Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Arubathu
Anbu Arubathu
Anbu Arubathu
Ebook410 pages2 hours

Anbu Arubathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்வாமியின் அன்புகொண்ட அனந்தமான அழகுச் சாயல்களில் நம்மோடு ஒருவராக அவரை ஒட்டுவிக்கும் மானுடமான குளிர் வண்ணங்களை மட்டுமே இந்நூலில் கொடுத்திருக்கிறேன்; அதிமானுடமான சக்தியைக் காட்டும் அன்பின் கண்கூசும் ஜ்வலிப்புக்களை அல்ல. இந்த மானுட ஸாயிபின் மாண்புகளை, மாதுர்யத்தை உலகம் உரியபடி புரிந்துகொண்டு ரஸித்துக் களிப்புற ஓரளவுக்குத் தவறிவிட்டது என்பதே என் கருத்து.

Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580151507935
Anbu Arubathu

Read more from Ra. Ganapati

Related to Anbu Arubathu

Related ebooks

Reviews for Anbu Arubathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Arubathu - Ra. Ganapati

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்பு அறுபது

    Anbu Arubathu

    Author:

    ரா. கணபதி

    Ra. Ganapati

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ra-ganapati

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    1. ஈச்வரம்மா என்ற மனித அம்மா

    2. தாயிடம் தனியன்பு

    3. மகப் பாசம் காட்ட மஹா ஸங்கல்பம்!

    4. தாஸரைத் தாயாக்கினார்!

    5. பெற்ற மனம் அறிந்து

    6. நோய் அருளிய தாய்!

    7. ‘பாட்டி’யும் ‘குழந்தை’யும்

    8. தாய் மனமொன்றுக்குத் தாப சமனம்

    9. இனிமை இறுகிய இறுதி தரிசனம்

    10. அப்பனாய், ஆசானாய்!

    11. தாத்தா - பாட்டி ஸாயி

    12. மாமனார் ஸாயி (மருமகனுக்கு)!

    13. மாமனார் ஸாயி (மருமகளுக்கு)!

    14. ஆறப் பொறுக்காத ஆரன்பு

    15. சிறு மா மணிகள்

    16. இல்லத்தில் ஒருவராய் இழையும் அன்பு

    17. அவரது இல்லத்தில் ஒருவராக

    18. கரிசனத்தின் பூர்ண தரிசனம்

    19. அயலறியா அன்பு வயல்

    20. தொண்ணூற்றாறு வயது வரை

    21. ப்ரேம மஹா மந்திரங்கள்

    22. ஸ்வாமி தயார், தயார், தயார்!

    23. வெப்பம் தூக்கும் மழை

    24. ஸ்வாதீன பக்தி

    25. ஊடல் செய்த பழுத்த ஸுமங்கலி!

    26. ஹம்ஸமான ஸிம்ஹம்

    27. ஆடவைக்கும் அன்பன், பாட வைக்கும் ப்ரேமன்

    28. உழைப்பு நெறியில் இழைக்கும் அன்பு

    29. முரட்டை உவக்கும் நைஸ்!

    30. கழிவிரக்கத்தில் குழையும் மெழுகு

    31. தியாகையர் பாடமாட்டார்!

    32. வி.ஐ.பிக்களும் ஸ்வாமியும்

    33. விலக்கியவரை வென்ற விநயம்

    34. ‘பொத்திக்கொள்ளும்’ ப்ரேமை!

    35. திடீர் ப்ரேமி: அறியாப் பிள்ளை

    36. திடீர் ப்ரேமி: அறிவாளிப் பிள்ளை

    37. திடீர் ப்ரேமி: அறிவாளிப் பேராசிரியர்

    38. ஆண்கள் அழுவதில்லை

    39. ஒரு சித்ரான்னப் படையல்

    40. ‘வெறும்’ அன்பின் பெரும் இன்பம்

    41. தோலும் உரியர் பிறர்க்கு!

    42. கோடரிக்கும் ஆசி தரும் குண விருக்ஷம்

    43. ‘அஜய்’: ஆம், ‘வெல்லவொண்ணாதவன்’தான்!

    44. முயல் ஸாக்ஷி!

    45. வாயில்லா ஜீவன்களின் ஜீவன்

    46. தாளாத் தவிப்பில் மாளா இன்பம்!

    47. தர்ஸ திகாஓ பகவாந்!

    48. ஸாயி - நம் சேவகன், ஆண்டான், குழந்தை!

    49. அன்பு ராஜாவும் ‘அரவிந்த’ ரோஜாவும்

    50. வி.ஐ.பிக்களின் ஸ்வாமியா?

    51. இரங்கி இறங்கி வரும் கங்கை!

    52. ப்ரேமை செய்யும் பக்குவம்

    53. மாதாவைப் புரிந்துகொண்ட மதலைகள்!

    54. ராதிகா

    55. ஸ்வாமியில் கனிந்த ஒரு மாமி

    56. இதயத்தில் இணையும் இன்னடி; சிலுவையில் சிரிக்கும் சிற்றடி!

    57. இதொன்று போதாதோ, இணையிலா இனிமைக்கு?

    58. ‘நன்றி’ உணர்தலில் நல்லன்னையின் நிறைவு

    59. நன்றி கூறலில் நற்றாயின் கூச்சம்!

    60. நன்றியுரை

    முகவுரை

    அன்போ(டு) இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு

    என்போ(டு) இயைந்த தொடர்பு

    என்று தமிழ்மறை மாமந்திரம் கூறுகிறது.

    அரிய ஆன்மாக்களான ‘ஆர் உயிர்’களாகச் சில மஹாபுருஷர்கள் இந்த மேதினியில் காணப்படுகிறார்களே! மூன்வினை ஏதுமிலாத அவர்களுக்கு உலக வாழ்வினை ஏற்படுத்தும் உடல் என்ற ஒன்று எப்படி ஏற்பட்டது? எலும்புக் கட்டியே அவர்களது உயிர் வாழும் சேர்க்கை – என்போ(டு) இயைந்த தொடாபு - எப்படி, எதற்காக, ஏன் ஏற்பட்டது?

    அதுவா? முத்தி நிலையிலேயே தானொன்றாகத் தனித்திருந்து, அதன் மாறா ஆனந்தத்தில் இனித்திருக்க அந்த ஆருயிர்களால் முடியுமாயினும் அவர்களின் ஆன்மாவோடு இசைத்து கரைத்ததாக அன்பு, அன்பு என ஒன்று இருக்கிறதே, அந்த அன்பிலே ஒன்றிய முறைமைதான் – அன்போ(டு) இயைந்த வழக்குதான் - இப்படி ஆன்மாவை என்போடு இசைத்து ஒரு மானுட உருவாக்கி உலகுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

    இப்படி தெய்வப் புலவர் கூறுகிறார். அவர் கூறுவது மட்டுமல்ல. எல்லாப் பெரியோர்களும் இப்படித்தான் கூறியுள்ளனர் என்பதையே ‘என்ப’ என்பதால் அறிவுறுத்துகிறார்.

    ஜீவ குலத்தை தேவ நலத்தில் சேர்க்க வேண்டுமென்ற தூய திரு அன்பால்தான் மஹாபுருஷர்கள், அவதாரர்கள் அவனியில் தோன்றுவது. அவதாரத்துக்கு ஆதார காரணமே உயிர்க்குலத்தின்பால் பரமாத்மாவுக்கு உள்ள அன்புதான்.

    குறள் கூறும் உண்மையை மூர்த்திகரித்தவனே ஸ்ரீ ஸத்ய ஸாயிநாதன். அவன் வாழ்வதே அன்புக்காகத்தான், அன்பு புரியத்தான், அன்பிலே மக்களையும் தேர்ச்சி பெறச் செய்வதற்குத்தான். அவரது சிந்தனையாவும் அன்பில் திளைத்தனவே. அவர் செய்வதெல்லாம், சொல்வதெல்லாம் அன்பினால்தான். அற்புதம் செய்வது அன்பு வழியில் மக்களை இழுப்பதற்குத்தான், அறிவுபதேசம் சொல்வது அன்புருவங்களாக மக்களை ஆக்குவதற்குத்தான்.

    All thoughts, all passions, all delights

    Whatever stirs this mortal frame

    Are but the ministers of Love,

    And feed is sacred flame

    எண்ணம் பலவாய் உணர்ச்சிகள் பலவாய்

    இன்பங் கள்பற் பலவாக

    என்ன என்னஇம் மானுட யாக்கையை

    இயக்கித் தூண்டுவித் திடுமோ

    அத்தனை யும் அன்(பு) எனும்ஆண் டைக்கு

    அர்ச்சக ராயமைத் தவரே!

    அன்பெனும் தூய தீ - அத னைஇவை

    அவிசொரிந் தேவளர்ப் பவையே!

    என்று கோல்ரிட்ஜ் பொது உண்மையாகப் பாடியது, குறிப்பாக ஸ்ரீ ஸத்ய ஸாயிநாதன் எனும் இம்மானுட யாக்கைக்கே முற்றிலும் பொருந்தும்.

    எத்தனையோ ஆயிரம் பக்தர் எவரிடமிருந்து ஒரு வார்த்தை பெற முடியவில்லையோ, எத்தனையோ நூறு அடியார் எவரை அருகிருந்து தர்சனம் பெற முடியவில்லையோ, எத்தனையோ பல ஆர்த்திகள் எவரிடமிருந்து தாம் விரும்பும் வரத்தைப் பெற முடியவில்லையோ அப்படி எட்டாதவராய், அசட்டை செய்யவராக, அருள் மறுப்பவராய் எவர் காண்கிறாரோ அவரைக் காட்டிலும் இவ்வுலகில் அன்புத்தாய் இல்லை; ப்ரேம காந்தனில்லை; ப்ரியக் குழந்தை இல்லை; பரிவு குரு இல்லை; உற்ற உறவினரில்லை; நேச நண்பரில்லை; பாச தாஸரும்கூட இல்லை. பின் ஏன் அவர் மாறாகவும் காண்கிறார் என்றால், அது அவரும் மானுட யாக்கையில் உள்ளபோது கால தேச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதால்தான்! ஆர்த்திகளான நாம் இப்போதே தீர்த்துக் கொள்வதற்கில்லாத காமத்தால் கட்டுப்பட்டிருப்பதால்தான்! நூலின் உள்ளேயும் இவ்விஷயம் கூறியிருந்தாலும் முகவுரையாம் முகப்பிலேயே நினைவுகொள்ள வேண்டியதாகும்.

    * ஸ்வாமியின் அன்புகொண்ட அனந்தமான அழகுச் சாயல்களில் நம்மோடு ஒருவராக அவரை ஒட்டுவிக்கும் மானுடமான குளிர் வண்ணங்களை மட்டுமே இந்நூலில் கொடுத்திருக்கிறேன்; அதிமானுடமான சக்தியைக் காட்டும் அன்பின் கண்கூசும் ஜ்வலிப்புக்களை அல்ல. இந்த மானுட ஸாயிபின் மாண்புகளை, மாதுர்யத்தை உலகம் உரியபடி புரிந்துகொண்டு ரஸித்துக் களிப்புற ஓரளவுக்குத் தவறிவிட்டது என்பதே என் கருத்து. அத்புதராய் விஞ்சை புரியும் ஆற்றல் ஸ்வாமியையும், வாசாலகமாய் உபதேசிக்கும் அறிவு ஸ்வாமியையும் போற்றும் அளவுக்கு, மானுடமாய் நம்மிடை வாழும் அன்பு ஸ்வாமியை உலகம் அறிந்து போற்றவில்லை என்ற கருத்திலேயே, இந்தப் பரம இனிய பாங்கு பக்தர்கள் மனத்தில் குறிப்பாகத் தேங்கி இதம் சுரக்க வேண்டுமென்ற அன்பாசையால் இதை ஆக்கியிருக்கிறேன். இதுவும் அவனது திருவருள் கூட்டி வைத்ததாலேயே என உணர்கிறேன்.

    "பத்துடை* அடியவர்க்(கு) எளியவன்" என்று ஆழ்வாரும்,

    ஈறிலாத நீ எளியை யாகி வந்(து)

    ஒளிசெய் மானுட மாக நோக்கி

    * பத்துடை - பக்தியுடைய

    என்று மணிவாசகரும் கூறிய எளிய மானுட அழகை ப்ரேமாவாதாரியான ஸ்ரீ ஸாயி எப்படியெல்லாம் மிளிர்விக்கிறாரென்பதில் ஏதோ சிறிது காட்டப் புகுவதே இந்நூல்.

    * என்போடு உயிர் பின்னி இயைந்தது போல் அன்போடேயே அற்புதமும் பின்னி இயைந்த ஓரிரு விஷயங்களைக் கூறும்போது மாத்திரம் இந்நூலில் அமாநுஷ்ய வீஞ்சையும் கொஞ்சம் வரும். உதாஹரணமாக 23 - ஆம் அத்தியாயத்தில் செம்மை சேர் ஸாயி வண்ணம் கண்களில் தெரியக் கண்ட நிகழ்ச்சி.

    * ஸ்வாமி செய்யும், சொல்லும், எண்ணும் எல்லாம் அன்பே என்றேன். அவர் நம்மை எண்ணமாட்டேனென்கிறாரே, நாம் வேண்டுவதைச் செய்ய மாட்டேனென்கிறாரே, நம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல மறுக்கிறாரே என்றெல்லாம் நமக்குத் தோன்றும் பல ஸ்ந்தர்பங்களுடே! இதுவுங்கூட அவரது அன்பினால்தான். கர்மாவுக்காக நம்மைப் புடம் போட்டு அந்த தோஷத்தை அகற்ற வேண்டும் என்ற அன்பினால், தவற்றுக்காக நம்மைத் தண்டித்துத் துலக்கும் அன்பினால்தான் இப்படிக் கடுமைபோல் அவர் காட்டிக் கொள்வது. எனவே அவர் செய்யாத எல்லாமும், சொல்லாத எல்லாமும், நினையாத(து போலக் காட்டுவது) எல்லாமும் கூட அன்பினாலேயே அன்றி வேறில்லை இது மறக்கருணை என்பதன் கீழ்வரும்.

    ஒருவிதத்தில் இதையே ஸ்வாமி தமது அசல் அன்பாகக்கூடச் சொல்வார். அடியார் மூன்று ஸம்ஹாரங்களுக்கு உடன்பட வேண்டும்; ஒன்று - உறவு பந்தங்களின் ஸம்ஹாரம்; இரண்டு - வாழ்க்கைத் தேவைகளின் ஸம்ஹாரம்; மூன்று - நற்பெயர், கீர்த்தி ஆகியவற்றின் ஸம்ஹாரம். உடன்பட்டு இம்மூன்று ஸம்ஹாரங்களையும் தம்மிடமிருந்து பெறுவோரே தமது பூரணக்ருபையை, முழு அன்பைப் பெற முடியும் என அவர் கூறுவதுண்டு.

    ஆயினும் அவர் அறுபது நுழையும் நன்னாளில் அசட்டுக் குழந்தைகளான நமக்கு இவ்விதத்தில் கடுநெறியாளராகத் தெரியாமல், அன்புத் தாயாகவே இருக்கட்டுமென்பதால் இந்த ‘ஸம்ஹார மூர்த்தி’யை இங்கே தரிசனம் செய்து வைக்கவில்லை. மணிவிழா ஆண்டில் ஸ்வாமியை மதுர மானுட நெருக்கத்தில் காட்டவே விரும்பினேனாதலால் மறக்கருணையாம் அன்பு வண்ணத்தை இந்நூலில் விஸ்தரிக்காமல் விடுகிறேன்.

    * அறுபதாம் கல்யாணம் என்பதாலேயே அழுகையையும் வெகுவாகக் குறைத்துக் கொடுத்திருக்கிறேன். அன்பின் ஆனந்த பாஷ்பமான அழுகையைச் சொல்லியிருக்கிறேனே அன்றி, புத்ர சோகம் முதலானவற்றை விஸ்தரித்து அவற்றிலே அவரது அன்பு தரும் அதிசய அமைதியை அதிகம் சொல்லவில்லை. ஆயினும்,

    புரு தாசுஷே விசயிஷ்டோ அம்ஹோ

    என வேதமே மந்த்ர வாசகம் கூறுவதுபோல, அடியாருடைய பரம சோகத்திலே அவரைப் போல ஆறுதல் அளிப்பவரில்லை என்பதை இங்கே வலியுறுத்தி (வலிக்காமல், உறுத்தாமல் ஸாயியன்போடு) கூறிவிடுகிறேன்.

    (தெய்வபுத்ரனே மறக்கருணையால் சோகமூட்டி ஈச்வரம்மாவை அழவிட்டதை மட்டும் நூலின் தொடக்க அத்யாயத்தில் சொல்ல வேண்டியதாகி விட்டது.)

    * லட்டுவிலிருந்து தனியாய் ஒரு முந்திரியை, திராக்ஷையை, கிராம்பை, ஏலக்காயை எடுத்துக் காட்டுவது போல, மானுட அன்பின் ஒவ்வொரு சாயலையும் சொல்லும்போது அதன் பாற்படும் சில லீலைகளைத் தனி அத்யாயமாக எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.

    * அன்பினால் அவன் அற்புத ரூபம் கொடுத்த ஓரிரு அடியாரை - பிஞ்சு ராதிகா முதல் பழுத்த மஹாலக்ஷ்மி வரையிலான சில அடியாரை - இதில் ஒரு சில கோடு காட்டிச் சித்தரித்திருக்கிறேன். பகவான் தனது பெருமையைவிட பாகவதரின் பெருமையிலேயே களிக்கிறான் என்கிறார்களே, அதனால்! மேலும், இவர்களைப் பற்றிப் படிப்பது நமக்கும் அவன் அளிக்கக்கூடிய உயர் பரிணாமத்தில் நம்பிக்கை ஒளி ஊட்டுமென்பதால்!

    * முக்தி மார்க்கமாகவே பக்தியை, ப்ரேமையை நம் நாயகன் சாற்றுவதை ஸ்வாமி நூலில் நிறையக் காட்டி, அறிவு அறுபதிலும் கூறிவிட்டேனாதலால், அதன் ஆலாபனை இங்கு இல்லை. ஆயினும், ‘ஒன்றே ஆத்மா; அதன் விரிவே நாம் காணும் உயிர்க்குலம் முழுதும் என்ற உணர்வோடு அனைத்துயிரிடமும் அன்பு பயின்று, அவற்றுக்குக் காரணனான ஈசனிடம் ப்ரேமை புரிந்தால் ஏக ஆன்மாவிலேயே ஒன்றுகின்ற அத்வைத முக்தி பெறலாம்’ என்பதுதான் ஸாயி ஸித்தாந்தம் என இங்கு காட்ட வேண்டியது கடமை. பரமனிடம் பக்தியாகவும், ஜீவர்கள்பால் தொண்டாகவும் உருவெடுக்கும் அன்பினும் பெரிய ஆன்ம ஸாதனையில்லை என்று அவர் நாளும் ஓதுவார்.

    அரவிந்தரும் சொன்னார்: அனைத்து உயிர்களுக்கும் முகுடமாயிருப்பது அன்பே. அதுவே உயிர்கள் பரிபூர்ணத்வம் அடைய வழியுமாகும். ஓர் உயிர் தனது முழு அடர்த்தியையும், நிறை வளர்ச்சியையும், தன்னைத் தானே கண்டுகொள்வதன் பரவசக் களிப்பையும் பெறுமாறு உயர்வது அன்பைக் கொண்டுதான்! தெய்வத்துடைய ஆத்மப் பேரானந்தத்தின் ஆற்றலும் ஆழுணர்ச்சி வேகமும் அன்பே! ஆகையால் ஆண்டவனை அன்பு மார்க்கத்தில் அணுகுவதே அதி உச்சமான ஆன்மிய நிறைவுக்கு ஒருவரைத் தயார்ப்படுத்துவதாகும்.

    அன்பினால் பெறும் அந்த அதி உச்சம் அத்வைத சாந்தியே என்பது பாத்திபதியின் உபதேசம். பார்த்தஸாரதியும் அதையே சொன்னான்: "ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம்ருச்சதி: என்னை அனைத்துயிர்களிடம் அன்பு கொண்ட இதயனாய் அறிந்து (துறவற யோகி) சாந்தியாம் மோக்ஷானந்தம் அடைகிறான்."

    * மஹா தத்வத்தை மானுட இனிமையில் காட்டி வரும் அன்பவதார ஸாயி அதில் சிறிதை இங்கு நான் காட்டி, ஸ்வாமி குறித்து நான் எழுதிய பல நூல்களில் என்னைப் பொறுத்தமட்டில் அதிக பக்ஷ நிறைவுகொள்ள அருளியிருக்கிறான்.

    அவனால் என் அன்பு ஸோதரராகும்

    உங்கள் யாவர்க்கும்

    இந்நிறைவை வேண்டும்

    ரா. கணபதி

    சென்னை

    5.11.85

    1. ஈச்வரம்மா என்ற மனித அம்மா

    அநாதி அன்பு அறுபதாண்டு காண்கிறது என்பது அதற்குப் பிறவி ஏற்பட்ட ஒரு பாவனையைக்கொண்டு தானே? எனவே அதைப் பெற்றெடுத்த பாக்யவதியின் அன்பைத் தலைவாயிலிலேயே தர்சித்து விடுவோம். அன்பில் தலையாயதும் அன்னையுடையது தானே?

    நம்மை நாளும் கவனித்துக் காக்கவே வந்த அன்னைத் தெய்வம் என்று நாமனைவரும் கருதும் ஸ்வாமியை அன்னை ஈச்வரம்மா எப்படிப் பார்த்தாள்? ‘தன்னை அறவே கவனித்துக் கொள்ளாத குழந்தை! பிறரும் தன்னை கவனித்து, தனக்கானதைச் செய்யவிடாத குழந்தை! முக்யமாக அந்தப் பிறரில் தாயென்ற தனியுரிமை பெற்ற நான் கவனித்து வளர்க்க வொட்டாமல் அடம் செய்யும் குழந்தை!’ என்று பார்த்தாள்.

    வாத்ஸல்யம் என்பதான அன்பின் அலாதி வடிவம்!

    எல்லாத் தாய்க்குமுள்ள வாத்ஸல்யமா என்றால் இல்லை. வாத்ஸல்யத்திலுங்கூட இது அலாதி ‘ப்ரான்ட்!’ பிள்ளையையே மரியாதையாய் அவர் என்றுதான் குறிப்பிடுவாள். ஸ்வாமி என்றே கூறுவாள். நேரில் பேசும்போதும் ஸ்வாமி தான்! மீரு போட்டும் பேசுவாள்!

    உலகமறியாத ஒரு விந்தைத் தாய்மையை அந்தப் பரம எளிய ஜீவன் வகித்த நேர்த்தி! அதுவும் அந்த மகன் அநுக்ரஹந்தான் எனவேண்டும்.

    வேளைக்குச் சாப்பிடவே மாட்டேனென்கிறாரே, இந்த ஸ்வாமி! சாப்பிடுவதும் இத்தனூண்டு கொரிக்கிறாரே! அதுகூட, அவர் ருசி தெரிந்த நான் பார்த்துப் பண்ணிப்போட விடமாட்டேன் என்கிறாரே! புலுஸுவும், ஸங்க்டியும், கூராவும் அவர் வாய்க்கேற்ற மாதிரி உப்பு, காரம் போட்டு வேறே யாரால் பண்ண முடியும்? என்று வேதனைப்படுவாள் வாஞ்சைத் தாய்.

    ராப்பகல் இப்படி வேலை செய்கிறாரே! ‘காலில் சக்ரம்’ என்பார்கள் - இவர் காலிலோ மெய்யாலுமே சங்கு சக்ரம் இருக்கிறதே, அதற்கேற்ப ஊர் ஊராய் அலைகிறாரே! அங்கேயெல்லாம் என்ன சாப்பாடோ? என்ன சீதோஷ்ணமோ? என்று அங்கலாய்ப்பாள். க்ராம தேவதைகளை எல்லாம் வேண்டிக்கொண்டு, முத்யாலம்மா, ஸத்யம்மா, போலேரம்மா! இந்த ஸ்வாமி எங்கே போய் எந்த ஆஹாரம் சாப்பிட்டாலும், எந்த ஜலம் குடித்தாலும், எந்தக் காற்றை ச்வாஸித்தாலும் எவரிடையே போனாலும் தீங்கு வராமல் பார்த்துக்கோங்கோ! என்று கைதூக்கிக் கும்பிடுவாள்.

    வத்ஸனைப் பற்றி அம்மாவுக்கு எத்தனை தினுஸுக் கவலை!

    துஷ்ட ஜனங்களின் அஸுயை குழந்தையைத் தாக்கிவிடப் போகிறதே! யாரும் ஏதும் துர்மாந்த்ரிகம் செய்து விடப் போகிறார்களே! விஷம் வைத்துவிடப் போகிறார்களே! என்பது மஹா கவலை.

    இப்படியும் பலர் செய்து தோல்வியே கண்டிருப்பதை அடியாருலகம் அறிந்திருந்தாலும் அம்மாவின் உலகம் வேறாயிற்றே! அதனால் மஹா கவலைப்பட்டாள்!

    அஸுராதிகளை மாய்த்த பாலக் கண்ணனுக்கு அசோதையும் மற்ற ஆய்ச்சியரும் ரக்ஷை செய்ததாக பாகவதம் கூறுவது நினைவில் எதிரொலிக்கிறது!

    அவ்விதழ் ஸநாதன ஸாரதியில் ஸ்வாமி என்ன எழுதியிருக்கிறாரென்று ஒருவரைக் கேட்கிறாள். உபநிஷதமோ, பாகவதமோ அப்போது அவர் எழுதி வந்ததை அவர் சொல்லி, மிகவும் நுட்பமான ஏதோ தத்வத்தை அவர் அபூர்வமாக விளக்கியிருப்பதைச் சிலாகித்துக் கூறுகிறார்.

    அப்போது அம்மாவிலும் அலாதியான இந்த அம்மா ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க’வா செய்தாள்? இல்லை. அவளுடைய கள்ளமறியா முகத்தில் கவலை ரேகைகள்தாம் படர்கின்றன!

    இதற்கேன் கவலை என்றறிய முடியாத அடியார், ஒரு வேளை ஸ்வாமி அற்புதமாய் எழுதுவதை உலகம் பயன் செய்துகொள்ளவில்லை என்று கவலைப்படுகிறாளோ என நினைக்கிறார். ரொம்பப் பேர் பத்திரிகை வாங்குகிறார்கள் அம்மா. ஸ்வாமி ப்ரஸாதமாகவே நினைத்து வாங்கிப் பூஜித்துப் படிக்கிறார்கள். மிகவும் பாராட்டியும் எழுதுகிறார்கள் என்கிறார்.

    நீங்க என்னமோ சொல்றீங்க. ஸத்யம் பத்தாவதுகூட முடிக்காம ஸ்வாமி ஆயாச்சு. பெரிய வேதாந்தத்திலேயெல்லாம் இறங்கறாரே, என்னமாவது சொல்லி பண்டிதங்ககிட்டே மாட்டிக்கப் போறாரே! அம்மாவின் வியஸனம் எப்படி?

    இன்னொரு விசாரம்: "அற்புதம் செய்யறார், செய்யறார்னு சொல்றாங்களே! ஒவ்வொண்ணும் செய்யறச்சே அவர் சக்தி என்னமாக் கொறஞ்சு போகும்?

    நானே கேட்டுண்டிருந்தேன் ஒரு நாள் அவர் பாட்டுக்குப் பேர் பேரா ரொம்பப் பேர் கிட்டே, ‘கவலைப்படாதீங்க! நான் கூடவே இருந்து காப்பாத்தறேன்’னு வாக்குதத்தம் கொடுத்தார். (அந்தப் பொல்லாத பிள்ளை அம்மாவிடமும் இப்படிக் கவலையை விடச் சொல்லி உறுதி கொடுத்திருக்கக் கூடாதோ? கொடுத்திருந்தால் நாம் எப்படி அந்த அலாதித் தாய்மையைக் கண்டு இன்புற முடியும் என்கிறீர்களா?) இப்படி இத்தனை பேருக்குச் செஞ்சா உடம்பு தாளுமா?

    ரவீந்திரநாத தாகூர் ஒரு தாயின் மனஸைப் பாடினார். அவன் நல்ல பிள்ளை என்பதால் நான் அன்பு செய்யவில்லை; ஆனால் என் குட்டிப்பிள்ளை என்பதாலேயே அன்புக்கிடுகிறேன் என்றாள் அத்தாய்.

    நம் தாயுடைய தாயோ, தெய்வப் பிள்ளை என்று நான் இவரைப் பற்றிப் பூரிக்கவில்லை; ஆனால் என்பிள்ளை என்று கவலையேபடுகிறேன் என்று மௌனக் கவிதை சொல்லிக் கொண்டிருந்தாள்!

    தன் பிள்ளையாக தெய்வம் அவளை நினைக்கச் செய்ததுதான் அத்தெய்வத்தின் மானுடப் பேரெழில்! வெளிப்பார்வைக்கு அது எப்படித் தெரிந்தாலும் அதுதான் அன்பு. மானுட அன்பின் எல்லையான தாயன்பை வெளிக்கொணரவே எந்த சக்தி இப்படி விளையாடிற்றோ, அது அன்பாக இன்றி வேறென்னவாயிருக்க முடியும்?

    * ஒரு சமயம் தமிழ்நாட்டில் நாஸ்திகரின் எதிர்ப்பு ஓர் ஊரில் மிகவும் உக்ரமாகவும், அநாகரிகச்சிகரமாகவும் உருவெடுத்தது. அந்த அயனான சமயம் பார்த்து ஸ்வாமி அங்கு செல்ல இருப்பதையும், அவரை அழைத்துச் செல்ல அவ்வூர் பக்தர் கோஷ்டி புட்டபர்த்திக்கு வந்திருப்பதையும் ஈச்வரம்மா அறிந்தாள். அலமாந்து போனாள்.

    பிள்ளைப்பெருமாள் இவள் சொல்லைக் கேட்பதும் கேட்காததும் எப்படியோ போகட்டும், அதற்காகப் பெற்ற தாய் சொல்லாமலிருக்க முடியுமா?

    ஸ்வாமி அப்போது போஜன அறையில் இருந்தார்.

    ‘இந்த வாய்ப்புத் தவறினால் பிறகு எப்போது பார்க்கக் கிடைக்குமோ?" அத்தனை மாடிப்படிகளையும் ஒரே வீச்சில் ஏறி ஸ்வாமி முன்போய் நின்றாள்.

    மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நிற்கும் அம்மாவைப் பார்த்தார் பிள்ளையார். குறும்புப் பதற்றத்துடன், என்ன கலாட்டா? என்ன ஆச்சு? என்றார்.

    நான் என்னமோ கேள்விப்படறேனே, அது நிஜமா? சற்றே கண்டிப்புக் குரலில் கேட்டாள் தாய்.

    பதற்ற நாடகத்தை விட்டுப் பரம நிதான நாடகம் ஆடினார் பிள்ளை. என்ன கேட்டே? சொல்லு. நிஜமா, பொய்யா சொல்றேன் என்றார்.

    நல்ல கண்டிப்புடனே அம்மா சொன்னாள். இதெல்லாம் என்ன பேச்சு? நீங்க இப்ப எங்கேயும் போகப்படாது. போகலைன்னு வாக்குக் கொடுங்கோ.

    விழுந்து விழுந்து சிரித்தார் ஸ்வாமி. இந்த ரூமிலேயே என்னைக் கட்டிப் போட்டுக்கணும், ம்? கிட்டே, தூரே, எங்கேயும் போகிறத்துக்குத்தானே ஸ்வாமி எங்கேயிருந்தேனோ அங்கேயிருந்து இங்கே வந்திருக்கேன்?

    வெளிப்பட அவர் தம் தெய்வத்தன்மையைச் சொல்லியும் அம்மா மானுடத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அதெல்லாம் விஷயமில்லை என்று ஒரே வெட்டாக வெட்டி, இன்னாரோடு அவர் இன்ன இடத்துக்குப் போவதாக ஒப்புக் கொண்டிருக்கிறாரா, இல்லையா என்று மாணவனை ஆசிரியர் கேட்பதுபோலக் கேட்டாள். எனக்குச் சொல்லத்தான் வேண்டும் என்று உரிமையோடு அழுத்திக் கேட்டாள்.

    அழுத்தினாலும் குரல் நடுங்கிற்று. அங்கேபோய் செல்வனுக்குத் தீம்பு, அவமானம் ஏற்பட்டு விட்டால்?

    போறதில்லைன்னு ஸத்யம் பண்ணிக் கொடுங்கோ. நான் சொல்றதைக் கேளுங்கோ கவலையில் உள்ளம் அப்படியே நடுங்கியதில், உரிமையழுத்தம் கலகலத்தது. பரம தீன நிலையில் பேசலானாள்: என் பிரார்த்தனைன்னு நினைச்சாவது கேளுங்கோ. அந்த விரோதி ஜனங்கள் என்ன பண்ணவும் துணிஞ்சவங்களாம். அதனாலே, போகப்படாது.

    மீண்டும் தாயுரிமை முந்தி வர, நான் கூடாதுங்கறேன். நான் கூடாதுன்னா கூடாதுதான் என்று உத்தரவு போலக் கூறினாள்.

    இத்தனைக்கும் ஆட்டம் கொடுக்காமல் ஆட்டுவித்துக் கொண்டிருந்தவர் நிதானமாகச் சொன்னார்: நீ சொல்ற காரணத்துக்காகவேதான் நான் அங்கே போக ஒத்துக் கொண்டிருக்கேன். வியாதி இருக்கிற இடத்துக்குத்தானே டாக்டர் போகணும்? வியாதிக்காரனாலே டாக்டரை என்ன பண்ணிட முடியும்? அம்மா! எனக்கு அவங்ககிட்டே விரோதமேயில்லை. அதனாலே அவங்க என்னை ஒண்ணும் பண்ண மாட்டாங்க. அவங்களோட விரோதமும் போயிடும். எனக்கு அவங்க மேலே கோபமில்லை. அதனாலே அவங்களுக்கும் கோபம் போயிடும்.

    அன்பு அறுபது முதல் அத்யாயத்திலேயே உள்நுட்பத்தைத் தவறவிட்டு, பெற்ற தாயிடம் அன்பு காட்டாதவராகக் கதாநாயகரைக் காட்டியிருக்கிறதே என்று இதுவரை எண்ணியிருந்தாலும், இங்கே பார்க்கிறீர்களல்லவா, அந்த அன்பரே உலகத் தாயாகச் சுரந்த அன்புப் பாலை?

    தீர்மானமாக முடிவு கட்டி விட்டார் பிள்ளையாண்டான். பிள்ளை ஆண்டவன் என்று அம்மா புரிந்து கொண்டாள். இனி என்ன சொன்னாலும் எடுபடாது. என்றாலும் பாசம் விடவில்லை. வழியும் கண்ணீர் வழியே ஸ்வாமியின் நிர்மலமான கண்களை நேரே பார்த்தாள். இதுக்கு மேலே நான் என்ன சொல்றது, பங்காரு? (அவர் கூறும் ‘பங்காரு’வை அவருக்கே திருப்பியழைக்கும் அவளுடைய உறவுரிமைப் பேற்றை என்ன சொல்வது?) எனக்கு இந்த வரம் கொடுக்கக்கூடாதா? அந்த ஊர் பக்தாளைத் திருப்பி அனுப்பக்கூடாதா? என்றாள்.

    ஸ்வாமி எழுந்திருந்தார். அன்பு கொண்ட முழு எழுச்சி அது! தம் மெத்து மனமே உருவெடுத்தாற் போன்ற மெத்துக் கரங்களால் அம்மாவின் கையிரண்டையும் பற்றினார். அந்தப் பரிவில் அவளது கண்கள் தாரை தாரையாய்ப் பெருக்க, தெய்வமகன் திருவிரல்களால் அம்மாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டார். மிக மிக மென்மையாக அவளுக்கு ஆறுதல்மொழி கூறினார்.

    ஆறி விட்டாள் அவளும். அதுதான் தெய்விக அன்பின் சக்தி.

    விசாரமும் பீதியுமாக அறைக்குள் வந்தவள் விச்ராந்தியாய், திருப்தியாய் வெளியேறினாள்.

    ஆனால் மானுட அன்பின் அழகு விநோதம் காண விரும்பிய புதல்வர் அவளை அப்படியே இருக்க விடவில்லை!

    அவர் புறப்படும் நேரம் நெருங்குகையில் மீண்டும் கவலை வலையில் விழுந்தாள். அவரிடம் போய் நிற்பது நிச்சயம் நிஷ்பலனாகும் என்று அறிந்திருந்ததால் அவரிடம் செல்லாமல் அவரை அழைத்துச் செல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1