Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siddhargalin Sorga Bhoomi
Siddhargalin Sorga Bhoomi
Siddhargalin Sorga Bhoomi
Ebook196 pages1 hour

Siddhargalin Sorga Bhoomi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகான்களின் பிறப்பும் வளர்ப்பும் அவர்களுக்கு ஞானம் தேட காரணமாய் அமைந்த சூழல்களும் ஞானம் சித்தியாகிய விதமும் நாம் படிக்கும்போது வியப்பையும் ஆச்சர்யத்தையும் உண்டாக்குகின்றன. இதில் இடம்பெற்றுள்ள ஜீவசமாதிகள் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்து ஜீவசமாதிகளுக்கும் நேரில் சென்று அங்கு சந்தித்த அனுபவங்களே இந்தத் தொடரை எழுத எனக்கு உந்துதலாய் இருந்தது, என்பதே உண்மை!

பல ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கி வந்ததோடு, அந்த மகான்களின் வரலாறு உங்களுக்காக...

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580158109036
Siddhargalin Sorga Bhoomi

Related to Siddhargalin Sorga Bhoomi

Related ebooks

Reviews for Siddhargalin Sorga Bhoomi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siddhargalin Sorga Bhoomi - R. Panneerselvam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சித்தர்களின் சொர்க்க பூமி

    Siddhargalin Sorga Bhoomi

    Author:

    ரா. பன்னீர் செல்வம்

    R. Panneerselvam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-panneerselvam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    கோரக்க மகாசித்தர்

    சதாசிவ பிரம்மேந்திரர்

    சேஷாத்ரி சுவாமிகள்

    பதவிகளைக் கொடுக்கும் திருத்தலம்

    ஸ்ரீ கசவன ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள்

    கடப்பா சித்தர்

    மூவர் சமாதி

    வள்ளிமலை சுவாமிகள்

    சிவநாகலிங்க சித்தர்

    சத்தியமூர்த்தி சுவாமிகள்

    பழனிக்கு செல்லாத பாம்பன் சுவாமிகள்

    கோபாலசித்தர் - சிஞ்சுவாடி

    கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள்

    அழுக்குச்சித்தர்

    முத்துக்குமாரசாமி சித்தர்

    பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

    குருலிங்க சுவாமிகள்

    இராயக்கோட்டை

    அப்பா பைத்தியம் சுவாமிகள்

    மாங்கொட்டை சித்தர்

    தேவி மாயம்மா

    சக்திவேல் சிவபுரத்தரசர்

    பாரிஜாத கண்ணன்

    போகர் பதினெண்மரில் சிறந்தவர்

    ஓதசுவாமிகள்

    கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்

    என்னுரை

    அருமை வாசகர்களே!

    இறைவனால் நடத்தித்தர முடியாத காரியங்களைக்கூட சித்த புருஷர்களால் நடத்திதர முடியும் என்பது ஆன்றோர் வாக்கு!

    அதனால்தான் தெய்வங்கள் உறைகின்ற ஆலயங்களுக்கு இணையாக இன்றைக்கு சித்தர்களின் ஜீவசமாதியை நோக்கி பக்தர்கள் அணிவகுத்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

    ‘இந்த ஜீவசமாதிக்கு போனேன். என் பிரச்சினை தீர்ந்தது; அந்த ஜீவசமாதிக்கு போனேன் திருமணம் நடந்தது; அங்கே இருக்கும் ஜீவசமாதிக்குப் போனேன், நீண்ட நாட்களாய் என்னை பிடித்திருந்த நோய் தீர்ந்தது’ என மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருகின்ற சொர்க்கபூமியாக இன்றைக்கு ஜீவசமாதிகள் திகழ்ந்து கொண்டிருக்கன்றன.

    குறிப்பாக, நம் தமிழ்நாடு தென்னகத்திலேயே புண்ணியமிகு சொர்க்கபூமியாக இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

    சாதாரண மனிதனாகப் பிறந்து, தங்கள் பூர்வஜென்ம வினையால் ஞானம் வேண்டி விழைகின்ற பலரும் தமிழகம் நோக்கி வந்து முக்தியும் சித்தியும் பெற்றவர்களாக - ஞானிகளாக - மகான்களாக, ஜீவசமாதிகளில் தெய்வமாகவே இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தன் ஜீவனை நிலைநிறுத்தி இறை நிழலில் ஐக்கியமான ஞானிகளின் உயரிய ஆத்மா இந்த ஜீவசமாதிகளில் இருந்துகொண்டு நாடி வருவோரின் தீவினைகளைப் போக்கி, நல்வாழ்வினை நல்கிக்கொண்டிருப்பதே மக்களின் வருகைக்குக் காரணமாய் உள்ளது.

    இதில் இடம்பெற்றுள்ள ஜீவசமாதிகள் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்து ஜீவசமாதிகளுக்கும் நேரில் சென்று அங்கு சந்தித்த அனுபவங்களே இந்தத் தொடரை எழுத எனக்கு உந்துதலாய் இருந்தது, என்பதே உண்மை!

    மகான்களின் பிறப்பும் வளர்ப்பும் அவர்களுக்கு ஞானம் தேட காரணமாய் அமைந்த சூழல்களும் ஞானம் சித்தியாகிய விதமும் நாம் படிக்கும்போது வியப்பையும் ஆச்சர்யத்தையும் உண்டாக்குகின்றன.

    பல ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கி வந்ததோடு, அந்த மகான்களின் வரலாறு அறிந்தபின் இதை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் என்னும் நோக்கில் சென்னை, ‘அஸ்ட்ரோவேத்’ இணையதளம் நடத்தும் ‘சத்வித்யா’ இணையதள மாத இதழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த புஸ்தகா இணையதள நூலாக வெளியிட விழைந்தமைக்கு நன்றி தெரிவித்து, அனைவரும் இதனை படித்து, இதில் காணுகின்ற ஜீவசமாதிகளை வணங்கி வளம்பெற்று வாழ வேண்டுகிறேன்

    ரா. பன்னீர் செல்வம்

    கோரக்க மகாசித்தர்

    அடுத்து நாம தரிசனம் செய்யவிருப்பது கோரக்க சித்தரின் ஜீவசமாதி! வேளாங்கண்ணி, நாகூர் என பல மத புனித தலங்களை உள்ளடக்கிய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகப்பட்டிணத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள வடக்குப் பொய்கை நல்லூர் என்னும் சிற்றூரில் தான் 18 சித்தர்களின் ஒருவரான கோரக்க சித்தரின் ஜீவசமாதி அமைத்துள்ளது. யார் இந்த கோரக்கர்? அவர் இந்த ஊரில் பிறந்தவரா? இந்த இடத்தில அவரது ஜீவசமாதி அமைந்தது எவ்வாறு? கோரக்க சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்ன? என்பதையெல்லாம் இப்போது பார்க்கலாம்.

    மச்சேந்திரன் வருகை

    ஞானத்திலும் மருத்துவத்திலும் கைதேர்ந்து விளங்கிய சிவஞான போதகராகிய மச்சேந்திர சித்தர் கொல்லிமலையிலிருந்து பொதிகைமலை நோக்கி புறப்பட்டார். வழியில் ஒரு சிற்றூரை நெருங்குகையில் மச்சேந்திரருக்கு தாகம் உண்டானது. தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு ஒரு குடிலின் வாசலில் போய் நின்று தன்னுடைய தாகம் தீர்க்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த இல்லத்தின் தலைவரான பிராமணர் வெளியே சென்றிருக்க, இல்லத்தரசியான பிராமணப் பெண்மணி மச்சேந்திரரைப் பார்த்து, இவர் ஓர் சிவயோகி என்பதை உணர்ந்து, அவருடைய தாகம் தனித்ததோடு உணவும் அளித்து பசியையும் போக்கினாள். அந்த பிராமணப் பெண்ணின் சிவத்தொண்டில் அகமகிழ்ந்தார் மச்சேந்திரர். அவளுடைய முகத்தில் சொல்ல வொண்ணாத சோகம் இழையோடுவதை அறிந்த மச்சேந்திரர், அப்பெண்ணிடம் சோகத்திற்கான காரணத்தைக் கேட்க, மணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தனக்கு மகப்பேறு வாய்க்காத குறையினைக் கூறி கண்ணீர் உகுந்தாள் அந்த பிராமணப் பெண். அவளுடைய குறையினை தீர்க்க எண்ணிய மச்சேந்திரர் தன்னிடம் இருந்த திருநீற்றினை ஓர் இலையில் வைத்து அவளிடம் கொடுத்து, கணவன், மனைவி இருவரும் நெற்றியில் இட்டுக்கொண்டு, மீதமுள்ள திருநீறை நீரிலிட்டு அருந்தி சிவப்பரம் பொருளை வேண்டினால் உறுதியாக மகப்பேறு வாய்க்கும் என்று கூறிச்செல்கிறார்.

    ஆனால், அப்பெண்மணியோ, ஒரு சாதாரண சிவனடியாரின் திருநீறுக்கு இத்தனை மகிமை இருக்குமா? எல்லாம் கபடம் என மற்ற பெண்மணிகள் சொன்ன சொல்லை ஏற்று அந்த திருநீற்றினை எரிகின்ற அடுப்பில் கொட்டி வருகிறார் இதைத்தான் விதி வலியது என்பார்களோ?

    பொதிகை மலைக்கு சென்று தவமியற்றிய மச்சேந்திரர் சுமார் பத்தாண்டுகள் கழித்து, மீண்டும் கொல்லிமலைக்குத் திரும்புகிறார், வழியில் அந்த கிராமத்து வீட்டின் முன் நின்று அந்தப் பெண்மணியை அழைத்து, உன் மகனுக்கு இப்போது ஒன்பது வயது இருக்குமே! அவனை கூப்பிடு ஆசிர்வதிக்கிறேன் என்கிறார்.

    அப்பெண்மணி, மனம் கலங்கி, திருநீற்றினை தான் அடுப்பில் கொட்டியதைக்கூற, அடுப்பின் சாம்பலை எங்கே கொட்டினாய்? என்று கேட்கிறார். குப்பையில் கொட்டினேன் என்று பெண்மணி சொல்ல, குப்பையின் அருகில் சென்ற மச்சேந்திரர் கோரக்கா வா என்று குரல் கொடுக்க, குப்பையிலிருந்து ஒன்பது வயது பிராமண சிறுவனாக வந்தவர்தான் கோரக்கர்! கோரக்கர் என்றால் குப்பையில் தோன்றியவர் என்று பொருள்!

    உன் மகனுடன் வாழ்க்கையை நடத்து என அந்தப் பெண்ணிடம் மச்சேந்திரர் சொல்ல, அவள் மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால், கோரக்கனோ... எனக்கு நாட்டம் இல்லை. நான் எனது குருவான தங்களுடனே வருகிறேன் என்று மச்சேந்திரர்பின் பின்தொடர்ந்தார்.

    யோகம், ஞானம் மருத்துவம் என சகலகலைகளிலும் தேர்ச்சி பெற்ற கோரக்கரை கைலாயம், சீனா போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார் மச்சேந்திரர், அந்த சமயத்தில் போகரின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது கோரக்கருக்கு.

    இருவரும் தங்கள் குருமார்களின் ஆசியோடு தென்திசைக்கு வந்தனர். வான்வழியில் வரும்போது போகருடைய குளிகை கீழே விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக இருவரும் கீழே இறங்கினார்கள். குளிகையை எடுத்துக்கொண்டு போகர் பொதிகையை அடைய, கோரக்கர் வேள்வி ஒன்றை நடத்தி, வாலைக்குமரியின் வளமார் அருளாலும் இறைவனின் ஆசியாலும் இந்த தலத்திலேயே ஜீவசமாதி அடைந்தார், என்பது இந்தத் தலத்து வரலாறு!

    இன்றுவரை இந்த தலத்தில் இரவு சூழும் மாலை நேரத்தில் அன்னக்காவடி சுமந்து, அன்னத்தை தானமாகப் பெற்றுவந்து ஜீவசமாதியில் படைத்து, பலருக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த வழக்கம் எதனால் ஏற்பட்டது? சந்திரரேகை என்பது என்ன? கோரக்கர் நிகழ்த்திய சித்து வேலைகள் என்னென்ன? இன்றளவும் இந்த வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்க மகாசித்தர் ஜீவசமாதியில் நடைபெறும் அதிசய நிகழ்வுகள் என்ன? என்பதையெல்லாம் பார்ப்போம்.

    சதாசிவ பிரம்மேந்திரர்

    முகாலய மன்னரின் அந்தப்புரம்! மன்னர் அந்த நேரத்தில் அங்குதான் இருந்தார். அவரது ராணிகள் நீராடிக்கொண்டிருந்தனர். அப்போது...

    சுற்றி இருப்பது, நடப்பது எதுவுமே அறியாதவராக ஒரு மகான் அந்த வழியே நடந்து வந்துகொண்டிருந்தார்! அதனால் என்ன? என நினைக்கின்றீர்களா?... அந்த மகான் முற்றும் துறந்தவராக, நிர்வாணக் கோலத்தில் வந்து கொண்டிருந்தார். ஆம்! ஆண்டவன் நினைவினையே மனதில் தாங்கி நடப்பவருக்கு, அது அந்தப்புரம் என்றோ, அங்கே ராணிகள் குளிப்பதோ, அரசன் அங்கிருப்பதோ... எதுவுமே நினைவில் தங்கவில்லை... அவர் பாட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

    அவர் எதையும் கவனிக்காமல், இறை நினைப்போடு சென்றாலும், தொலைவிலிருந்தே அவரது நிர்வாணக் கோலத்தையும், எதையும் லட்சியம் செய்யாமல் அவர் நடந்து செல்வதையும் பார்த்த மன்னன் சினங்கொண்டான். நீராடிக்கொண்டிருந்த ராணிகள் அவசர அவசரமாய் தங்கள் ஆடைகளை எடுத்து உடலில் போர்த்திக் கொண்டனர். அச்சமும், அசூயையும் அவர்களை ஆட்கொண்டது. அரசனின் ஆணை மீறிச் சென்றது, ஆணவம் கொண்ட இந்த அயோக்கியன் யார்? என வெகுண்டு, வேகமாக அவரை நோக்கிச் சென்ற மன்னன், கடுங்கோபத்தோடு, தன் உடைவாளால் அந்த மகானுடைய வலது கரத்தை வெட்டினான். அடுத்த நொடி, துண்டான அந்த வலது கரம் கீழே விழுந்தது!

    Enjoying the preview?
    Page 1 of 1