Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னை பிரியாத வரம் வேண்டும்…
உன்னை பிரியாத வரம் வேண்டும்…
உன்னை பிரியாத வரம் வேண்டும்…
Ebook143 pages50 minutes

உன்னை பிரியாத வரம் வேண்டும்…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிலவுப் பெண் சீவிச் சிங்காரித்து... ஒளி வீசும் மேனியுடன்... மென்மையான நாணத்துடன், வானில் மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்க, நட்சத்திரப் பட்டாளங்கள் தோழியாய்க் கூடவே துணைக்குப் போக... வெண் மேகங்கள், நிலவுப் பெண்ணிற்குப் பட்டுக் கம்பளம் விரித்து... வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்க... என்று வானமே மிக ரம்யத்துடன் காணப்பட்டது. 


இரவு பத்து மணி.


மாடி போர்டிகோவில்... பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தார், சதாசிவம்.


மார்கழிப் பனியோடு... தோட்டத்து மலர்களின் வாசமும் இணைந்து, பின்னிப் பிணைந்து, அவரைத் தீண்டி நகர்ந்தது. 


அந்தக் குளிர்ந்த பனித் தென்றலை ஆழ்ந்து சுவாசிக்க, குளிரெடுத்தது. சால்வையை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டார். 


அவரால் இப்பொழுதெல்லாம் நாள் முழுக்க உழைக்க முடியவில்லை. அஞ்சனா மட்டும் இல்லையென்றால் பெரிதாய்த் திண்டாடி விடுவார். 


சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று பெரும் அவதிப்படும் சதாசிவத்திற்கு இப்போதெல்லாம் நெஞ்சில் ஊசி குத்துவதுபோல வலி புறப்பட்டு அவரைக் கஷ்டப்படுத்தியது. 


அவ்வளவு பெரிய அரண்மனை போன்ற பங்களாவில் தனிமை வேறு வாட்டி வதைத்தது. இத்தனை நாளும் தெரியாத தனிமை வயதாக ஆகப் பாடாய்ப் படுத்தியது. 


எத்தனையோ கனவுகளோடும்... கற்பனைகளோடும் அவர் தேவகி என்ற அழகிய நங்கையை மணந்தார். 


தேவகியின் மிதமிஞ்சிய அன்பில், நேசத்தில், பாசத்தில், அக்கறையில் தண்ணீரில் கரையும் சர்க்கரையாய்தான் கரைந்து போனார். 


அவளைக் கைப்பிடித்த நேரம் பிசினஸும் பல்கிப் பெருகியது. அவர்களின் மிதமிஞ்சிய காதல் வாழ்க்கையில் ஜெயசூர்யா மலர்ந்தான்.


அவனுக்கு ஐந்து வயதாகும் போது... தேவகி மீண்டும் கருவுற்றாள்! ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் பெண் குழந்தை எனத் தெரிய வந்தது! சதாசிவம் பெரும் மகிழ்ச்சி கொண்டார். 


ஏழாம் மாதம் தேவகி சுரம் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அந்த சுரம் விஷ சுரமாய் மாறி... டாக்டர்கள் எவ்வளவு போராடியும் அவளைப் பிழைக்க வைக்க முடியவில்லை. தேவகி வயிற்றுப் பிள்ளையோடு இறந்து போனாள். 


நேசம் கொண்ட மனைவி மரணித்துவிட கத்தினார். துடிதுடித்தார். துவண்டு போனார்.


ஒரு நாள் தற்கொலைக்கு முயற்சிக்க. அவருடைய தாயும், தகப்பனும் கண்டுவிட்டுக் காப்பாற்றினர். 


“குழந்தையை அநாதையாக்கி விட்டுப் போயிடாதே, சிவம்! அவளுக்கு விதி... இப்படிப் பொட்டென்று போய்ச் சேரணும்னு. சிவம்... இந்தக் குழந்தையின் முகத்தைப் பார். அவன் எதிர்காலம் உன் கையில் தான் இருக்கு. இந்தக் குழந்தைக்காகவாவது நீ வாழ வேண்டும், சிவம்...!” 


“தேவகி உன் தலையில் பெரிய பொறுப்பையும், கடமையையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறாள்.  அதுவும் நீ செய்வாய் என்று நம்பி.” 


“ஏமாத்திவிடாதே, சிவம்! தாய் இறந்தது கூடத் தெரியாமல் வெள்ளையாய் விளையாடித் திரியும்... இந்த ஜெயசூர்யாவுக்குத் தாயுமானவனா நீ மாறணும், சிவம்!”


“மனசைத் தளர விடாதே. நம்பிக்கையை இழப்பது உயிரை இழப்பதற்குச் சமம்! சிவம்... சிவம்... உன்னால் இந்தத் துக்கத்திலிருந்து மேலெழ முடியும். உன்னால் இந்தத் துன்பத்தைப் புறம் கண்டு ஓட வைக்க முடியும். உன் மனைவியின் மரணம் தந்த காயம்... உன்னை மலையளவு எழுந்து நிற்க வைக்கும்.” 


“நீ நம்ம ஜெயசூர்யாவுக்காகவாவது வாழணும், சிவம்! எங்களை அநாதையாக்கிடாதேப்பா!” என்று தாய் பாகீரதி அழ... 


சதாசிவத்திற்கு அப்போதுதான் தான் எவ்வளவு பெரிய பாவம் செய்ய இருந்தோம் என்று தோன்றியது.


நிதானமாய் யோசித்தார். நிமிர்ந்து எழுந்தார்.


பாகீரதியின் அளவுக்கு அதிகமான புத்தி புகட்டலால்... விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயர்ந்து நின்றார். 


அவருடைய தகப்பன், நகை, துணிக்கடை நிறுவினார் என்றால் அவரின் மகன் சதாசிவமோ கடைக்குத்  தேவையான தங்க, வைர, பிளாட்டின நகைகளைச் செய்யும் தொழிற்சாலையை நிறுவி... செய்கூலி, சேதாரம் இல்லாமல் விற்பனை செய்தார். 


அதே போல் துணிக் கடைக்குத் தேவையான துணிகளை நெய்யச் சொந்தமாக மில்லை நிறுவி... அங்கே நெய்யும் துணிகளைக் குறைந்த அளவு லாபத்திற்கு விற்க... விற்பனை அமோகமாய் இருந்தது. 


படிப்படியாய் உயர்ந்து தமிழக, ஆந்திர மலைப் பிரதேசங்களில் காபி தேயிலைத் தோட்டங்களை வாங்கிப் போட்டார். 


கர்நாடகாவின் பெங்களூரிலும், சிக்மங்களூரிலும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்றும்... 


ஆந்திராவின் செகந்திராபாத், வாரங்கல், மெஹ்பூப் நகர், திருமலை போன்ற இடங்களில் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும், 


Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 7, 2024
உன்னை பிரியாத வரம் வேண்டும்…

Read more from ஆர்.மகேஸ்வரி

Related to உன்னை பிரியாத வரம் வேண்டும்…

Related ebooks

Reviews for உன்னை பிரியாத வரம் வேண்டும்…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னை பிரியாத வரம் வேண்டும்… - ஆர்.மகேஸ்வரி

    1

    அழகிய அதிகாலைப் பொழுதில்... பனி தனது நாட்டிய அரங்கேற்றத்தைப் பூமியில் நடத்திக் கொண்டிருந்தது. மரம், செடி, கொடி, புற்கள், பங்களாக்கள், குடிசைகள்... அத்தனையும் குளிர்ச்சியான பனியில் நீராடிப் புத்துணர்வோடு... அந்த விடியற்பொழுதை ஆரவாரத்துடனும்... ஆர்வத்துடனும் வரவேற்றுக் கொண்டிருந்தன.

    ‘ஐதராபாத் நகரம்’ உறக்கம் கலைந்து எழுந்து விட்டது.

    ஓட்டல்கள்... டீக்கடைகள்... பூக்கடைகள் என்று பரபரப்பாய் இயங்க ஆரம்பித்து விட்டன.

    போர்வையின் கதகதப்பில் உறங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவிற்கு விழிப்பு வந்தது.

    தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தைப் பார்க்க மணி 5.00 என்று காட்டியது.

    ஒருத்திக்குச் சமைக்க எவ்வளவு நேரம் பிடிக்கும். ஆபீஸிற்கு 9.30 மணிக்குப் போய் நின்றால் போதும். அதுவே முதல் ஆளாய் அஞ்சனாதான் போய் நிற்பாள்! இந்நேரத்தில் எழுந்து என்ன செய்யப் போகிறோம்... என்று நினைத்தவள், மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

    பழைய நினைவுகள் நெஞ்சில் முள்ளாய்க் குத்தின

    சட்டென்று கண்கள் பொங்கி... வழிந்து... கன்னப் பரப்பில் ஆறாய் ஓடி... தலையணையை நனைத்தது.

    தந்தை, தாய், அண்ணன், அண்ணி என்று பெரிய உறவுக் கூட்டமே... ‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் தஞ்சாவூரில் இருக்கும் போது... அவள் மட்டும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வந்து அநாதையாய் வாழ வேண்டிய நிலையை எண்ணி உள்ளத்தில் குருதி வடிந்தது.

    அஞ்சனா செய்தது மாபெரும் பிழைதான்! தவறு தான்! அதனால் அவர்களுக்குப் பெரிய அவமானம் தான் நேர்ந்தது.

    ஆனால் அதற்காக இப்படியொரு பெரிய தண்டனையை... அவர்கள் அஞ்சனாவிற்கு வழங்கியிருக்க வேண்டாம்! எல்லோரும் அவளை அநாதை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவள் அநாதையில்லை என்ற உண்மை... அவளுடைய எம்.டி. சதாசிவத்திற்கு மட்டும் தெரியும்.

    அவள் பெரும் பிழை செய்து... எல்லோராலும் கைவிடப்பட்டு... நிர்கதியாய் நின்றபோது... அவளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி... ஐதராபாத்திற்குக் கூட்டி வந்து... தன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்து... வாழ வைத்துக் கொண்டிருப்பவர், சதாசிவம்.

    சதாசிவத்தோடு கம்பெனி பொறுப்புகளைப் பங்கிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன் ஜெயசூர்யா... லண்டனில் உள்ள பல்கலைக் கழகத்தில் வர்த்தகம் பற்றிய புதிய மேற்படிப்பைப் படிக்க அவன் சென்ற சமயம்... அஞ்சனா அங்கு வந்து சேர்ந்தாள்.

    சதாசிவத்திற்கு வயது ஐம்பதாகிறது.

    சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று ஒவ்வொரு நோயாய் அவரிடம் தஞ்சம் புகுந்த சமயம்... ஜெய சூர்யா அவரின் தலையில் கம்பெனி பொறுப்புகளை ஏற்றி வைத்துவிட்டுச் செல்ல... அவர் பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான்... தேவதை கணக்காய் அஞ்சனா அங்கு வந்து சேர்ந்தாள்.

    சதாசிவத்திற்குப் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாநகரம்தான். பாட்டன், முப்பாட்டன் காலத்தில் குடிபெயர்ந்து ஆந்திராவிற்கு வந்து விட்டார்கள்.

    ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    சதாசிவம் ஆந்திராவின் நம்பர் ஒன் பிசினஸ்மேன்.

    கார் ஸ்பேர்பார்ட்ஸ், காட்டன் மில்ஸ், சில்க் மில்ஸ், ஷாப்பிங் மால்கள், ஓட்டல்ஸ், ரிசார்ட்ஸ், ஆந்திராவின் மலைப் பிரதேசங்களில் காபி, டீ எஸ்டேட்ஸ், சொந்த ஊரான மதுரையில் இருநூறு ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்த பண்ணையும், பண்ணை வீடும் என அவரின் சொத்துகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    அத்தனை வர்த்தகங்களுக்கும் தலைமையிடமாய் ஐதராபாத் நகரில் ஏழு மாடிக் கட்டடத்தில் ஆபீஸ் நடந்து கொண்டிருக்கிறது. அங்குதான் அஞ்சனா பணிபுரிகிறாள்.

    அஞ்சனா பி.பி.ஏ. பட்டதாரி. தற்போது தபாலில் எம்.பி.ஏ.வையும் முடித்து விட்டாள்.

    அஞ்சனாவை முதலில் சாதாரண கிளார்க் வேலைக்குத்தான் சேர்த்தார். அவளின் அசுர உழைப்பைக் கண்டு... பிரமித்துப் பின்னர் தனது பர்சனல் செகரட்டரியாய்ப் பதவி உயர்வு கொடுத்து விட்டார்.

    ஆபீஸில் செய்யும் வேலைகளை விட கார் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனி, காட்டன், சில்க் மில்ஸ், நகைக் கடை, துணிக்கடை என்று மேற்பார்வையிட அவர் செல்லும்போது அவளும் உடன் செல்வாள். சில சமயம் அவருக்கு முடியாமல் போனால் அவள் தனியாளாய்க் கிளம்பி விடுவாள்.

    அஞ்சனா என்றால் அங்கே பணிபுரியும் அனைவரும் அஞ்சுவர்.

    அஞ்சனா அப்படி ஒன்றும் மூர்க்க குணம் கொண்டவள் இல்லை. நிரம்ப அன்பானவள். பாசமானவள். ஆனால் வேலையென்று வந்து விட்டால் கண்டிப்புக் காட்டுவாள்.

    நல்ல முறையில் செய்பவர்களைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டி... அவர்களின் பதவி உயர்வுக் காகச் சதாசிவத்திடம் சிபாரிசு செய்வாள். ஆனால் திருட்டு, கபடு, சூது என்று யாராவது செய்து விட்டால், அவர்கள் கம்பெனியை விட்டு வீட்டுக் குத்தான் போக வேண்டும்.

    அங்கே பணிபுரிபவர்களை அவள் அன்பும், பாசமும் கட்டிப் போடுகிறதென்றால்... அவளின் அழகும், கம்பீரமும், அறிவுத் திறமையும் அவர்களை அடி பணிய வைக்கும்.

    அவள் அங்கு வந்த இரண்டு வருடத்தில் சதாசிவத்திடம் போராடி... அவரின் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு இலவசமாய்க்

    குடியிருக்கக் குடியிருப்பு அடுக்கு மாடிகளும்... அவர்கள் பிள்ளைகள் இலவசமாய்க் கல்வி கற்க... குடியிருப்பை ஒட்டிப் பள்ளிக்கூடமும், மருத்துவமனையும் எனப் பெரும் வசதிகள் செய்து தந்து விட்டாள், அஞ்சனா.

    அவள் குடியிருப்பதும் அங்குதான்.

    மணி ஆறானது.

    போர்வை உதறி எழுந்தாள்.

    குளியலறைக்குச் சென்று சந்தன சோப்பைக் குழைத்துக் குளித்தாள்.

    அஞ்சனாவை அழகி என்று சொல்வதை விடுத்து... பேரழகி என்றுதான் கூற வேண்டும்.

    அஞ்சனா இருபத்து மூன்று வயது நிரம்பிய யுவதி.

    தங்கத்தை உருக்கி... வார்த்து... பார்த்துப் பார்த்துக் கைதேர்ந்த பொற்கொல்லன் செய்த தங்கச் சிலையென அழகுமேனி!

    அழகான குண்டு முகம்! அதில் தென்றலின் குளிர்ச்சியோடு கூடிய இரு நீண்ட நயனங்கள்! அதைப் பாதுகாக்க அடர்த்தியான சிப்பி இமை!

    கூர்மையான, பிடித்துக் கொஞ்சத் தூண்டும் அழகிய எள்ளுப்பூ நாசி.

    செவ்வரளியின் இதழைப் பிய்த்து ஒட்ட வைத்தாற்போன்ற சிவந்த இதழ்கள்!

    முல்லை மொட்டாய் ஒளிர்விடும் பல்வரிசை!

    வழுவழுப்பான ஆப்பிள் கன்னக் கதுப்புகள்! கருத்தடர்ந்த கார்மேகக் கூந்தல்!

    நல்ல உயரம்! சிறுத்த இடையும்... வாளிப்பான உடலமைப்பும் என்று பார்க்கும் அத்தனை பேரின் இதயத்தையும் அடித்து நொறுக்கி வீழ்த்தும் அழகியவள், அஞ்சனா.

    பீரோவைத் திறந்து ஆகாய வண்ணத்தில் கறுப்பும், வெள்ளையும் எனச் சிறுசிறு பூக்களிட்ட காட்டன் புடவையை எடுத்துப் பாந்தமாய்க் கட்டிக் கொண்டாள்.

    நீளமுடியைச் சுற்றிச் சுழற்றிக் கொண்டையாய்ப் போட்டுக் கொண்டாள்! புருவ மத்தியில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டு வைத்து... எளிய அலங்காரத்தில் கிளம்பி விட்டாள்.

    காதோரத்தில் சிறு வெள்ளை ரோஜா கள்ளமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தது.

    ஆபீஸிற்கு வந்தாள்.

    சீட்டில் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து, சதாசிவம் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப் படுத்தி பிரிண்ட் அவுட் எடுத்து ரெடியாய் வைத்துக் கொண்டாள்.

    கையெழுத்திட வேண்டிய ஃபல்களை வரிசையாய் அடுக்கினாள்.

    நேரம் பத்தானதும் ஆபீஸிற்கு ஒவ்வாருவராய் வர ஆரம்பித்தனர்.

    அவளுடைய தோழி சந்தியா அருகில் வந்து குட்மார்னிங் சொல்ல...

    குட்மார்னிங், சந்தியா! என்று புன்னகையுடன் வணங்கினாள்.

    அழகு அள்ளுதடி! என்று சந்தியா ரசித்துச் சொல்ல...

    சேலையா...?

    சேலையும்தான்! அப்படியே உன் இதழில் பூக்கும் வெண்மொட்டுச் சிரிப்பும்தான்!

    காலையிலேயே பனிப்பாறையைத் தலையில் ஏத்தறீயே சந்தியா! குளிர்சுரம் வந்து படுத்து விட்டால் என் வேலையை யார் பார்ப்பது? ம்...

    வில்லாய் வளைந்த புருவத்தைத் தூக்கிப் புன்னகையுடன் அஞ்சனா கேட்டாள்.

    "இன்னைக்கு நிஜமாவே பளீர்னு ரொம்ப அழகா தேவதைபோல இருக்கே, அஞ்சனா! உன் மேனியழகோடு இந்த ஆகாய வண்ண காட்டன்

    Enjoying the preview?
    Page 1 of 1