Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maharashtra Maanilathin 108 Punitha Thalangal
Maharashtra Maanilathin 108 Punitha Thalangal
Maharashtra Maanilathin 108 Punitha Thalangal
Ebook149 pages55 minutes

Maharashtra Maanilathin 108 Punitha Thalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மஹாராஷ்டிர சாது சந்யாசிகள் பற்றி ‘பக்த விஜய’த்தில் நிறைய கதைகள் உள்ளன; அந்த அளவுக்கு கோவில்கள் பற்றித் தகவல் இல்லை; ஜோதிர்லிங்க தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகரின் அஷ்ட சித்தி விநாயகர் கோவில்கள் மட்டுமே பலருக்குத் தெரியும். இந்த நூலில் அவைகளோடு தெரியாத கோவில்களையும் தரிசிக்கலாம். இதை படித்த பின்னர் நாம் அவ்வளவு கோவில்களையும் என்று பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் எழும்...

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580153509992
Maharashtra Maanilathin 108 Punitha Thalangal

Read more from London Swaminathan

Related to Maharashtra Maanilathin 108 Punitha Thalangal

Related ebooks

Related categories

Reviews for Maharashtra Maanilathin 108 Punitha Thalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maharashtra Maanilathin 108 Punitha Thalangal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

    Maharashtra Maanilathin 108 Punitha Thalangal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part - 1

    2. மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 2

    3. மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 3

    4. 108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – 4

    5. அஷ்ட விநாயகர் கோவில்கள்

    6. அஷ்டவிநாயகர் கோவில் தொடர்ச்சி

    7. துல்ஜாபூர், கோலாப்பூர் தேவி கோவில்கள்

    8. ஏழுமலை உச்சியில் ஒரு தேவி

    9. யோகேஸ்வரியும் யாமையும்

    10. 22 சிவன் கோவில்கள்

    11. எல்லோரா எனும் உலக அதிசயம்

    12. ஜோதிர்லிங்க ஸ்தலம் வைத்யநாதம்

    13. மேலும் சில சிவன் கோவில்கள்:

    14. மஹா பலேஸ்வரில் 4 சிவன் கோவில்கள்

    15. மும்பை நகர கோவில்கள்

    16. வடக்கே ஒரு சிதம்பரம்; 10 லட்சம் பக்தர் வரும் பண்டரீபுரம்

    17. ஷீரடியும் பஞ்சவடியும்

    18. கண்டோபா, மசோபா கோவில்

    19. அம்மனுக்கு கண்ணாடி கோவில்

    20. சிவாஜிக்கும் ஒரு கோவில்

    21. இடையர்கள் கொண்டாடும் வினோத மஞ்சள் திருவிழா

    22. தத்தாத்ரேயர் பற்றி 2 சுவையான மராத்தி பழமொழிகள்

    23. ஆலந்தியில் ஒரு அற்புத தல விருட்சம்

    24. காந்திஜி நிறுவிய இயற்கை மருத்துவ நிலையம்

    முன்னுரை

    மஹாராஷ்டிர மாநிலம், பல விதங்களில் தமிழ்நாட்டைப் போலவே இருக்கிறது. புகழ்பெற்ற கோவில்கள், மக்கள் வணங்கும் சாது சந்யாசிகள், அவர்களுடைய ஜாதி, மத, பேதமற்ற அணுகுமுறை ஆகியவற்றில் தமிழ்நாட்டுக் கோவில்களையும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற அடியார்களையும் ஒப்பிட முடிகிறது. தமிழ்நாட்டைப் போலவே புகழ்பெற்ற சிவன் தலங்கள், சக்தி பீடங்கள் ஆகியன அந்த மாநிலத்திலும் இருக்கின்றன. நாம் எப்படி ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று சொல்கிறோமோ, அதேபோல அங்கும் துகாராம் முதலிய அடியார்களால் பாடல்பெற்ற கோவில்கள் இருக்கின்றன.

    தமிழ்நாட்டு மக்கள் கேள்விப்படாத கண்டோபா, மசோபா கோவில்கள் அங்கே இருக்கின்றன. இவர்களை பைரவர், வீரபத்ரன், அய்யனார் ஆகியோருடன் ஒப்பிடலாம். எல்லோரா, எலிபெண்டா குகைக் கோவில்களும் அஜந்தா குகை சித்திரங்களும் மிகவும் பழமையானவை. இவை தவிர சாது சந்யாசிகள் சமாதிகள். பிறந்த இடங்கள் ஆகியனவும் பல்லாயிரம் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது. ராமபிரான் சம்பந்தப்பட்ட பஞ்சவடி, கேரள ஐயப்பன் கோவிலைப்போல பல லட்சம் பக்தர்களை ஈர்க்கும் பண்ட்ரீபுரம் ஆகியவற்றைப் பார்க்காவிடினும் படித்தாவது மகிழலாம். எங்கு போனாலும் சிவாஜி மஹாராஜா அமைத்த கோட்டைகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வனப்புமிக்க மலைகள், வானுயர்ந்த நீர் வீழ்ச்சிகள், வெண்மணற் கடற்கரைகள் முதலியன பக்தியையும், சுற்றுலாவையும் ஒருங்கே ஊக்குவிக்கிறது.

    மஹாராஷ்டிர சாது சந்யாசிகள் பற்றி ‘பக்த விஜய’த்தில் நிறைய கதைகள் உள்ளன; அந்த அளவுக்கு கோவில்கள் பற்றித் தகவல் இல்லை; ஜோதிர் லிங்க தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகரின் அஷ்டசித்தி விநாயகர் கோவில்கள் மட்டுமே பலருக்குத் தெரியும். இந்த நூலில் அவைகளோடு தெரியாத கோவில்களையும் தரிசிக்கலாம். இதை படித்த பின்னர் நாம் அவ்வளவு கோவில்களையும் என்று பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் எழும்... கட்டுரைகள் அனைத்தும் அண்மையில் என்னுடைய இரண்டு பிளாக்குகளில் வெளியானதன் தொகுப்புதான்.

    கட்டுரைகளின் வரிசை எண்ணையும், பிளாக்கில் முதலில் வெளியான தேதியையும் அந்தந்தக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    லண்டன் சுவாமிநாதன்

    Swami_48@yahoo.com

    ஜூன் 2023

    1. மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part - 1

    Post No. 11,925

    Date– 22 APRIL 2023

    தமிழ்நாட்டில் 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும், அருணகிரிநாதரும், மாணிக்கவாசகரும் பாடிப் பரவிய 400 தலங்கள், புனிதக் கோவில்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கிறது. இதுபோல ஆந்திரத்தில் அன்னமாசார்யா, கர்நாடகத்தில் புரந்தரதாஸர் பாடிப் போற்றிய பல தலங்கள் உள. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மஹாராஷ்டிர மாநிலம் எந்த விதத்திலும் பக்தி விஷயத்தில் பின்தங்கவில்லை. ஏகநாத், துக்காராம், நாமதேவ், சமர்த்த ராமதாஸ், நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய் போன்ற மஹான்கள் நடந்த இடமெல்லாம், சென்ற கோவில் எல்லாம், புனிதம் பெற்று, இன்றும் லட்சக்கணக்கானோரை ஈர்த்து வருகின்றன. சில ஜோதிர்லிங்க தலங்களோடு, பண்டரீபுரம், ஷீரடி, மும்பை கோவில்கள் நாளுக்கு நாள் பிரசித்தம் அடைந்து வருகின்றன.

    கோவில்கள் மூன்று விதங்களில் புனிதம் பெறுகின்றன. முதலாவது மலை முகடுகளில் இருக்கும். இரண்டாவது ஏதேனும் 2 அல்லது 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும். மூன்றாவது சாது, சந்யாசிகள், மகான்கள் பிறந்த அல்லது வசித்த அல்லது இறந்த இடத்தில் இருக்கும்.

    இனி ஒவ்வொரு கோவிலாக தரிசிப்போம்; வாருங்கள்.

    1. ஆடிவரே மஹாகாளி கோவில்

    எங்கே உள்ளது?

    ஆடிவரே (Aadiware) மஹாகாளி கோவில் ரத்னகிரியிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் ராஜபுர் (28 கிலோமீட்டர் தூரம்)

    வெள்ளிக்கிழமை, பெளர்ணமி தினங்கள் ஆஸ்வீன மாத நவராத்ரி ஆகிய காலங்களில் வீதி உலாவும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

    ஆடிவரே கோவில் ராஜ்பூர் தாலுகாவில் இருக்கிறது. மஹாகாளியுடன் லெட்சுமி, ஸரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன. இங்கு பழங்கால முறையில் இயக்கப்படும் கிணறு உள்ளது. மூங்கில் கம்பு இணைப்புகள் உள்ள கிணறு இது.

    மகாலெட்சுமி நடுவிலும் இருபுறங்களில் காளி, ஸரஸ்வதி உருவங்களும் உள்ளன. அவைகளை நோக்கி கருட மண்டபம், கணேஷ் மண்டபங்கள் இருக்கின்றன. லட்சுமியின் பின்னால் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டுள்ளது.

    லெட்சுமி சிலை 3 அடி உயரமானது; கருங்கல்லில் ஆனது; ஆண்டுதோறும் மூன்று நாட்களுக்கு லக்ஷ்மியின் முகத்தில் சூரிய ஒளி விழும்படி கோவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் பின்னர் பல சந்நிதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் காளி கோவில் என்ற பெயரே நிலவியது. இப்போது லெட்சுமிக்கு மேலே உள்ள கோவிலில் சிவலிங்கம், நந்தி உள்ளன. பிற சந்நிதிகளில் நவக்கிரகம், வெங்கடேசன், காத்தியாயனி, விட்டல் - ரகுமாயி மஹிஷாஸுரமர்தனி, துஜா பவானி, விஷ்ணு ஆகிய உருவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    ***

    2. அகாசி பவானி சங்கரர் கோவில்

    வைதரண நதி, சூர்யா நதி முகத்துவாரத்தில் அகாசி (Aghaasi) இருக்கிறது. இங்குள்ள பவானி சங்கரர் கோவிலில் கார்த்திகை கிருஷ்ணபட்ச ஏகாதசியில் விழா நடக்கும். இங்குள்ள குளத்தில் குளித்தால் தோல் நோய்கள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமை உடைய கோவில் இது. 16 மரத்தூண்கள் தாங்கி நிற்கும் சபா மண்டபம் உள்ளது. அருகில் புகழ்பெற்ற சமண மத தீர்த்தங்கரர் கோவிலும் இருக்கிறது.

    ***

    3. அகால் கோப் தத்தாத்ரேயர் கோவில்

    இது ஒரு சிறிய ஊர். தஸ்காவ்ன் என்னும் ஊரிலிருந்து 11 மைல் தொலைவிலும் அஷ்ட என்னும் இடத்திலிருந்து 4 மைல் தொலைவிலும் கிருஷ்ணா நதிக்கரையில் அகால் கோப் (Akhaalkop) அமைந்துள்ளது. இங்கு தத்தாத்ரேயர் பாதச் சுவடுகள் இருக்கின்றன. மார்கழி மாத பெளர்ணமி, ஆஸ்வீன கிருஷ்ணபட்ச துவாதசி, மாசி மாத கிருஷ்ணபட்ச பஞ்சமியில் பெரிய திருவிழாக்கள் நடக்கின்றன. அச்சமயத்தில் முகம் உள்ள உருவத்தை பல்லக்கில் கொண்டு செல்லுவார்கள். சாமரம், மயில் தோகை விசிறி,

    Enjoying the preview?
    Page 1 of 1