Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanandha Sai
Aanandha Sai
Aanandha Sai
Ebook203 pages1 hour

Aanandha Sai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் பிறப்பு, வளர்ச்சி, ஆன்மிகப் பயணம், சமுதாயப் பணி, இலக்கியப் பணி என்ற அவரது எல்லா பரிமாணங்களிலும் செய்தி சேகரித்து நூலாக கட்டுமானம் ஆகியுள்ளது. தெளிந்த நீரோடை போன்ற மனத்துடன் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக எடுக்கும் முயற்சிகளையும், அவரது ஆன்மிக விழிப்புணர்ச்சியையும் படிக்கும் போது அவரது அவதாரத்திற்கான காரணம் தானாகவே உங்கள் மனத்தில் விரிவடைய ஆரம்பிக்கும்.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580140409536
Aanandha Sai

Read more from K.S.Ramanaa

Related to Aanandha Sai

Related ebooks

Reviews for Aanandha Sai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanandha Sai - K.S.Ramanaa

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஆனந்த சாயி

    Aanandha Sai

    Author:

    கே. எஸ். ரமணா

    K.S.Ramanaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு விருட்சத்தின் வித்து

    2. புட்டபர்த்தியில் புனித அவதாரம்

    3. பாலகனாய் பிரம்மஞானி

    4. அவதார மகிமையும் அற்புதங்களும்

    5. அவதார புருஷரின் தரிசனம்

    6. பிரசாந்தி நிலையம்

    7. பிரம்மஞானியின் பேரின்பப் பயணம்

    8. எல்லா உயிர்களிடத்தும் பொது நோக்கு

    9. அகிலம் காக்கும் சனாதன சாரதி

    10. ஈஸ்வர அல்லா தேரே நாம்...

    11. கோவிந்த சாயி கோபால சாயி ஆனந்த சாயி!

    12. மனித சேவையே மகேசன் சேவை!

    13. உன்னிலும் நான் உலகிலும் நான்

    14. சர்வமும் சாயி மயம்!

    15. ஆதியும் அந்தமும் இல்லாத நாயகா!

    16. மகானைத் தேடி வந்த மகாராஜாக்கள்!

    17. ஷீர்டி சாயி பிரசாந்திவாசி சாயிராம்!

    18. சத்யம் வத; தர்மம் சர :

    19. உன் திருமுகம் திருப்பி நீ ஒரு முறை பார்த்தால்...

    20. ஓம் ஜெய் சத்குரு தேவா!

    ஓம் ஸ்ரீ சாய்ராம்!

    புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா

    படிக்கும் முன்...

    புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் பிறப்பு, வளர்ச்சி, ஆன்மிகப் பயணம், சமுதாயப் பணி, இலக்கியப் பணி என்ற அவரது எல்லா பரிமாணங்களிலும் செய்தி சேகரித்து நூலாக கட்டுமானம் ஆகியுள்ளது.

    தெளிந்த நீரோடை போன்ற மனத்துடன் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக எடுக்கும் முயற்சிகளையும், அவரது ஆன்மிக விழிப்புணர்ச்சியையும் படிக்கும் போது அவரது அவதாரத்திற்கான காரணம் தானாகவே உங்கள் மனத்தில் விரிவடைய ஆரம்பிக்கும்.

    அவரது அர்த்தமுள்ள அவதாரப் பிறப்பை சிற்சில வரிகளில் சொல்லவும், அவரது ஆன்மிக அற்புதங்களைச் சில பக்கங்களில் அடைப்பதற்கும் நான் யார்?

    என்னால் இயன்ற சில சம்பவங்களையே உங்கள் கண்கள் முன்னால் விவரிக்க முடிந்தது.

    விவரிக்க முடியாத அற்புதம் அவர்!

    நூலைப் படித்தவுடன் ஏதோ ஓர் சாயி பக்தர் மூலம் அவரது வெவ்வேறு அற்புதங்கள் உங்கள் காதுகளுக்கு வந்து சேரும்!

    பசியினால் அழுகிறதா, இல்லை வலியினால் அழுகிறதா என்று தெரிந்து குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் தாயினைப் போல, பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் அன்பு உங்களைத் தேடி வந்து உங்கள் துயர் நீக்கும்!

    பெரும்பாலான ஆன்மிக அன்பர்கள் சாயி பக்தர்களானதற்கு காரணமே அதுதான்!

    பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் பாதார விந்தங்களுக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன்.

    என் பணி முடிந்தது.

    அவரைப் பற்றிய ஆன்மிகத் தேடலை நீங்கள் தான் துவக்க வேண்டும்.

    என்றும் அன்புடன்,

    கே.எஸ். ரமணா

    ***

    ஓம் ஸ்ரீ சாய்ராம்!

    கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில்

    கர்மத்தையும் காண்போன் மக்களுள் மேதாவி;

    அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்!

    - பகவத் கீதை சுலோ - 18. அத் -4.

    1. ஒரு விருட்சத்தின் வித்து

    "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு"

    ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் தெய்வப் புலவர் வள்ளுவப் பெருந்தகை அன்பின் வலிமையை எடுத்துச் சொல்லிச் சென்றார்.

    ஞானபூமியாம் இந்தியத் திருநாட்டில் சமயமும், கலாச்சாரமும் சேர்ந்தே வளர்ந்து வந்தன. இந்து மதம் தனியாக ஒருவரால் படைக்கப் பெற்றதன்று. அது வேதங்களாலும் உபநிஷதங்களாலும் மக்களுக்குப் போதிக்கப்பட்டு அதன் நெறி சார்ந்து வாழும் மரபை மக்களிடையே பரப்ப சமயப் பெரியோர்கள் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

    மக்களிடையே நல்லிணக்கமும், அன்பும் பரிமளிக்க இரு பெரும் இதிகாசங்கள் தோன்றின. மஹாபாரதம், இராமாயணம் இவ்விரண்டு காவியங்களுமே கிரேக்க நாட்டு இலியாட், ஒடிசி ஆகிய நூல்களுக்கு இணையாக வைத்துப் பேசத் தகுதியுள்ள காவியங்களாகும்.

    மன்னர்கள் கடமை, மக்கள் கடமை, மதங்களின் கடமை மற்றும் அற வாழ்விற்கு அடிப்படையான உரிமைகளும், வழி முறைகளும் பண்டைக் கால வேத இதிகாசங்களில் வழங்கப்பட்டவைகளை கதை வடிவில் சொல்லி அதன் சாரம் மக்களின் மனதில் பதியும்படி செய்தனர்.

    இராமாயண, மகாபாரதக் கதைகள் நாடக வடிவில் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு, வேதா சாரங்கள் மக்கள் மனத்தில் விதைகளாகத் தூவப்பட்டன.

    மக்களின் மனத்தில் வேத வித்துக்கள் விதைக்கப்பட்ட போதிலும், அவ்வித்துக்கள் வளர்ந்து செடியாகி, மரமாகி, கனியாகி மக்களுக்குப் பயன் தரும் வரையில் நீர் ஊற்றிப் பரிபாலனம் செய்ய இந்து மதத்தில் அவ்வப்போது மகான்கள் தோன்றி அவர்கள் வாழ்நாள் வரை வேத நெறிகளின்படி வாழ்க்கை நடத்தி வாழும் மக்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

    ஆதிசங்கரர் தன் வாழ்நாள் முழுதையும் சமய நெறி முறைகளைக் கடைப்பிடித்ததுடன் இந்திய நாட்டின் எல்லாத் திசைகளிலும் தன் ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து மக்களிடையே கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது ஆன்மீகப் பயணம் இந்து மதத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்விற்கும் பெரிதும் பயன்பட்டது.

    மக்களை ஒருவரை ஒருவர் பிணைக்கும் விதமாக அன்பு என்னும் தளையை பயன்படுத்தி, தன் வயப்படுத்தி அவர்களை நேரான வழியில் இட்டுச் செல்ல மகான்கள் அவ்வப்போது தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றது தான் இந்துமதம். அதை விளக்குவதற்கு அநேக சாஸ் திரங்கள் இருப்பினும், பகவத் கீதை அந்தக் கோட்பாடு களையெல்லாம் ஒரு முறையாக வகுத்து அவற்றை நடை முறைப்படுத்துவதற்கு எளிதாக வடிக்கப்பட்ட ஒரு யோக வேத நூலாய் உயர் வாழ்க்கைக்கு உற்றதொரு வழிகாட்டியாய் அமைந்தது.

    நல்லது கெட்டது என இரு நிலைகளுக்கும் இடையில் மனப் போராட்டம் நடத்தும் மனிதர்களுக்கு நல்லதை எடுத்துக் கூறவும், தீயதை விலக்கவும் மானுட வடிவில் மகான்கள் தோன்றி மக்களை நல்வழிப் படுத்துகிறார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணன் அன்பின் வடிவாக அர்ஜுனனுக்கு உபதேசித்த உண்மைகளே பகவத் கீதையானது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனின் உபதேசம் தனி மனிதனுக்குச் சொல்வது போல் இருந்தாலும், அது பொது நோக்கில் மானுட சமூகத்திற்கு கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்றையும் சம அளவில் கொண்டு, அதன் நெறி சார்ந்து வாழும் மக்களுக்கு இவ்வுலகிலும், மேல் உலகிலும் அடைய வேண்டிய பேறு கிடைக்கும் என்று வலியுறுத்தும் ஒரு நீதி நூலாகத் திகழ்கிறது.

    கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் இறுதியாகக் கூறும்போது என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய், என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு உறுதி கூறுகிறேன். எனக்கினியான் நீ தர்மங்களை யெல்லாம் அறவே தியாஜித்துவிட்டு என்னையே சரணடைக. பாபங்களனைத்திலிருந்தும் உன்னை விடுவிப்பேன். இதைக் கேட்கும் மனிதனும் விடுதலையுற்று நல்வினையாளர் எய்தும் நல்லுலகங்களை அடைவான்" என மானிட சமூகத்திற்கு ஒரு செய்தியாகவே தெரிவிக்கிறார்.

    இறைவன் அளவிட முடியாத வல்லமையும், அவனது மகிமைகளும், லீலைகளும் சொல்ல முடியாத ஆனந்தத்தை அளிக்க வல்லவையாகவும், அவற்றை அனுபவித்த மனிதர்கள் இறைவனின் மகிமையைப் போற்றியும் வருகிறார்கள்.

    ’ஊழிக் காலத்தில் நான் வருவேன் என ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதையும், நாட்டில் அநீதி அதிகரித்து தர்மம் குறையும் போது அவதாரமாகத் தோன்றி அருள் பாலித்ததாக வரலாறு உண்டு.

    இராவணன் என்ற அரக்கனின் கொடுமை அதிகரித்து தேவர்களுக்கும், கடவுளுக்கும் அதிக இடையூறுகள் கொடுத்து வந்த அவன் பிரம்மனிடம் ’கடவுளாளோ, தேவராலோ தனக்கு இறவா வரம் வேண்டும் என்று தவம் செய்து பெற்று அநீதியான முறையில் ஆட்சி செய்த போது ஸ்ரீ கிருஷ்ணர் அயோத்தியை ஆண்ட தசரத மன்னரின் மைந்தன் இராமனாக மனித அவதாரம் எடுத்து நாட்டிலும், காட்டிலும் நிறைய துன்பங்களைச் சந்தித்த போதும் ’அன்பு என்னும் ஒரு மந்திரச் சொல்லை வைத்து அனைத்து இடையூறுகளையும் முறியடித்து அநீதியின் உருவமான இராவணனை அழித்ததாக செய்தியுண்டு.

    இறைவன் ஷிர்டி பாபாவாக அவதாரம் எடுத்து மக்களின் நல்வாழ்விற்காக வாழ்ந்து மகிமைகள், அற்புதங்கள் நடத்தி முக்தியடைந்தார். இறைவன் அவதாரத்திற்குத் தான் முடிவில்லையே!

    மக்களை மாயையிலிருந்து விலக்கி ஞானத்தின் பக்கம் இட்டுச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக இறைவன் அவதாரங்கள் மூலம் பூவுலகில் தோன்றி, ’தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், இறுதியில் தர்மம் வெல்லும் என்று உணர வைப்பதற்காக வாழவும் செய்கின்றான். ஏனெனில் வேத மரத்தின் வித்துக்கள் விதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.

    இறைவன் முழுமையானவன். அவன் திருப்பாதங்களில் நம்மைச் சரணாகதி அடையச் செய்வதின் மூலம் தீயவைகளிலிருந்து விலகவும், நல்லவைகளின் பால் செல்லவும் நமக்கு வழி புலனாகிறது.

    ஆதியில் ஆன்மீக வாதத்தை அடிப்படையாகக் கொள் ளாமல் தொடங்கிய மனிதச் சிந்தனை, பிற்காலத்தில் பூரணமாக ஆன்மீகத் திசையில் திரும்பி விட்டதற்குக் காரணம் அவ்வப்போது தோன்றும் ஆன்மீக மகான்களின் அவதாரம் தான் என்று கூறினால் அது மிகையாகாது.

    நாத்திகம் மனத்திற்கு அமைதியைக் கொடுக்காது. ஆனால் ஆன்மீகம் மனித மனத்திற்கு ஆறுதலையும், நிம்மதியையும் கொடுக்கிறது.

    ஷிர்டி பாபாவின் அவதாரம் மக்கள் நல்வாழ்விற்குப் பயன்பட்டது போவே, இறைவன் ஷிர்டி பாபாவின் அவதாரமாகவே வாழும் ’புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்கள் ஆன்மிக விருட்சத்தின் வேத வித்தாக, ’ரட்சிக்க வந்த மகானாக எழுந்தருளி மனித சமூகத்திற்கு தன்னாலான கைங்கர்யங்களைச் செய்து வருகிறார்.

    ‘நிர்க்குன, நிரஞ்சன, நிகேதன, சநாதன

    நித்ய, சத்ய, சுத்த, சத்வ, புத்த

    முக்த பரப்ரம்ம ஸ்வரூபர் ஆதி புருஷ

    பர்த்தி நிவாஸ தகஹம் பஜாமி’

    ’என் புகழ் பாடும் இடங்களில் எல்லாம் நான் தோன்று கிறேன் என்று கூறும் சத்ய சாய் பகவானின் அவதாரத்தின் நோக்கம் தான் என்ன?

    ***

    ஓம் ஸ்ரீ சாய்ராம்!

    ஆத்மாவுக்கு இவ்வுடலில் இளமையும்,

    யௌவனமும், மூப்பும் உண்டாவது போல்

    வேறு உடல் எடுப்பதும் அமைகிறது!

    - பகவத் கீதை சுலோ - 13. அத் - 2.

    2. புட்டபர்த்தியில் புனித அவதாரம்

    ஸ்ரீகிருஷ்ணர் ’கலியுகத்தில் அவதாரமாக வருவேன் எனக் குறிப்பிட்டதைப் போல ஷிர்டி சாய் பாபா என்ற அவதானியாக மக்களின் துயர் துடைத்து பூவுடலை நீத்தபின் தன் ஆன்மிகப் பணியைத் தொடரவே புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவாக இப்பிறவியில் அவதாரமாக எடுத்து சத்ய வழியை போதிக்கவும் அதன் வழி நடக்கவும் காரணமாயிருக்கிறார்.

    ஆந்திர மாநிலம் சித்ராவதி நதிக்கு அருகே அமைந்திருக்கிறது புட்டபர்த்தி என்னும் திருத்தலம்.

    ரத்னாகரம் கொண்டமராஜு என்ற தீவிர கண்ணனின் பக்தர். அவ்வூரில் கண்ணனின் தேவியான சத்யபாமாவிற்கு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். அக்கோயில் கட்டுவதற்கு அவர் கண்ட கனவொன்றே காரணமாய் அமைந்தது.

    பெரும்பாலும் கண்ணனுக்கு கோயில் எழுப்புவார்கள். வித்தியாசமாக அவர் கண்ட கனவின் படிமமாக சத்யபாமாவிற்காக பாரிஜாத மலர் பறிக்கச் சென்ற கண்ணபிரான் வரத் தாமதமானதால், இடியும் மின்னலும் தாக்கப் பயந்த சத்யபாமா தங்குமிடம் தாருங்கள்" என்று கொண்டம ராஜுவிடம் கேட்பது போல் அமைந்த

    Enjoying the preview?
    Page 1 of 1