Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanda Lahari: Rali & Thamizh Inbam
Kanda Lahari: Rali & Thamizh Inbam
Kanda Lahari: Rali & Thamizh Inbam
Ebook63 pages16 minutes

Kanda Lahari: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்னை பராசக்தியின் அழகு வெள்ளத்தை 'ஸௌந்தர்யலஹரி' என்று ஆதி சங்கரர் பாடினார். 'லஹரி' என்றால் வெள்ளம். 

 

இதுவோ "கந்த லஹரி".  

 

கந்தக் கடவுளின் அன்பும், ஆற்றலும், அருளும், பெருமையும் வெள்ளமென இந்நாள் கவிஞரான திரு, சுரேஷின் கவிதைகளில் பாய்கிறது. 

 

முருகன் என்றாலே அழகன். எனவே இதுவும் அழகு வெள்ளமே..

 

கந்த லஹரி -  கந்தன் எனும் மந்திரத்தை கவினுரு தமிழால் புனைந்து நக்கீரர் தமிழ்க் கடவுளின் மகிமையை "ஆற்றுப் படுத்தி" (வழிப்படுத்தி) ஆறு பகுதிகளாக "திருமுருகாற்றுப் படை ஈந்தது போல், கச்சியப்ப சிவாசார்யர் இயற்றிக் குமர கோட்டத்தில் அரங்கேற்றிய கந்த புராணம் எனும் கந்தன் சரிதையை கவிஞர் மாத்திரை (capsule) வடிவத்தில் அளித்துள்ளார்.

 

சரவணப் பொய்கையில் உதித்தெழுந்த அறுமுகங்களைப் போலவே கவிஞர் தனது கவிதைப் பொய்கையில் பிரவகித்து எழுந்த வரிகளைச் சேர்த்தணைத்து கவிதையாக்கித் தந்திருக்கிறார்.

 

இந்தக் கவிதைத் தொகுப்பில் திரு, சுரேஷ் கந்த லஹரியுடன் தனது மற்ற கவிதைகளான 'ஆடியின் நாயகி', 'சிவனார் அமுதம்', 'திருவடிப் பாவை', 'ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பஞ்சகம்' ஆகியவற்றையும் இணைத்துத் தந்திருக்கிறார்.

சரவணப் பொய்கையில் வந்த குஹனில் துவங்கி மடை திறந்த வெள்ளமெனப் பெருகி வரும் அன்னையின் அன்பு மழையில் நனைந்து, கடல் வண்ணனைக் கண் குளிரக் கண்டு, கங்கை சிரம் கொண்டானைக் கொண்டாடி, வைகை நதி பெருகக் காரணமாய் அமைந்த மல்லிகை நாயகியின் திருமணத்தில் நம்மை மகிழ்வித்து இறுதியில் மோன குருவாம் காஞ்சி முனிவரின் ஞான ஊற்றில் நம்மைத் திளைக்க வைத்திருக்கிறார்.

Languageதமிழ்
Release dateJul 24, 2020
ISBN9781386677956
Kanda Lahari: Rali & Thamizh Inbam
Author

S Suresh

S. Suresh   பொருள் விளங்கு சொல் தேடும் யதார்த்த கவிஞர் Avid reader of Tamil literature born in a family with Tamil literary background, with interest in street plays and theatre. Designed and published small magazines. Has a unique style of communicating views on issues.

Read more from S Suresh

Related to Kanda Lahari

Related ebooks

Related categories

Reviews for Kanda Lahari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanda Lahari - S Suresh

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    அணிந்துரை

    ஹெச்.என்.ஹரிஹரன்

    மூவிரு முகங்கள் போற்றி.

    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியின் அருகில் உள்ள திண்டுக்கல்லில் வசித்து வரும் நண்பர் கவிஞர் சுரேஷ் அவர்கள் தாம் எழுதிய ‘கந்த லஹரி’ எனும் நெடுங்கவிதைக்கு அணிந்துரை எழுதப் பணித்திருக்கிறார். நிதமும் நான் வணங்கி நிற்கும் கந்தனின் அருளினால் இப்பணி வாய்த்திருக்கிறது என்றெண்ணி பேருவகை அடைகின்றேன்.

    பதினெண் புராணங்களில்  ‘கந்த புராணம்’ ஒன்று. இவற்றைப் பாடியவர் வியாச முனிவர் ஆவர். மற்றைய புராணங்களைக் காட்டிலும் ‘கந்த புராணம்’ அளவிலும் மகிமையிலும் சிறந்தது என்பர் சான்றோர். அதையே தமிழில் கச்சியப்ப சிவாச்சாரிய ஸ்வாமிகள் நமக்கு ‘கந்த புராண’மாக ஆறு காண்டங்களாக்கித் தந்திருக்கிறார். (ஏழாவதான ‘உபதேச காண்டம்’ குகனேரியப்ப முதலியார் எழுதியது.)

    ஞான பண்டிதனான முருகப்பெருமான் மும்மலங்களைக் கொன்று (ஆணவ மலம்- சூரபத்மன், கன்ம மலம்- சிங்கமுகன், மாயா மலம்- தாரகன்) ,தேவர்களைப் பந்தத்தினின்று விடுவித்தார். முருகன் கையில் தாங்கியிருக்கும் வேல் ஞானத்தின் அடையாளம்.

    ‘லஹரி’ என்றால் அலை, பிரவாகம் என்று அர்த்தம். தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் ‘கந்த புராணம்’ நமக்கு தந்தருளியிருக்கிறார்.  சரவணப் பொய்கையில் உதித்தெழுந்த அறுமுகங்களைப் போலவே கவிஞர் தனது கவிதைப் பொய்கையில் பிரவகித்து எழுந்த வரிகளைச் சேர்த்தணைத்து கவிதையாக்கித் தந்திருக்கிறார்.

    ராலி & தமிழின்பம் எனும் வாட்ஸப் குழுவில் தமிழ் அன்பர்கள் எழுதிப் பகிர்ந்து கொண்ட கவிதைகளைத் தொகுத்து அவர்களே Kindle ebook ஆக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் ஐம்பது தொகுப்புகளை வெளியிட்டுள்ள பதிப்பாளர் திரு ராமலிங்கம் (ராலி) அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘கந்த லஹரி’ எனும் இத்தொகுப்பும்  இணையத்தில் வரவிருக்கிறது.

    விநாயகர் துதியுடன் துவங்கும் ‘கந்த லஹரி’, எளிமையான சொல்லாடலுடன் அனைவருக்கும் படைக்கப்பட்டிருக்கிறது. கந்தவேளே எடுத்துக் கொடுத்த ‘திகடச்சக்கரம்’ எனும் முதல் வார்த்தையினால் கச்சியப்பருக்கு நேர்ந்தது போன்ற  சர்ச்சைகள் நிச்சயம் கவிஞருக்கு நிகழாது. பல வருடங்களாக திண்டுக்கல்லில் இருந்து பழனிக்குப் பாதயாத்திரை செல்பவருக்கு முருகனே முன்னின்று ஆட்கொண்டு முதல் வார்த்தை மட்டுமின்றி  முழுவதற்குமே அருட்செய்திருக்கிறார் என்பது மிகையில்லை.

    எளிய சொற்களும், உவமைகளும், நடையுமாக இக்கவிதை நூல்

    Enjoying the preview?
    Page 1 of 1