Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal
Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal
Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal
Ebook202 pages1 hour

Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்க இலக்கிய நூல்களிலும், பிராகிருத நூலான காதா சப்த சதியிலும், சம்ஸ்க்ருத நூலான ராஜ தரங்கிணியிலும் நிறைய சுவையான செய்திகள் இருக்கின்றன. கோவில்களுக்குச் செல்லும்போது சிலை அழகு, கலை அழகுகளை ரசிக்க வேண்டுமானால் கடவுளை மறந்து விடவேண்டும். தேங்காய் பழத் தட்டுக்குப் பதிலாக காமெரா, மொபைல் போன் சஹிதம் சென்று, அனுமதி பெற்று, புகைப்படம் எடுக்க வேண்டும்; கல்வெட்டுகளைப் பார்த்து குறிப்பெடுக்க வேண்டும். அதுபோலவே இலக்கியங்களைப் படிக்கையில் இலக்கியத்துக்காகப் படிப்பது ஒருவிதம்; அதை மறந்துவிட்டு A to Z (ஏ டு இசட்) உள்ள தலைப்புகளில் என்ன என்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்வது மற்றொரு முறை.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580153509330
Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal

Read more from London Swaminathan

Related to Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal

Related ebooks

Reviews for Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal - London Swaminathan

    http://www.pustaka.co.in

    அகநானூறு, புறநானூறு, காதா எழுநூறு, ராஜ தரங்கிணி சொல்லும் அதிசயச் செய்திகள்

    Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. புறநானூற்று அதிசயங்கள்

    2. நற்றிணை அதிசயங்கள்

    3. அகநானூறு அதிசயங்கள் – பகுதி 1

    4. அகநானூறு அதிசயங்கள் – பகுதி 2

    5. அகநானூற்றில் MISS GOOD FRIDAY! ‘மிஸ் குட்Fரைடே’

    6. குறுந்தொகை அதிசயங்கள்

    7. பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!

    8. ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1

    9. யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!

    10. கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 3

    11. ஊஊ ஊஊ ஊஊ ஊஊ ஊஊ !!!!!!!!!

    12. சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்?

    13. குரங்கு ஆக மாறிய தமிழ்ப் பெண் - சிலப்பதிகாரத்தில் 7 அதிசயங்கள்

    14. சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு

    15. ஆயிரம் பொற்கொல்லர்களை பாண்டிய மன்னன் கொன்றது ஏன்?

    16. சித்தர் பாடலில் எண்கள்; ரிக் வேத எதிரொலி

    17. எட்டாம் நம்பர் மஹிமை

    18. வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்!

    19. ஆறாம் நம்பர் அதிசயங்கள்! இந்துமத, யூதமத ஒற்றுமை!

    20. வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல்

    21. அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்!

    22. கண்ணே! கண்மணியே! காளிதாசன் உவமைகள்

    23. பேடி / அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை

    24. புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை!

    25. தோள் கண்டார் தோளே கண்டார் - கம்பனுக்குப் போட்டி!

    26. காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்

    27. காதல் கவிதை (GSS) புஸ்தகத்தில் ஒரே குழப்படி

    28. காதா சப்தசதியில் அதிசயச் செய்திகள்!

    29. சங்க இலக்கியத்தில் பிராக்ருத கவிஞர்கள்!

    30. நாடகத்தில் யாருக்கு என்ன கலர்? என்ன மொழி?

    31. ஐந்து சம்ஸ்கிருத உணவும், ஆறு தமிழ் உணவும்!

    32. பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் – Part 1

    33. பிராகிருத நூலில் மருத்துவச் செய்திகள் – PART 2

    34. கைக்கு அழகு புத்தகம்! புஸ்தகம் ஹஸ்த லட்சணம்!!

    முன்னுரை

    சங்க இலக்கிய நூல்களிலும், பிராகிருத நூலான காதா சப்த சதியிலும், சம்ஸ்க்ருத நூலான ராஜ தரங்கிணியிலும் நிறைய சுவையான செய்திகள் இருக்கின்றன. கோவில்களுக்குச் செல்லும்போது சிலை அழகு, கலை அழகுகளை ரசிக்க வேண்டுமானால் கடவுளை மறந்து விடவேண்டும். தேங்காய் பழத் தட்டுக்குப் பதிலாக காமெரா, மொபைல் போன் சஹிதம் சென்று, அனுமதி பெற்று, புகைப்படம் எடுக்க வேண்டும்; கல்வெட்டுகளைப் பார்த்து குறிப்பெடுக்க வேண்டும். அது போலவே இலக்கியங்களைப் படிக்கையில் இலக்கியத்துக்காகப் படிப்பது ஒருவிதம்; அதை மறந்துவிட்டு A to Z (ஏ டு இசட்) உள்ள தலைப்புகளில் என்ன என்ன விஷயங்க இருக்கின்றன என்பதை ஆராய்வது மற்றொரு முறை.

    கோவிலில் கடவுளை மறந்து கலை அழகு ரசனைக்காக மட்டும் போவது போல, நூல்களில் இலக்கிய ரசனையை விட்டுவிட்டு வேறு என்ன என்ன சொன்னார்கள் என்பதைக் கண்டு, தொகுத்த விஷயங்களே இந்த நூல். அக நானூறு, புற நானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய தமிழ் நூல்களிலும், பிராகிருத, சம்ஸ்க்ருத நூல்களிலும் காணப்படும் சுவையான செய்யுட்களை அட்டையின் பின்புறத்தில் குறிப்பெடுத்து எழுதுவது என் பழக்கம். அவைகளை 11 ஆண்டுகளாக என் ‘பிளாக்’குகளில் கட்டுரைகளாக வெளியிட்டேன். நான் தனித்தனி கட்டுரைகளாக எழுதியதால் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வரக்கூடும். பொறுத்தருள்க. என் பிளாக்குகளில் முதலில் வெளியான தொடர் எண்ணும் தேதியும் இருக்கும். இந்த புஸ்தகங்களை அச்சு வடிவில் (Printed books) வேண்டும் என்றால் எனக்கோ புஸ்தக நிறுவனத்துக்கோ எழுதலாம். கட்டுரைகளில் கண்ட விஷயங்கள் குறித்து உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடர்பு முகவரிகள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    டிசம்பர் 2022

    1. புறநானூற்று அதிசயங்கள்

    சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.

    கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.

    இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.

    இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:

    1

    1. இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு அறநிலை என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!

    2

    பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு. மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் பதினெண்கணம் கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட சுர – நர - கக – கோ - போகி – கந்தர்வ - தைத்யை என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள்: அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.

    2. இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும் - நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.

    3

    3. இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் - மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே பொதியமும் இமயமும் ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.

    பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!

    4

    4. பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.

    5

    5. புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.

    6

    6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.

    7

    7. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் கடல் மணலைவிட அதிகம் என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.

    8

    8. மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்,

    நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)

    நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன், கடம்பன்)

    நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)

    என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.

    9

    9. சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1