Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeratha Vilayattu Sai
Theeratha Vilayattu Sai
Theeratha Vilayattu Sai
Ebook166 pages55 minutes

Theeratha Vilayattu Sai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல்லாண்டு முன்பு ஸ்வாமி சென்னை விஜயம் முடித்து "சுந்தர"த்திலிருந்து புறப்படும் சமயம், பிரிவு நெஞ்சைப் பிசைந்தது. சரியாக அச்சமயம் பார்த்து இன்பக் களிப்புச் சொட்டும் மெட்டில் மங்கள வாத்தியம் இசைத்தது.

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்(கு) ஓயாத தொல்லை!

பொடிப் பிள்ளைகளின் மேள கோஷ்டி அதிகுதூஹலமாக வாசித்ததில் நெஞ்சைப் பிசைந்த துயர் பஞ்சாய்ப் பறந்தது. அன்றே "தீராத விளையாட்டு ஸாயி" ஒரு நூலின் முகுடமாக நெஞ்சுளே வந்துவிட்டான்!

இவரும் தொல்லை தருவது போல லூட்டி அடிப்பதுண்டுதான். எனினும் நம் தொல்லையெல்லாம் தீர்க்கும் அன்பின் எல்லையிலேயே இவரது விளையாடல் நம்மைச் சேர்க்கிறது.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580151507945
Theeratha Vilayattu Sai

Read more from Ra. Ganapati

Related to Theeratha Vilayattu Sai

Related ebooks

Reviews for Theeratha Vilayattu Sai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeratha Vilayattu Sai - Ra. Ganapati

    http://www.pustaka.co.in

    தீராத விளையாட்டு ஸாயி

    Theeratha Vilayattu Sai

    Author:

    ரா. கணபதி

    Ra. Ganapati

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ra-ganapati

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    1. மூலாதார கணபதி

    2. விண்ணில் விளைந்த படங்கள்

    3. காவியத்திலும் ஓவியத்திலும்!

    4. சித்ர ஜாலமும் ‘ஜலக்ரீடை’யும்

    5. சித்திரத்தில‘ஸித்தி்’த் திறம்

    6. அற்புதத்துக்கும் உண்டே அன்புத் தாழ்!

    7. சொல்லாத வார்த்தையைக் கேட்டேண்டி, தோழீ!

    8. ‘மாங்காப் பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு!’

    9. பீடிப்பை நீக்கும் பிடிப்பு!

    10. இளைஞரை ஈர்க்கும் இன்காந்தம்

    11. கனத்தை லேசாக்கும் கனவுகள்

    12. பஞ்ச பூதங்களும் பஞ்சாகும்!

    13. மனத்தை உயர்த்தும் மாண்பு லீலை!

    14. அற்புதத்தை விழுங்கும் இனிமை!

    15. உனக்கு ஸ்வாமியைப் பிடித்திருக்கிறதா?

    16. நடைமுறை உலகாம் நாடக அரங்கில்

    17. இரு விதத்திலும் ‘லைட்’டாக!

    முகவுரை

    பல்லாண்டு முன்பு ஸ்வாமி சென்னை விஜயம் முடித்து சுந்தரத்திலிருந்து புறப்படும் சமயம், பிரிவு நெஞ்சைப் பிசைந்தது. சரியாக அச்சமயம் பார்த்து இன்பக் களிப்புச் சொட்டும் மெட்டில் மங்கள வாத்தியம் இசைத்தது.

    தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்

    தெருவிலே பெண்களுக்(கு) ஓயாத தொல்லை!

    பொடிப் பிள்ளைகளின் மேள கோஷ்டி அதி குதூஹலமாக வாசித்ததில் நெஞ்சைப் பிசைந்த துயர் பஞ்சாய் பறந்தது. அன்றே தீராத விளையாட்டு ஸாயி ஒரு நூலின் முகுடமாக நெஞ்சுளே வந்துவிட்டான்!

    இவரும் தொல்லை தருவதுபோல லூட்டி அடிப்பதுண்டுதான். எனினும் நம் தொல்லையெல்லாம் தீர்க்கும் அன்பின் எல்லையிலேயே இவரது விளையாடல் நம்மைச்சேர்க்கிறது. பாரதிப் பாட்டின் இரண்டாம் வரியை

    இந்த ஸாயிக் கண்ணன் விஷயத்தில் உலகிலே அனைவர்க்கும் ஆரன்பின் எல்லை என்று மாற்றி கானம் செய்யவேண்டும்.

    சுந்தரேசுவரனுக்கு அறுபத்துநாலு திருவிளையாடல் போல் பர்த்தீசனுக்கு அறுபத்து நாலாயிரம் கூறிப்புராணம் எழுதலாம். பானைக்குப் பதச்சோறாகச் சிலவே எழுத அருள்பாலித்தான்.

    அவனது அறுபதாம் ஆண்டில் இது கல்கியில் தொடராகவந்தது. எழுபதில் நூல் வடிவம்கொண்டு இப்போது வருகிறது.

    விநோத விளையாடற் கோலத்தில் ஐயனைக் காட்டும் அநேகச் சித்திரங்களுடன் நூலை அருமையாகக்கொண்டு வந்துள்ளனர்.

    சென்னை-600 081

    11.10.95

    ரா. கணபதி

    நன்றி: நிழற்படங்கள் உதவிய ஸ்ரீ ஆர். பத்மநாபன், ஸ்ரீ ஸத்ய ஸாயி டவர்ஸ், புட்டபர்த்தி பாபா ஃபோடோ ஸ்டூடியோ, புட்டபர்த்தி, செயற்கைக் கோளிலிருந்து எடுத்த படம் உதவிய ஸ்ரீ வி. பாலு, ஸ்ரீ ஜி. சங்கரகைலாஸம் மற்றும் ஸாயி சோதரர்கள், படங்களை அழகுற அமைத்துத் தந்துதவிய மணியம் செல்வன்.

    C:\Users\asus\Downloads\Screenshot 2022-11-18 160116-min.jpg

    லீலைக் கோயில் நுழைவாயிலில் நந்தியம் பெருமான் மீது ஆனந்தமாக அமர்ந்த நம் பெருமான்.

    ***

    sai.08-min

    முதல் அத்தியாய மூலாதார கணபதியின் வடிவான களிற்றுக்குத் தீராத விளையாடலா தின்னப்பழம் கொண்டுதரும் காட்சி.

    sai.10-min

    நூலின் குறிப்பிடப்பெறும் செயற்கைக்கோள் எடுத்த புட்டபர்த்திப் பகுதிகளின் படம். அம்புக்குறி காட்டும் வட்டத்துள் ஸ்வாமியின் இடது பக்கவாட்டத் திருமுகம். அவர் பர்த்தியை நோக்குகிறார். படத்தின் கீழ், Baba is looking right at Puttaparthi என்ற வாசகம்.

    ***

    ‘கிளியின் கழுத்து வழியாகவே அதற்குப் பின்னுள்ள ஸ்வாமியின் வலக்கண் நன்கு பதி’வான படம்

    ***

    ‘மாணவனின் மூக்குக் கண்ணாடியை கேட்டு வாங்கித் தாமே அணிந்த’ கோலம்.

    ***

    தமக்கே உரிய புகைப்பட ட்ரிக்குகள் செய்பவர் நெகடிவை நோக்கியே அதை அசல் ப்ரிண்ட் ஆக்கிவிடுவார்!

    ***

    மணமற்ற காட்டு ரோஜாவை மோந்து பார்த்தே அதற்கு மணமூட்டுவார் இந்த ராஜா!

    ***

    ஸ்தூலத்தில் ஸ்வாமி எழுந்தருளா திருக்கும்போதே எடுத்த படங்களில் அவர் நடுநாயகமாகக் காட்சிதரும் படங்களுண்டு என்பதற்குச் சான்று, ஸ்வாமியே எடுத்த இப்படம். 1956-ல் தெலிங்கானாத் தொண்டர்களுடனும் ஸ்ரீ கஸ்தூரியுடனும் பேட்டியறையில் பேசிக்கொண்டிருந்த ஸ்வாமி நாற்காலியை விட்டெழுந்து எதிரேசென்று காமிராவைக் ‘கிளிக்’கினார். காலி நாற்காலியை அடைத்துக்கொண்டு ஸ்வாமியே ‘ஸ்ருஷ்டித்த’ ஸ்வாமி அப்படத்தில் காட்சி தருகிறார்!

    ***

    saisai

    கார்வண்ணனின் கார் விளையாட்டு வண்ணம் காட்டும் இரு படங்கள்.

    ***

    தீரா விளையாட்டர் தமது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விழாவில் கொண்ட எழிற் கோலங்கள்.

    ***

    விளையாட்டு ரஸிப்பில் விகஸித்த மந்தஹாஸ, விஹாஸ, பரிஹாஸ, அட்டஹாஸங்கள்! மேல் புறப்படத்தில் அடி நாக்கும் தெரிவதை அவரே சொல்லி மகிழ்ந்தாராம்.

    ***

    மரத்தில் அமர்ந்த அமரன் பால ஸாயி.

    ***

    Sai

    பால ஸாயி இரு பாலரிடையே முகத்தில் ஸீரியஸ்னெஸ் காட்டினாலும் குறும்புக்காரர் அவ்விளம் வயதில் கைத்தடி பிடித்துள்ளார்! 1968-ல் கிழக்காப்பிரிக்காவில் உல்லாஸப் பயணத்தின்போது வெகு இயல்பாகக் கம்பீரமாகவும், கனிவு மயமாகவும் அபிநயம் பிடித்து விளையாடிய கோலங்கள்.

    ***

    ஜமாயுங்கள், இவ்வுலகைத் தெய்வ விளையாட்டுக் கூடமாகப் புரிந்துகொண்டு! என்கிறாரோ? ஆனால்...

    ***

    புலன் விளையாட்டை வினையாக்கிக்கொண்டு தவிக்கும் நம் துயர் தீர்க்க அவ்விளையாட்டுப் பகவானே தீவிர சிந்தனையோடு அன்பில் கொண்ட கருணைச்சமாதி.

    ***

    அக்கருணையின் இருமையும் நீங்கிய அமைதியில் கொண்ட அத்வைத ஸமாதி.

    ***

    sai

    ஓயாத தொல்லை என்று அலுத்துக்கொள்பவராக அன்றோ காண்கிறார்? ஆம்.

    "தீராத பிரச்னைகள் சள்ளை அதனால்

    பாரார் கொடுத்திடும் ஓயாத தொல்லை"

    அவர் ஆளாகித்தானே வருகிறார்? ஆனால் அதற்கல்ல அவர் அலுத்துக்கொள்வது என்று வலதுபுற நிழற்படம் தெரிவிக்கிறது. பாருங்கள், பக்தி ஸ்வாதீனத்தில் நாம் அவருக்கு பகவானாக முடிசூட்ட முயல்வதையும், அந்த உச்சாணியை விரும்பாத எளிய அன்பு மூர்த்தி இந்தத் தொல்லையையும் எரிச்சலின்றி நாணிக் கோணிக்கொண்டு தடுக்க முயலும் நளின நடனத்தையும்!

    ***

    sai
    Enjoying the preview?
    Page 1 of 1