Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanchi Thalaivan Karunai Vizhigal
Kanchi Thalaivan Karunai Vizhigal
Kanchi Thalaivan Karunai Vizhigal
Ebook159 pages48 minutes

Kanchi Thalaivan Karunai Vizhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அத்தி பூத்தாற் போல்" என்ற சொல் வழக்கம் ஒன்று நம் தமிழர் பண்பாட்டில் உண்டு. அதாவது அத்திப்பூ 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் என்பது பல ஆன்றோர்களின் கருத்தாகும்.

எனவே அந்த அத்தி மரத்தால் ஆன "அத்தி வரதரும்" சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை "அனந்த சரஸ்" குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் கொடுப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழுங்கு முறைக்கு உட்படுத்துவதே ஆன்மீகம். உலகம் முழுவதும் ஆன்மீகம் பல்வேறு மதங்கள் மற்றும் சம்பிரதாயம் மூலமாக, தங்கள் கடமைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றச் செய்து, நடைமுறைப் படுத்தப்படுகிறது.

எந்த சமயமாக இருந்தாலும், மனித குல மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு மனித குணத்தைப் பண்படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கமாகும். அந்த விதத்தில் "இந்து மதம்” காலங்கடந்த வரலாற்றைக் கொண்ட சிறப்பு வாய்ந்தது.

நம் பாரத நாடு பண்பாட்டு ரீதியில் பல ஆன்மீக கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், பன்னிரு ஆழ்வார்களும், இராமானுஜரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக அவர்களது படைப்புகளும், போதனைகளும் ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளன.

இன்று வரை நம் திருக்கோயில்களில் ஆகமங்களின் அடிப்படையில் தான் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட எண்ணற்றத் திருக்கோயில்களை, திருமால் வாழும் இடங்களாக, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த இடங்களைத்தான், நாம் “திவ்ய தேசம்” என்று கூறுகிறோம். இப்படி 108 திவ்ய தேசங்கள் நம் பாரத பூமியில் பரந்து விரிந்து கிடக்கின்றது. இதில் காஞ்சிபுரம் என்னும் திருக்கச்சி முக்கியமான தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும். இதில் எண்ணற்ற ஆசாரியர்கள் அவதரித்து, நம் பெருமாளாகிய "தேவாதி ராஜனை" கண்ணால் கண்டும், கைங்கரியம் செய்தும் வணங்கிய பெருமை கொண்டது.

இந்த அரிய தமிழை எனக்கு வழங்கிய வள்ளல் பெருமான் 'கந்தக்கோட்ட திருமுருகனை' நான் நினைவு கூறாமல் இருக்க முடியாது. எனவே, அவரது திருவடிகளையும் வணங்கி இந்தத் தொகுப்பை உங்களுக்கு வழங்குகிறேன். முடிந்தவரை வரலாற்றுச் சான்றுகளைப் பதிவு செய்துள்ளேன். அதே சமயம் இந்தக் கட்டுரைக்குத் தேவையான, பல மேல் நாட்டு அறிஞர்களின் குறிப்புகளை, அவர்களது ஆய்வு நூல்களில் இருந்த எடுத்துக் கொண்டது, எனக்கு பெரிதும் துணை நின்றது. விரிவு அஞ்சி சில மேற்கோள்களை கையாளவில்லை.

பிரம்மாவின் யாகத்தின் போது யாகத்தீயில் இருந்து உதித்த பெருமாள் என்று பல புராணங்களும் கூறுகின்றன. முதலில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருக்கோயிலுக்கு பல மன்னர்களும் தங்களால் ஆன திருப்பணிகளைச் செய்துள்ளனர். இதை முக்கியமாக அத்திகிரி வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைத்துள்ளேன். கோயில் உண்டான காரணம் யாராலும் நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளது.

தற்போது எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் வராஹ மஹாதேஸிகன் ஸ்வாமிகள் என் மீது கருணை மழைப் பொழிந்து, கருணைக் கொண்டு என் பெயரை "காஞ்சிநேசன்" என்று செல்லமாக அழைப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய ஆச்ரம அலுவல்கள் ஆயிரத்திற்கு இடையே இந்த சிறியேனின் தொகுப்பு நூலான "காஞ்சிதலைவன் கருணைவிழிகள்" என்னும் நூலுக்கு ஸ்ரீமுகம் தந்து ஆசீர்வதித்துள்ளது அடியேனுக்கு கிட்டிய பாக்கியமாகக் கருதுகிறேன். அவருடைய பாதகமலங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வந்தனங்கள்.

பெருமாள் கொடுத்த திருநாமம் என்ற காரணத்தல் அப்படியே விட்டு விட்டேன். இதில் ஏதேனும் அபசாரம் இருந்தால் ஷமிக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தேவரீர் என் பெயரை தாங்கள் அழைக்கும் பெயராக “காஞ்சிநேசன்" என்றே இருக்கட்டும் என்று பாக்கியமாக ஏற்றுக் கொள்கிறேன். இனிவரும் என் எல்லாப் படைப்புக்களுக்கும் "ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ வராஹ மஹாதேஸிகன் ஸ்வாமி" அவர்கள் "திருகடாஷம்" படவேண்டுமாறு பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அன்பன்
நங்கைநல்லூர் இளநகர் காஞ்சிநாதன் (காஞ்சிநேசன்)

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580130104733
Kanchi Thalaivan Karunai Vizhigal

Read more from Elanagar Kanchinathan

Related to Kanchi Thalaivan Karunai Vizhigal

Related ebooks

Reviews for Kanchi Thalaivan Karunai Vizhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanchi Thalaivan Karunai Vizhigal - Elanagar Kanchinathan

    http://www.pustaka.co.in

    காஞ்சித்தலைவன் கருணை விழிகள்

    Kanchi Thalaivan Karunai Vizhigal

    Author:

    இளநகர் காஞ்சிநாதன்

    Elanagar Kanchinathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/elanagar-kanchinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    ஆசிரியர் உரை

    பதிப்புரை

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வரலாறு

    விஜய பாகு

    ஸ்ரீ அத்திவரதர்

    பிராகார சன்னதிகள்

    பல்லியின் கதை

    பெருந்தேவித்தாயார்

    வித்தியாசமான நம்மாழ்வார்

    அபூர்வ சக்கரத்தாழ்வார்

    காஞ்சி வரதராஜர் கோயில் இட்லி

    மாந்தளிர் உற்சவம் அல்லது பல்லவ உற்சவம்

    அத்திமரம்

    ஸ்ரீ அத்திவரதர் உடுத்திக் களைந்த பல்வேறு வண்ணப் பட்டாடைகள்.

    நின்ற கோலம்

    சிறப்பு அம்சம்

    அத்திகிரி பஞ்சரத்னம்

    பெருந்தேவித்தாயார்

    காஞ்சி வரதர்

    கருடசேவை

    நட்சத்திர மகிமை

    ஸ்ரீ அத்திவரதர் எழுந்தருளினார்!

    காஞ்சித்தலைவன் கருணை விழிகள்

    அத்திவரதர் பற்றிய முழுமையான தொகுப்பு

    இளநகர் காஞ்சிநாதன்

    ஸ்ரீமுகம்

    அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சீ ஹயவந்திகா/

    புரீ த்வாரவதீ சைவ ஸப்தைதா: மோக்ஷ தாயகா: //

    என்று புராண வரலாற்றில் காஞ்சியின் பெருமையை நன்கு பேசப்படுகின்றது. காஞ்சியில் மிக உன்னதமான விஷயம் என்றால் அங்கு அவதரித்த (அத்திவரதரின்) எம்பெருமானின் உத்ஸவங்கள். அவனுடைய கல்யாண குணங்கள். அவனுடைய கம்பீரமான திருமேனியின் அழகு. அவ்வெம்பெருமானின் அழகில் ஈடுபாடு இல்லா தேவர்களும், ஆழ்வார்களும், மனிதர்களும் இல்லை என்றே கூறலாம். ஸ்வாமி தேசிகனும் ஹயமேத யஜ்வா அக்காஞ்சியில் அயன் அஸ்வமேத யாகம் செய்த போது அயனுக்கு காட்சி அளித்தார் அத்திவரதர்.

    ஆகையால் மக்களும் அத்திவரதா, அத்திவரதா என்று கத்திக்கொண்டு, சுற்றிச்சுற்றி வந்தார்கள் என்றால் மிகையாகாது. ஆழ்வாரும் வையம் போற்றும் வைகாசித் திருநாளில் அவ்வரதனுடைய மூன்றாம் நாள் உத்ஸவத்தை ஆருளாழிப்புள்கடவீர் அவர் வீதி ஒரு நாளென்று பெருமையாகப் பேசி மகிழ்கிறார்.

    ஸ்ரீவைஷ்ணவ தர்ஸநத்திற்காக, தர்ஸநத்தை (கண்ணை) இழந்த ஸ்ரீகூரத்தாழ்வானும் ஸர்வபூதஸுஹ்ருதம் தயாநிதிம் தேவராஜ மதிராஜமாஸ்ரயே எல்லா ப்ராணிகளிடத்திலும் அன்பு செலுத்துபவன் வரதன் என்றும், ஸ்வாமி தேசிகனும் காசி முதலாகிய நன்னகரியெல்லாங்கார் மேனியருளாளர் கச்சிக்கொவ்வா என்ற கூறுகின்ற காசி போன்ற புண்ய ஸ்தலமெல்லாம் கார்மேக வண்ணனான பேரருளாளர் வரதன் வீற்றிருக்கும் காஞ்சீபுரத்திற்கு ஈடு இணையாக மாட்டாது என்றும், மேலும் எண்டிசையுங்கடலேழு மலைகளேழும் என்ற பாசுரத்தில் வேள்வியும், ஆவிர்பாகமும் அக்நியை நினைவூட்டிய தன்மையையும் அவ்வோ தாபத்தை மறக்க கருணை மழை பொழியும் காளமேகத்தைப் போன்ற வரதனை வர்ணிக்கிறார். மேலும், கருதவரந்தரு தெய்வப்பெருமாள் வந்தார் என்று நாம் (முக்கரணங்களாலே) அவனை மனத்தினால் சிந்தித்து, வணங்கி, வழிபட்டு வருவோமானால், அவன் நமக்கு வேண்டிய வரங்களை அளிப்பதற்காகவே அவதரிக்கிறான் என்றார்.

    ஸ்ரீ அத்திவரதர் பெருவிழா வைபவத்தில், ஸ்ரீரங்க ராமாநுஜ மஹாதேசிகன் ஸ்வாமி அவர்களுடன் (வர்த்தமான ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் - ஸ்ரீரங்கம்) பூர்வாஸரமத்தில் உடன் இருந்த, புலவர் சீனி.கிருஷ்ணஸ்வாமியின் (ஸ்ரீரங்கம்) திருக்குமாரன் பத்மநாபன் நடத்தி வரும் "ஜெயதாரிணி அறக்கட்டளை மூலம் பதிப்பித்து, ‘அத்திகிரி பஞ்சரத்னம்' என்னும் தலைப்பில் பதிவான ஐந்து பாடல்களுக்கு வீரமணி கண்ணன் முறையாக இசை அமைத்து, கீதாஸ்ரீ மற்றும் இசைக்கலைஞர்கள் உடன்பாடியதை குறுந்தகடாக, புத்தகத்துடன் கொடுத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

    காஞ்சித்தலைவன் கருணை விழிகள் என்ற தலைப்பில் காஞ்சிநாதன் (காஞ்சிநேசன்) பரமனின் தொண்டன், அருமையான ஒரு நூலை இயற்றியுள்ளார். அதிலுள்ள பல விசேஷ செய்திகளையும், எம்பெருமானின் கல்யாண குணங்களையும், அவனின் நிலைகளையும் அறிந்து அவ்வெம்பெருமானின் கருணையையடைந்து இகபர சுகங்களை அனுபவிப்போம் என்பது திண்ணம். மேலும் அந்த நூலை தெரித்து எழுதி, வாசித்தும், கேட்டும், வணங்கி, வழிபட்டும், நேசித்தும் போக்கினேன் போது, என்றிருக்க வேண்டும். மேலும், அவர் பல நற்காரியங்களைச் செய்வதற்கு முக்திதரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில் அவதரித்த அத்திவரதர் அருள்புரிவான் என்று நாராயண ஸ்ம்ருதி செய்கிறோம்.

    நாராயண! நாராயண!! நாராயண!!!

    25-07-2019

    இவண்

    ஸ்ரீவராஹ யதி:

    *****

    அணிந்துரை

    ஆதியுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்

    காதல் உயர்ந்த களிற்றைத் திரேதையில் காத்தளித்து

    வாதுயர் தேவகுருவுக்கு இரங்கித் துவாபரத்தில்

    சோதி அனந்தன் கலியில் தொழுதெழ நின்றனரே.

    (ஸ்வாமி தேசிகன் அத்திகிரி மஹாத்மியத்தில்)

    திருவாளர் இளநகர் காஞ்சிநாதன் எழுதி வெளியிட்டிருக்கும் காஞ்சித்தலைவன் கருணை விழிகள் என்னும் அத்திவரதர் புகழ்பாடும் இந்நூல் மூன்றாம் பதிப்பு காண்பதில் அதிசயம் ஏதுமில்லை. மிகவும் எளிமையான தமிழில் வரதனின் பெருமைகளையும், அவன் கண்டருளும் உற்சவங்களின் சிறப்பையும் மனதைத் தொடும் வகையில் ஆசிரியர் விவரிப்பது ஒன்றே போதும், இந்நூல் மேன்மேலும் பல பதிப்புகளைக் காணும் என்பதை பறைசாற்ற.

    மேலும் நூலில் இவரின் பா வண்ணத்தில் அத்திகிரி பஞ்சரத்னம். பெருந்தேவித் தாயார் துதி, காஞ்சி வரதர் துதி, கருட சேவை, தேவாதிராஜனின் நட்சத்திர தோற்றம் ஆகியவைகள் சேர்த்திருப்பது அழகு.

    இவருக்கு அத்திவரதனின் அருள் மேன்மேலும் கிடைத்துப் பல நூல்களை இவ்வழியில் எழுத வேண்டும் எனப் பாராட்டி மகிழ்கிறேன்.

    சென்னை

    30.07.2019

    *****

    ஆசிரியர் உரை

    அத்தி பூத்தாற் போல் என்ற சொல் வழக்கம் ஒன்று நம் தமிழர் பண்பாட்டில் உண்டு. அதாவது அத்திப்பூ 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் என்பது பல ஆன்றோர்களின் கருத்தாகும்.

    எனவே அந்த அத்தி மரத்தால் ஆன அத்தி வரதரும் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்த சரஸ் குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் கொடுப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது!

    ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழுங்கு முறைக்கு உட்படுத்துவதே ஆன்மீகம். உலகம் முழுவதும் ஆன்மீகம் பல்வேறு மதங்கள் மற்றும் சம்பிரதாயம் மூலமாக, தங்கள் கடமைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றச் செய்து, நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    எந்த சமயமாக இருந்தாலும், மனித குல மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு மனித குணத்தைப் பண்படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கமாகும். அந்த விதத்தில் இந்து மதம் காலங்கடந்த வரலாற்றைக் கொண்ட சிறப்பு வாய்ந்தது.

    நம் பாரத நாடு பண்பாட்டு ரீதியில் பல ஆன்மீக கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், பன்னிரு ஆழ்வார்களும், இராமானுஜரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக அவர்களது படைப்புகளும், போதனைகளும் ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளன.

    இன்று வரை நம் திருக்கோயில்களில் ஆகமங்களின் அடிப்படையில் தான் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட எண்ணற்றத் திருக்கோயில்களை, திருமால் வாழும் இடங்களாக,

    Enjoying the preview?
    Page 1 of 1