Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennil Sai; Ellam Sai!
Ennil Sai; Ellam Sai!
Ennil Sai; Ellam Sai!
Ebook102 pages38 minutes

Ennil Sai; Ellam Sai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது முதுமொழி.

என்னிரு கண்களும் அவற்றின் ஒரே பார்வையும் பார்க்கப்படும் பொருட்களும் பார்க்க வைக்கும் இறைசக்தியும் பார்க்கின்ற ஆத்மாவும் என் ஸாயி.

ஸ்ரீ ஸாயி வரலாறு, ஸ்ரீ ஸாயி அற்புதங்கள், ஸ்ரீ ஸாயி பக்தர்கள், ஸ்ரீ ஸாயி உபதேசங்கள் ஆகியவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்பது வரை வரிசைப்படுத்தி அதன்மூலம் ஸ்ரீ ஸாயி தத்துவத்தை சுருங்கக் கூற முயன்றிருக்கிறேன். ஸ்ரீ ஸாயி ஸரணம்,

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580111409142
Ennil Sai; Ellam Sai!

Read more from Sairenu Shankar

Related to Ennil Sai; Ellam Sai!

Related ebooks

Related categories

Reviews for Ennil Sai; Ellam Sai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennil Sai; Ellam Sai! - Sairenu Shankar

    http://www.pustaka.co.in

    எண்ணில் ஸாயி; எல்லாம் ஸாயி!

    Ennil Sai; Ellam Sai!

    Author :

    சாய்ரேணு சங்கர்

    Sairenu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    1. நமஸ்காரங்கள்

    2. இரு சகோதரிகள்!

    3. மூன்று வாடாக்கள் – மூன்று பக்தர்கள்

    4. நான்கு கேள்விகள்

    5. ஐந்து பாவங்கள்; ஐந்து யக்ஞங்கள்

    6. ஆறு தீய குணங்கள்

    7. ஸப்தாஹக் கிரமம்

    8. எட்டும் வழிகள் எட்டு

    9. நவவித பக்தி

    முகவுரை

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது முதுமொழி.

    என்னிரு கண்களும் அவற்றின் ஒரே பார்வையும் பார்க்கப்படும் பொருட்களும் பார்க்க வைக்கும் இறைசக்தியும் பார்க்கின்ற ஆத்மாவும் என் ஸாயி.

    எண்ணத் தூண்டினான்; எழுதத் தூண்டினான்; இன்று எண்ணைப் பற்றி எண்ணவும் எழுதவும் தூண்டியிருக்கிறான்.

    ஸ்ரீ ஸாயி வரலாறு, ஸ்ரீ ஸாயி அற்புதங்கள், ஸ்ரீ ஸாயி பக்தர்கள், ஸ்ரீ ஸாயி உபதேசங்கள் ஆகியவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்பது வரை வரிசைப்படுத்தி அதன்மூலம் ஸ்ரீ ஸாயி தத்துவத்தை சுருங்கக் கூற முயன்றிருக்கிறேன்.

    ஸ்ரீ ஸாயிநாதரைக் குறித்துப் பல புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும் அனைத்திற்கும் ஆதியானதும் அடிப்படையானதும் ஸ்ரீ ஹேமாட்பந்த் இயற்றிய தெய்வீக நூலான ஸ்ரீ ஸாயி ஸத்சரித்திரமேயாதலால் அந்நூலைச் சார்ந்ததே அடியேன் கருத்துகள்.

    ஸாயிநாதனின் பெருமைகளை ஒன்பது அத்தியாயங்களில் அடக்குவது என்பது, அகில உலகையும் ஒன்பது அடிகளால் பிரதக்ஷிணம் செய்வதற்கு ஒப்பாகும். அடியேனால் இம்மாபெரும் செயல் செய்வதற்கு இயலுமா என்று திகைத்து நிற்கிறேன்.

    ஆனைமுகனைத் துதிக்கிறேன். ஆனைபலம் வருகிறது. ஜகத்குருவான ஸ்ரீ கிருஷ்ணன் அருகில் வந்து நின்று கொண்டு, ஞானியர் எல்லோரும் என் வடிவமே. எழுது, என் வடிவான ஸாயியை எழுது என்று ஆக்ஞையிடுகிறான்.

    எழுதுபவரின் உட்புகுந்து என் கதையை நானே எழுதுகிறேன். எழுத்தாளர் வெறும் கருவி மாத்திரமே. இக்கதைகள் பக்தியைப் பெருக்கி, அஞ்ஞானத்தை அழிக்கும். ஜீவனும் சிவனும் ஓர் ச்ருதியாக இசையும் என்று ஸ்ரீ ஸாயிநாதன் உறுதியளிக்கிறார்.

    என்னைத் தடுத்தாட்கொண்ட என் குருவும் தெய்வமுமான என் ஸாயிநாதனின் திருவடிக்குச் சூட்டும் இச்சிறு மலர் ஸாயி சொந்தங்களின் கரங்களுக்குப் பிரசாதமாகச் சென்று சேர்ந்து எண்ணவியலாத அவன் கருணையையும் அருளையும் ஞானத்தையும் அள்ளி வழங்கட்டும் என்று மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

    ஸ்ரீ ஸாயி சரணம்.

    ‘ஸப்கா மாலிக் ஏக்!’

    ஸத்குரு என்பார் யார்?

    தம்மிடம் வரும் சீடனை உத்தாரணம் செய்பவர் குரு. சீடனைத் தேடிச் சென்று அவன் துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பவர் ஸத்குரு.

    உபதேசத்தால் ஞானமளிப்பவர் குரு. உத்தேசத்தால், நயனத்தால், லீலைகளால் ஞானம் பிறப்பிப்பவர் ஸத்குரு.

    வாழ்க்கைப் பாடமளிப்பவர் ஆசிரியர். மோக்ஷப் பாடம் விளக்குபவர் குரு. வாழ்க்கையையே மோக்ஷமாக மாற்றுபவர் ஸத்குரு.

    தெய்வத்தைக் காட்டுபவர் குரு. தெய்வமாகவே உன்னைக் காட்டுபவர் ஸத்குரு.

    ஆதியந்தமற்ற பிரம்மத்தின் கருணைமிகு அவதாரமே ஸத்குரு. அத்தகைய அவதார புருஷர்கள் இப்புண்ணிய பாரதத்தில் இடைவிடாது தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவ்வவதார புருஷர்களுள் ஒருவரே ஸ்ரீ ஸாயிபாபா. உபநிஷத் கூறும் ஒப்புயர்வற்ற சமநீதியின் ஒளிவீசும் மணியாகப் பிரகாசிப்பவர். சாந்தியை ஆபரணமாகப் பூண்ட பூரண ஞானி.

    சிவஸ்வரூபர், வைணவ அடியார்களின் அடைக்கலம், ஸ்ரீ தத்தாத்தாரேய அவதாரர். அல்லா நாமமே இவர் முத்திரை. பக்த ரக்ஷணத்திற்காகவே பாரினில் அவதரித்த பாவனர். அன்பர்கள் எண்ணிய நேரம் ஓடிவந்து அருள்புரியும் பரமதயா மூர்த்தி.

    இந்தக் கலியுகவரதனின் கருணையலை வீச்சு நாளுக்கு நாள் அதிகமாகி உலகமெங்கும் விரிந்து பரந்து கொண்டே வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வாழ்வில் இந்தத் தயாமூர்த்தி நடத்தி வருகின்ற அற்புதங்களை உணர்கிறார்கள், உலகிற்கு உரக்க உரைத்தும் வருகிறார்கள்.

    இதிஹாஸ நாயகனான தர்மபுத்திரனைப் போன்று உலகமாளாவிய அன்பையே தன் பெருந்தர்மமாகக் கொண்டவர் (ஆந்ருஸம்ஸ்ய: பரோ தர்ம: பரமார்த்தாஸ்ச மே மதம் – பிரபஞ்சமளாவிய நேசமே மிகப்பெரும் தர்மம், மிகப்பெரும் செல்வம். இதுவே என் மதம் - என்று யக்ஷ ப்ரச்னத்தில் யுதிஷ்டிரன் பிரகடனம் செய்கிறான்). அதனாலேயே நம் சீரடி ஸாயிநாதர் மூன்று ஸாயி அவதாரங்களில் தர்மஸாயி என்றே வழங்கப்படும் பெருமகனார்.

    இந்த ஆந்ருஸம்ஸ்யம் அல்லது சமதர்மம் அல்லது பிரபஞ்சம் பரந்த அன்பு என்னும் கொள்கையின் அடிப்படை எது? நாமனைவரும் ஒரே இறையின் குழந்தைகள், ஒரே சக்தியின் அம்சபூதர்கள் என்பதேயாம்.

    கர்மவினைகளின்படி ஏற்படும் பிறவியில், வாழ்க்கை முறையில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், நம் மனோபாவத்திற்கேற்றவாறு இறைவன் பல்வேறு வடிவங்கள் கொண்டிருப்பினும், நம் முன்னோர் கடைப்பிடித்த நம் சம்பிரதாயங்களுக்கும் நம் சுபாவங்களுக்கும் ஏற்பப் பல்வேறு மதங்களும் பக்திமுறைகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பினும், இவைகளால் எந்த சக்தியின் அருளையும் அண்மையையும் நாம் அடைகின்றோமோ, அந்தச் சக்தி ஒன்றேதான். இப்பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் அந்த ஒரே சக்தி வியாபித்துள்ளதால் எத்தெய்வத்தை எண்ணி நாம் வழிபாடு செய்யினும் அந்த ஒரே சக்தியையே அவை அடைகின்றன.

    எல்லோருள்ளும் எங்கும் இருப்பது ஒரே பொருள் என்றால், எது எதன்மேல் கோபம் கொள்வது? எது எதனை வெறுத்து ஒதுக்குவது?

    Enjoying the preview?
    Page 1 of 1