு! ரெண்டு இடம் இருக்காம்! நம்ம உதய்யும் வரேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கான்!

    "அவனையும் இதுல சேர்த்துட்டையா? நீ உருப்படாமப் போறது இல்லாமல்... அவனையும் உருப்பட முடியாமல் உருக்குலைக்க கங்கணம் கட்டிட்டு இருக்கீயா?...

    நீ இந்த இண்டர்வியூக்குப் போறது எனக்கு சுத்தமாப் பிடிக்கலே!"

    அம்மா முகம் சுருக்கிக் கோபமாய் முடிக்க...

    அப்பா... அம்மாவுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்கப்பா!

    எனக்கு எதுக்கு? உனக்குதான் புத்தி சொல்லணும்! ஈஸ்வ ரி சீற...

    ஏழைகளுக்குச் சேவை செய்யற வாய்ப்பு எத்தனை பேருக்கு வாய்க்கும்? என்னோட குறிக்கோளே இது போல இடத்துல போய் வொர்க் பண்றதுதாம்மா!

    உன் குறிக்கோளைத் தூக்கிக் குப்பையிலே போடு!

    "புரிஞ்சிக்கம்மா! நானும், உதயும் போய் பார்க்கறோம்! நீங்க ரெண்டு பேரும் இதுபோல எதுக்குமே முட்டுக் கட்டை போட்டதில்லே!

    முதல் முறையா என்னோட முயற்சிக்கும், ஆசைக்கும் தடங்கலா... தடைக்கல்லா இருக்கீங்க! தெரியுமா?"

    நேத்ரா பெரிதாய் குற்றம் சாட்ட...

    அம்மா கலங்கிய விழிகளோடு சொன்னாள்,

    "ஒத்தப் பிள்ளையைப் பெத்த மனம் என்ன பாடுபடும்ன்னு உனக்கெப்படித் தெரியும்?...

    பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே இந்த சென்னையில்தான் படிச்சே! நமக்குள்ளே இதுநாள்வரை பிரிவே ஏற்பட்டதில்லே!...

    உன்னைப் பிரிஞ்சி எப்படி நேத்ரா இருப்போம்? பெரிய வேதனையைக் கொடுக்காதே, நேத்ரா!"

    சின்ன அழுகையோடு தாய் கூறி முடிக்க...

    எனக்குத் திருமணம் செய்து வைக்கணும்ன்னு ஒத்த கால்ல நிக்கறீங்களே... அப்போ மட்டும் நான் உங்களைப் பிரிஞ்சி போக மாட்டேனா?

    நேத்ரா நறுக்கென்று காரமாய் கேட்க...

    உனக்கு இந்தச் சென்னையிலேதான் மாப்பிள்ளை பார்க்கப் போறோம்! அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிக்கற மாப்பிள்ளைக்குதான்... உன்னைக் கொடுப்போம்!

    உங்களுக்கு ஆனாலும் பேராசைம்மா! பையனைப் பெத்தவங்க அப்படி நினைக்க மாட்டாங்களா...?

    இப்பவே வருங்கால மாமியார்க்கு வக்காலத்தா...?

    அம்மாவுக்கும், மாமியார்க்கும் வலியில்லாம... நானும், என் புருஷனும் தனிக்குடித்தனம் இல்ல போயிடுவோம்!

    நேத்ரா கண்களைச் சிமிட்டி அழகாய்ச் சொல்ல...

    ஏய் கள்ளி...

    என்று ஈஸ்வரி மகளின் கன்னத்தில் கிள்ளினாள்.

    அங்கே மகிழ்ச்சி அலையலையாய் பொங்கிப் பாவியது!

    பிறகு தினம் தினம் இந்த வேலைக்கான நேர்முகத்

    Enjoying the preview?
    Page 1 of 1