Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puranangal Pulugu Moottaigala?
Puranangal Pulugu Moottaigala?
Puranangal Pulugu Moottaigala?
Ebook211 pages1 hour

Puranangal Pulugu Moottaigala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்து மத புராணங்கள் அளவில் மிகப்பெரியவை; பழமைக்கும் குறைவில்லை. அதிலுள்ள விஷயங்களைப் படிக்காதவர்கள் மட்டும் அவற்றைக் குறைகூறுவர். திராட்சைப் பழத்தைப் பறிக்க எட்டி எட்டி குதித்த நரி, அவை கிடைக்காதபோது சீ...சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதே போல அளவில் பெரிதான, தரத்தில் சிறந்ததான புராணங்களைப் படிக்க இயலாதவர்கள் சீ...சீ... இந்தப் புராணங்கள் புளிக்கும் என்று சொல்லிவிட்டுப் போயின. பல லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட புராணங்களைப் படித்து ஜீரணம் செய்வது கடினம்தான்.

Languageதமிழ்
Release dateJan 9, 2023
ISBN6580153509304
Puranangal Pulugu Moottaigala?

Read more from London Swaminathan

Related to Puranangal Pulugu Moottaigala?

Related ebooks

Related categories

Reviews for Puranangal Pulugu Moottaigala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puranangal Pulugu Moottaigala? - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புராணங்கள் புளுகு மூட்டைகளா?

    Puranangal Pulugu Moottaigala?

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    இந்து மத புராணங்கள் அளவில் மிகப்பெரியவை; பழமைக்கும் குறைவில்லை. அதிலுள்ள விஷயங்களைப் படிக்காதவர்கள் மட்டும் அவற்றைக் குறைகூறுவர். திராட்சைப் பழத்தைப் பறிக்க எட்டி எட்டி குதித்த நரி, அவை கிடைக்காதபோது சீ, சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லிவீ ட்டுச் சென்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதே போல அளவில் பெரிதான, தரத்தில் சிறந்ததான புராணங்களைப்

    படிக்க இயலாதவர்கள் சீ சீ இந்தப் புராணங்கள் புளிக்கும் என்று சொல்லிவிட்டுப் போயின. பல லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட புராணங்களைப் படித்து ஜீரணம் செய்வது கடினம்தான். ஆயினும் புராணங்களில் உள்ள கதைகளை பராபரியாகவாது பலரும் கேட்டிருப்பார்கள். முழு அர்த்தம் புரியாதோர், ஒரிஜினலைப் படிக்கப் பொறுமை இல்லாதபோது கேள்விகள் மட்டும் கேட்பார்கள். புராணங்களில் வரலாற்றுச் செய்திகள் நிறைய உள்ளன. பழைய ஓலைச் சுவடிகளை ‘படி’ எடுத்தபோது ஏற்பட்ட பிழைகளாலும், அவவப்போது புராணங்களை சிலர் அப்டேட் (update) செய்த காரணத்தாலும் சில குழப்பங்கள் ஏற்பட்டன. ஆயினும் மொத்தத்தில் அதில் வரலாறு, பூகோளம், முதலியன உள்ளன. நான் பத்தாண்டுக்கும் மேலாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பதால்,சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கலாம். என் ‘பிளாக்’குகளில் இந்தக் கட்டுரைகள் முன்னரே வெளியான தேதிகளும், வரிசை எண்களும் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கும். இந்தக் கட்டுரைத் தொகுப்பில் புராணம் தொடர்பான கட்டுரைகளோடு இந்து மதம், வரலாறு தொடர்பான கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்; உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்,

    அன்புள்ள

    லண்டன் சுவாமிநாதன்

    நவம்பர், 2022

    பொருளடக்கம்

    1.புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப்பிள்ளையார் வரை!

    2.நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்!

    3. வலஞ்சுழி, இடஞ்சுழிப் பிள்ளையார்கள்

    4.வாதாபி கணபதிம் பஜே ஹம்

    5.விநாயகரின் ரசாயன யுத்தம்

    6.பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து!

    7.விநாயக கவச அற்புதங்கள்; கவசம் எழுதியது யார்?

    8. விநாயகப் பெருமானின் 16 நாமங்கள்

    9.பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

    10.21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?

    11.புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொய் சொல்கின்றனவா?

    12.புராணங்களின் காலம் என்ன?

    13.ஒரே பாடலில் 18 புராணம்

    14.இந்துக்கள் உலக மஹா புத்தகப் பிரியர்கள்!

    15.‘‘ஞானப் படகு’’ பற்றி தேவாரமும் கீதையும் தரும் தகவல்

    16.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1

    17.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2

    18.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 3

    19.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 4

    20.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 5

    21.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் – Part 6 (இறுதிப் பகுதி);

    22.திருவிளையாடல் புராணம் உண்மையே!

    23.அதிசய மன்னர்கள் எழுதிய அற்புத புத்தகங்கள்!

    24. 72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள்

    25.அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது!

    26.மாநுடப் பிறவி அரிது! அரிது!!

    27.மன்னர்களை வசப்படுத்திய பேரழகி

    28.புத்தர் பற்றிய ஐந்து அதிசய விஷயங்கள்!

    29.இந்தியா 250,000 ஆண்டு பழமையானது

    30.இந்திய அதிசயம்: இந்தியாவின் நீண்ட நெடுஞ்சுவர்

    31.வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

    32.பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

    33. தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்

    34.தமிழ் மொழி பற்றி கம்பன்

    35.அகத்தியரை நியூசிலாந்து மயோரி பழங்குடியினர் வழிபடுவது ஏன்?

    36.சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

    37.அடங்காதவரை அடக்குவது எப்படி?

    38.தமிழா, சோதிடத்தை நம்படா! வாகடத்தை நம்படா!!

    1.புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப்பிள்ளையார் வரை!

    இந்து மதத்தில் கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அதிக சேஷ்டைகள், விஷமங்கள் செய்ததது பிள்ளையார்தான்! ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிள்ளையார் கதை உண்டு. இவை எல்லாவற்றையும் தொகுத்தால் புதிய விநாயகர் புராணம் வந்துவிடும். ஆனால் பிள்ளையாரின் குறும்புத்தனங்கள் எல்லாம் நன்மையிலேயே முடியும். பெயரிலேயே பிள்ளை (யார்) என்று இருக்கும்போது குறும்புத்தனங்கள் இருப்பது நியாயம்தானே!

    புதிய பிள்ளையார் புராணம் மிக நீண்டது. முதலில் பட்டியலைக் கொடுத்துவிடுகிறேன். பிறகு ஒவ்வொரு பிள்ளையாரின் பெருமையையும் சுருக்கி வரைகிறேன்.

    பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப் பிள்ளையார் வரை! வாதாபி கணபதி முதல் வரசித்தி கணபதி வரை!! எல்லோரையும் காண்போம்.

    மதுரை மேலமாசிவீதி - வடக்கு மாசிவீதி சந்திப்பிலுள்ள பிள்ளையார் மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார். நாஸ்தீகரான நேருவே, மதுரை வந்தபோது காரை நிறுத்தி கும்பிடு போட்ட (காங்கிரஸ் பக்தர்களால் கும்பிடு போடும்படி செய்யப்பட்ட) பிள்ளையார் என்பதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    (ஆலமரத்துக்கடியில் குடிகொண்ட இப்பிள்ளையாரை நான் லண்டனில் குடியேறும்வரை வழிபட்டு வந்தேன். இப்போதும் இந்தியாவுக்குப் போகும் போதெல்லாம் மதுரைக்குச் சென்று மீனாட்சியையும் இந்தப் பிள்ளையாரையும் தரிசிக்காமல் திரும்புவதில்லை).

    மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள கவர்ச்சிகரமான, பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர். அ து மட்டுமல்ல இந்தப் இள்ளையார் சிலை, மதுரைக் கோவிலைக்கட்ட மண் தோண்டியபோது, மாரியம்மன் தெப்பக்குளப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாம். முஸ்லீம் ஆட்சியில் அழிந்த பல கோவிலகளில் ஒன்று அப்பகுதியில் இருந்திருக்கலாம். (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க: - 21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?, posted on 30 May 2013)

    மதுரைக் கோவிலுக்குள் உள்ள மற்றொரு புகழ்மிகு பிள்ளையார், (அம்மன் சந்நிதிப்) பொற்றமரைக் குளத்தின் தெற்குப் பிரகாரத்திலுள்ள விபூதிப் பிள்ளையார் ஆவார். பக்தர்கள் அனைவரும் அவரை வலம் வந்து ஒரு பிடி விபூதியை அவர் தலையில் அபிஷேகம் செய்து பாதத்திலுள்ள விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ளுவர். விபூதியும் அவர் வைக்கப்பட்டுள்ள மரத்தொட்டியில் விழுவதால், நாம் தனியாக விபூதி கொண்டுபோக வேண்டிய அவசியமில்லை.

    கோவிலில் இன்னும் பல இடங்களில் பிள்ளையார் சிலைகள் உண்டு. ஆனால் அவைகளின் சிறப்புகளைச் சொல்லும் கதைகள் ஏதும் இல்லை.

    கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதை

    ஒரு கரும்பு வியாபாரி வண்டி நிறைய கரும்பு கொண்டுவந்தான். பிள்ளையார், ஒரு சிறு பையன் வேடத்தில், அவனிடம் சென்று கரும்பு கேட்டார். அவன் அந்தப் பையனை விரட்டி விட்டான். மறுநாள் அவனுடைய கரும்புகள் அனைத்தும் யாரோ சாப்பிட்டுவிட்டுத் துப்பிய சக்கையாக கிடந்தன. உடனே அவன் தன து தவற்றை உணர்ந்தான். பிள்ளையாரே தமக்கு அருள்புரிய இப்படி வந்தாரென்றும், அவன் சிறுவனுக்குக் கரும்பு கொடுக்காமல் திட்டி விரட்டியது தவ று என்றும் உணர்ந்து ஆயிரம் கரும்புகளை கணபதிக்குப் படைத்தான். அன்று முதல் அவன் செழிப்பு அதிகரித்தது. இந்தப் பெருமை ஊரெங்கும் பரவவே அந்தப் பிள்ளையாரின் பெயர் கரும்பு ஆயிரம் பிள்ளையார் ஆயிற்று

    50 பிள்ளையார்களின் நீண்ட பட்டியல்:--

    இதோ தமிழ் நாட்டின் பிள்ளையார் கோவில்களின் (சந்நிதிகளின்) நீண்ட பட்டியல்:--

    முக்குறுணி விநாயகர் -- மதுரை மீனாட்சி கோவில்

    விபூதிப் பிள்ளையார் - மதுரை மீனாட்சி கோவில்

    நேரு ஆலால சுந்தர விநாயகர் – மதுரை

    குடைவரைப் பிள்ளையார் -- திருப்பறங்குன்றம் கோவில்

    கரும்பாயிரம் பிள்ளையார் - கும்பகோணம்

    அழகிய விநாயகர் - திருவாவடுதுறை

    ஆண்ட பிள்ளையார் - நறையூர் சித்தீச்சுரம்

    ஆதி விநாயகன் - திருவையாறு

    ஆழத்துப்பிள்ளையார் – திருமுதுகுன்றம்

    உச்சிப் பிள்ளையார் - திருச்சிராப்பள்ளி

    ஓலமிட்ட பிள்ளையார் – திருவையாறு

    கங்கைக் கணபதி - குடந்தை கீழ்க்கோட்டம்

    கடுக்காய்ப் பிள்ளையார் - திருக்காறாயில்

    கருக்கடி விநாயகர் - திருக்கச்சூர்

    கள்ள வாரணப் பிள்ளையார் – திருக்கடவூர்

    கற்பகப் பிள்ளையார் - கடிக்குளம், திருக்காவூர்

    கற்பக விநாயகர்-- பிள்ளையார்பட்டி

    கூப்பிடு பிள்ளையார் - திருமுருகன் பூண்டி

    கைகாட்டு பிள்ளையார் - திரு நாட்டியத்தான்குடி

    கோடி விநாயகர் - கொட்டையுர்

    சிந்தாமணி கணபதி-திருமறைக்காடு

    சுந்தர கணபதி- கீழ்வேளூர், திருமழபாடி

    சூதவனப் பிள்ளையார்- திருவுச்சாத்தனம்

    செவிசாய்த்த விநாயகர் – அன்பிலாந்துறை

    சொர்ண விநாயகர் - திருநள்ளாறு

    தாலமூல விநாயகர் – திருக்கச்சூர்

    துணையிருந்த பிள்ளையார் - திருப்பனையூர்

    நாகாபரண விநாயகர் - நாகைக் காரோணம்

    நீர்த்தன விநாயகர் - இன்னம்பர்

    படிக்காசு விநாயகர் - திருவீழிமிழலை

    மணக்குள விநாயகர் - பாண்டிச்சேரி

    மாணிக்க விநாயகர் திருச்சி

    நவசக்தி விநாயகர் - மைலாப்பூர், சென்னை

    அஸ்வத்த விருட்ச விநாயகர் - தி.நகர், சென்னை

    படித்துறை விநாயகர் - திருவிடை மருதூர்

    பிரளயங்காத்த பிள்ளையார் -திருப்புறம்பியம்

    பொய்யா விநாயகர் - திருமாகறல்

    பொல்லாப் பிள்ளையார் - திருநாரையூர்

    மாவடிப் பிள்ளையார் - நாகைக் காரோணம்

    மாற்றுரைத்த பிள்ளையார் – திருவாரூர்

    முக்குறுணிப் பிள்ளையார் - சிதம்பரம், மதுரை

    வரசித்தி விநாயகர் - திருவல்லம்

    வலம்புரி விநாயகர் – திருக்களர்

    வாதாபி கணபதி – திருப்புகலூர் (திருச்செங்காட்டங்குடி, கணபதீச்வரம்)

    வீர உறத்தி விநாயகர் – திருமறைக்காடு

    வெள்ளை விநாயகர் - திருவலஞ்சுழி இடும்பாவனம்

    வேதப் பிள்ளையார் – திருவேதிகுடி

    2.நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்!

    பகுதி ஒன்றில் மதுரை முக்குறுணி விநாயகர், கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதைகளை அறிந்தோம். நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர்.

    அவர் கதையையும் கேளுங்கள்!

    சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது. ஆனந்தேச சிவாச்சாரியார் இங்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவரால் பூஜைக்குச் செல்ல முடியாததால், தனது மகன் நம்பியாண்டார் நம்பியை அழைத்து, கணபதிக்குப் பூஜை செய்துவிட்டு இறைவனுக்கு அமுதும் படைத்து வா என்று அனுப்பிவைத்தார். கள்ளமில்லா உள்ளம் படைத்த நம்பி, பூஜையை முறைப்படி செய்துவிட்டு, பிள்ளையாருக்கான நைவேத்தியத்தைப் படைத்துவிட்டு பிள்ளையார் உண்ட பின் வீடு திரும்புவோம் என்று காத்திருந்தான். நெடு நேரம் ஆகியும் கல்லுப் பிள்ளையார் கல்லாகவே காட்சிதந்தார். ஒரு அங்குலம் கூட நகரவில்லை; வாயையும் திறக்கவில்லை.

    தான் செய்த பூஜையில் தவறு இருந்ததால்தான், கணேசன் வாய் திறக்கவில்லை என்று அருகிலுள்ள கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ளத் துவங்கினார். தனது தவற்றுக்கு தானே தண்டனை கொடுத்தபோது, பிள்ளையார் அவர் முன் தோன்றி உணவு வகைகளை வாங்கி வயிறு புடைக்கத் தின்றார். பொல்லாப் பிள்ளையார் அல்லவா!! அந்தப் பிள்ளையாரின் அருளால்தான் சிதம்பரத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1