Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu
Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu
Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu
Ebook206 pages1 hour

Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை ஒரு லட்சத்துக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. இறைவன் மீது பக்தி செலுத்த உதவுவதோடு சுற்றுலாத் துறையையும் கோவில்கள் ஊக்குவிக்கின்றன. பூ, தேங்காய், பழம், அர்ச்சனை டிக்கெட், பிரசாதம், பூசாரி ஊதியம் எனப் பிரித்துப் பார்த்தால் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கவும் செய்கின்றன. இன்று மீனாட்சி கோவிலைப் போலவோ ஹளபீடு போலவோ ஒன்றை நிர்மாணிக்க பல கோடி செலவாகும். கோவிலிலுள்ள ஒவ்வொரு விக்கிரகமும், நகையும் பல லட்சம் மதிப்புடையவை. இவையெல்லாம் தவிர ஒவ்வொரு கோவிலிலும் ஒரு அதிசயம், வினோதம், விசித்திரம் காணப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகள் புகைப்படங்களை எடுத்து புஸ்தகம் எழுதி ‘பிஸினஸ்’ செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580153509064
Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

Read more from London Swaminathan

Related to Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

Related ebooks

Related categories

Reviews for Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu - London Swaminathan

    http://www.pustaka.co.in

    முக்கிய கோவில்கள், சமாதிகளை தரிசிக்க உதவும் கையேடு

    Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மூகாம்பிகை கோவிலும் ஆகும்பே காடுகளும்

    2. மலை மீது குட்டி திருப்பதி- மலைவையாவூர்

    3. நெரூர் மஹான் சதாசிவ பிரம்மேந்திராள் செய்த அற்புதங்கள்!

    4. முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த இந்து சாமியார்

    5. ஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம்

    6. பின்னு செஞ்சடையாள், பேரழகி சிலை உடைய திருமுட்டம்

    7. எனது ஷீரடி யாத்திரை!

    8. பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க!

    9. பேயை விரட்டும் சித்தர் கோவில்

    10. பள்ளி கொண்டானும் பல்லி கொண்டானும்

    11. காஞ்சிபுரத்தில் சகுந்தலா ஜகந்நாதன் மியூஸியம்

    12. நெற்றிக் கண் ! சூடான தோசை ! சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில்!

    13. வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்!

    14. நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

    15. ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்?

    16. சித்தர்களும் சமாதி அடைந்த தலங்களும்

    17. அய்யங்கார் செய்த அற்புதம்!

    18. வேடிக்கையான தமிழ்ப் பழமொழிகள்!

    19. ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!

    20. மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு

    21. நாமக்கல்லில் நான் ஏமாந்த கதை!

    22. கோவில் செங்கலில் வெளிநாட்டுக்காரர் உருவம்

    23. கோவில் கோபுரம் எதற்காக?

    24. தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்

    25. உயர்ந்த சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும்

    26. ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்!

    27. அற்புதக் காட்சி அளிக்கும் அரிச்சல் முனை, தனுஷ்கோடி, ராமேஸ்வரம்

    28. பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்!

    29. கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல்

    30. 1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

    31. சங்க காலத்தில் கோவில்கள் இருந்ததா?

    32. கோவிலில் தமிழ் புத்தக அரங்கேற்றங்கள்!!

    33. உடுப்பி கிருஷ்ணன் பற்றிய அதிசயத் தகவல்கள்

    34. உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்: மேலும் ஒரு கர்நாடக அதிசயம்!

    35. ஒரே கல்லில் 4 மாங்காய்! காஞ்சியில் கிடைக்கும்!!

    36. காஞ்சீபுரம் கோவில்கள்

    37. ஊட்டத்தூர் கோவில் அதிசயங்கள்

    38. கண்ணாடிக் கோவில்: உலக அதிசயம்

    39. சிரியா நாட்டில் நயன்தாரா கோவில்!

    40. ஜப்பானில் பிள்ளையார் & ஸரஸ்வதி கோவில்கள்!

    41. ஜப்பானில் விநோத ‘கோல்ப்’ தேவதைக் கோவில்!

    முன்னுரை

    இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை ஒரு லட்சத்துக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. இறைவன் மீது பக்தி செலுத்த உதவுவதோடு சுற்றுலாத் துறையையும் கோவில்கள் ஊக்குவிக்கின்றன. பூ, தேங்காய் பழம் , அர்ச்சனை டிக்கெட், பிரசாதம், பூசாரி ஊதியம் எனப் பிரித்துப் பார்த்தால் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கவும் செய்கின்றன. இன்று மீனாட்சி கோவிலைப் போலவோ ஹளபீடு போலவோ ஒன்றை நிர்மாணிக்க பல கோடி செலவாகும். கோவிலிலுள்ள ஒவ்வொரு விக்கிரகமும், நகையும் பல லட்சம் மதிப்புடையவை. இவையெல்லாம் தவிர ஒவ்வொரு கோவிலிலும் ஒரு அதிசயம், வினோதம், விசித்திரம் காணப்படுகிறது. வெளிநாட்டுப்பயணிகள் புகைப்படங்களை எடுத்து புஸ்தகம் எழுதி ‘பிஸினஸ்’ செய்கின்றனர்.

    1987ம் ஆண்டில் பிபிசி (BBC ) அழைத்ததன் பேரில் லண்டனுக்கு ஒலிபரப்பு வேலைக்கு வந்தேன். வினவுங்கள் விடைதருவோம் என்ற சிறப்புமிகு நிகழ்ச்சியைத் துவக்கினேன். எந்தக் கேள்வியை நேயர்கள் கேட்டாலும் அதற்குப் பதில் கொடுத்தேன். அதற்காக அவ்வப்போது பொது அறிவுப் புஸ்தகங்களை விலைக்கு வாங்கினேன்.

    அப்போது ஒரு அதிசயம் காத்திருந்தது. இங்கிலாந்திலுள்ள ஒரு பதிப்பகம் ‘உலகத்தின் நூறு அதிசயங்கள்’ (Hundred Wonders of the World) என்ற நூலை அழகிய கலர் படங்களுடன் பெரிய சைசில் வெளியிட்டிருந்தார்கள். ஆர்வத்துடன் விலைக்கு வாங்கி இண்டெக்ஸ் பக்கத்துக்குத் திருப்பினேன் .இந்தியா என்ற தலைப்பில் வரக்கூடிய விஷயங்களைப் பார்த்தேன் நான் எதிர்பார்த்தது போல தாஜ்மஹால், அஜந்தா குகைகள், கஜுராஹோவிலுள்ள காம உணர்வுச் சிலைகள் பற்றி ஒவ்வொரு அதிசயம் இருந்தது. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. எந்த மதுரை நகரிலிருந்து என்னை பிபிசி (BBC) அழைத்ததோ அந்த மதுரை மீனாட்சி கோவிலும் 100 அதிசயங்களில் ஒன்று என்று நாலைந்து பக்கத்துக்குக் கட்டுரையுடன் புகைப்படங்கள் இருந்தன. இது நடந்தது 1987ம் ஆண்டு. இதற்குப் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பத்திரிகைகள், குறிப்பாகத் தமிழ் பத்திரிகைகள், உலக அதிசயமாகத் தேர்ந்தெடுக்க மீனாட்சி கோவிலுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தினமும் செய்தி வெளியிட்டன. எனக்கு ஒரே சிரிப்பு. 1987ம் ஆண்டில் லண்டன் ஆட்டொமொபைல் அசோசியேஷன் (AA) ஏற்கனவே உலக அதிசயம் என்று முத்திரை குத்திவிட்டதை அப்போதுதான் தமிழ் இந்து உணரத் தொடங்கினானே என்று சிரிப்பு; இன்னுமொரு புறம் மகிழ்ச்சி. வெள்ளைக்காரனுக்கு எப்போதோ தெரிந்தது தமிழ் இந்துவுக்கு இப்போதாவது தெரிந்ததே என்று மகிழ்ச்சி சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் இந்து மதக் கோவில்கள் கோடிக் கணக்கானோருக்கு வேலை கொடுக்கிறது. மன அமைதியைக் கொடுக்கிறது. கோவில் பிரகாரங்கள் ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன. அங்குள்ள பொக்கிஷங்களோ விலை மதிக்க வொண்ணாதவை. உலக ஏல நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றை விற்றுவிட்டன. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமிகோவில் ஒன்றின் செல்வத்தை வைத்தே நாம் உலகையே விலைக்கு வாங்கிவிடலாம்.

    இது தவிர சித்தர்களின் சமாதிகளின் பெருமை தனி விஷயம் ஆகும். நீங்களும் அங்கெல்லாம் சென்று பயன் அடையுங்கள் ; நான் ‘சென்ற’ ‘பார்த்த’ இடங்களைப் பற்றியே 90 சதவிகிதம் எழுதியுள்ளேன். நான் சென்ற சமாதிகள் எண்ணிக்கையும் அதிகம்; நானே எண்ணி வியப்படைகிறேன். ஆயினும் இன்னும் பார்க்காத கோவில்களோ பல்லாயிரம் இருக்கின்றன. நூறு பிறவிகள் எடுத்தாலும் ஒரு லட்சம் கோவில்களையும் தரிசிக்க முடியுமா? அதைவிட அங்குள்ள நுட்பங்களை அறிய முடியுமா என்று வியக்கிறேன்.

    எனது ‘பிளாக்’ (Blogs) குகளில், பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கட்டுரைகள் வெளியாயின; அந்த தேதியும் கட்டுரை எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னர் அச்சிடப்பட்ட என்னுடைய நூல்களில் இருக்கும் ஒரு சில கட்டுரைகள் மட்டும் இதில் மீண்டும் வந்திருக்கும்.

    இந்த நூலில் உள்ள தகவல் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் எழுதுங்கள் .தொடர்பு முகவரிகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. படியுங்கள்! மகிழுங்கள் !!

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2022

    1. மூகாம்பிகை கோவிலும் ஆகும்பே காடுகளும்

    Post No.6994; Date: 21 SEPTEMBER 2019

    சிருங்கேரி சாராதாம்பாள் கோவில், சிருங்கேரி ஜகத்குரு ஆகியோரின் தரிசனத்தை முடித்துக் கொண்டு கொல்லூர் நோக்கி காரில் விரைந்தோம். சரியாக 2-45 மணிக்குச் சேர்ந்தோம். மூன்று மணிக்கு கோவில் திறந்து விடுவார்கள் என்று கேட்டவுடன் காதில் தேன் பாய்ந்தது போல இருந்தது. கூட்டம் அதிகம் இல்லை. 15 நிமிடங்களுக்குள் அருமையான தரிசனம். கேரள பாணியில் ஆண்கள் சட்டை அணியாமல் மேல் துண்டுடன் தான் செல்ல வேண்டும். வெளியில் உடைக் கட்டுப்பாடு பற்றி எச்சரிக்கும் போர்டு வைத்து இருக்கிறார்கள்.

    கொல்லூருக்குப் புகழ் வந்தது எப்படி?

    கடவுளரும் புகழ் பெறுவதற்கு மனித உதவி தேவைப்படுகிறது! விநோதமாக இருக்கிறது அல்லவா? நம்பியார் போன்றோர் சபரிமலைக்குச் சென்றதால் சபரிமலை பற்றி நிறைய பேருக்குத் தெரிந்தது. மும்பையில் முஸ்லீம் நடிகர்கள் உள்பட அனைவரும் மஹாலெட்சுமி கோவிலுக்கும் சித்தி விநாயகர் கோவிலுக்கும் செல்வதால் இரண்டு கோவில்களுக்கும் ‘மவுஸ்’ அதிகரித்தது. ரஜினிகாந்த் மூலம் ராகவேந்திரர் புகழ் பரவியது. இது போலவே புரட்சி நடிகர் எம். ஜி. ராமசந்த்திரன் மூலம் மூகாம்பிகை புகழ் பெருகியது!

    அன்னை மூகாம்பிகை தேவிக்கு எம்.ஜி.ஆர். தங்க வாள் காணிக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து 2004ல் அங்கே சென்ற ஜெயலலிதா, அந்தக் கோவிலுக்கு 30,000 ரூபாயும் ஒரு டன் நெய்யும் காணிக்கையாகக் கொடுத்தார். இதனால் தமிழர்கள் கூட்டம் கோவிலுக்குப் படை எடுத்தது. எம்.ஜி.ஆர். கொடுத்த வாளைத் தொட்டுக் கும்பிடும் பாக்கியம் ஜெயலலிதாவுக்கும் கிடைத்தது.

    கொல்லூர் எங்கே இருக்கிறது?

    என்ன அதிசயம் பாருங்கள்! 1500 மைல்கள் நீண்டு படர்ந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளது இந்தக் கோவில். கர்நாடக மாநிலத்தில் குண்டாபூரில் இருந்து 45 கிலோமீட்டர்,

    மங்களூரில் இருந்து 140 கிலோமீட்டர்,

    உடுப்பியில் இருந்து 80 கிலோமீட்டர்.

    மலைப்பாதை வழியாகச் செல்லுவதால் வாஹனங்கள் மெதுவாகவே செல்ல முடியும். இரு புறமும் இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கு விருந்து அளிக்கும்.

    மூகாம்பிகை யார்?

    இந்தியாவின் மிகப்பெரிய தத்துவ ஞானியான ஆதி சங்கரர் உலக மஹா அதிசயம் செய்தார். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் (சிலர் 1300 ஆண்டுகளுக்கு முன் என்பர்), காடுகள் வழியாகச் சென்று காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு தேவியின் பெயரைச் சூட்டினார். இமய மலைக்குச் சென்று நீரில் மூழ்கிக் கிடந்த அதிசய லிங்கங்களை எடுத்தார். வியாசருக்குப் போட்டியாக எழுதித் தள்ளினார்; எல்லா நூல்களுக்கும் உரை எழுதினார்; நூற்றுக் கணக்கான ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களை இயற்றினார். இந்து மதத்தில் காலப்போக்கில் சேர்ந்த செத்தை குப்பைகளை அகற்றி ஷண்மத (ஆறு தெய்வ வழிபாடு) ஸ்தாபனம் செய்தார். அவர் சென்ற இடம் இல்லாம், முக்கியக் கோவில்களில், ஸ்ரீசக்ர யந்திரத்தை நிறுவினார். அது தன ஆகர்ஷணம், ஜன ஆகர்ஷணம் செய்யவல்லது. அதாவது காசி, திருப்பதி போல மக்களையும் செல்வத்தையும் குவியச் செய்யும்.

    ஆதிசங்கரர் நிறுவிய மந்திர தந்திர ஸ்ரீ சக்ரமே மூகாம்பிகை கோவிலின் புகழுக்கும் காரணம். ‘மூக’ என்றால் தமிழில் ஊமை என்று பொருள். மூகனாக இருந்த, ஒரு அசுரனை அன்னை பார்வதி அழித்ததால் இந்த தேவிக்கு மூகாம்பிகை என்று பெயர்; சிலையைப் பார்த்தால் கொள்ளை அழகு! மலையாளிகளை அதிகம் சுண்டி இழுக்கும் கோவில் இது.

    Enjoying the preview?
    Page 1 of 1