Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kamban Kanda Ramanum Ilangai Thambiyum
Kamban Kanda Ramanum Ilangai Thambiyum
Kamban Kanda Ramanum Ilangai Thambiyum
Ebook122 pages46 minutes

Kamban Kanda Ramanum Ilangai Thambiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கம்பன் ஒரு கடல். கம்பரசம் ஒரு தெவிட்டாத அமுது. பருகியவருக்குத் தான் அதன் பரவசம் புரியும். எத்தனையோ கதை மாந்தர்கள் கம்ப காவியத்தில் உலவினாலும் 'தீயோரில் நல்லவனாய்' விளங்கிய வீடணனின் பாத்திரப் படைப்பை வைத்தே உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. கம்ப காவியம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் போது கிளிஞ்சல்களும், சங்குகளும் சிக்குவதைப் போல எனது படைப்பில் சிற்சில தவறுகள் என் கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கலாம். அதற்கெல்லாம் நானே பொறுப்பு. அறிவுசால் ஆன்றோர் படிக்கும் போது தென்படும் குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். 'தீயோருள்ளும் நல்லோருண்டு', 'அவர்தம் வழி அறவழியாகும்' என்ற கருத்தை விளக்க வேண்டும் என்ற ஒரு உந்துதலில் எழுதப்பட்டது தான் கம்பன் கண்ட இராமனும் இலங்கைத் தம்பியும்! என்ற நூல். இராமனுக்குப் பாலம் அமைக்க மண் சுமந்த அணிலைப் போல கம்பனின் புகழ் சேர்க்க என்னால் முடிந்த சிறுமுயற்சி! பிறப்பால் அரக்கனானாலும், எண்ணத்தால், சொல்லால், செயலால் அறநெறி நின்ற வீடணன், இராமனுக்கு ஏழாவது இலங்கைத் தம்பியாக உருவான விதத்தை விளங்கும் பாங்காய் அமைந்ததாகும்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140406732
Kamban Kanda Ramanum Ilangai Thambiyum

Read more from K.S.Ramanaa

Related to Kamban Kanda Ramanum Ilangai Thambiyum

Related ebooks

Reviews for Kamban Kanda Ramanum Ilangai Thambiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kamban Kanda Ramanum Ilangai Thambiyum - K.S.Ramanaa

    https://www.pustaka.co.in

    கம்பன் கண்ட இராமனும் இலங்கைத் தம்பியும்

    Kamban Kanda Ramanum Ilangai Thambiyum

    Author:

    கே.எஸ். ரமணா

    K.S. Ramanaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டி., ஆசிரியர், அமுதசுரபி மாத இதழ், சென்னை.

    கம்பனை அறிமுகப்படுத்தும் நூல்

    வற்றாத ஜீவநதிகளைப் பன்னெடுங்காலந்தொட்டு பாரதத்தில் ஓடிவரும் இருபெரும் இதிகாசங்கள் ராமாயணமும், மகாபாரதமும். இவ்விரு நூல்களின் பெருமை உலக அளவில் பேசப்பட்டு வரும் காலம் இது.

    அதிலும் ராமாயணம் பிறந்த நாட்டில் பிறந்தது குறித்து ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட வேண்டும். உலகின் ஒட்டு மொத்த அறநெறியையும் தன்னில் தாங்கி ஒவ்வொரு மனிதனையும் பண்படுத்தும் வகையில் அந்த இதிகாசத்தின் கதைப்போக்கு அமைந்திருப்பது வியக்கத்தக்க ஒரு சாதனை.

    ஆதிகவியான வால்மீகிக்குத் தான் இந்தச் சாதனையின் பெருமை உரியது என்றாலும், பல்வேறு மொழிகளில் ராமாயணத்தை ஆக்கிய மற்ற கவிகளும் கூட, தாங்கள் அந்தக் காவியத்தில் பொருத்தமுற இணைத்த புதுமைகள் காரணமாக இந்தச் சாதனையில் பங்கு கொள்கின்றனர்.

    சமஸ்க்ருதத்தில் ஆதிகாவியமான வால்மீகி ராமாயணம் எழுந்த பின்னர் அதை அடியொற்றி, காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் பற்பல ராமாயணங்கள் பாரதத்தின் பல மொழிகளில் இயற்றப்பட்டன. வடக்கே இந்தியில் துளசிதாசர், தெற்கே மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சன் என எத்தனையோ இலக்கியவாதிகள் பக்திரசம் ததும்ப ததும்ப ராமகாதையைப் பாடி மகிழ்ந்தனர்.

    தென்னிந்திய ராமாயணங்களுள் பெரும்புகழ் பெற்று விளங்குவது கம்பராமாயணம். 'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்றும்,'கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்' என்றும்,'கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவனைப் போல்' என்றும் பலவாறாகப் பாரதியைப் பெருமிதம் கொண்டு பாட வைத்தது கம்பன் கவி. கவிஞர்கள் தமிழில் பலர். ஆனால் கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒருவன் மட்டுமே.

    அண்மைக் காலத்தில் இந்தக் கம்பராமாயண காவியத்தில் தோய்ந்தவர்கள் டி.கே.சி. முதல் எத்தனையோ பேர். கம்பன் அன்பர்களின் வரிசையில் 'கம்பன் கண்ட இராமனும் இலங்கைத் தம்பியும்' என்ற புத்தகத்தின் மூலம் இணைகிறார் எழுத்தாளர் கே.எஸ். ரமணா.

    கம்பனை முழுதும் படித்து எளிய நடையில் பன்னிரண்டு கட்டுரைகளில் கம்பன் கவிநயத்தை ஆராய்கிறார். ஆங்காங்கே பொருத்தமான பல மேற்கோள்களுடன் இந்தக் கட்டுரை நூல் நடக்கிறது.

    வீடணன் ராவணன் மேல் வெறுப்புற்றானில்லை. பாசத்தை விட தர்மத்தைப் போற்றியவன் அவன் என்பது போன்ற கருத்துகளை நிறுவுவதில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

    ஆரம்ப காலத்தில் தமக்கு உதவிய திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலை ஆயிரம் பாட்டிற்கு ஒருமுறை நன்றியுடன் கம்பர் நினைவு கூர்கிறார் என்ற செய்தியிலிருந்து ஏராளமான செய்திகள் கவனத்துடன் ஆங்காங்கே சொல்லப்படுகின்றன. இலியட், ஒடிசிக்கு நிகரான காப்பியம் கம்பராமாயணம் என்று சொல்வதும், கம்பன் கழகங்கள் நாடெங்கிலும் தோன்றுவதற்குக் காரணமான காப்பியம் இதுவே என்று சொல்வதும் குறிக்கத்தக்கன. அரசியல் சார்பின்மை, மதச் சார்பின்மை இவையெல்லாம் கம்பன் கவியின் பெருமைகள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. புறநானூற்றிலேயே ராமாயணக் குறிப்பு உண்டு என்பது முதல் பல தகவல்களை ஆசிரியர் ஆங்காங்கே பெய்து எழுதிச் செல்கிறார்.

    கம்பராமாயணம் குறித்துப் பலவகை நூல்கள் வெளிவர வேண்டிய தேவை தமிழில் உண்டு. வ.சுப. மாணிக்கம் எழுதிப் புகழ் பெற்ற கம்பர் என்ற நூல் ஆய்வு நூல் என்ற வகையில் கொண்டாடத்தக்கது.

    கே.எஸ். ரமணா எழுதியுள்ள நூலைக் கம்பன் குறித்த ஆய்வு நூல் என்று கொள்ள இயலாவிட்டாலும், பொதுமக்களுக்கான அறிமுக நூல் என்று கொள்ளல் தகும்.

    கம்பன் பற்றிப் பரவலாகப் பலரும் அறியாத சூழலே இன்று நிலவுகிறது. ஆங்கில வழிக் கல்விக்குத் தமிழர்கள் அடிமையான பின்னர் தமிழ் இலக்கியங்களைக் கற்பார் எண்ணிக்கை பெரிதும் குறைந்து விட்டது. இத்தகைய வருந்தத்தக்க சூழலில் பலரிடமும் கம்பராமாயணம் பயில வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதில் இது போன்ற நூல்களுக்குப் பங்குண்டு. அந்த வகையில் இந்நூல் குறிப்பிடத்தக்கதாகிறது. நூலாசிரியருக்கு இன்னும் சிறந்த பல நூல்களை எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு மறவாத,

    திருப்பூர் கிருஷ்ணன்.

    முனைவர் பால. இரமணி நிகழ்ச்சி நிர்வாகி, சென்னைத் தொலைக்காட்சி நிலையம், சென்னை 600 005.

    கம்பனுக்குக் கிட்டிய கவித் தம்பி

    கம்பனின் காவியத்தில் மனம் திளைத்து ஊறி முத்தெடுக்கும் தொழிலைச் செம்மையாய் ஆக்கி நம்மை அதிசயப்படுத்தியிருக்கிறார் கவிஞர் கே.எஸ். ரமணா. சிலவிடங்களில் ரமணா, ராமனா? என்றாகிய நிலையையும் இந்த நூல் முழுதும் காணப் பெறுகிறோம்.

    இராம காதையை எளிமையாக்கித் தருகிற முயற்சி என்பது இமயத்திற்குக் குடை பிடிக்கும் பணியைப் போன்றது. கவிஞர் ரமணா அப்பணியைச் சிறப்புறவும் செறிவுறவும் செய்திருக்கிறார்.

    கம்பன் காட்டிய அலகுகளைக் கொண்டே சிறகுகள் செய்து பறந்து பார்க்கிற ஆற்றல் இவருக்கு இயல்பாய் அமைந்துள்ளது. இந்தச் சித்தரிப்பு சற்று வியப்பின் விளிம்பைத் தொட்டும் பார்க்கிறது.

    இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழகத்தின் செல்வ வளர்ச்சியைக் குறித்து எழுந்தவை. சீவக சிந்தாமணி, விருத்தப்பாவில் அமைந்த காப்பியம் என்றாலும் பாமர மக்களுக்குப் பொருந்துமாறு அமையவில்லை. ஆயின், கம்பன் உருவாக்கிய கம்பராமாயணம் என்றென்றும் மக்கள் காப்பியமாகவே அமையப் பெற்றது. பொதுவுடைமை என்பதை அனைவருக்கும் பொதுவில் வைத்த மாக்கவிஞன் கம்பன். வடமொழி மூலத்தைக் கொண்டு தமிழ்மொழி ஞாலத்தை உலகுக்குக் காட்டிய உயர்கவி கம்பன்.

    எனவேதான், கே.எஸ். ரமணா போன்ற தமிழின்பால் ஈடுபாடு மிகக் கொண்டவர்களுக்குக் கம்பனின் கரம் பற்றி நடப்பது களிப்பைத் தருகிறது. ஆதலால் ரமணாவின் நடையிலும் கம்பனின் சாயல் அதிகமிருக்கிற அதிசயத்தைக் காணலாம்.

    கம்பன் கண்ட இராமன், தெய்வத் தன்மை மிக்கவன். அயோத்தியின் நம்பிக்கை விண்மீனாகத் திகழ்ந்தவன்.

    'சீற்றம் இலாதானைப் பாடிப் பற

    சீதை மணாளனைப் பாடிப் பற'

    என்று பெரியாழ்வார் புகழக் காண்கிறோம். அத்தகு இராமனோடு இலங்கையில் உதித்த இராவணத் தம்பியர்களை அறிமுகப்படுத்துகின்ற பெரும் முயற்சிதான் இந்த நூல்.

    'தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்னும் முதுமொழி வழியில் இல்லாமல், படைக்கு அஞ்சிய தம்பிகளே இலங்கைத் தம்பியர் என்பதை உள்ளோட்டமாக உரைக்கின்றது இந்த நூல். 'அரக்கர்களில் அறவோனாக' வீடணனையும்,'செஞ்சோற்றுக் கடனாளியாக கும்பகர்ணனையும் எடுத்துக்காட்டுகள் பலவற்றால் எடுத்தியம்பும் இந்நூலாசிரியர் இராவணனின் அரும்புதல்வன்

    Enjoying the preview?
    Page 1 of 1