Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gangai Karai Ragasiyangal
Gangai Karai Ragasiyangal
Gangai Karai Ragasiyangal
Ebook106 pages41 minutes

Gangai Karai Ragasiyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று, கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்! இந்த ஆன்மீக நகரிலுள்ள ரகசியத்தை வாசிப்போம் நாமும் ரகசியமாய்...

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580138606346
Gangai Karai Ragasiyangal

Read more from V. Ramanan

Related to Gangai Karai Ragasiyangal

Related ebooks

Reviews for Gangai Karai Ragasiyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gangai Karai Ragasiyangal - V. Ramanan

    https://www.pustaka.co.in

    கங்கைக்கரை ரகசியங்கள்

    Gangai Karai Ragasiyangal

    Author:

    ரமணன்

    V. Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இறைவன் உருவாக்கிய நகரம் இது

    2. இங்குள்ள ஒவ்வொரு கல்லும் சிவன்தான்!

    3. பிரார்த்தனைகளை மௌனமாக ஏற்கும் கங்கை!

    4. கட்டாயம் வேண்டும் காலபைரவ தரிசனம்!

    5. காசிக்கும் புத்தனுக்கும் என்ன சம்பந்தம்?

    6. புத்தர் செய்தது சரியா?

    7. மனதைப் பிசைந்த காட்சிகள்

    8. எனக்கு என்றும் அழிவில்லை!

    9. ஒரு லட்சம் நமஸ்காரங்கள்!

    10. புத்தரின் ஆசை என்ன?

    11. உலகின் முதல் பல்கலை கழகம் உருவானது இங்கேதான்.

    12. கங்காமாதா கீ.ஜே!

    1. இறைவன் உருவாக்கிய நகரம் இது

    இன்னும் இருள் பிரியாத, ஒளி பிறக்காத காலைப்பொழுது. சில்லிடும் காற்று மிதந்துபோகும் மெல்லிய பனிப்புகை. கண்ணெதிரே கடலாக விரிந்திருக்கும் கங்கை. அதன் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. மறுகரையே கண்ணில் தெரியாத அந்த மகாநதி அந்த இருட்டிலும் நிசப்தத்திலும் தன் கம்பீரத்தைச் சொல்கிறது. காசி நகரில் புனித கங்கையின் கரையில் அந்த அதிகாலைப்பொழுதில் ஆதவனின் வருகையின்போது தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

    நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பலர் துறையின் படிக்கட்டுகளில் நடுங்கும் குளிரிலும் ஆதவனைத் தரிசித்தபின் மூழ்கிக் குளிக்கக் காத்திருக்கின்றனர். மெல்லிய குரல்களில் பல மொழிகளில் பிரார்த்தனைகள், ஸ்லோகங்கள் கேட்கின்றன. 'கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்’ என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பன். இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன. எல்லாக் குளிக்கும் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இவற்றின் இடையில் நமக்கோர் இடத்தைக் கண்டுபிடித்து நிற்கிறோம். ஓடும் கங்கையின் வேகத்தைக் கால்கள் நமக்குச் சொல்கிறது. மனம் கங்கையில் இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பிரவாகத்தில் இருக்கும் வாழும் நதியில் இன்று நாமும் இறங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது. நிற்கும் படகுக்காரர்களும் அந்த நேரத்தில் நகராத படகில் உட்கார்ந்து தியானிக்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்கக் காத்திருக்கிறார்கள். பளிச்சென்று பெரிய ஆரஞ்சு வண்ணப் பந்தாக எழுந்து தங்கத் தாம்பாளமாக விரிந்து சில நிமிடங்களில் ஒளியுடன் உயிர் பிறக்கிறது அந்த நதியில் மௌள வளரும் காலை ஒளியில் கங்கையின் வண்ணங்கள் மாறுகின்றன. அழகான ஓவியமாகப் பரவும் அந்தச் சூரியோதயக் காட்சியில் மனத்தைப் பறிகொடுத்து நிற்கும் நாம் அருகிலிருப்பவர்கள் குளிக்கத் தொடங்கியதைப் பார்த்த பின்னர்தான் நாம் காத்திருந்ததும் அதற்குத்தானே என்பது உறைத்து, உடனே மூழ்கி எழுகிறோம். தெளிந்தோடிக்கொண்டிருக்கும் கங்கை அன்னையின் அழைப்பு அலைகள். நீண்ட நேரம் நீராடச் சொல்கிறது. இரு கைகளால் கங்கை ஜலத்தை எடுத்துச் சூரிய பகவானுக்கு நதியிலேயே அர்ப்பணம் செய்யும் பலர், கூப்பிய கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி நிஷ்டையில் நிற்பவர்கள், தன் சின்னக் குழந்தையை மிகக் கவனமாகப் பிரார்த்தனையோடு குளிப்பாட்டும் அன்னை என அந்த இடமே கங்கையின் நீரைப் போலப் பக்தியால் நிரம்பியிருக்கிறது. மெல்லக் கூட்டம் வரத் தொடங்குகிறது. எங்கிருந்தோ ஒலிக்கும் பக்திப் பாடல்கள் சூழலின் அமைதியைக் கலைக்கிறது. படிகளைக் கடந்து சாலைக்கு வருகிறோம். காசி நகரம் விழித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்தக் காசி நகரம் எப்போது உருவானது? இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. மனிதச் சமுதாயம் உருவான காலந்தொட்டே உலகில் பல்வேறு நகரங்கள், நாகரிகம் மற்றும் ஆன்மிகத்தின் உச்சியை அடைந்தன. ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன. கிரேக்க, எகிப்து, ரோமாபுரி நாகரிகங்கள் சில உதாரணங்கள். இவற்றுக்கெல்லாம் முன்பே கலாச்சாரத்திலும், ஆன்மிகத்திலும், அறிவியலிலும் தமது மேன்மைக்குப் பல இடையூறுகள் வந்தபோதும், ஒவ்வொரு முறையும் சரிவிலிருந்து மீண்டு எழுந்திரப்பது பாரதம். இதற்கு ஓர் அடிப்படைக் காரணம். இந்தப் புண்ணிய பூமியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆயிரம் கோயில்களில் சக்தி அதிர்வுகள் இந்தக் கலாச்சாரத்தின் வேர்களாக இருப்பது. இவற்றில் மிக முக்கியமான க்ஷேத்திரமாகத் திகழ்வது காசி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காசி நகரம் பன்னிரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருவாகியிருக்கக்கூடும் என்று சொல்கின்றனர். காசி என்ற பெயருக்குப் ‘பிரகாசமானது’ என்று பொருள். ஸ்கந்த புராணத்தில் பதினைந்தாயிரம் பாடல்கள் பாடப் பெற்றது காசி. நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த கோயில்களால் சூழப்பட்டு ஒரு சக்தி வளையமாகத் திகழ்கிறது. ஆயுர்வேதம் காசியில்தான் எழுதப்பட்டது. யோக அறிவியலின் தந்தையாகப் போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரித மானசம் உருவானதும் இங்குதான். காசி நகரமே ஒரு யந்திர வடிவில் அமைந்திருக்கிறது. இந்த வடிவில் நானூற்றி அறுபத்தெட்டு முக்கிய கோயில்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாகக் கொண்டு இக்கோயில்கள் ஐந்து அடுக்குப் பாதைகளில் அமைந்திருக்கின்றன. காசி காண்ட புராணத்தில் காசி நகரமே சிவனுடைய திரிசூலத்தின்மீது இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. திரிசூலத்தின் மூன்று முனைகளைப் போல், காசியின் சக்தி வடிவத்துக்கும் மூன்று கோயில்கள் மையமாக இருக்கின்றன. இவை வடக்கில் ஆம்கார் ஈஸ்வரர், மையத்தில் விஸ்வநாதர் மற்றும் தெற்கில் கேதார ஈஸ்வரர். இந்த ஒவ்வொரு கோயிலும் தனியாகவும், ஒன்றுசேர்ந்தும் தங்களுடைய சக்திப்பிரவாகத்தை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பயணத்தில் இந்தக் கோயில்களில் நல்ல தரிசனம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியபடியே சாலையில் நடக்கிறோம். கங்கை நதியின் படித்துறைகளுக்கு வரும் நகரின் அந்தச் சாலைகளில் எந்த வாகனங்களக்கும் அனுமதியில்லாததால் சாலை முழுவதும் மக்கள் வேகமாக நதியை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள். பல மாநில முகங்கள், மொழிகள். குறிப்பிட்ட இடம்வரை நடந்த

    Enjoying the preview?
    Page 1 of 1