Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swami Part - 1
Swami Part - 1
Swami Part - 1
Ebook934 pages7 hours

Swami Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலியுகம் முற்ற முற்ற அராஜகமும், பொய்யும், பித்தலாட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இந்நிலை மாறி, பண்பும் அறிவும் வளரச் சர்வ மதங்களுக்கும் ஆதாரமான வேத வழியில் தன்னா லியன்ற எல்லா வகையிலும் ஆன்மீகம் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு, இப்புவியில் தோன்றிய அவதார புருஷர்களின், வரலாறுகளையும் மஹிமை களையும் புத்தகங்களாக உங்கள் கையில்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580151507933
Swami Part - 1

Read more from Ra. Ganapati

Related to Swami Part - 1

Related ebooks

Reviews for Swami Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swami Part - 1 - Ra. Ganapati

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஸ்வாமி பாகம் 1

    Swami – Part 1

    Author:

    ரா. கணபதி

    Ra. Ganapati

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ra-ganapati

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அகவுரை

    சுருதியும் லயமும்

    ஆலவாயான ஆயர்பாடி

    சூரிய வம்ச சூரியன்; ரத்னாகர ரத்தினம்

    ஸத்ய நாராயணன்

    பிராம்மண பாலுடு

    யார் அந்தத் தாத்தா?

    மாணாக்க மாணிக்கம்

    கூறை சோறிவை தந்தெனக் கருளி

    அருளில் அரும்பிய குறும்பு

    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே?

    ஸத்யாவின் சபதம்

    சரணன் ஸத்ய நாரணன்

    செப்பினட்லு சேஸ்தாரா?

    இறகு முளைக்கிறது!

    சித்திரவதையிலும் சித்திரத் தாமரையாய்!

    அவதாரம் அலர்ந்தது!

    மல்லிகையில் மலர்ந்த மந்திரம்

    வேற்றுமையில் ஒற்றுமை

    பறந்ததே பட்சி!

    பால ஸாயி

    ஸத்ய ஸாயி பாபா

    நானிருக்க பயமேன்?

    கற்பகம் கற்பனையல்ல!

    கல்கிதானோ?

    பகைவனுக்கருள்வாய் ஸாய்!

    சென்னையம்பதியில் ஒரு ஷீர்டி - பர்த்தி

    ஷீர்டி - பர்த்தி ஸங்கமம்

    பாத மந்திரம்

    சீறிய பாம்பும், வீரியப் பீரும், பீறிய வெள்ளமும்

    பக்தவத்ஸலன்

    சுபம் எய்த சுப்பம்மா

    மரணஸ்மரணம் பிறவித்தரணம்

    ஸாயி அருளில் சாயும் துயரம்

    கடைத்தேறும் கடைப்பொழுது

    இம்மை, மறுமை இரண்டிலும் அம்மை!

    புலியாஸனமும் சிம்மாஸனமும்

    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!

    பிணி தீர்ப்பதும் பிறவி தீர்ப்பதும்

    ஆபத் பாந்தவன்

    கண்டனே, வெண்டனே, ஜண்டனே, இண்டனே

    களவிலும் கொலையிலும் அளவில் அருட்செயல்

    சித்தக் களத்திலும், யுத்தக் களத்திலும்

    மேலட்டை மேலோரத்திலுள்ள விநாயகர் புட்டபர்த்தியில் பிரசாந்தி மந்திரத்தில் வடக்கு வாயிலில் எழுந்தருளியிருப்பவர்.

    முகப்புப்பட முன்புறம் ஸ்வாமியின் கையெழுத்திலுள்ள தெலுங்கு வாசகம்

    அந்துகோண்டி ஆசீர்வாதமுலு

    (ஏற்றுக்கொள்ளுங்கள், ஆசீர்வாதங்களை!)

    ஸத்ய ஸாயி

    முகப்புப் படப் பின்புறம்: சென்னை மயிலை அகில இந்திய ஸாயி ஸமாஜத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஷீர்டி பாபா.

    என் கதையையும் உபதேசங்களையும் படிப்பது பக்தர்களின் இதயத்தில் விசுவாஸத்தை ஆழமாக்கி, அவர்களை எளிதே ஆத்மாநுபவமும் பேரானந்தமும் பெறவைக்கும்.

    - ஷீர்டி ஸாயி பாபா

    அகவுரை

    அன்பின் ஆனந்த நிறைவோடு. ஸ்ரீ ஸத்ய ஸாயி சரித கங்கையில் நீராட ஸாயி பக்தர்களை மங்கள தாம்பூலம் தந்து அழைக்கிறேன். சக்தி மயமாக ஆற்றலைக் காட்டும் லீலை அலைகள் வீசும் கங்கை. சிவ மயமாக அன்பின் குளிர்ச்சியைப் பொழியும் கங்கை. சக்திக்கும் சிவத்துக்கும் உள் இலங்கும் பாவன சாந்தத்தை நம்முள் இழையோட விடும் கங்கை. ஸாயி பக்தர்களே. வாருங்கள் நீராட!

    ஆம், இது ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவை அவதார புருஷராகக் கொண்ட பக்தர்களுக்கே ஆன நூல். அதனால்தான் பக்தர்கள் அவரை அழைக்கும் ஸ்வாமி என்ற பெயரையே இதற்கு மகுடமாக இட்டிருக்கிறது.

    ஸ்வாமியின் அவதாரத்வத்தை அலசும் அநேக விஷயங்கள், குறிப்பாக அவர் ஷீர்டி அவதாரத்தின் மறுபதிப்பு என விவரிக்கும் பல விஷயங்கள், ‘மிரகிள்’ ஆத்மிகத்துக்கு உகந்ததா என்ற ஆராய்ச்சி, ஸ்வாமியைப் பற்றிக் கூறப்படும் பல குற்றச்சாட்டுகளின் விசாரணை ஆகியன இந்நூலில் இருப்பது வாஸ்தவந்தான். ஆனால் இவையெல்லாம் மாற்றாரையோ. நடுநிலைமையாளரையோகூடக் ‘கன்வின்ஸ்’ செய்வதற்காக எழுதியதல்ல. உன் பக்தியை நீ கவனித்துச் செம்மை செய்து காத்துக் கொண்டாலே போதும். வேறெவருக்கோ என்னிடம் பக்தி இல்லையே என்று கவலைப்படுவதோ, கோபப்படுவதோ, அவர்களை என் பக்தராக்க முயல்வதோ உனக்கு வேண்டாத சிந்தனை உன்னால் இயலாத காரியம் என்பார் நம் ஸ்வாமி. முன்பு ஷீர்டியவதாரத்தில் சரிதை எழுத ஆசி கோரிய அன்னாஸாஹேப் தபோல்கரிடம், உனக்கு மெய்யாக உறுதிப்படுவதைக் கூடுதல், குறைதல் இல்லாமல் அந்தரங்க சுத்தத்தோடு எழுது. ஆனால் உன் கருத்துக்களையே மற்றோரிடம் நிலைநாட்ட வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாமல் எழுது. மற்றோரின் மாற்றுக் கருத்தை, நம்மால் தகர்க்க முடியும் என்றெண்ணி அத்திசையில் முயலாதே என்றார். இந்தக் கட்டளைக்குப் பூர்ணமாகக் கட்டுப்பட்டே எழுதியிருக்கிறேன்.

    ஆயினும் ஸத்ய ஸாயியிடம் பக்தியுள்ளவருக்கேயான நூலில் மேலே சொன்ன ஆராய்ச்சிகள் ஏன் இடம் பெற்றுள்ளன எனில், சில ஸாயி பக்தர்களுக்கே இவ்விஷயங்களில் தெளிவு தேவைப்படுகிறது. பலவிதமான பிரசாரங்களைக் கேட்டு இவர்களுக்கும் கலக்கம் உண்டாகிறது. மெய்யான விளக்கம் ஸ்வாநுபூதியாலேயே கிடைக்கும். அந்தச் சொந்த அநுபவத்தை ஸ்வாமிதான் தர முடியும். ஆனாலும் அறிவாராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஆழம் பொருந்திய பேராழியான அவரே ஓரளவுக்கு நம் சிற்றறிவாலும் விளக்கம் தர வைத்து லீலை செய்கிறார். இப்படி, குழம்பிய பக்தர்களைச் சிற்றறிவின் அற்பவிளக்கத்தாலும் தெளிவுபடுத்த முடிவதை நடைமுறையில் பார்க்கிறேன். எனவேதான் வேறு பல அடியாருக்கும் இது பயன்படலாம் என்று, ஆங்காங்கே சரிதைத் தேரின் பவனியை நிறுத்தி ஆராய்ச்சி விளக்க ‘மண்டகப்படி’கள் நடத்தியிருக்கிறேன். என் முடிவுகளில் சில தவறாகவும் இருக்க ஹேதுவுண்டு. ஸாயீச்வரீ, க்ஷமாகரோ மா! என்று மன்னிப்புக் கோருகிறேன். என்னைவிட ஸ்வாமியிடம் பூர்ண சரணாகதர்களாக உள்ள மெய்யடியார்கள் இம் முடிவுகளை ஒப்பாதிருக்க நியாயமுண்டு என உணர்கிறேன். ஆயினும் ஆசிரியன் இன்றுள்ள நிலையில் அவனது அறிவின் ஸத்தியத்தை (intellectual honesty) அங்கீகரித்தே ஸ்வாமி இவற்றை எழுத வைத்திருப்பதாகத் திருப்தி கொள்கிறேன். என்னைவிட ஸாயிபக்தியில் பின் நிற்போருக்குத் தெளிவு தர இவ்விளக்கங்கள் உதவலாமென்பதே என் நம்பிக்கை.

    ஸாயி வட்டத்துக்குள் வந்தும் அவ்வப்போது கலங்கி நிற்போருக்கு என் கோரிக்கை: எல்லா ஜயங்களுக்கும் புத்தி பூர்வமான விடை இராது என்பதை உணருங்கள்! பக்தி பூர்வமாக நீங்கள் ஸ்வாமியிடம் பிரத்தியக்ஷத்தில் உணர்ந்துள்ள தெய்வத்தன்மையில் உறுதி தளர இடம் தராதீர்கள்! அவரே சொல்வதுபோல், பெண்டுலம்போல் ஐயத்துக்கும் தெளிவுக்குமாக ஊசலாடாமல் உறுதிப்பாட்டோடு இருங்கள்.

    அபிராமி பட்டரின் நினைவு வருகிறது. சாக்த சமயத்தைப் பல படித்தாக ஏளனம் செய்த எதிர்ப்பாளரிடமும் அவர் அன்போடு ஆனந்தமாகப் பாடினார்:

    விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி, மெய் புளகம்

    அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி, அறிவிழந்து

    சுரும்பிற் களித்து மொழிதடுமாறி, முன் சொன்னவெல்லாம்

    தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே!

    ஓரளவு சரணாகதி செய்ய முயன்றாலும் போதும் பட்டர் சொன்னாற்போல், ஸ்வாமி நமக்கு ஆனந்த பாஷ்பத்தையும், புளகாங்கிதத்தையும், ஜீவ-சிவ ஐக்கிய ஸ்தானத்திலிருந்து பொழியும் இன்பத் தேனைச் சுவைத்துப் பெறும் போதையையும் எப்போதேனும் ஒரு போதாவது நிச்சயம் அருள்கிறார். சிறுபோதாயினும் அதுவே ஒரு யுகத்தின் சுக நிறைவைத் தரும். இத்தகைய திவ்ய போதையில் நம்மைப் பித்தராக்கும் ஸாயி சமயம் நன்றே என்று சபதம் செய்யலாம்.

    திவ்வியானுபவம் (தாற்காலிகமாகக்கூட) வாய்க்காவிடினும் பரவாயில்லை. அன்றாட வாழ்விலேயே நாம் ஸ்வாமியிடம் பெற்றுள்ள ரக்ஷணையைவிடப் பெரிதாக வேறெந்த தெய்வத்தை வழிபடுபவர்தாம் பெற்று விட்டார்கள்? (இருப்பது ஒரே தெய்வம் எனினும், இஷ்ட தெய்வ வழிபாடு என்ற கொள்கைப்படி ஸ்ரீ ஸத்ய ஸாயியை தெய்வமாகக் கொண்டோரில் சற்று ஐயமுற்றவருக்காக இது எழுதப்படுவதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.) துயர் களைவதில், இடர் தீர்ப்பதில், நோயை நலிவிப்பதில், விபத்தை விலக்குவதில், ஆயுர் ஆரோக்ய ஐச்வரியங்களைத் தருவதில் நம் ஸ்வாமிக்கு அதிகமாக எவரது இஷ்ட தெய்வந்தான் செய்துள்ளது? கண்ணை இமை போல் நம்மில் லக்ஷம் லக்ஷம் பேரைக் கட்டிக் காக்கும் ‘கிருபாநிதி இவரைப் போலக் கிடைக்குமோ?’ ஸ்வாமியை ஆசிரயித்ததிலிருந்து நம்மில் அநேகருக்கு.

    கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள் முதலாய்

    எண்ணம், விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்

    செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,

    கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,

    தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்

    ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!

    என்ற கவி வாக்கு பிரத்தியக்ஷ சத்தியமாகியிருப்பதால், இவ்வட்டத்துள் வந்தோரிடம் ‘பக்தியில் தளராதீர்’ என்று கேட்டுக் கொள்கிறேன். அவருக்குக் கூட்டம் குறையக் கூடாதென்று சொல்லவில்லை. கிடைக்கத்தகாத பரம நல்ல வஸ்துவைப் பற்றி பக்தர்கள் குழம்பக் கூடாதே என்றுதான் சொல்கிறேன்.

    பல பக்தர்களின் உறுதியின்மைக்கு ஒரு காரணம், இன்று மஹான்களாகவுள்ள இன்னார். இன்னார் நமது ஸ்வாமியை அவதாரமாகச் சொல்லவில்லையே என்பதாகும்.

    இது பற்றி நூலின் இரண்டாம் பகுதியில் அவதாரம் அல்லவோ? என்ற அத்தியாயக் கடைப்பகுதிகளில் எனக்குத் தெரிந்த அளவில் விளக்கம் தந்திருக்கிறேன். அதாவது பல்வகை மாந்தரில் ஒவ்வொரு வகையினரை இயல்பாக ஈர்த்து உய்நெறி காட்டுமாறே பல்வேறு மஹனீயர் தோன்றுவதுண்டு. இவர்களிலொருவர் இன்னொருவரை அவதாரமாகக் கூறினால், இவரிடமே ஈர்ப்புக் கொள்ளக்கூடிய தனியியல்பினரும் இவர் கூறும் அவதாரரை ஆசிரயிக்க எண்ணலாம். ஆயினும் இவ்வியல்பினர்களுக்கு அந்த அவதாரரிடம் மனம் நிறைவு காணாமற்போக இடமுண்டு. தங்களை முன்பு ஈர்த்தவரிடமே பூரணமாகத் திரும்பவும் இப்போது முழு மனசு வராமல் இவர்கள் திரிசங்குவாகத் திண்டாட நேர்வது சகஜமே. எனவே ஒவ்வொரு மஹா புருஷரும் தம்மிடமே ஈர்ப்புப் பெறக் கூடியவர்களைக் கலக்கமுறச் செய்யக்கூடாது என்பதை முன்னிட்டே தங்களில் இன்னொருவரின் பெருமையை எடுத்துச் சொல்லாதிருக்க. நியாயமும் அவசியமும் இருக்கிறது. இன்னொன்று: நம் ஸ்வாமியைப் பகுத்தறிவுவாதிகளும், ஸயன்ஸ் பார்வையாளரும்தான் சோதிக்க முடியாது என்றில்லை, ஏனைய மஹா புருஷர்களுங்கூட அவரை ஆழங்காண முடியுமென்று சொல்வதற்கில்லை. ஏனெனில், அவர் ஜடமான சோதனைப் பொருளல்ல. மாபெரும் அதிமானஸ ஆற்றல் படைத்த சைதன்ய மூர்த்தி அவர். எனவே அவரும் சோதனைக்கு உட்பட மனங்கொண்டாலன்றி, தனிப்பட்ட முறையில் (objectiveஆக) அவரை வேறு மஹாபுருஷர்களாலும் எடை போட முடியாது. மேலும் ஒன்று: எந்த மஹா புருஷரானாலும் அநேகமாக அவருக்கும் ஒரு கொள்கைச் சார்பு அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனால் அவர்கள் முற்றிலும் திறந்த மனத்துடன் ஸ்வாமியைப் பற்றிச் சொல்வதற்கில்லை. இந்நிலையில் அவர்களது முடிவுக்கு ஏன் நம் முடிவை விட வேண்டும்?

    நமது நடைமுறையுலகில் தத்தமக்கென்றே அடியார் கோஷ்டிகளைக் கொண்ட மஹான்களின் சான்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், இமாலயத்தில் சஞ்சரிக்கும் பல மஹான்களும், ஸாதகோத்தமர்களும் நமது ஸ்வாமியை அவதார புருஷராகப் போற்றுவதை அண்மையில் (1989) வெளிவந்துள்ள ஒரு சிறு நூலிலிருந்து அறிகிறோம். ஸ்வாமி விஷயம் எதுவுமே அற்புதமெனில் மஹேச்வராநந்தர் என்ற ஸாது எழுதியுள்ள SAI BABA AND NARA NARAYANA GUHA ASHRAM என்ற இந்நூலில் காணும் விஷயங்களோ பரமாற்புதமாயுள்ளன! நம் ஸ்வாமியை சாக்ஷாத் ஸ்வாமியாகவே கொண்டு அவர் பணித்தவாறு 1984லிருந்து ஹிமாலயத்தில் பதரிக்கு வடமேற்கே 18000 அடி உயரத்தில் நரநாராயண குகையில் தீவிரத் தவம் புரிந்து வரும் பதினோரு முமுக்ஷீக்களை அவர் எப்படிப் பரம அற்புதமாகக் கட்டிக் காத்து வருகிறாரென்று இந்நூலிலிருந்து அறிந்து வியக்கிறோம். நம் ஸ்வாமி நூலின் 23ம் அத்தியாயத்தில் அவர் நிர்மாநுஷ்ய அடவியில் யோக க்ஷேமம் வகிப்பதற்கு உதாரணம் ஏதேனும் உண்டா என்று தேடிவிட்டு அப்படியொன்றினைக் கொடுத்திருக்கிறோம். அதனினும் வெகு சிறப்பாக மேற்சொன்ன பதினோரு தபஸ்வியருக்கு ஸ்வாமி ஆண்டாண்டுகளாகத் தினந்தோறும் மெய்யாலுமே அக்ஷய பாத்திரத்தின் மூலம் அன்னபானங்கள் வழங்கியும், அவர்களது ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்தும், அவ்வப்போது தாமே அங்கு பிரஸன்னமாகி உபதேசித்தும் யோக க்ஷேமம் பாலிப்பதை இச்சிறு நூல் தெரிவிக்கிறது. இவர்களில் இருவர் நூறு வயது கடந்தவர்களும், காசியின் துறவி வட்டங்களில் பெயரெடுத்தவர்களுமான ஸ்வாமி வாமதேவ மஹராஜும், ஸ்வாமி விரஜாநந்த மஹராஜும் ஆவர். இச்சாதக சிரேஷ்டர்களுக்கு ஸத்ஸங்கம் தருவதற்காக வயது சொல்லி முடியாத மஹாஞானிகளும் யோக ஸித்தர்களும் நரநாராயண குகைக்கு வருகின்றனராம். அம்மஹான்களும் நம் கதாநாதரை ஈச்வராவதாரமாக மதித்துச் சொல்வதை நூல் கூறுகிறது. இவர்களில் ஒருவர் யோக சக்தியின் உச்ச ஸ்தானம் என்றே கொள்ளத் தக்கவரும், பூஜ்ய ஸ்ரீ பரமஹம்ஸ யோகாநந்தர் மறுமலர்ச்சி தந்துள்ள கிரியா யோகத்தின் மூல மஹாகுருவுமான மஹாவதார பாபாஜியே ஆவார். அவர் ஷீர்டி ஸாயி, ஸ்ரீ ஸத்யஸாயி, இனி வரவிருக்கும் பிரேம ஸாயி ஆகிய மூவரும் சிவ பெருமானின் திரு அவதாரங்கள் என்று மொழிந்ததாகக் காண்கிறோம்.

    இதெல்லாம் ஒருபுறமிருக்க நமக்கு இறுதி ‘டெஸ்ட்’ நம் நெஞ்சின் நிறைவுதான். இவ்விஷயத்தில் நூலாசிரியன் தன்னுள் அவர் திறந்து விட்டிருக்கும் பிரேமப் பிரவாகத்தை உணர்ந்து, ‘கல் நார் உரித்த என் மன்னா’ என்று அருணகிரி பாடியதற்கு மேல், ‘கல் நீர் உருக்கிய என் மன்னா’ என்று பாடுகிறான். இவன் பூர்ணத்வத்துக்கு மிகவும் அப்பாலேதான் இன்னமும் இருக்கிறான் எனினும், அவரது அருளில் எத்தனை புன்மைகள் நலியப்பெற்று வருகிறான் என்பதற்குப் பெரிய பட்டியலே கொடுக்க வேண்டியிருக்கும். எத்தனை சிரத்தையுடன், பொறுமையுடன், பரிசுத்தப் பிரேமையுடன் ஸ்வாமி இதைச் செய்து வருகிறார்? அவரைக் குறித்துப் படுபாதகமான ஐயங்களை இவன் கொண்டிருந்த காலங்களிலுங்கூட அவர் இவனது இகவாழ்வு, அகவாழ்வு இரண்டிலும் அளப்பரும் அருள் புரிந்திருக்கிறார். இதுபோல் ஆயிரக்கணக்கானவரை உய்வித்து வருகிற மஹாசக்திமானை, பரம காருண்யனை தெய்வமாகக் கொள்வதற்கு வேறென்ன ‘டெஸ்ட்’ வேண்டிக்கிடக்கிறது?

    பிற சான்று ஏதுமே தேவைப்படாத பாபா - ஆனந்தத்தின் முழுமையை விரைவே அனுபவிக்க பக்தர்கள் ஒன்று செய்ய வேண்டும். அதாவது, ‘நம் விருப்பங்களை அவர் ஈடேற்றிக் கொடுக்க வேண்டும்’ என்றே பக்தி புரிவதைவிட்டு, அவருக்காகவே அவரிடம் பக்தி செய்ய முயல வேண்டும். இதிலே பெறும் ஆன்மிக ஆனந்தத்தை நமது எந்த விருப்பப் பூர்த்தியும் உண்டாக்காது. அவர் ‘செல்வம், இள மாண்பு. சீர், சிறப்பு. நற்கீர்த்தி’ எல்லாம் தருவது உண்மையே. ஆனாலும் நம் கர்மா மிக வலித்தாக இருப்பின், தர்ம மூர்த்தியான அவர் இவற்றைத் தந்தேயாக வேண்டும் என்று தாபப்பட்டுப் பயனிராது. மற்ற தெய்வ மூர்த்தங்களையோ, மஹாபுருஷர்களையோ வழிபடுகிறவர்களுக்கு மட்டும் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறி விடுகின்றனவா என்ன? கர்ம நியதி என்ற மஹாதர்மம் உள்ளளவும் இது சாத்தியமே அல்ல.

    "தர்ம மூர்த்தி என்பதால் அடியார்களுக்கு இன்னொன்றும் சொல்ல வேண்டும். தமக்கு பஜனையும் பூஜனையும் புரிந்தால் மட்டும் பக்தராகிவிட முடியாது. தர்மசாலிகளாக வாழ்பவரே தமது மெய்யடியார்கள் என்று ஸ்வாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார். எனவே, ஸாயி பக்தர்கள் நல்லற நல்லொழுக்கங்களை, நிறைந்த அன்பை, ஜீவ தயையை, பரோபகார சேவையை ஆன்ம சாதனைகளோடுகூட விசேஷமாகக் கைக்கொள்ள வேண்டும். இதைக் கருத்திற்கொண்டே இவ்விஷயங்கள் குறித்த ஸ்வாமியின் ஏராளமான உபதேச ரத்தினங்களை இச் சரித ரதத்தில், குறிப்பாக இரண்டாம் பகுதியில் இழைத்திருக்கிறது. இந்நூலில் சம்பவங்களுக்குள்ள அதே முக்கியத்வம் அருள்வாக்குகளுக்கும் உண்டு.

    ஆன்ம நலனைக் கருதாத மற்ற வேண்டுதல்களை முக்கியமாகக் கொள்வது சரியல்ல என்னும்போது நம் ஸ்வாமி விஷயமாகக் குறிப்பாக ஒன்று கூற வேண்டும். அநேக பக்தர்கள் தம் பொருட்டு ஸ்வாமி ஏதேனும் மிரகிள் விநோதம் புரிய வேண்டுமென ஓயாமல் ஏங்குகிறார்கள். பகுத்தறிவால் பகுக்க வொண்ணாத திவ்ய சக்தி உள்ளது என்று சாக்ஷியம் காட்டவும். தமது அன்புக்கு ஸ்தூல அடையாளமாகவுமே ஸ்வாமி மிரகிள் என்று சொல்லப்படும் விந்தைகளைச் செய்கிறார். அவருக்கு அதீத ஆற்றல் உண்டு என்று நாம் கண்டு கொண்டு. அவரிடம் அன்பில் ஊறத் தொடங்குமளவுக்குத்தான் மிரகிள் நமக்கு விசேஷப் பலன் தருகிறது. அதன் பின் படத்தில் விபூதி வருவதாலோ, தேன் துளிப்பதாலோ, புஷ்பஹாரம் சுற்றுவதாலோ நமக்குச் சிறப்பான ஆன்மாபிவிருத்தி ஏற்பட்டு விடுவதில்லை. எனவே இவற்றுக்காகத் தவிப்பதைவிட நம் சித்த சுத்திக்காக வேண்டினால் சிலாக்யமாக இருக்கும். மிரகிளாலேயே ஸ்வாமி பிரக்யாதி பெற்றிருந்தாலும் அவரோ இதற்கு அடியார் மிகையான முக்யத்வம் அளிக்கக் கூடாது என்கிறார். மிரகிள் எனப்படுபவை என் விஸிட்டிங் கார்டுகளே. உங்கள் வாசலில் வந்து அதைக் காட்டியவுடன் உள்ளே அழைத்துக் கொள்கிறீர்கள், பழகுகிறீர்கள். அதன்பின் விஸிட்டிங் கார்ட் எதற்கு என்கிறார். பிறருக்காக அவர் புரியும் மிரகிள்களைப் பற்றிப் படித்து, கேட்டு அறியும்போதே திவ்ய சக்தியையும், லீலா விநோதத்தையும் உணர்ந்து உவகை உறுகிறோமே, அதுவே போதும். ஸாயி ஸமுத்திரத்தின் மேல் மட்டத்தில் ஓடும் வண்ண வண்ண மிரகிள் மீன்கள் பார்க்கப் பார்க்க அழகாக இருப்பினும், நம் லக்ஷியம் கடலடியில் கொழிக்கும் ஞான-ப்ரேம முத்துக்களே என்பதை மறக்கலாகாது. இச்சரித ஸமுத்திரத்துக்கும் இதுவே பொருந்தும்.

    முதலில் சரித கங்கை என்றேன். இங்கு சரித ஸமுத்திரம் என்கிறேன். பரம புனிதத்வத்தைக் கருதி கங்கை என்றேன். விஸ்தார வீச்சையும், ஆழத்தையும் கருதினாலோ அது ஆயிரம் கங்கைகளை விழுங்கும் மஹாஸமுத்திரமாகும். இன்று இரு பகுதிகளாக வரும் இப் பெரிய நூலும் அந்த மா கடலின் சில பல அலைகளே. கரை காண வொண்ணாத ஸத்ய ஸாயிப் பிரவாகத்தில், பிரபாவத்தில், பிரதாபத்தில், பிரகாசத்தில் இவ்வாயிரம் பக்கமும் ஹைஸ்ராம்சமே! எனினும் அவரது பிரேமையாம் பிரஸாதத்திலும் அதன் பயனான பிரமோதத்திலும் பிரபோதத்திலும் பிரசாந்தத்திலும் பக்தரை முழுக்க இதுவே போதுமென, என்னளவில் மொள்ளக்கூடியதைப் பூர்ண கும்பமாகத் தந்திருக்கிறேன். கண்ணன் தன் மகிமை தெற்றெனத் தெரியும் விஷயங்களுக்கு விரிவான பட்டியல் தந்து, முடிவில்

    ந அந்தோஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் பரந்தப

    ஏஷது உத்தேசத: ப்ரோக்தோ விபூதேர் விஸ்தரோ மயா

    என் திவ்ய மகிமைகளுக்கு முடிவே இல்லை. இங்கே சொன்னதெல்லாம் அவை எவ்வளவு விஸ்தாரமானவை என்று குறிப்பால் உணர்த்தத்தான் என்றான். அது போல நம் ஸ்வாமி மகிமையைக் குறிப்பாலுணர்த்தும் சங்கேதம்தான் இந்தப் பெரிய நூலும். அன்றன்றும் அவர் புரியும் அனந்த அருள் லீலைகளை எவரே அறிவர்? தாம் அருள் புரியும் சிலருக்கே அருளை மட்டும் காட்டி, அதைப் புரிவது ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா என்ற வடிவம் கொண்டவர் எனக் காட்டாத அதிசயத் தியாகி ஆயிற்றே நம் காவிய பதி! எனவே உலகுக்குத் தெரிந்த லீலைகளைப்போலத் தெரியா லீலைகளும் அநேகம் இருக்கும். லீலைகளை அவராக வெளியிடுவது வெகு வெகு வெகு அபூர்வமே. லீலைகளுக்குப் பாத்திரமானோரில் அதை அறிந்துங்கூடப் பல பேர் வெளியிடுவதில்லை. இப்படியெல்லாமிருந்தும் இதைப்போலப் பலப்பல நூல்கள் எழுதுமளவுக்குச் சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து தேர்ந் தெடுத்த பொறுக்குமணிகளே இப்புத்தகத்தில் ஒளிர்வன.

    ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை?

    ஆர் அறிவார் இந்த அகலமும் நிகளமும்?

    பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்

    வேர் அறியாமை விளம்புகின்றேனே!

    (திருமூலர்)

    ஸ்வாமியின் வேரை உள் மூலமான பரம ஸத்தியத்தை எவருமே அறிய முடியாதுதான். அவரருளால் அவ்வேரோடு வேறாக இன்றி, அநுபவிக்க முடியலாம். அப்போதுங்கூட அதை அறியவோ. உரைக்கவோ முடியாது. ஆனால், வேரிலிருந்தெழுந்த மஹா விருக்ஷம் கப்பும் கிளையுமாக விரிந்து பரந்து, வேரைப் போலன்றி நம் கண்ணுக்குத் தெரிந்து, நாம் பறித்துண்ணக் கூடிய பழங்களைத் தருகிறது. ஸாயி மஹா விருக்ஷத்துடைய பலனாகக் கனிந்துள்ள கருணை லீலைக் கனிகளில் நம் இதயப் பசி தீரப் போதுமான சில கூடைகள் பறித்துத் தந்திருக்கிறேன்.

    இந்நூல் முதற்பதிப்புக்காக உருப்பெற்ற 1976-க்குப் பிற்பாடு மகா விருக்ஷம் மகா மகா விருக்ஷமாகிக் கப்பல் கப்பலாகக் கனிகளைத் தந்திருக்கிறது. இவற்றிலிருந்தும் தேர்வு செய்து நூலை நிகழ்காலம் வரை ‘அப்-டேட்’ செய்வதென்பது அசாத்திய சாகஸமாகும். எனவே சில திருத்தங்கள் செய்வதற்கும், அவசியமான அடிக்குறிப்புகள் தருவதற்கும் அதிகமாக மூல நூலில் நான் கை வைக்கவில்லை.

    பிற்கால நிகழ்ச்சிகள் உபதேசங்கள் ஆகியவற்றையும், முற்கால நிகழ்ச்சிகள் உபதேசங்கள் ஆகியவற்றிலும் 1976க்குப் பிற்காலத்தில் நான் அறிந்தவற்றையும் இந்நூலுக்கு அப்புறம் எழுதிய லீலா நாடக ஸாயி, அன்பு அறுபது, அறிவு அறுபது, அற்புதம் அறுபது, தீராத விளையாட்டு ஸாயி ஆகிய நூல்களில் ஓரளவுக்கு விவரித்திருக்கிறேன். அவனருள் கூட்டி வைத்தால் மேலும் சில நூல்களும் நூற்கப்படும்!

    (ஸ்வாமி நூல் முடிவுற்றபின் விரிவு கண்டுள்ள மஹா மஹா விருக்ஷத்தின் இரண்டு பிரம்மாண்டமான கிளைகளை மட்டும் இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். ஒன்று, கல்விப் பணி, மற்றது கிராமப் பணி. ஸாயி ஸரஸ்வதி இன்று பல்கலைக் கழகமே எழுப்பிக் கொண்டிருக்கிறாள்! பாலப் பருவத்தில் தன்னை கிராமதேவதையான ஸத்யம்மாவின் அருட்குழந்தையாகவே குறுக்கிக் காட்டிக் கொண்ட தேவதேவர் இன்று நூறு நூறு கிராமங்களை தத்து எடுத்துக் கொண்டு வாழ்வும் வளமும் ஊட்டி வருகிறார்.)

    ஸ்வாமிக்கு ஜீவ வேர் ஸத்தியம் எனில், இந்நூலுக்கும் உயிர்மூலமாக ஒரு ஸத்தியம் உள்ளது. அது என்ன? சொந்த அநுபவம் என்பதன் ஸத்தியமே! ‘ஸத்ய ஸாயி நம் சொந்தச் சரக்கு; நாம் சாக்ஷாத்தாக அநுபவிப்பது’ என்பதுதான். ‘அவருக்கு இத்தனை ஆற்றல் உண்டா, அருள் உண்டா, அறிவு உண்டா? வறுமையிலும், வியாதியிலும், விபத்திலும், வியாகுலத்திலும் அவர் அபாரமாகக் காப்பது உண்மையா? இதற்கெல்லாம் மேலாக, நம்மை நம்மிடமிருந்தே காப்பாற்றி ஸன்மார்க்கத்தில் செலுத்தி ஆன்மப் பேரனுபவங்களை அளிக்க அவர் வல்லவர்தாமா?’ என்றெல்லாம் நமக்கு ஐயப்பாடே இல்லை பாருங்கள்! பிறர் எழுதியதை, சொல்லியதை நம்பிக்கையின் மேல் மட்டும் நாம் ஏற்கவில்லை. இவைபோல் பிரத்யக்ஷத்தில் பல நாமே அநுபவித்திருப்பதால் இவையும் பரமஸத்தியமே என உறுதியாய் உணர்கிறோம். எனவே இந்த ஸத்ய ஸாயி சரிதை ஸத்யமான சரிதையுமாகிறது!

    ஸ்வாமி என்ற முகுடத்தைப் பற்றி சில: கவி நயம் கொழிக்க வேறு பெயரிட்டிருக்கலாம். ஆனால் ஸ்வாமி என்பதிலுள்ள சொந்தம், எளிமை வேறெந்தப் பெயரிலும் இல்லை. குழந்தைகளும், பாமரருங்கூட இறைவனைப் பேச்சு வழக்கில் ‘ஸ்வாமி’ என்றுதானே சொல்கிறார்கள்? நம் கதாநாதரின் முன் நாம் யாவரும் எளிய குழந்தைகள் தாம். அதனால்தான் அவரிடம் பக்தியில் முன்னேறுகையில் நம்மை அறியாமல் ‘பாபா’, ‘பகவான்’ என்று சொல்வதைவிட்டு ‘ஸ்வாமி’ என்று கூறியே இன்புறத் தொடங்குகிறோம். ஆதியில் ஷீர்டி அவதாரத்தில் பெற்ற பெயரான ஸாயி என்பதும் ஸ்வாமி என்பதன் திரிபே. எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மிடம் தனித்துப் பேசுகையில் நமது கதாநாதரே தம்மை நான் என்றோ பாபா என்றோ குறிப்பிடாமல், ஸ்வாமி உன் கூடவே இருக்கிறது. ஸ்வாமி கிருபை பூர்ணமாக இருக்கிறது என்றுதானே சொல்கிறார்?

    எளிமையும் மகிமையும் ஒருங்கே கூடியவர் நம் ஸ்வாமி என்பதற்கேற்ப, எளிய ஸ்வாமி பதமும் மகிமையான பொருள் வாய்ந்ததாகும். ‘ஸ்வம்’ என்றால் சொத்து, உடைமை. ‘ஸ்வாமி’ என்றால் சொத்துக்குரியவன், உடைமையாளன். எல்லாம் உன் உடைமையே என்றார் தாயுமானார். ஆண்டவன் தன்னையே நாமாக்கி, நம்மை உடைமையாகவும், தன்னை உடையவராகவும் செய்து கொண்டிருக்கிறான். நாம் அவன் உடைமையே. எனவே நம் சொத்துக்களை நாம் எப்படி இஷ்டப்படி ஆள்கிறோமோ, அப்படித் தன்னிஷ்டப்படி அவன் நம்மை ஆள உரிமை பெற்றவன். இதை எண்ணி உணர்ந்துவிட்டால், அதுவே பூரண சரணாகதி, அதாவது மோக்ஷ நிலை. இப்பேருண்மையை உணர்த்தும் ஸ்வாமி என்ற பதத்தைவிட நம் நூலுக்குப் பொருத்தமான முகுடமேது?

    நாம் அவர் சொத்து. ஆனால் நடுவே ‘ஸத்ய ஸாயி நம் சொந்தச் சரக்கு’ என்றேன். அஹங்காரமா? அபசாரமா? அல்ல, அல்ல. அவரே ஊற்றிடச் செய்துள்ள அன்பின் ஸ்வா தீனந்தான். இந்த அன்புரிமையில் வேதமே செப்பியது தானே? த்வம் அஸ்மாகம், தவ ஸ்மஸி: "நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்."

    வேதநாயகனாம் நம் ஸ்வாமியும் அமிருத பிந்துக்களாகக் கூறுவாரே: You are My treasure even if you deny Me; I am your treasure even if you say ‘No’!: நீங்கள் என்னை ஏற்க மறுத்தாலும் என் செல்வங்களே ஆவீர்; அவ்வாறே நீங்கள் ‘இல்லை’ என்றாலும் நான் உங்கள் செல்வம்தான்!

    நன்றி சொல்லும் நனி சொரியும் பணிக்கு வருகிறேன்.

    முதல் நன்றி - ஸாக்ஷாத் ஸ்வாமிக்கு அன்றி யாருக்கு? கிடைக்கத்தகாத பேறாக அவதாரனின் காலத்திலேயே அவதார சரிதையை எழுத வைத்திருக்கிறாரே! எழுத்தில் குறை இருந்தாலும் பக்தர்கள் தமது ஸ்வாமியைப் பற்றியது என்ற அன்பினாலேயே நிறைசெய்து பேரானந்தப்பட இவனைக் கருவியாகக் கொண்டாரே! பஜனை, தியானம், பூஜை இவற்றைப்போல பகவத்சரிதை கேட்பதே பரம பக்தி சாதனம் என்றார் கர்காசாரியர். ‘கதாதிஷ்விதி கர்க:’ என்கிறது நாரத பக்தி ஸூத்ரம். ‘பகவானின் கதை அமுதைப் பருகுவதே ஒரு தனி ஸாம்ராஜ்யம். அது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய ஸகல பலனும் நல்க வல்லது; தீரம், ஆனந்தம், சாந்தம் இவற்றின் உறைவிடம்; கர்மக் கட்டு என்ற நெருப்பு வெள்ளத்தைக் கடக்க உதவும் நாவாய்; கலியைப் போக்கவல்லது’ என்றெல்லாம் தியாகராஜர் ‘ராம கதா ஸுதா ரஸ’ கிருதியில் சொல்கிறார். இவ்வளவு பெருமை பொருந்திய சரிதத்தைத் தந்து அடியார் பணிபுரிய அடியேனுக்கு அருளிய அற்புதக் கருணை ஸ்வாமி ஒருவருக்கே சாத்தியமானது. இதை எண்ண உலக ரீதியிலான நன்றிக்கெல்லாம் மேலான உருக்க உணர்வு ஊற்றெடுக்கிறது.

    ஸ்வாமீ! இவ்வளவு பெரிய நூலில் தப்பிதங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றுள் என் மனச் சுதந்திரத்தால் தெரிவித்திருக்கக்கூடிய தப்பான கருத்துக்களுக்குத்தான் உங்களை க்ஷமா கரோ கோருகிறேனேயன்றி, இதிலுள்ள தகவல்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிறு பிழைகளுக்காகக் கோரவில்லை. ஏனெனில் இதெல்லாம் மனித ரீதியில் சகஜந்தான். பெருந்தன்மையில் சக்கரவர்த்தியான நீங்கள் இதைப் பிழையாகவே நினைக்க மாட்டீர்களாதலால், ‘மன்னிப்பு, கின்னிப்பு’ என்று சொல்லி மனக்கிலேசப்பட நான் தயாராக இல்லை. நீங்கள் அம்மா; நான் குழந்தை. உங்களிடம் விளையாடும் போது அறியாமல் சிறுசிறு கீறல் சில கீறினால்தான் என்ன? உங்கள் பக்தக் குழந்தைகள் சந்தோஷிக்க, நீங்களேதானே என்னை இச் சரித விளையாட்டை விளையாட விட்டீர்கள்?

    நீங்களுந்தான் எவ்வளவு விளையாடினீர்கள் ஸ்வாமி? இந்நூலெழுதும் உத்தேசம் எனக்கு எழும்பியதிலிருந்து (உத்தேசத்தை என்னுள் நீங்கள் ஸூக்ஷ்மத்தில் எழுப்பியதிலிருந்து). உத்தேசம் ஈராயிரம் பக்கக் கைப் பிரதியாகவும், அப்புறம் ஆயிரம் பக்கப் புத்தகப் பிரதியாகவும் உருவாகி முடியும் வரையில் ஸ்தூலத்தில் எப்படி என் பக்கமே பார்வையைத் திருப்பாமல் ஒத்துழையாமை விளையாட்டுப் பண்ணினீர்கள்? ஆனாலும் ஸூக்ஷ்மத்திலோ, ஆரம்பத்தில் என்னோடு ஒத்துழைக்க மறுத்தவர்கள் உட்பட எத்தனை பேரை அதிசயமாக மாற்றி ஒத்துழைப்பு நல்கச் செய்தீர்கள்? ஏழெட்டு மாதங்களுக்குள்ளேயே இத்தனை பெரிய நூலுக்கான தகவல் சேகரிப்பு, அதிலிருந்து பொறுக்குமணித் தேர்வு, தேர்வைச் கைப் பிரதியாகப் பூர்த்தியுருவில் தயாரிப்பது ஆகிய இத்தனையையும் துர் பலனான நான் சாதிக்கும்படியான அற்புதத்தை விளைவித்தீர்கள்! உங்கள் கருணைச் சங்கற்பத்தையே எளியேனின் சாதனை போலக் காட்டி விளையாடினீர்கள்!

    மாதா பிதா குரு தெய்வமு ஆகிய யாவும் ஸ்வாமியே ஆயினும் மானுட உருவில் மாறுபடுத்தியும் காட்டுவதில், தெய்வத்திற்கு நன்றியஞ்ஜலி ஆயிற்று. மாதா - பிதாக்களாக பூஜ்ய ஜயலக்ஷ்மி - ராமசந்திர ஐயர்களைக் கொண்ட பாக்கியத்தால்தான் நான் ஆன்மிகச் சூழலில் வளர முடிந்தது. நான் ஏகபுத்திரனாயிருந்த போதிலும் அவர்களது விவேகமான அணுகு முறையாலேயே இல்லறம் ஏற்காமல் இறைபணி இலக்கியத்தில் ஈடுபட இயன்றது. இருவருமே ஸ்வாமியிடம் சிறந்த பக்தி கொண்டவர்கள். அதோடு அம்மா என் எழுத்தின் பரம ரஸிகையுங்கூட! எத்தனையோ வேலைகளிடையிலும் ஒரே வாரத்தில் இந்த ஆயிரம் பக்க நூலைப் படித்து ‘ரிகார்ட் க்ரியேட்’ செய்ததாகப் பெருமைப்பட்டவள்!

    எங்களகத்தில் எனக்கு முன்பே ஸ்வாமியிடம் ஆழங்காற்பட்டு பஜனை பாடத் தொடங்கிய அம்மாவே ஒரு விதத்தில் எனக்கு ஸாயிபக்தியில் குருவுமாவாள். ஆயினும் அவளும் நானும் இப்பக்தியில் ஆழ்ந்து ஈடுபடக் காரணமாக அவரது மஹிமா லீலைகளை ஸதாவும் சொல்லிச் சொல்லி எங்களைக் கரைத்த மூவர் அன்று யுவர்களாக இருந்த சிரஞ்ஜீவிகள் என். துரைஸ்வாமி, வி. ஸாம்பமூர்த்தி, வி. ஸுரேஷ் சந்திரகுமார். இவர்களும் குருஸ்தானத்தில் நன்றி பற்றுகின்றனர்.

    சில ஆண்டுகளாக என் காரியம் யாவினும் கைகொடுப்பதற்கும் மேல் அவற்றில் பலவற்றைத் தாமே முழுக்க ஆற்றி வரும் சிர. மோஹனராமன் தான் அன்று ஈராயிரம் பக்க சுத்தப் பிரதி எடுத்துத் தந்தது. தகவல் சேகரிக்கும்போது என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்து மெய்க் காவலருக்கு மேலாக மெய்யாய் கவனித்துக் கொண்ட தம்பி. என்.கே. பாலசந்திரன்.

    பகவான் கருணை புரியுமாறு நெம்புகோல் போடும் ‘புருஷகார’மாக மஹாலக்ஷ்மியைச் சொல்வார்கள். இந்நூலின் புருஷகாரம் - சரிதை எழுத நூலாசிரியரையும் ஊக்கி, இதற்கு நூல் நாயகரின் அனுமதியைக் கேட்டுப் பெறப் பெரியார் ஸ்ரீ வி.கே. கோகாக்கையும் ஊக்கிய நண்பர், இலக்கியச் சிற்பி (அமரர்) ஸ்ரீ தி. ஜானகிராமன். பகவானிடம் சிபாரிசின் வாடையும் உதவாதென நன்கு அறிந்திருந்தும் இவ்விஷயமாக அவரிடம் பிரஸ்தாவித்து, அவர் உவந்தளித்த அருளநுமதியை எங்களுக்குத் தெரிவித்தவர் ஸ்ரீ கோகாக்.

    தங்களது ஸாயியநுபவங்களை நேரிலும் கடிதமூலமும் என்னோடு பகிர்ந்து கொண்ட எல்லா வள்ளல்களின் பெயரையும் கூறி இயலாது. இவர்களில் சிலர் பெயர் வெளியிடக் கூடாதென்றே வாக்குறுதி பெற்றவர்கள்! அனைவருக்கும் அந்தரிகி வந்தனமு என்று ஆம்னிபஸ் வணக்கம் கூறித் திருப்தி அடைய வேண்டியதுதான். குறிப்பாக, ஸாயிராமனின் பரமாற்புதமான மூல ராமாயணமாம் ஸத்யம் சிவம் ஸுந்தரம் படைத்த வால்மீகியும், அதில் சேர்க்காத ஏராள விசயங்களும் எனக்குத் தாராளமாக நல்கிய பெருந்தகையுமான (அமரர்) ஸ்ரீ என். கஸ்தூரி; முன்னரே ஸாயி நூல்கள் தந்துள்ள ஸ்ரீ ஹவர்ட் மர்ஃபெட், ஸ்ரீமதி இந்திரா தேவி, மாதுஸ்ரீ நாகமணி பூர்ணையா முதலியோர்; ஐயனிடம் பல்லாண்டு பழகித் திளைத்ததில் ஓர் அம்சமும் விடாது எழுதியளித்த உடுமலை ஸ்ரீ பால பட்டாபிச் செட்டியார்; தாமே நூலாசிரியர் என்பது போன்ற கவலையுடன் விவரங்கள் சேகரித்து அனுப்பிய (அமரர்) ஸ்ரீ டி.ஏ. கிருஷ்ணமூர்த்தி; ஸநாதன ஸாரதி ஆரம்ப இதழிலிருந்து ஒன்று விடாமல் தந்துதவிய ஸ்ரீ ஆர். ராஜகோபாலன் ஆகியோருக்கு எந்நாளும் நீங்கா நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

    மிரகிள்கள் வேதப் பிரமாணத்தாலேயே நிலை நாட்டப் படுபவை என்று தமக்கே உரிய சத்திய தீரத்துடன் இந்நூலில் சேர்ப்பதற்கென்றே எடுத்துக் காட்டி எழுதிய மஹாசயர்களான ஸ்ரீ அக்னிஹோத்திரம் ராமாநுஜ தாதாசாரியரவர்கள்;

    தமிழக ஸாயி நிறுவன முக்கியஸ்தர்களான ஸர்வஸ்ரீ தாமோதர ராவ். அச்சுதானந்தம், (அமரர்) கே.ஜி. மாணிக்கவாசகம், டாக்டர் புன்னைவனம்;

    புகைப்பட உதவி புரிந்த ஸர்வஸ்ரீ ஆர். பத்மநாபன் (புட்டபர்த்தி ஸ்ரீ ஸத்ய ஸாயி ஃபோடோ எம்போரியம்), பேரன்பர் எம். கணேஷ்ராவ், டாக்டர் எம். விஜயகுமார், ரிச்சர்ட் (புட்டபர்த்தி), (அமரர்) நாகராஜன், என். ரமணி, சென்னை ஃபோடோ எம்போரியம், (அமரர்) என்.கே. ஸுர்யப்ரஸாத ராவ் ஸ்ரீமதிகள் எம்.எல். லீலா, ஜயந்தி;

    படங்களை அளவிட்டு அட்டைப்பட முகப்புப் படங்களையும் அழகுற அமைத்துத் தந்துள்ள ஓவிய நிபுணர் ‘வினு’;

    அருமையாகவும் விரைவாகவும் அச்சிட்டு அளித்துள்ள மாருதி பிரெஸ்காரர்கள் குறிப்பாக, பண்பு மிக்க நிர்வாகி ஹரிஹரன்;

    பற்பல இனங்களில் உதவியுள்ள பல்லோர்

    இவர்கள் யாவருக்கும் திருவருள் வேண்டி என் மனமார்ந்த நன்றி.

    இறுதியாக, இது இவ்வளவு நல்ல வடிவில் புத்தகமாகி, இத்தனை குறைந்த விலையில் கிடைக்கச் செய்திருக்கிறார்களே, அவர்களுக்கு எவ்வளவுதான் நன்றி சொல்லக்கூடாது? இதனை திவ்யத் திருப்பணியாகவே ஏற்று, உளமார நடத்திக் கொடுத்திருப்பவர்கள் திவ்ய வித்யா ட்ரஸ்டினர். வெகுகாலமாக ஸ்வாமி மறுபதிப்பு விரும்பி பக்த நேயர்கள் விசாரித்த வண்ணமிருந்தனர். பதிப்பாளர்களும் பிரசுரிக்க ஆர்வத்துடன் முன் வந்தனர். ஆயினும் நானே இணக்கம் தர இயலாமலிருந்தது! காரணம், வர்த்தக ரீதியில் நூலைக் கொணர்ந்தால் இன்றைய விலைவாசி நிலவரத்தில் ஏராளமான பக்தர்களால் வாங்க முடியாமற்போகும் என்பதுதான். முடிந்த மட்டில் குறைந்த விலையில் நூல் வருவதையே ஸ்வாமியும் விரும்புகிறாரென்று அறிந்தேன். எனவேதான் மறுபதிப்பை நானே தாமதப்படுத்திக்கொண்டு போக நேர்ந்தது. நானா தாமதப்படுத்தினேன்? ஸ்வாமி சங்கற்பிக்கும் காலத்தில் தானே எதுவும் நடக்கும்? அச்சங்கற்பம் ‘மாநுஷ ரூபேண’ அங்குரார்ப்பணம் பெற சென்ற ஆண்டு இறுதியை ஸ்வாமி தேர்ந்தெடுத்தார் போலும்! அப்போது என் அன்புக்குரிய ஸாயி சகோதரர் ஸ்ரீ எஸ். நாகராஜனின் காதுக்கு மறுபதிப்பு வெளிவராத காரணம் போயிற்று. அவ்வளவுதான். அவரது சிந்தனைக் குழந்தையாக ‘திவ்ய வித்யா அறக் காப்பகம்’ பிறந்து விட்டது! நன்கொடைகள் மூலம் மூலதனம் திரட்டி லாப நோக்கமே இன்றி நூலைப் பிரசுரிக்க ட்ரஸ்ட் அமைப்பதெனத் தீர்மானித்தார். இந்த ஒரு நூலோடு அற நிறுவனத்தின் பணியை முடித்துவிடாமல், ஆன்மிய வளர்ச்சிக்குப் பல வகையிலும் அதனைக் கொண்டு தொண்டு புரியும் விதத்தில் அமைத்திட விரும்பினார். இந்த யோசனைக்கு ஸ்வாமியின் ஆசியும் பெற்று வந்தேன். (யோசனையை அந்தர்யாமியாகத் தூண்டியதே அவர்தானே?) சிந்தனைக் குழந்தை செயற்படும் நிறுவனமாகப் பரிணமித்தது. வாசகர், முதலீட்டாளர் ஆகிய இரு சாராரின் சௌகரியத்தையும் கருதி நூலை இரு பகுதிகளாக வெளியிடலாமென முன்பே ஒரு சமயம் ஸ்வாமி கூறியிருந்தபடி இதோ முதற்பகுதி வெளியாகிறது! இன்னமுங்கூட விரைவாக இரண்டாம் பகுதி வெளிவர ஸ்வாமி அருள் கூர்வார் என நம்புகிறோம். ஸ்வாமியிடம் கனிந்த பக்தி, என்னிடம் ஆழ்ந்த அக்கறை, காரியத்தில் இதயபூர்வ ஈடுபாடுயாவும் கொண்ட திவ்ய வித்யா அறங்காவலர்களான ஸர்வஸ்ரீ ஆர்.எஸ். ராம கிருஷ்ணன் (தம்மைத் தொண்டருக்கும் தொண்டராகவே கருதும் ட்ரஸ்ட் தலைவர்). கே. ராமமூர்த்தி (ஸ்தாபகர்), எஸ்.கே. பாலஸுப்ரமணியன் (ஸாயி வட்டத்தின் அன்புப் பணியாளரான ‘Eskeby’). எஸ். நாகராஜன், பி.வி. ராமன் ஆகியோருக்கு ஸ்வாமியின் இடையறாப் பேரருளைக் கோருமுகமாக நிறை நன்றி கூறுகிறேன்.

    இதிலொரு வேடிக்கை, அதாவது ஸாயி லீலை! நமது சக்தி சாமர்த்தியம் எதுவும் அருட்துணை இன்றேல் பலிக்காது என்று ஒரு பக்கம் பாடம் புகட்டும் நம் காவியநாதரே இன்னொரு பக்கம் நமக்குத் தெரியாதது, நம்மால் இயலாதது என நாம் நினைப்பவற்றை நம்மைக் கொண்டே நடத்துவிப்பதும் உண்டல்லவா? இப்படியொரு லீலையாக, இம்முதற்பகுதிக்கான செலவு முழுதையும், அதற்கு அதிகமாகவுங்கூட, நானே திரட்டித் தரச் செய்திருக்கிறார்! மெய்யாலுமே நான் தானா? அவரது பிரேமையே பல நல்லன்பர் மூலம் பாய்ந்து வந்து நிதியும் அள்ளித்தரச் செய்திருக்கிறது! வள்ளல் தம்பதியரான ஸ்ரீ ஸதாசிவம் - ஸ்ரீமதி சுபலக்ஷ்மியன்னையும், ஸ்ரீ கங்காப் பிரஸாத் பிர்லா அவர்களும் காகிதத் தேவை முழுதும் பூர்த்தி செய்துவிட்டனர். மற்றும் ஸாயித் தாய் தந்த அன்புச் சகோதரர்களான இரண்டு டாக்டர் பார்த்தஸாரதிகள், டாக்டர் வெங்கட் கோபாலகிருஷ்ணன் & நண்பர்கள், டாக்டர் கே. ராம்நாராயண், ஸ்ரீமதிகள் லக்ஷ்மி ரமணன், சரஸ்வதி பாலஸுப்ரமணியன், பேராசிரியர் கே. ஸ்ரீநிவாஸன், ஸர்வஸ்ரீ வி.எஸ். ராஜன், ஆர். ஸுப்ரமணியன், ஏ.எஸ். சந்திரமௌலி, எஸ். மோஹன ராமன், என். துரைஸ்வாமி, கே. கண்ணன், பி. ராம தாஸய்யர். ஆர்.பி. ஆத்ரேயா ஆகியோர் மனமுவந்து நன்கொடை உதவினர். பொருட்செல்வம் நல்கிய இவர்களுக்கு ஸ்வாமியின் அருட் செல்வம் மேன்மேலும் பெருக வேண்டுகிறேன்.

    நூலைப் படிக்கும் அன்பர் யாவருக்கும் நம் அன்புத் தெய்வத்தின் கிருபைக் கொடையைப் பிரார்த்திக்கிறேன்.

    சென்னை – 17

    1-6-90

    ஸாயித் தாயால் உங்கள் சோதரனாகும்

    ரா. கணபதி.

    தெய்வத்திற்குச் செய்யும் நிவேதனம்

    அத்தெய்வத்தின் அணுக்கப் பரிவாரத்தினருக்கே

    முதலில் ஸமர்ப்பணமாகும் மரபில்,

    ஸ்ரீ ஸத்ய ஸாயித் தெய்வத்திற்கு

    நிவேதனமாகும் இந்நூல்,

    தம்மில் ஐக்கியமடைந்த ஆதரிசப் பிறவி

    என்று அவராலேயே போற்றப்பெற்ற

    என் மாத்ருதேவி

    மாதுஸ்ரீ ஜயலக்ஷ்மி ராமசந்திரையரின்

    புனித நினைவுக்குப்

    பிரேம ஸமர்ப்பணம்

    அத்தியாயம் - 1

    சுருதியும் லயமும்

    கண்ணன் பிறந்தான் – எங்கள்

    கண்ணன் பிறந்தான் - இந்தக்

    காற்றதை எட்டுத் திசையிலும் கூறிடும்

    திண்ணம் உடையான் - மணி

    வண்ணம் உடையான் - உயர்

    தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

    பண்ணை இசைப்பீர் - நெஞ்சில்

    புண்ணை ஒழிப்பீர் – இந்தப்

    பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

    எண்ணிடைக் கொள்வீர் – நன்கு

    கண்ணை விழிப்பீர் - இனி

    ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.

    - பாரதியார்: கண்ணன் பிறப்பு

    பிள்ளையாரப்பனுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி தினம். மக்கட் குலத்தின் இடையூறுகளும் இன்னல்களும் தீர விநாயகப் பெருமானுக்கு விசேஷ பூஜை செய்யும் நன்னாள்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அருளுவதால் அது சதுர்த்தி. விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்த துரீய சத்தியமும் ‘சதுர்த்தம்’ என்றே மறைமுடியில் சிறப்பிக்கப்படுகிறது.

    மாதந்தோறும் கிருஷ்ணபக்ஷத்தின் நான்காம் திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி. அதிலும் நம் வரலாறு தொடங்கும் இந்தச் சதுர்த்திக்கு அதிவிசேஷம் என்னவெனில், இது முருகப்பெருமானோடும் தொடர்பு கொண்டதாக உள்ளது. இது கார்த்திகேயனின் கீர்த்தி செழிக்கும் கார்த்திகை மாதத்தேய்பிறைச் சதுர்த்தியாகும். சங்கடங்கள் தீர உபாயமாக இந்த சங்கடஹர விரதத்தை உலகுக்குக் காட்டிக் கொடுத்தவனே அம்முருகன்தான். அவன் ஒரு சமயம் பரத்வாஜ ரிஷியின் தோன்றலாக, அதாவது பாரத்வாஜ கோத்திர முன்னோரொருவனாக அவதரித்தான். அப்போது அங்காரகன் என்றும் செவ்வாய் என்றும் பெயர் கொண்டான். மானுடனாகவே பிறந்தும் தேவாமுதத்தை அவன் உண்டு, நவக்ரஹங்களில் ஒருவனாக உயர்ந்தான். இந்த அதிசய உயர்வை அவன் எய்தியதற்குக் காரணம், அவன் விநாயகப் பெருமானை ஸங்கடஹர சதுர்த்திதோறும் வழிபட்டதே.

    நம் சரித நாயகனுக்குள்ள பாரத்வாஜத் தொடர்பு பிற்பாடு தெரியும்.

    இதோ, இக்கார்த்திகைச் சதுர்த்தியானது செவ்வேள் உகக்கும் செவ்வாய்க்கிழமையைத் தீண்டும் தருணம் வந்து விட்டது. அடிவானத்தில் செங்கோடுகள் படரத் தொடங்கிவிட்டன. ஒரு நாழிகையில் சூரியோதயம் நிகழ்ந்து, செங்கோடனின் மங்களவாரம் மங்கள பவனி தொடங்கிவிடும்.

    அதாவது, இன்னமும், இதோ இந்த நாழிகை வரையில் திங்கட்கிழமைதான். ஆஹா, எத்தனை தெய்விகப் பெருமைகள் ஒன்று திரண்ட நாள்! இது கார்த்திகை மாத ஸோம வாரமாகும். உமையோடு கூடிய ஈசனாம் ஸோமனுக்கு, எனவே, சிவ-சக்தியருக்குப் பிரீதியான புனித நாள். நம் சரித நாயகர் தமக்கு ஸோமப்பா என்றே பெயரிட்டுக் கொண்டு ஒரு திருவிளையாடல் புரியப் போவதையும், இவரே ஸோமநாதபுரத்தில் உள்ள மூல ஜ்யோதிர்லிங்கத்தை வெளிக்கொணரப் போகிறார் என்பதையும் எண்ணுகையில் ஸோமவாரப் பொருத்தம் நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும்!

    இன்று நக்ஷத்திரமும் சிவபெருமானுக்குரிய ஆதிரையே! தயையில் நனைந்து நனைந்து ‘ஆர்த்ர’ராக இருக்கும் பரமேச்வரனின் நக்ஷத்திரமே ஆர்த்ரா எனும் ஆதிரை.

    இதேபோல் ஸோமவாரமும் திருவாதிரையும் கூடியதொரு நாளில் தான் முருகப் பெருமான் மீனாக்ஷி - ஸுந்தரேச்வரர்களுக்கு மகவாக உதித்து உக்ர பாண்டியன் எனப் பெயர் பெற்றான். முருகேசனின் மற்றோர் அவதாரமான ஞான சம்பந்தர் அவதரித்ததும் ஓர் ஆதிரையிலேயே.

    இப்படியாக ஈசன், உமை, கணேசன், ஷண்முகன் சம்பந்தத்துடன் இது சைவப் பெருநாளாக இருந்தால் மட்டும் போதும்? ஸ்ரீமத் ராமாநுஜர் தோன்றியதும் ஓர் ஆதிரையில்தான் என்னும்போது வைஷ்ணவத் தொடர்பும் இந்நாளுக்கு ஏற்பட்டுவிடுகிறது!

    இது மட்டுமில்லை. மேற்படி கார்த்திகை ஸோமவாரம் முடியும் வைகறை வேளையில் நம் வரலாறு நடக்கும் பிரதேசத்தில் அனைவருமே விஷ்ணுவுக்குத்தான் விசேஷ வழிபாடு செய்கிறார்கள். ஸத்ய நாராயண விரதம் என்று கோலாஹல பூஜை நடத்துகிறார்கள். சமய சமரஸம்!

    ***

    இதோ ஒரு பெண்மனி பூஜை செய்கிறாளே, இதுவும் ஸத்ய நாராயண ஆராதனைதான்.

    இவளுக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனாலும் வெகுவிரைவில் விரதம் முடிக்க முனைந்திருக்கிறாள். அவசரப்படுகிறாள்.

    காரணம், இவளுக்குப் பேற்று நோவு கண்டுவிட்டது.

    ஆயாசத்திலேயே ஆனந்தம்! நோவிலேயே ஓர் இன்பம்! எந்தத் தாய்க்கும் இருக்கக் கூடியதைவிட இவளுக்குக் கூடுதலாகவே இன்பம் இருந்திருக்குமோ? உலகுக்கே பெரும் பேறாக ஒரு பிள்ளையைப் பெறப் போகிற மஹா பாக்கியவதியாயிற்றே! ஆம், சரியாக ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இவ்வூரில் கும்பமேளா போல் ஒரு மஹோத்ஸவம் நடக்கப் போகிறது. லக்ஷலக்ஷமான மக்கள் தங்கள் பிரத்யக்ஷ தெய்வத்தைத் தரிசிக்க இங்கு குழுமப் போகிறார்கள். ஊரும் சுற்றுப்புறமும் ஊசி விழவும் இடமின்றி மக்கள் வெள்ளத்தில் முழுகிவிடும்போது, விழா நாயகனான கண் கண்ட தெய்வம் எப்படி வழி ஏற்படுத்திக்கொண்டு வந்து அடியார் அனைவருக்கும் அண்மையில் நின்று ஆசிவழங்க இயலும்? மண்ணிலே வழி ஏற்படுத்திக் கொண்டு ஜனசமுத்திரத்தைப் பிளந்து வருவது அந்த அற்புதனுக்குமே இயலாத சாகஸமாகிவிடும். எனவே மக்கள் காணும் நெருக்கத்தில் விண்ணில் ஹெலிகாப்டர் பவனி வந்தே அவதார புருஷன் அனைவருக்கும் தரிசனம் தர வேண்டியதாகும்! தான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த ஐம்பதாவது ஜயந்தியை இப்படி விண் வீதியுலாவால் சிறப்புறச் செய்த நாயகன், வானூர்தியைத் தன் வாஸ ஸ்தானத்தில் இறக்கி, மண்மிசை பொற்பாதம் வைக்கப்போகும் அக்கணத்தில் ஆயிரமாயிரம் கண்டங்கள் ஆர்த்துப் பாடப்போவது இந்தப் பெண்மணியின் பாக்கியத்தைத்தான்!

    தன்ய ஹோ ஈச்வராம்பா!

    இத்தனயனை ஈன்றதால் தன்யளான அவள் புகழே பஜனைப் பாடலாக வானை முட்டப் போகிறது. அங்கு புகழுடம்பிலே தன் புதல்வனின் பொன் விழா காணும் மங்கை நல்லாளுக்கு இந்த இன்சொலே கனகாபிஷேகம் செய்யப் போகிறது.

    அந்த அபிஷேகத்தின் ஆரம்பத் தூறல்கள் அவளுள் குளிர விழுந்துச் சிலுசிலுப்பூட்டிய பழைய கார்த்திகை ஸோம வாரத்துக்குத் திரும்புவோம்.

    ***

    இவளால் உலகம் பெறப்போகும் பாக்கியத்துக்குக் கட்டியம் கூறியாகிவிட்டது. அப்படிக் கட்டியம் கூறியது ஒரு மத்தளமும் தம்பூராவுமாகும். அது ஒரு விந்தை!

    ஆம், எதிர்காலத்தில் சர்வ தேசங்களும் எந்தப் பெருமானின் விந்தைகளைக் கண்டே அவரிடம் முக்கியமாக ஈர்க்கப்படப் போகின்றனவோ, அந்த விகிர்தனின் ஜனனத்துக்கு முன்பிருந்தே அவ்வீட்டில் அதிசயங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. நாடகக் கலைஞர்களைக் கொண்ட அவ்வில்லத்தில் பகல் முழுதும் பாட்டும் அதோடு தம்பூரா மீட்டும், மத்தள தாளமும் ஓயாமல் சத்தித்துக் கொண்டே இருப்பது பரம்பரையான வழக்கம். இப்பெண் கருக்கொண்ட நாளிலிருந்தோ இரவிலும் அங்கு இசையலைகள், லய சப்தங்கள் ஓயவில்லை. வாய்ப் பாட்டில்லாமலே, நள்ளிரவுகளில் தம்பூராவின் ஸுநாதமும், மிருதங்கக் குமுகுமுப்பும் அங்கு நிரம்புகின்றன. விந்தை என்னவெனில், எவரும் கை தீண்டி வாசிக்காமலே, தம்பூரா தானே தன்னை மீட்டிக் கொண்டு, ‘ரீம் ரீம்’ என ரீங்கரிக்கிறது. மிருதங்கமும் தானாகவே தன்னைத் தட்டிக் கொண்டு ‘ஜாம் ஜாம்’ என்று ஜமாய்க்கிறது!

    தானாகப் பிறக்கும் அநாஹத நாத தத்வம் பற்றி அவ்வீட்டாரோ, ஊராரோ என்ன அறிவார்கள்? எனவே கண்ணுக்குத் தெரியாமலே இப்படி சுருதி கூட்டிய, லயம் ஈட்டிய விந்தைக் கரத்தைப் பற்றி விதவிதமாக அர்த்தம் (அதாவது அனர்த்தம்) கற்பித்துக் கொண்டார்கள். பயந்தார்கள்..

    வீட்டுக்குரியவர் - நம் மங்கை நல்லாளின் கணவர் பக்கத்து ஊரில் இருந்த மதிப்பு வாய்ந்த சாஸ்திரியாரிடம் சென்று விளக்கம் கோரினார்.

    இதில் பயப்பட ஏதும் இல்லையப்பா. தர்மமும் பிரேமையும் தழைக்க வைத்து லோக கல்யாணத்தை விளைவிக்கப்போகும் ஒரு காருண்ய மகாசக்தி உன் வீட்டில் தோன்றப் போகிறது என்பதற்கே இது அறிவிப்பாகும். அனைவரும் அன்பில் இசைவதுதான் தம்பூரா ச்ருதி. அறத்தை அநுஸரிப்பதுதான் மிருதங்கத்தின் லயக் கட்டுப்பாடு. ச்ருதியும் லயமும்தான் பிரபஞ்சப் பேரியக்கத்தின் சுவாசமும், ரத்தத் துடிப்புமாகும் என்ற உண்மையை அந்த சாஸ்திரியார் அறிந்திருந்த அளவுக்கு, அதிலும் விளக்கம் கேட்டவர் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு, சொல்லி பயத்தை நீக்கி உற்சாகமூட்டினார்.

    ***

    காருண்ய மகா சக்தி மானுட உருவில் உற்பவிக்கும் சுப முகூர்த்தம் நெருங்கிவிட்டது.

    பெண்மணி விரைவே விரதம் முடித்து, தாழ்வரை மூலையில் திண்ணைபோல் உயர்ந்த ஒரு மேடையில் படுக்கிறாள்.

    கண்ணன் பிறந்த காராக்ருஹத்தோடும், இயேசு ஜனித்த தொழுவத்தோடும் இந்தத் தாழ்வரையை ஒப்பிட முடியாதுதான். எனினும், தாழ்வாரைத் தாங்கவே தாழ்ந்து வரும் நாயகன் இப்போதும் பரம எளிமையான ஒரு குக்கிராமத்தில் கிலமான ஒரு சிறு வீட்டைத்தான் ஜன்ம ஸ்தலமாகத் தேர்வு செய்திருந்தான்.

    ¹

    பெண்மணிக்குப் பேற்று நோவு வலுத்தவிட்ட இச்சமயத்தில் அவளது மாமியார் வீட்டில் இல்லை. முறைப்படி ஸத்யநாராயண பூஜை செய்வதற்காக அம்மூதாட்டி புரோஹிதரின் வீட்டுக்கே சென்றிருக்கிறாள்.

    அவளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதற்காக பக்தி சிரத்தை மிக்க மூதாட்டி பரபரப்பு அடைந்துவிடவில்லை. ஸாங்கியம் ஏதும் விடாமலே பூஜையைத் தொடருமாறு புரோஹிதரிடம் கூறினாள். விதிவத்தாக வழிபாடு முடிந்தது.

    நிறைந்த மனத்தோடு கிழவி வீடு திரும்பினாள். அவள் நம்பியது வீண் போகவில்லை. நம்பி இன்னம் பிறக்கவில்லை.

    மாற்றுப் பெண்ணுக்குப் பிரஸாத மலர்களையும் தீர்த்தத்தையும் அளித்தாள். நிர்மல நாரணனின் நிர்மால்யம் நிறைகர்ப்பிணியின் முடியில் ஏறியது. அவனது திவ்ய தீர்த்தம் அவள் உதிரத்தில் குளிர்ந்தது.

    மறுகணம், தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் பரணியில் நெளிந்து விட்டான், மிளிர்ந்து விட்டான்.

    நித்ய தத்வம் ஸத்யநாராயணனாக நிலமிசை முகிழ்த்து விட்டது!

    ² அவதாரப் பொன்விழாவரை அவதார ஸ்தலத்தை இடிபாடாகவே விட்டு வைத்திருந்த அவதாரர் பிற்பாடு அதனை யோகக் கோலப் பரமேசனின் ஆலயமாகப் புதுப்பித்திருக்கிறார்.

    சொல்லி வைத்தாற் போல், குழந்தை பிறந்தவுடன் ஆலய மணி ஓம் ஓம் என்று ஒலிக்கத் தொடங்கியது. ஓசையில் ஊரே நிறைந்தது.

    அவ்வருஷத்துக்குப் பெயரே நிறைவுதான். ‘அக்ஷய’ வருஷம்.

    ஆண்டு, மாதம், வாரம், நாள், கோள் யாவும் தெய்விக நலன்களைச் சுட்டிய அத்தினத்தை ஆங்கிலக் காலண்டர்படி சொன்னால்தானே பெரும்பாலான வாசகர்களுக்குப் புரியும்?

    அது 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி.

    இத்தேதியில் பழைய புராணப்படியான சிறப்புக்களோடு இன்னொரு புது விசேஷமும் உள்ளது: மனித மனங்களுக்கு மூலமான அதிமானஸ மஹாசக்தியானது மண்ணுலகில் உற்பவித்து மக்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஸம்பூர்ணயோகத் தவமிருந்த அரவிந்த முனிவர் 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதிதான் தமது வெளிச் செயல்களை நீத்து, அறையோடு அறையாக ஏகாந்தத்தில் இருந்து விடுவதென முடிவு செய்தார். இவ்விதம் தாம் ஏகாந்தம் புகுந்ததற்கு அவர் சொன்ன காரணம், மனித மனத்துக்கு மேம்பட்ட பேரின்ப உணர்வின் உருவான கண்ணன் மீண்டும் பௌதிகமாக உலகுக்கு வந்தாகிவிட்டது என்பதுதான். நம் சரித நாயகனின் அவதாரம் சரியாக இதற்கு முன்தினமே நிகழ்ந்திருப்பதால் பேரின்ப உணர்வுருவான அக்கண்ணன் யார் என்பது வெள்ளிடைமலையாக விளங்கவில்லையா?

    ***

    செவ்வாய் தினம் விரியச் செவ்வானத்தே உதித்தான் ஆதவன், மாதவச் சேயைக் காண.

    குங்குமச் சிவப்பாக இருந்தது குழந்தை. பிறப்பிலே இத்தனை சிவப்பாக இருந்தால் வயதேறும்போது சியாமள மேனியாகவே இருக்கும் எனப் பெண்டிர் அநுமானிக்கிறார்கள். சரீரச் சிவப்புக்கு மாறாகக் குழந்தையின் சின்னஞ் சிறு கர மலர்களும், பாதப் போதுகளும் பொன்னெனப் பொலிவது சற்றே விந்தையாக இருக்கிறது. இதைவிடப் பெரிய விந்தை, குட்டியான உள்ளங்கால்களில் திகழும் சங்கு சக்கரச் சின்னங்களும், நடு மார்பில் பளிச்சிடும் ஸ்ரீவத்ஸம் எனத்தக்க மச்சமும்தான்.¹

    ² இவற்றைக் கண்ணாரத் தரிசனம் செய்த அடியார் பலர் உள்ளனர். ஆனால் இவ்வடியார்கள் கண்ட அவ்வச்சமயங்களில் மட்டுமே இத்திவ்ய சின்னங்களை நம் சரிதநாதன் தோற்றுவித்தாரா, அல்லது இவை எப்போதுமே அவரது திருஉருவில் பதிந்துள்ளனவா என்று தீர்மானமாகச் சொல்லத் தெரியவில்லை.

    பரம சுந்தரமான குழந்தை. அலையலையான அளகபாரம். வட்ட வதனம். விசால நயனம். அகன்றிருப்பதோடு, ‘காதளவோடும்’ என்ற கவி வாக்கும் பொருந்த நீளப் பாய்ந்த நீலக் கறு நயனம். கண்மணி வெட்டோ மின்னல் பொட்டுத்தான். மொட்டுச் சம்பகமன்ன நாசி. பட்டு அதரங்களில் இயல்பானதோர் இளம் சிவப்பு. திட்டமான முகவாய். கதுப்புக் கன்னத்தில் இடப்பக்கம் திருஷ்டிப் பொட்டுப்போல் ஒரு மறு. அதற்கே திருஷ்டி போடலாம் போல் அத்தனை அழகு! மேனி, கால், கை, அவற்றில் விரல்கள் யாவும் உத்தமமான விகிதத்தில் ஒன்றுக்கொன்று பொருந்தி அமைந்துள்ளன. மொத்தத்தில், சிற்ப சித்திரங்களில் காணும் திருத்தமான திரு உரு.

    இன்றும் சுந்தரராஜனாகவே இருப்பவர் நம் சரித ஸ்வாமி. ஏனோ தெரியவில்லை, அநேகப் புகைப்படங்களில் காணும் இவரது தோற்றம் வேறு, நேர் தோற்றம் வேறு என்றே உள்ளன. நேரில் காணாதோருக்குப் பல புகைப்படங்களில் இவரது சிகையும், சிகப்பு உடையும் அருவருப்பாகவும், அச்சமூட்டுவதாகவுமே படலாம். ஆனால், நேரில் கண்டாலோ இவையே அவருக்குப் பரம பாந்தமாகப் பொருந்தி, நம்மையும் அவர்பால் பரம பந்துவாகப் பொருத்துவதை உணர்வோம். கீர்த்தியில் பெரியவராயினும் மூர்த்தியில் சிறியவரேயான அவர் அநேகப் புகைப்படங்களில் வாட்ட சாட்டமாகத் தென்படுகிறார். கோமள ஸ்வரூபமான இவ்வடிவு காமிராவில் பிடிபடுகையில் சில சமயம் கரடு தட்டி முரடாகி விடுகிறது. என்ன மாயமோ? முடி, உடை, மொத்த வடிவு, இவை மட்டுமன்றி அவரது மற்ற அவயவ ஸௌந்தர்யங்களும் பல படங்களில் உள்ளபடி பதியக் காணோம். முதல் தரிசனாநுபவத்தை எழுயுள்ள அன்பர்களில் பலர், புகைப்படங்களில் அவ்வளவாக இன்னாத தோற்றம் கொண்டவர் நேரில் இப்பேர்ப்பட்ட திவ்ய மோஹன ஸ்வரூபமாக இன்பும் அன்பும் பொலிய விளங்குகிறாரே என்று மனம் கரைந்து கூறியிருக்கிறார்கள். அவரைக் கண்ட மாத்திரத்தில் ஜெர்மன் ஓவிய மாது ஆடி வான் ஹார்டருக்குத் தோன்றிய எண்ணம், ஆஹா, இவரை நாம் சித்திரம் தீட்டியே தீர வேண்டும் என்பதுதான்!

    அவர் அற்புதம் செய்வதாலும், அறிவுரை பகர்வதாலும், அருள்களைப் பொழிவதாலும் பக்தரை மேம்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும். கண்ட மாத்திரத்தில் அவரது அழகே எண்ணற்றவரின் நெஞ்சை உலுக்கி உருக்கிப் புனிதப்படுத்துகிறது. அது சாதாரண சரீர அழகல்ல. Truth is Beauty என்று கீட்ஸ் சொன்ன ஸத்தியம் என்கிற ஸௌந்தர்யம் இதுவே! காருண்யமே லாவண்யம் என்று அம்பிகை பற்றி ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் கூறுவார். அந்த திவ்யப் பிரேமையின் திரு உருவமே நம் ஸாயி.

    மத்திம ஆக்ருதிக்கும் குறைந்த வடிவமும், தங்கக் கர அழகும், பொன்னம் கழலழகும் ஸாயியை திவ்ய மாயியாகவே காட்டும். பராசக்தி போலப் பர்த்தீச்வரியிடம் பிரேமையும், லீலானந்தமும் அலை மோதுகின்றன. அவ்வப்போது அமைதி மயமாக நின்று விடுபவர், அல்லது அன்ன நடை பயில்பவர், பரபரப்பில்லாமலே விரைவுடன் விசையுடன் நடந்துவரும் சொகஸே சொகஸு! அதிலும் முன்புறத்தைவிட மெலிந்ததாகத் தோன்றும் நளின முதுகுப் புறம் காட்டி அவர் நடக்கும்போது பூங்கொடியாம் தேவி ஒல்கி ஒசிந்து செல்வதாகவே தோன்றும்.

    அடாடா, சிலும்பும் முடி சூழ்ந்த, தளதளத்த முகத்தில் சுடர் தெறிக்கும் கண்ணழகும், நனி சிந்தும் கனி அதர நகை அழகும், முத்துப்பல் வரிசையழகும், நலுங்காத பட்டங்கி நிலம் புரள விசையுடன் குலுங்கி வரும் ராயஸ நடை அழகும் அநுபவித்தவர்களுக்கே புரியும்.

    நகரத் தெரியாத சிசுப் பருவத்திலிருந்து எங்கோ நகர்ந்து விட்டோமே!

    ***

    பாலன் பிறந்த அன்று கழலிலிருந்து குழல் வரையில் குழந்தை எழிலை அங்க அங்கமாகப் பாட அங்கொரு பெரியாழ்வார் இருக்கவில்லை.

    ஆனாலும் விரித்த கண் விரித்தபடி பெண்டிர் குழந்தையை நோக்கியவண்ணம் இருக்கின்றனர். அங்க லக்ஷணங்களைக் காணும் ஆனந்தத்துக்கு மேலாக அவர்களது பார்வையில் அச்சம் கலந்ததோர் ஆச்சரியமே தென்படுகிறது!

    ஆம், விசித்திர சித்தன் பிறக்கு முன்பே தானாகத் தம்பூரா இன்பூற இசைத்தது. மத்தளம் சத்தலயம் சாற்றியது எனில், பிறந்தவுடனும் விந்தை தொடருகிறது. குழந்தைக்குக் கீழே விரித்திருக்கும் துணிகள் விம்மி விம்மித் தணிகின்றன. அசைந்தாடும் அலைகளில் மிதக்கவிட்ட தொட்டிலில் போல், துணிகளின் அசைவில் குழந்தை அசைந்தாடுவது அழகாயிருந்தாலும் உடனிருந்தோருக்கு அச்சமாகவும் இருக்கிறது. ‘இதென்ன அற்புதம்!’ என்று வியப்பில் தொடங்கியவர்கள் பயப்படுகிறார்கள்.

    படட்டும் படட்டும். நாம் காணக் கொடுத்து வைக்காத ஜயந்தியைக் கண்டுகொண்டவர்களைச் சிறிது அச்சப்படுமாறு விடுவோம். அதற்குள் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்துக்கான சில இலக்கணங்களைப் பூர்த்தி செய்வோம்.

    முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

    மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

    என்று அடிகள் பாடியதில், நம் கதாநாதனின் ஸத்ய நாராயண நாமத்தையும் அவரது வடிவ வண்ணத்தையும் மட்டுமே கேட்டுக் கொண்டோம். இனி ஆரூரை, அவர் ஆர்ந்த ஊரை, பிறந்து, வளர்ந்து, பின்னரும் தங்கித் தலைநகராகக் கொண்ட ஊரை அறிந்து கொள்வோம். அதன் பின் குழந்தையின் குடிப் பெருமையைத் தெரிந்து கொள்ளலாம்.

    அத்தியாயம் - 2

    ஆலவாயான ஆயர்பாடி

    தாதாடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும்

    மாதாடும் பாகத்தன் வாழ்பதி என்?- கோதாட்டிப்

    பத்தரெல்லாம் பார்மேல் சிவபுரம் போற் கொண்டாடும்

    உத்தர கோச மங்கை ஊர்

    - திருவாசகம்

    (தாதாடு - பூந்தாது உண்ணும்; தத்தாய் - கிளியே; மாதாடும் பாகத்தன் - அர்த்த நாரீச்வரன்; வாழ்பதி - வாழுகின்ற ஊர்; கோதாட்டி - பாராட்டி; பத்தர் - பக்தர்; சிவபுரம் கைலாஸம்; உத்தரகோச மங்கை - ஒரு பாண்டி நாட்டுத்தலம்.)

    சிவ - சக்தியரின் பொலிவு மிக்கது ஆந்திர தேசம். மூன்று சிவ மூர்த்தங்கள் - த்ரி லிங்கங்கள் - எல்லை கட்டுவதாலேயே ‘த்ரிலிங்க தேசம்’ எனப் பெயர் பெற்று, பிறகு ‘தெலுங்கு தேசம்’ எனத்

    Enjoying the preview?
    Page 1 of 1