Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal
Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal
Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal
Ebook191 pages1 hour

Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டைப்போலவே எண்ணற்ற, புகழ் பெற்ற இந்து சமயக் கோவில்களை உடைய மாநிலம் கர்நாடகம். இங்கு புகழ்பெற்ற சமண ஆலயங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. சிரவண பெலகோலாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கல் கோமடேச்வர் சிலை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் நந்தி, பேலூர், ஹளபீடு, சோம்நாத்பூர் சிற்பங்கள் பெருமளவில் புஸ்தகங்களில் காணப்படுகின்றன. இது ஒரு புறமிருக்க, மூகாம்பிகை, சாரதாம்பிகை கோவில்கள் ஆகியன தேவி பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. காவிரி நதியின் இருமருங்கிலுமுள்ள சிவன், விஷ்ணு கோவில்கள் சைவ, வைணவ பக்தர்களுக்கு பக்திப் பரவசம் ஊட்டுகின்றன. காவிரி தோன்றுமிடத்தில் உள்ள தலங்களும், பல நதிகளுடன் சங்கமிக்கும் இடங்களும் குக்கே சுப்ரமண்யர் கோவிலும் குறிப்பிடத்தக்கவை.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580153510282
Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal

Read more from London Swaminathan

Related to Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal

Related ebooks

Reviews for Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

    Karnataka Maanilathin Pugazhpetra Kovilgal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் - Part 1 (பெங்களூர் கோவில்கள்)

    2. சோமேஸ்வர, மல்லேஸ்வர, நாகேஸ்வர கோவில்கள்

    3. சிக்க திருப்பதி, முக்திநாகா, போக நந்தீஸ்வர கோவில்கள்

    4. பீமலிங்கேஸ்வரர், நான்கு முக மலையில் 4 கடவுள் கோவில்கள்

    5. ரேவண சித்தேஸ்வர, சங்கமேஸ்வர, மட்டூர் வட்டார கோவில்கள்

    6. மாண்ட்யா வட்டாரக் கோவில்கள்

    7. நிமிஷாம்பா, பஞ்ச லிங்கேஸ்வரர், நரசிம்ம சுவாமி கோவில்கள்

    8. முக்தனாதேஸ்வர, மல்லிகார்ஜுன, மேலுகோட்டை செலுவ நாராயணர் கோவில்கள்

    9. பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்

    10. ஆண்டாள் கண் ஒளிரும் எடத்தலை கோவில்

    11. புலி மீது வந்த சித்தர் கோவில், திப்பு சுல்தான் எரித்த சிவன் கோவில்கள்

    12. காந்திஜிக்கு தினசரி பூஜை! கடுங்காப்பி பிரசாதம்

    13. தர்மஸ்தலம், குக்கே சுப்ரமண்யர் கோவில்கள்

    14. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன், ஆனகுட்ட விநாயகர் கோவில்கள்

    15. மூகாம்பிகை, சாரதாம்பிகை, முருதேஸ்வர்

    16. அன்னபூர்ணேஸ்வரி, அம்ருதேஸ்வரர் கோவில்கள்

    17. ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!

    18. பேலூர், சிரவண பெலகோலா கோவில்கள்

    19. ஒன்பது நரசிம்மர் சிலைகள்!

    20. மலைக்கல்லு திருப்பதி கோவில், அரிசிக்கரே ஈஸ்வரன் கோவில்

    21. கப்பல் வடிவில் அதிசய கோவில்!

    22. ஓம் வடிவ கடற்கரை!

    23. காந்திஜி நுழைய மறுத்த கோவில்!

    24. கோவிலில் பெரிய பீமன் முரசு!!

    25. அனுமன் பிறந்த கிஷ்கிந்தா!

    26. உலகப் புகழ்பெற்ற ஹம்பி:

    27. கடக் GADAG வட்டார கோவில்கள்

    28. கனககிரி கனகாசலபதி கோவில்

    29. பாதாமி குகைகள், இந்து சமய ஓவியங்கள்!!

    30. ஐஹோல் கோவில்கள்

    31. பட்டடக்கல் கோவில்கள்

    முன்னுரை

    தமிழ்நாட்டைப்போலவே எண்ணற்ற, புகழ் பெற்ற இந்து சமயக் கோவில்களை உடைய மாநிலம் கர்நாடகம். இங்கு புகழ்பெற்ற சமண ஆலயங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. சிரவண பெலகோலாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கல் கோமடேச்வர் சிலை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் நந்தி, பேலூர், ஹளபீடு, சோம்நாத்பூர் சிற்பங்கள் பெருமளவில் புஸ்தகங்களில் காணப்படுகின்றன. இது ஒரு புறமிருக்க, மூகாம்பிகை, சாரதாம்பிகை கோவில்கள் ஆகியன தேவி பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. காவிரி நதியின் இருமருங்கிலுமுள்ள சிவன், விஷ்ணு கோவில்கள் சைவ, வைணவ பக்தர்களுக்கு பக்திப் பரவசம் ஊட்டுகின்றன... காவிரி தோன்றுமிடத்தில் உள்ள தலங்களும், பல நதிகளுடன் சங்கமிக்கும் இடங்களும் குக்கே சுப்ரமண்யர் கோவிலும் குறிப்பிடத்தக்கவை.

    முருதேஸ்வரில் உள்ள பிரம்மாண்ட சிவபெருமான் சிலை கடலோரமாக உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சிறிய கோவில்களும் இந்த நூலில் இடம்பிடித்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஹம்பி, ஐஹோல், பட்டடக்கல் ஆகியவற்றில் உள்ள குகைக் கோவில்களும் ஓவியங்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.

    நுளம்பர், ஹொய்சாளர், சாளுக்கியர் முதலிய வம்ச மன்னர்களின் ஆதரவுடன் பெருகிய கோவில்கள் அந்தந்தக் கால புகழ்பெற்ற சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டி நிற்கின்றன. கோவில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கின்றன.

    இவ்வாறு மக்களின் பக்தி, கலை ரசனை, சுற்றுலா, வரலாற்று உணர்வு ஆகியவற்றை வழங்கும் கோவில்களையும், சின்னங்களையும் காப்பாற்றி வருங்கால சந்ததியினருக்கு வழங்குவது நமது கடமை ஆகும். கர்நாடக கோவில்கள் பற்றி தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகள் இருந்தபோதிலும். புஸ்தகம் எதுவும் இல்லை ; சுற்றுலா கைடுகள் கோவிலைத் தவிர ஏனைய விஷயங்களையும் சேர்ப்பதால் பக்தர்களுக்குப் பயன்படுவதில்லை.அந்தக் குறையை இந்த நூல் போக்கும் என்று எண்ணுகிறேன். முதலில் நான் எழுதிய மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் என்ற நூலுக்குக் கிடைத்த ஆதரவு இந்த கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள் நூலுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய 107 ஆவது நூல்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2023

    Swami_48@yahoo.com

    1. கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் - Part 1 (பெங்களூர் கோவில்கள்)

    மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் பற்றி எழுதி முடித்தவுடன் அதை புத்த கமாக அச்சிட அனுப்பிவிட்டேன். இப்போது கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் பற்றியும் எழுத ஆசை பிறந்தது.வெப் சைட்டுகளில் நுழைந்தால் சிறியதும் பெரியதுமாக 400 கோவில்களின் பெயர்கள் வருகின்றன. அவற்றில் 108 கோவில்களை மட்டும் தெரிந்தெடுப்பது கடினமானதே ; முயன்றுதான் பார்ப்போமே சில கோவில்களில் வழிபாடு இல்லா மல் சிற்பங்கள் மட்டும் இருக்கும். இன்னும் சில இந்து மதத்துக்குப் புறம்பான சமண தலங்கள் (உ.ம். சிரவண பெல கோலா ).அவைகளையும் காண்போம்.

    தமிழ்நாட்டைப்போலவே கர்நாடக மாநிலத்திலும் 30,000 கோவில்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவில் ஐந்து லட்சம் கோவில்கள் உள்ளன. இவை அனைத்திலும் அயோத்தியா கோவில் திறப்பு தினத்தில் விசேஷ பூஜைகள் செய்ய ராமர் விக்ரக பிரதிஷ்டை செய்வோர் அழைப்பு விடுத்துள்ளனர் பெங்களூரு வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன

    முக்கியமான வழிபாட்டுத் தலங்கள் அல்லது இந்து சமய புராணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் உள்ள இடங்களின் பட்டியல் இதோ:--

    ***

    முதலில் பெங்களூரிலுள்ள முக்கியக் கோவில்களை ‘புல்லட்bullet points பாயிண்டு’களில் (சிறப்பு அம்ஸங்களை மட்டும்) காண்போம்

    1.The Chokkanathaswamy Temple

    சொக்கநாத சுவாமி கோவில் பெங்களூர்

    தொல்மூர் பகுதியில் உள்ள சொக்கநாத சுவாமி கோவில் விஷ்ணு கோவில் ஆகும். மதுரையில் இதைச் சொன்னால் சிவன் கோவில் என்று பொருள்படும். ஆனால் இங்கோ சொக்க பெருமாள் குடிகொண்டுள்ளார். சுந்தர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் சொக்க. இது மிகப்பழமையான கோவில். சோழர்கால கோவில். தமிழ்க் கல்வெட்டுகளும் கன்னடக் கல்வெட்டுகளும் இருக்கும் இடம். கலை வேலைப்பாடு அமைந்த தூண்களையும் சிற்பங்களையும் இங்கே காணலாம். ஒரே கம்பத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ***

    2. The Nandhi Temple

    நந்தி கோவில்

    கெம்ப கவுடாவினால் (1500 CE ) கட்டப்பட்ட இந்தக் கோவில் பசவன குடியில் இருக்கிறது

    கன்னடத்தில் பசவ என்றால் காளை. இங்கு சிவ பெருமானின் பெரிய வாகனமான நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டு காட்சி தருகிறது உயரம் 4-6 மீட்டர் அதன் தலையில் இரும்புத் தகடு இருக்கிறது. அது வளராமல் இருக்க இப்படிச் செய்ததாகச் சொல்லுவார்கள் அதைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய கணபதியைக் காணலாம். விஜயநகர ஆட்சியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இங்கு நடைபெறும் நிலக்கடலைத் திருவிழா (Kadalekaye Parishe Festival (groundnut fair) மிகவும் பிரசித்தமானது. அன்று இறைவனுக்கு நிலக்கடலை மலை போலக் குவியும்.

    ***

    3. ISKCON Temple

    ஹரே கிருஷ்ணா கோவில்

    அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட கவர்ச்சிமிகு தங்கக்கோவில். மிகப்பெரிய 56 அடி உயர த்வஜ ஸ்தம்பம் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. அதே போல கலச சிகரமும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது... ஒரு கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ராதா- கிருஷ்ணர், பலராமனை தரிசிக்கலாம். நீரூற்றுகளும் பெரிய அலங்கார வளைவுகளும் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் ஐந்து பிரார் த்தனை ஹால்/ HALLS மண்டபங்கள் இருக்கின்றன

    இருப்பிடம்-- ராஜாஜி நகர், ஹரே கிருஷ்ணா குன்று

    ***

    4. Shivoham Shiva Temple

    சிவோஹம் சிவன் கோவில்

    பழைய விமான நிலைய ரோட்டில் அமைந்த சிவோஹம் சிவனை யாரும் மிஸ் MISS பண்ண முடியாது. ஏனெனில் சிவபெருமானின் உயரம் 65 அடி. ஆண்டுக்கு 5 லட்ச ம் பேர் தரிசனத்துக்கு வருகின்றனர். 1995-ல் சிருங்கேரி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னணியில் கைலாஷ் பர்வதம் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.32 அடி உயர கணபதி, 28 அடி உயர சிவலிங்கம் ஆகியன எல்லாம் நினைவிலிருந்து நீங்காத அளவுக்கு பெரியவை. சிவன் தலையிலிருந்து கங்கை பாய்கிறது.

    ***

    5. Banashankari Amma Temple

    வனசங்கரி அம்மன் கோவில்

    இந்தக் கோவில் கனகபுர சாலையில் நிற்கிறது அண்மைக்கால கோவில் ஆனாலும் இங்கு நடைபெறும் ராகுகால பூஜை பிரபலம் அடைந்துள்ளது. பார்வதியின் உருவமான ஷாகம்பரி தேவியை கன்னடியர்களும் மராட்டியர்களும் வழிபடுகின்றனர்.

    ***

    6.Annamma Temple

    அன்னம்மா கோவில்

    அன்னம்மா தேவி இந்த நகரத்தின் காவல் தேவதையாக கருதப்படுகிறா ள் ; உள்ளூர் மக்கள் திருமணத்திற்கு முன்னர் வழிபடுவது சம்பிரதாயம். இது நகரின் மெஜஸ்டிக் பகுதியில் கடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட ஒற்றைக் கல் புடைப்புச் சிற்பமாக அமமன் உள்ளார்

    ***

    7. Dharmaraya Swamy Temple

    தர்மராய கோவில்

    800 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி குல க்ஷத்ரியர் கட்டிய கோவில் இது. நகரின் கடைத் தெரு பகுதியில் கம்ப கவுடா பஸ் நிலையம் அருகில் அமைந்தது. விவசாயிகள் வணங் கும் இந்தக் கோவிலின் சித்திரைமாத காவடி உற்சவம் மிகவும் புகழ்பெற்றது.

    ***

    8. Shrungagiri Shanmukha Temple

    ச்ருங்ககிரி ஷண்முக கோவில்

    ராஜ ராஜேஸ்வரி நகரில் அமைந்த முருகன் கோவில் இது. இங்கு சுப்ரமண்யர் ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார்.

    Enjoying the preview?
    Page 1 of 1