Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Feb 2020
Rali & Thamizh Inbam - Feb 2020
Rali & Thamizh Inbam - Feb 2020
Ebook89 pages32 minutes

Rali & Thamizh Inbam - Feb 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" நிலையாக நின்றுவான் முட்டும்‌ இமய
  மலைநிலவு மங்கை உமையின் மணாளன் "

 

" ஈரம் படைத்தவன் ஓரரை தேகத்தில் 
  தாரம் படைத்தவன் ஈரரைச் சொல்லதன் 
  சாரம் படைத்தவன் "

 

" நஞ்சுடை அரவம் நாரணன் அயர்ந்து
   நஞ்சுக் கொடி தன்னில் நான்முகனைக் கொண்டான் "

 

" ஆணும் அவன் பெண்ணும் அவன்
  விண்ணும் அவன் மண்ணும் அவன் "

 

" விண்ணப்பன் பண்ணப்பன் செவ்வான வண்ணத்தன்
  மண்ணப்பன் பொன்னொப்பன் மின்னொப்பன் " 

 

" கோதையவள் தமிழால் காதலித்த நாயகன்
  வேதமுனி பசி நீக்கும் சோதனையைத் தீர்த்தவன் "

 

" கம்பத்தில் உதித்தவன் கம்பனை ரசித்தவன்
  வம்புக்கு வந்தவனை வதமங்கு செய்தவன் "

 

Languageதமிழ்
Release dateJul 13, 2020
ISBN9781393295099
Rali & Thamizh Inbam - Feb 2020
Author

S Suresh

S. Suresh   பொருள் விளங்கு சொல் தேடும் யதார்த்த கவிஞர் Avid reader of Tamil literature born in a family with Tamil literary background, with interest in street plays and theatre. Designed and published small magazines. Has a unique style of communicating views on issues.

Read more from S Suresh

Related to Rali & Thamizh Inbam - Feb 2020

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Feb 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Feb 2020 - S Suresh

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    S. சுரேஷ்

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    K. நாகராஜன் (KN)

    ––––––––

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து 2020  பிப்ரவரி மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    ராம்குமார் ஸ்ரீநிவாஸன்

    நண்பர் திரு ராமலிங்கம் (ராலி) தங்களது தமிழின்பம் குழுவின் மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கு அணிந்துரை எழுதக் கேட்டார்.

    மூன்றிற்கும் பொதுவாக ஒன்றை எழுத எண்ணித்தான் கவிதைகளைப் படிக்கத் துவங்கினேன். கவிதை தந்த ரசனை, உரையை மூன்று அணிகளாகப் பிரித்து விட்டது.

    தன் நண்பர்களுடன் இணைந்து இவர், ‘ராலி & தமிழின்பம் கவிதைக் குழு’ ஒன்றை tamizhinbam.wordpress.com இணைய தளம் மூலம் நடத்தி வருகிறார். ராலி என்று தேடுங்கள். குழுவினர்கள் நெட்டை ஆக்கிரமித்து நடமாடுவது தெரியும்.

    பத்துக்கு மேற்பட்ட பங்காளர்களை (Stake holders) கொண்ட மாபெரும் வரவு தரும் நல்ல பிஸினெஸ்.

    வரவு:   தமிழும் அறிவும் மகிழ்ச்சியும் நட்பும் சுகமும்

    செலவு:   மூளையும் நேரமும் பணமும்.

    இங்கு காணும் கவிதைகள் பொழுது போக்குப் படைப்புகள் மட்டும் அல்ல. அவை(யின்) சிந்தை தூண்டி சித்தம் சீராக்கும் விந்தை வரிகள், கொண்டவை. இன்றையக் காலக் கட்டத்துக்கு ஏற்ற குழு.

    பிரளயம் வரும் பொழுது தமிழைக் காத்து ஆலிலையான் அனுப்பும் படகிலேற்ற முன்னெச்சரிக்கையுடன் கலியின் ஆரம்பித்திலேயே உருவான கணினி காலத்துத் தமிழ்ச் சங்கம். வாருங்கள், இன்பமாய் வாழ்த்தி வளர்ப்போம். 

    ஓவ்வொரு மாதத்தின் படைப்பையும் ஒரு தொகுதியாக (பாகமாக) அச்சேற்றும் பாணியை தமிழின்பத்தார் கடை பிடிக்கின்றனர்.

    ‘கங்கை முடி மேலணிந்து என் உளமே புகு’கின்ற சிவனை வெண்பாவில் பாடி, அகலமும் ஆழமும் கனமும் நிறைந்திருந்தாலும், ஆர்ப்பரிக்காமல், தெளிவாக ஓடும் கங்கையைப் போல் – இணையத்தை, அழைத்துச் செல்லும் ராலி; கை கொடுத்துப் பாவிசைக்கும் ராஜகோபாலன் (BKR);

    ––––––––

    மற்றவர்கள், கவிமழையில் முங்குவது போல இந்த இன்ப கங்கையில் மூழ்கி எழும்போது – முதலைகள் (சொற்குற்றம் பொருட்குற்றம்) ஜாக்கிரதை – என்று சொல்லி, கையில் பிரம்புடன் கரையில் அதே BKR.

    கரையோரம் நின்று வேதம் ஓதும் அந்தணர் போல, பாக்களால், பகவனை அர்ச்சிக்கும் பன்னிருவர் போல இந்தக் குழுவின் அங்கத்தினர். இதில் மங்கையும் உண்டு, மங்கையாழ்வானும் உண்டு, ராலியுடன் மோத அவ்வப்போது வரும் ஆழ்வார்க்கடியானும் உண்டு.  மனதினுள் கவி பாடி, வெளியே சொல்லாமல் மற்றவரின் தமிழை ரசிக்கும் அன்பர்களும் உண்டு.

    ஹரித்துவாரமும் ரிஷிகேசமும்; காவிரியையும் ஸ்ரீரங்கத்தையும் கையோடு அழைத்து வரும், சுக சங்கமங்கள்.

    ஒவ்வொரு மாதமும் யாரேனும் ஒருவர் ஹீரோவாக உருவாகிறார். நான் பார்த்த மூன்று மாத இதழ்களில், ஒன்றில் ராலியும் (தெக்காலம்) மற்ற இரண்டில் சுரேஷும் (திருவடிப்பாவை, கந்தலஹரி) ஹீரோ.

    போட்டியில்லை. பொறாமையில்லை. ஜோராகக் கை தட்டி, மற்ற உறுப்பினர் தரும், உற்சாகம் – இந்தச் சங்கம் வளர்வதைக் காட்டும் கரகோஷம்.

    கந்தலஹரி:

    ‘லஹரி’ என்றால் பிரவாஹம், அலை, பெரிய அலை. திருவடிப்பாவை தந்த சுரேஷின் ‘கந்தலஹரி’, ஒரு சுகப்ரவாகம்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும், 71 பாக்கள் பதிவாகியுள்ளன. அடுக்கடுக்காக அலை வீசிப் பொங்கி வரும் பிரவாகமாய் வந்த பாக்களால் சூரனை செந்தூரான் துணித்த கதை முதல் அறுபடை வீட்டையும் பாட்டில் வைக்கும் காதை.

    இடையிடையே, சந்தம் மாற்றிச் சொன்னாலும், கந்தன் மேல் சிந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1