Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - May 2020: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - May 2020: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - May 2020: Rali & Thamizh Inbam
Ebook46 pages15 minutes

Rali & Thamizh Inbam - May 2020: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

விந்தையன் நந்திமுன் உள்ளவன் முன்னோர்க்கும்
முந்தையன் பிள்ளையார் பிந்திவந்த கந்தனுக்கும்
தந்தையன் 

 

குருந்தமரம்‌ கீழே விளங்குவான் மூவா
மருந்தென வாழ்வில் பழைய வினைகள்
தருந்துயர் தீர்த்து அருள்வான்

 

கூற்றதனை மாற்றுபவன் நாற்றிசையும் போற்றுமறைக்
கூற்றதனை சாற்றுபவன் தோற்றமிலான் - சீற்றமிலான்

 

ஆகமத்தின் சாரமே ஐந்தெழுத்து மந்திரம்
ஏகமான எழுத்துமாய் உள்ளொளிரும் மந்திரம்

 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை
இகழ்வாரும் தீங்கின்றி வாழ அருளுவான்

 

மாதங்கள் மறைந்தன மீதங்கள் கரைந்தன
காதங்கள் நடந்தும் பாதையிலோர் ஒளியிலை 

 

பெண்ணிடம் தன்மேனி பாதியைத் தந்தவன்
மண்ணிடம் பாயநதி கங்கையை‌ ஏற்றவன்
கண்விழி சற்றே திறந்தன்று காமனை
வெண்பொடி ஆக்கினான் போற்றி.

Languageதமிழ்
Release dateJul 24, 2020
ISBN9781393752073
Rali & Thamizh Inbam - May 2020: Rali & Thamizh Inbam
Author

Rali Panchanatham

ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர்.  ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !

Read more from Rali Panchanatham

Related to Rali & Thamizh Inbam - May 2020

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - May 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - May 2020 - Rali Panchanatham

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    V. கல்யாணராமன் (VKR)

    S. சுரேஷ்

    K. நாகராஜன் (KN)

    B. சாந்தி

    ––––––––

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து 2020  மே மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    ஸ்ரீவத்சன்

    ––––––––

    "பக்திப் பெருக்கில் எந்தன் ஊனுருக அந்தப்

    பரவசத்தில் உள்ளே உயிர் உருக

    சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக..."

    என ‘சுந்தரத்’ தமிழில் ‘மாபெரும் கவி மன்னன் ஆகிய நம் கவிஞர் சிவனை ஒரு திரைப்பாடலில் வர்ணித்திருப்பார்.

    எண்ணிக்கையில் ஐம்பது மாதப் பதிவுகளைக் கடந்து இணையத்தில் கோலோச்சி வரும் தமிழின்பம் குழுவின் பதிவுகள் இக்கூற்றை மெய்ப்பிப்பது போல் நம்மை பக்தி இலக்கியத்தில் பரவசப்படுத்துகின்றன.

    இந்தக் கவிஞர்களின் பதிவுகளில் இன்னும் தளராத உற்சாகத்தையும், புதுமை தேடலையும் காண முடிவது இதற்கான

    Enjoying the preview?
    Page 1 of 1