Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aariya Vanam
Aariya Vanam
Aariya Vanam
Ebook261 pages1 hour

Aariya Vanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தென்காசி, நான் வளர்ந்த ஊர். தென்காசித் தென்றலும் குற்றாலச் சாரலும்தான் என் தமிழை வளர்த்தன, கவிதை அளித்தன.

கதைகளுக்குள் நான் நுழைந்தபோது, தென்காசி, குற்றாலப் பகுதிகளை மையமாகக் கொண்டு ஒரு முழுநீள நாவல் எழுத வேண்டும் என்பது நீண்ட நாட்களாக என் ஆவலாக இருந்தது. அந்த ஆவல் "ஆரிய வனம்" மூலம் நிறைவேறியது.

குற்றாலப் பகுதியில் அமைந்திருக்கும் தோப்பை விற்க முயல்கிறார் தேவர். அதை வாங்க எண்ணுபவரின் சகோதரன் அர்ஜுனும் சகோதரி மீனாவும் தோப்பைப் பார்க்க வருகின்றனர். வந்ததிலிருந்தே அமானுஷ்யச் செய்திகள், காட்சிகள்! அப்படி ஆரிய வனம் மறைத்துவைத்திருக்கும் இரகசியம்தான் என்ன? இதற்கும் மீனாக்ஷியின் மகாபாரத ஆய்வுக்கும் என்ன தொடர்பு?

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580111409143
Aariya Vanam

Read more from Sairenu Shankar

Related to Aariya Vanam

Related ebooks

Reviews for Aariya Vanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aariya Vanam - Sairenu Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆரிய வனம்

    Aariya Vanam

    Author:

    சாய்ரேணு சங்கர்

    Sairenu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காத்திருக்கும்போது…

    2. புகைவண்டி

    3. எழிலகம்

    4. அய்யன் தோப்பு

    5. தர்மன் பேசுகிறான்!

    6. தர்மனுக்கு நடந்தது

    7. ஆரிய விலாசம்

    8. டாக்டர் கோவிந்தராஜன்

    9. அர்ச்சகர் மகள்

    10. இன்ஸ்பெக்டர் ராஜகோபால்

    11. நடக்காத நடராஜய்யர்

    12. 'மந்திரவாதி' நுழைகிறான்!

    13. மந்திரவாதியின் மந்திரங்கள்

    14. கருப்பாய்… அலையலையாய்…

    15. ஊருக்குப் போயிடுங்க!

    16. அர்ஜுன்! அர்ஜுன்!!

    17. அர்ஜுன்? மீனா?

    18. தருமன் யாருன்னு தெரியுமா?

    19. விஷயத்துக்கு வா, தர்மன்!

    20. அர்ஜுனுக்கு என்ன ஆச்சு?

    21. ஆரிய வனத்தில் அழகிய வீடு

    22. திட்டம் மாறுகிறது!

    23. அர்ஜுன் உயிரோட வேணுமா, வேண்டாமா?

    24. யுதிஷ்டிரனின் பொக்கிஷம்

    25. யாரென்று தெரியும்!

    1. காத்திருக்கும்போது…

    மீனாக்ஷியின் ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து….

    நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்

    தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜய முதீரயேத்

    இது தான் மஹாபாரதத்தின் மங்களாரம்ப ஸ்தோத்திரம். இதில் நாராயணனையும் நரோத்தமனான நரனையும் வணங்குகிறது முதல் வரி. இந்த நரன், நாராயணன் என்ற ரிஷியோடு இரட்டையாகப் பிறந்தவன் என்றும் இந்த நரநாராயணர்கள்தான் மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் என்பதற்கு மஹாபாரதத்திலேயே நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

    இந்த வரிக்கு வேறு வியாக்கியானங்களும் சொல்லப் பட்டிருக்கிறது. நாராயணனையும், நரனான ஆதிசேஷனையும், நரோத்தமனான வாயு பகவானையும் குறிப்பதாக மத்வர்கள் சொல்கிறார்கள். நரன் என்பவன் ஆதிசேஷன் என்பதற்கு எனக்கு ஒன்றும் குறிப்புகள் கிடைக்கவில்லை.

    இருந்தாலும் எனக்கென்னவோ இந்த நரனும் நரோத்தமனும் ஒன்றல்ல என்பது சரிதான் என்று தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க தர்மத்தைச் சொல்லுகிற காவியம் ஆதலால், இந்த நரோத்தமன்  என்பது (நர உத்தமன் என்ற சொற்றொடரினால்) தர்மதேவதையைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

    நரன் என்னும் சொல்லல்ல,  இந்த நரோத்தமன்தான் ஆதிசேஷனைக் குறிக்கும் என்கிறார்கள் சிலர். அதுவும் இதே காரணத்தால் சரியாகவே தோன்றுகிறது. அது எப்படி?

    ***

    தென்காசி ரயில்வே ஸ்டேஷன்.

    அதிசயமாய் வெகு சுத்தமாய் இருந்தது. காற்று பிய்த்துக் கொண்டு போயிற்று.

    பொதிகை எக்ஸ்பிரஸுக்காகக் காத்திருந்தார் இராசபாண்டித் தேவர். மரத்தடி காங்க்ரீட் பெஞ்சில் அமருவதும் உடனே எழுந்து நடைபோடுவதுமாக இருந்தார்.

    ஒன்றரை மணி நேரத்துக்குமேல் காத்திருக்கும் சலிப்பும் பொறுமையின்மையும் அந்த நடையில் தெரிந்தது. அடிக்கடி மீசையை நீவிக்கொண்டார்.

    அடடே, எங்கே தேவர் இவ்வளவு தூரம்? என்றவாறு எதிரில் வந்தார் கந்தசாமி நாடார்.

    இந்தச் சந்திப்பைத் தேவர் விரும்பவில்லை என்பது லேசான உதட்டுச் சுளிப்பிலிருந்து தெரிந்தது. காரணம் இல்லாமலும் இல்லை. வியாபாரத்தில் புலியான கந்தசாமி நாடாரின் முக்கியமான மூலதனம், வம்பு!

    வாங்க நாடார், வணக்கம் என்றார் சுருக்கமாக.

    நாடார் அதைக் கண்டுகொண்டால் தானே? வளவளவென்று உற்சாகமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டார்.

    ரொம்ப நேரமா நிக்கீங்களாக்கும். நான் இப்பதான் வந்தேன். நம்ம பையன் டேசனுக்குப் போன்போட்டுக் கேட்டதுல வண்டி லேட்டுன்னு விவரம் சொன்னாப்ல. அவனையே அனுப்பலான்னா நம்ப பம்ப்ளி (பண்பொழி)ல புதுக் கடை இருக்குதுல்ல (நாடார் தென்காசியைச் சுற்றிப் பத்துப் பதினைந்து பலசரக்குக் கடைகளின் முதலாளி!), அங்கே கடை திறக்க ஆளில்ல. சரி, நீ போடான்னுட்டு நானே வந்துட்டேன். ஏன்னு கேளுங்க, நம்ம பொண்ணு இசக்கியும் பேரப்பய சுனிலும் ரயில்ல இன்னிக்கு வாராவ. மாப்ள அமெரிக்கா போயிருக்கான். வர 2 மாசம் ஆகும். ஏன் பிள்ள தனியா இருக்கன்னு இங்க வரச் சொல்லிட்டேன். எப்டி? என்றார் மூச்சுவிடாமல்.

    நீங்க சொல்றது சரிதான் நாடார் என்றார் தேவர் மீண்டும் சுருக்கமாக. அது அவருக்கே உறுத்திற்றோ என்னவோ, இசக்கி நல்லாருக்காள்ள? என்று கேட்டு வைத்தார்.

    ஓ நல்லாருக்கா என்றார் நாடார்.

    அதான் வேணும் என்றார் தேவர்.

    அப்போது ஒரு சங்கடமான மௌனம் நிலவியது.

    சிவகாமிக்குக் கல்யாணம்னு கேள்விப்பட்டேன்… மௌனத்தைக் கலைத்தார் நாடார்.

    தேவர் பெருமூச்சு விட்டார். ஆமாம், பேசிக்கிட்டிருக்கோம் நாடார். கொஞ்சம் பெரிய இடம், அதான் கொஞ்சம் யோசனை… என்று இழுத்தார்.

    சரிதான் போங்க. தேவரை விடப் பெரிய இடமாக்கும். பையன் என்ன பண்ணுதான்? எந்த ஊர்? என்று விலாவாரியாக விசாரணையில் இறங்கினார் நாடார்.

    இரயிலோ வரும்வழியைக் காணோம். இவரிடமிருந்து தப்ப முடியாது என்று உணர்ந்தவராக, இராசபாளையத்துல இருக்காங்க அப்பன் ஆத்தா. பையன் டாக்டர். சென்னையில மேல்படிப்புப் படிக்கான் என்றார் தேவர்.

    அப்டிப் போடுங்க. டாக்டராவும் பாத்திட்டீங்க, பக்கமாவும் ஆச்சு. என்ன, இராசபாளையத்துல கிளினிக் வச்சுக் கொடுத்துர்றது என்றார் நாடார்.

    எல்லாம் சரிதான். அதுக்கெல்லாம் பணம் ஏற்பாடு பண்ணிக்க வேண்டாமா? பெரிய இடம்னா…. என்று இழுத்தார் தேவர்.

    தேவர்ட்ட பணம் இல்லன்னா யார்ட்ட தானிருக்கு? பொண்ணுக்குத் தானேயா செய்தீரு? அப்டி இப்டி இதயே முடியும். நம்ம சிவகாமியும் படிச்ச புள்ள. படிச்ச இடமா தான பாக்கணும்?

    ஆத்தா மனசு வெச்சா நடக்கட்டுமே. நீங்கள்ளாம் தான் நடத்தித் தரணும்.

    அதுக்கென்ன ஜமாய்ச்சிப் பிடுவோம்.

    மறுபடியும் ஒரு அசந்தர்ப்ப மௌனம்.

    கடைசியில் நாடார் தான் கேட்க நினைத்ததைக் கேட்டே விட்டார். மாப்ள வீட்டுக்காரங்க யாரானும் வராங்களா ரயில்ல?

    தேவர் ஒரு விநாடி தயங்கினார். பிறகு, இல்ல நாடார். நம்ம குற்றாலம் தோப்பைக் கொடுத்துடலாம்னு பாக்கேன். வாங்கறவரோடு தம்பி இடத்தை பாக்க வாராரு, அதான் … என்றார் பெருமூச்சுடன்.

    தோப்பைக் குடுக்கப் போறீங்களா? நல்ல வேலை செஞ்சீங்க …. என்ற நாடார் சற்றுத் தயங்கிவிட்டுக் கேட்டார். என்ன தேவர், வர்றவங்களுக்கு ஆரிய வனம் பத்திச் சொல்லிட்டீங்களா?

    தேவர் முகம் இருண்டது.

    2. புகைவண்டி

    மீனாக்ஷியின் ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து …

    ஆதிபர்வத்தில் உள்ளது கருட சரித்திரம். அதன் தொடர்ச்சியாக வருவது நாகராஜனான ஆதிசேஷனின் தவம். தவத்தில் மகிழ்ந்த பிரம்மா சேஷனைப் பலவாறு புகழ்ந்து அவனை இந்தப் பிரபஞ்சத்தைத் தன் தலையில் தாங்கச் சொல்லிப் பணிக்கிறார். நீயல்லவா தர்மதேவதை என்று பாராட்டுகிறார்.

    கவனிக்க - தாங்குவது எதுவோ அதுவே தர்மம் எனப்படுகிறது. தாரணாத் தர்ம: என்பது பாரதத்தில் கிருஷ்ணன் வாய்மொழி. இந்த ஆதிசேஷன் கதையில் தர்மம் தாங்குகிறது என்பது பரிபாலிக்கிறது என்ற அர்த்தத்தில் மட்டும் அல்ல, பௌதிகமாகவே தரணியைத் தாங்குகிற அந்தரம் – firmament – என்றே அர்த்தம் சொல்லப் படுகிறது.

    தர்மம் என்ற கோட்பாட்டிற்கு உருவமான தேவதையின் வடிவமேதான் காச்யபமுனி குமாரரான ஆதிசேஷன் என்று புதிதாய் ஒரு கருத்தை முன்வைக்கிறது மகாபாரதம்.

    பாரதமோ தர்ம காவியம். இதில் மங்களாரம்ப சுலோகத்தில் நரோத்தமன் என்ற சொல் ஆதிசேஷனைக் குறிப்பது பொருத்தம்தான் என்று எனக்கு இதனால்தான் தோன்றுகிறது.

    ***

    "பாடாவதி ட்ரெயின்! எப்பதான் போய்ச் சேருமோ?" என்று அலுத்துக் கொண்டான் அர்ஜுன்.

    இது என்ன, உபரிசர வசுவின் விமானமா? இண்டியன் ரயில்வே பாஸ். போறப்போ போகட்டுமே, என்ன அவசரம் இப்போ? என்று சிரித்தாள் மீனு.

    என்னாது உபரிசர வசுவா? யாரந்தக் கடங்காரன்? ஓ, மஹாபாரத ஆராய்ச்சி பண்றே இல்ல நீ? என்று கிண்டலாகச் சிரித்தான் அர்ஜுன்.

    ஏன் அதிலே என்ன கேவலம்? என்ன இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு தெரியுமா? என்றவாறு தன் பைலை எடுக்கப் போனவளை, இரு, இப்ப எடுக்காதே, ஸ்டேஷன் வந்துடும் என்று தடுத்தான் அர்ஜுன். அவளும் தன் பெரிய கைப்பையை மூடினாள்.

    என்ன கிளைமேட் பாத்தியா அர்ஜுன் என்று சிலாகித்துக் கொண்டாள்.

    அதைச் சொல்லு. பூலோக சுவர்க்கம்னா! நான் சீசனுக்கு வந்திருக்கேன் சில தடவை என்றான் உற்சாகமாய்.

    தாங்க்ஸ் டு அண்ணா. அவர் இங்கே ப்ராபர்டி வாங்கறதா டிஸைட் பண்ணினதாலதானே நமக்கு இந்த ட்ரிப் கிடைச்சது என்று பரவசமாய்ச் சொன்னாள் மீனா.

    அர்ஜுன் முகம் லேசாகச் சுருங்கியது. மீனு, உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன், யோசிச்சு பதில் சொல்லணும்.

    கேளேன்.

    அண்ணா பத்தி என்ன நினைக்கறே நீ?

    அவரப் பத்தி நினைக்க என்ன இருக்கு? அம்மா, அப்பாக்கு நல்ல பிள்ளை, நல்ல பிஸினஸ்மன், நல்ல பரோபகாரி ….

    ரைட்.

    சற்றுத் தயங்கிவிட்டுத் தொடர்ந்தான் அர்ஜுன். அவர் ரொம்பத் திடமனசு படைச்சவர், இல்லையா?

    ஆமாம், அதுக்கென்ன?

    இல்ல, உனக்கு எப்பவாவது அவர் கொஞ்சம் ஆபத்தானவர்னு தோன்றியிருக்கா?

    அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள் மீனு.

    என்ன சொல்றே நீ?

    இல்லே, அதாவது… தன் லட்சியத்துக்காக எதையும் செய்யக் கூடியவர்னு சொல்ல வரேன்.

    இங்க பாரு… அவர் சட்டத்தோட வழிகளை மீறித் தன் காரியங்களை நடத்தறார்னோ, மனசாட்சிக்கு விரோதமா வேலை செய்யறார்னோ சொன்னேன்னா…

    சே! நான் எப்போ சொன்னேன் அப்படி? என்று வேகமாக இடைமறித்தான் அர்ஜுன். அண்ணாவைவிட நேர்மையான பெர்ஸனை எங்கே போய்த் தேடறது? ஆனா அவரோடது நார்மல் பிகேவியரான்னு யோசிச்சுப் பாரு. அவர் ஒரு ஜோக் சொல்லி நான் கேட்டதில்லை. சூப்பர் ஃபிகர்டா" ன்னு ஒரு கமெண்ட் வந்ததில்லை!

    "சின்ன வயசிலே படிப்பு, படிப்பு, படிப்பு. இப்போ பிஸினஸ், பிஸினஸ், பிஸினஸ். தமிழ்நாட்டின் முதல் அம்பது பணக்காரங்கள்ள ஒருத்தரா ஆயாச்சு. இனிமே சித்த ரிலாக்ஸ் பண்ணலாமே. ஒரு பியர், சிகரெட் வேணாம்… ஒரு சினிமா? ஒரு சூட்? ஒரு ஐஃபோன்? புத்தகம் மட்டும் வாங்கறார்… அதையாவது படிக்கறாரான்னு தெரியல…

    மதுரை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சை, டெல்லி, கல்கத்தா, இதோ இப்ப குற்றாலம் … ஓய்ச்சல் ஒழிச்சல் இல்லாமே …. இவர் எதைத் தேடி ஓடறார்னு ஆச்சரியமா, கொஞ்சம் பயமா கூட இருக்கு. நான் சொல்றது உனக்குப் புரியறதா?

    புரியறது என்றாள் மீனா உஷ்ணமாய். உனக்கு அவர் மேல ஜெலஸி வந்துடுத்துன்னு புரியறது!

    சே என்றான் அர்ஜுன் மறுபடியும், கொஞ்சம் கோபமாய், கொஞ்சம் வெறுப்பாய்.

    பிறகு சமாதானப்படுத்தும் நோக்கில், சரி விடு. அண்ணா பத்தின பேச்சு இப்போ எதுக்கு? அவர் கல்கத்தாவில கம்பீரமா உக்காந்திருக்கார். நாம வந்த வேலையை முடிப்போம். நல்லா என்ஜாய் பண்ணுவோம். மலை, காடு, அருவின்னு பத்து நாள் சொர்க்கம். ஓகே? என்றான் சிரித்தவாறே.

    அவளும் கோபம் தணிந்து முறுவலித்தாள்.

    மலையும் காடும் அருவியும் எத்தனை ஆபத்துகளை உள்ளடக்கிக் கொண்டு அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்று அர்ஜுன் அப்போது உணரவில்லை.

    3. எழிலகம்

    மீனாக்ஷியின் ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து…

    சூரியன் மகனும் உயிர்களைப் பறிப்பவருமான யமன் என்ற தேவனும் தர்மதேவன் என்றே அழைக்கப் பட்டாலும், அது அவருக்கு ஒரு விருதுதானே தவிர பெயர் அல்ல. யமனும் தர்மதேவதையும் இரு வேறு தேவர்கள்.

    ‘தர்மம்’ என்பதைப் பற்றி நம் நாட்டுப் புராணங்களிலும் காவியங்களிலும் கொட்டிக் கிடந்தாலும் இந்த ‘தர்ம தேவதை’ என்ற வியக்தியைப் பற்றி விஷயம் குறைவாகவே இருக்கிறது. இணையத்தில் தேடிய போது, இவர் பிரம்ம தேவனின் குமாரர், தக்ஷப் பிரஜாபதியின் 13 பெண்களைத் திருமணம் செய்து கொண்டார், இவர்தான் ஒரு சாபத்தின் காரணமாக மஹாபாரதத்தில் விதுரராகத் தோன்றினார். பாண்டவர்களின் மூத்தவனான யுதிஷ்டிர மகராஜன் தர்மதேவதையின் மகனே என்ற தகவல்கள் தந்தது விக்கிபீடியா.

    கிருஷ்ண அர்ஜுனர்களின் முன்னோடியான நர-நாராயண ரிஷிகள் இந்தத் தர்மதேவதையின் மகன்களே என்பது அறியவேண்டிய விஷயம்.

    ***

    முக்கி முனகிக் கொண்டு பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தது பொதிகை எக்ஸ்பிரஸ்.

    அலுத்துச் சலித்துப் போயிருந்தார் இராசபாண்டித் தேவர்.

    படாதபாடுபட்டு நாடாரிடமிருந்து தப்பித்தவர், மெலிதான விடுதலைப் பெருமூச்சுடன் இரயிலில் இருந்து இறங்கும் பிரயாணிகளை நோக்கினார்.

    அவர் கண்கள் அர்ஜுன் மேல் விழுந்த போது, அவனும் அவரைக் கண்டுபிடித்து அருகில் வரத் தொடங்கியிருந்தான்.

    அர்ஜுன்ங்கறது … என்று அவர் இழுத்த அதே நேரம் அவனும் ராஜபாண்டித் தேவர் ஸாரா? என்றான்.

    இருவரும் சிரித்தார்கள்.

    வணக்கம் தம்பி என்றார் தேவர்.

    நமஸ்தே.

    தேவர் அவனைப் பார்வையால் அளந்தார்.

    ஆறடிக்கும் மேலே உயரம். மாநிறம் தான், ஆனால் இளமையின் அபார கம்பீரம். குறுகுறுப்பான கண்களோ, தீர்க்கமான மூக்கோ, தன்னம்பிக்கை ததும்பும் நடையோ, ஏதோ ஒன்று அவனை மீண்டும் பார்க்க வைத்தது. ஜீன்ஸ், வட்டக் கழுத்து டீ-சர்ட், வாயில் அதக்கிய பபுள்கம், முதுகில் ஏறியிருந்த பேக்பேக், கையோடு ஒட்டிக் கொண்டிருந்த ஸ்மார்ட்போன் எல்லாம் நகர்ப்புற நாகரீகத்தைப் பிரகடனம் செய்தன.

    அண்ணன் சௌக்கியமா தம்பி? என்று கேட்டார் தேவர்.

    ஓ ஃபைன். அவசரமா கொல்கத்தா போற வேலை. அதனாலேதான் அவர் பர்ஸனலா வரலை. இடத்தைப் பார்க்க என்னையும் சிஸ்டரையும் அனுப்பியிருக்கார் என்று அர்ஜுன் சொல்லியபோதுதான் அவன் பின்னால் வந்த அந்த இலவச இணைப்பைப் பார்த்தார் தேவர்.

    மதுரைப் பொண்ணு… எப்டி வடக்கத்திக்காரப் பொண்ணாட்டமா இருக்கா என்று இரண்டு பெண்ணைப் பெற்ற தேவரையே வியக்க வைத்த பளீர் நிறத் தேவதை அவள். பெண்ணுக்கு அதிகமான உயரம், ஒல்லியான உருவம். அதனால் அவள் அணிந்திருந்த முக்கால் பேண்ட் கண்களை உறுத்தவில்லை. கருவண்டுக் கண்களில் இப்போதுவரை கொஞ்சம் அலட்சியம் தெரிந்ததை சட்டென்று மாற்றிக் கொண்டு தேவரைப் பார்த்துக் கைகூப்பினாள் அவள்.

    பதிலுக்குக் கைகூப்பி வாம்மா, உன் பேர் என்ன? என்றார் தேவர்.

    மீனாக்ஷி என்று அர்ஜுனே பதிலளித்தான்.

    ஆமாங்க ஐயா என்றாள் மீனா. தேவர் பார்க்காத போது அர்ஜுனை நோக்கி வலித்துக் காட்டினாள்.

    தேவர் மத்ததெல்லாம் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். டேய் தருமா என்று கூப்பிட்டார். பொலிகாளையைப் போல வந்து நின்றவனிடம் சாமானையெல்லாம் பாத்து தூக்கிக்க. வாங்க தம்பி என்று முன்னால் நடந்தார்.

    ***

    தென்காசியில் தேவரின் வீடு அப்படி ஒன்றும் பழமையானதாக இல்லை.

    மூன்று நான்கு சிறிய தெருக்கள் வந்து சேரும் இடத்தில் சற்றுப் பெரிய வெளி ஒன்று. அங்கே ஒரு முருகன் கோவிலும் இருந்தது. அருகிலேயே தேவரின் வீடு. பெரிய வீடு தான். எழிலகம் என்று முன்சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது.

    உள்ளே பூராவும் மொசைக் போடப்பட்டிருந்தது. சகல வசதிகளும்

    Enjoying the preview?
    Page 1 of 1