Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Isaiyin Varalaru
Isaiyin Varalaru
Isaiyin Varalaru
Ebook116 pages44 minutes

Isaiyin Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லா நுண் கலைகளையும் விட உயர்ந்தது இசைக்கலை.கலைகளில் பழமையானதும் இசைக்கலையாகத்தான் இருக்க முடியும்.
பேசும் திறன் பெற்ற சில காலங்களிலேயே மனிதன் பாடும் திறனையும் பெற்றிருப்பான். பிறகுதான் மற்ற கலைகள் படிப்படியாக வளர்ந்திருக்க முடியும்.
மனித இனத்திற்குப் பேசும் திறன் வளரும் முன்பே கூட கேட்கும் திறன் இருக்கிறது. தாயின் தாலாட்டைக் கேட்பதற்காகவே, கேட்கும் திறன் பிறவியிலேயே இருக்கிறது.
மனிதன் ரசிகனாகவேதான் பிறக்கிறான்.
இசைக்கலை, உணர்வுகளின் மொழியாகும், செவிக்கு இனிமையைக் கொடுக்கும் ஒலியே நாதமாகும். அந்த 'நாதம்' செவிக்கு மட்டுமல்ல,நமது உணர்வுகளுக்கும் இனிமை கூட்டுகிறது.
இசையின் வரலாறும் இலக்கணமும் தெரியாமலேயே இசையை ரசிக்கமுடியும்.
இசையே ஒரு தனி மொழி. நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எல்லோரையும் கவர்ந்திழுக்கக்கூடியது.
இசை,தேவர்களின் மொழியாக மதிக்கப் படுகிறது. சிவபெருமான் கையில் 'டமருகம்' என்ற உடுக்கை போன்ற கருவி காணப்படுகிறது. நந்திகேசுவரர் மிருதங்கம் வாசிப்பதில் இணையற்றவர். கிருஷ்ண பரமாத்மா ஒரு குழலூதும் கலைஞர்.
பாரத நாட்டின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்து நிற்பது இசைக்கலை. இது 'சாம' வேதத்தின் 'உபவேதம்' என்றும்; ‘கந்தர்வ வேதம்' என்றும் அழைக்கப் படுகிறது. அதனால்தான் பகவத் கீதையில் கண்ணன்… 'வேதானாம் சாம வேதோஷ்மி..'.'வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்...'என்கிறார்.
மனிதர்களும், மிருகங்களும் தம்மை மறந்து, பசி, இச்சை,சூழ்நிலை யாவற்றையும் மறந்து, எந்தவொரு நாத வெள்ளத்திலே லயிக்கின்றார்களோ, அந்த நாதமே 'இசை'.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136806249
Isaiyin Varalaru

Read more from Aranthai Manian

Related to Isaiyin Varalaru

Related ebooks

Reviews for Isaiyin Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Isaiyin Varalaru - Aranthai Manian

    https://www.pustaka.co.in

    இசையின் வரலாறு

    Isaiyin Varalaru

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    இசை வரலாறு

    தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்

    ‘தொல்காப்பியமும் தமிழிசையும்’

    திருவாசகமும் இசையும்

    அடுத்தது 'ராகம்'...

    'கரானா' (பாணி/பள்ளி/குரு பரம்பரை)

    மேலும் சில செய்திகள்

    'சங்கீதம் சாகரம்' எனப்படும்..

    முன்னுரை

    எல்லா நுண் கலைகளையும் விட உயர்ந்தது இசைக்கலை. கலைகளில் பழமையானதும் இசைக்கலையாகத்தான் இருக்க முடியும்.

    பேசும் திறன் பெற்ற சில காலங்களிலேயே மனிதன் பாடும் திறனையும் பெற்றிருப்பான். பிறகுதான் மற்ற கலைகள் படிப்படியாக வளர்ந்திருக்க முடியும்.

    மனித இனத்திற்குப் பேசும் திறன் வளரும் முன்பே கூட கேட்கும் திறன் இருக்கிறது. தாயின் தாலாட்டைக் கேட்பதற்காகவே, கேட்கும் திறன் பிறவியிலேயே இருக்கிறது.

    மனிதன் ரசிகனாகவேதான் பிறக்கிறான்.

    இசைக்கலை, உணர்வுகளின் மொழியாகும், செவிக்கு இனிமையைக் கொடுக்கும் ஒலியே நாதமாகும். அந்த 'நாதம்' செவிக்கு மட்டுமல்ல, நமது உணர்வுகளுக்கும் இனிமை கூட்டுகிறது.

    'நாத'த்தை அடிப்படையாகக் கொண்டே இசை என்னும் இந்த அரியதோர் 'தெய்வீகக் 'கலை உருவாகியுள்ளது. இது 'நாதப்பிரம்மம்' என்று வணங்கப்படுகிறது.

    இசையின் வரலாறும் இலக்கணமும் தெரியாமலேயே இசையை ரசிக்கமுடியும்.

    இசையே ஒரு தனி மொழி. நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எல்லோரையும் கவர்ந்திழுக்கக்கூடியது.

    சொற்களோ பாடல் வரிகளோ இல்லாமல் கூட தனித்தியங்கக் கூடிய வல்லமையும் இசைக்கு உண்டு. சொற்களாகிய பாடல்கள் இணையும்போது 'பாலில் தேன் கலந்தது' போல இனிமை கூடுகிறது.

    இசை, தேவர்களின் மொழியாக மதிக்கப் படுகிறது. சிவபெருமான் கையில் 'டமருகம்' என்ற உடுக்கை போன்ற கருவி காணப்படுகிறது. நந்திகேசுவரர் மிருதங்கம் வாசிப்பதில் இணையற்றவர். கிருஷ்ண பரமாத்மா ஒரு குழலூதும் கலைஞர்.

    வீணையோ சரஸ்வதியின் கைக்கருவி. நாரதரும் தும்புருவும் இசைக்கருவிகளுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.

    ஆஞ்சநேயர் இசைக்கலையில் மிகத் தேர்ந்தவர் என்று சொல்வர். 'ஹனுமான் கடகம்' என்ற இசை நூலையே அவர் யாத்திருக்கிறார் என்று தெரிகிறது. 'ஆஞ்சனேய-சம்ஹிதை' என்ற மற்றொரு நூலும் இருந்ததாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், வட- இந்திய இசைக்கு 'மூலப்புருஷன்' என்று ஆஞ்சநேயரையும், தென்னிந்திய இசைக்கு நாரதர் 'மூலப்புருஷர்' என்றும் சொல்லப்படுகிறது.

    இவ்வாறெல்லாம் சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படும் இசை என்னும் கலையை அதன் நுணுக்கங்களை எல்லாம் தெரியாமலேயே ரசிக்க முடியும். ஆயினும் அதன் வரலாற்றையும், வளர்ச்சியையும், சிறப்பியல்புகளையும் ஓரளவு தெரிந்து கொண்டு ரசித்தால், மேலும் நன்கு ரசிக்க முடியும்; நமது ரசனை மட்டமும் உயரும்.

    பாரத நாட்டின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்து நிற்பது இசைக்கலை. இது 'சாம' வேதத்தின் 'உபவேதம்' என்றும் ;கந்தர்வ வேதம்' என்றும் அழைக்கப் படுகிறது. அதனால்தான் பகவத் கீதையில் கண்ணன்..'வேதானாம் சாம வேதோஷ்மி..'.'வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்...' என்கிறார்.

    மனிதர்களும், மிருகங்களும் தம்மை மறந்து, பசி, இச்சை,சூழ்நிலை யாவற்றையும் மறந்து, எந்தவொரு நாத வெள்ளத்திலே லயிக்கின்றார்களோ, அந்த நாதமே 'இசை'.

    இசை வரலாறு

    இசைக்கலை பற்றிய குறிப்புகள் நமது வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

    வேத, உபநிஷத, புராண காலங்களுக்குப் பிறகு,

    'நாரத சிக்க்ஷா' 'பாணினி சிக்க்ஷா' ஆகிய இரண்டு நூல்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அந்த இரு நூல்களும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

    இன்று கிடைக்கப் பெறும் பழம்பெரும் நூல்: 'நாட்டிய சாஸ்திரம்' மட்டுமே. கி.மு.நான்காம் நூற்றாண்டில் 'பரத முனி' யால் சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்ட இந்நூல், முக்கியமாக நாட்டியக் கலையின் இலக்கணங்களையும், அரங்க-நிர்மாணம் ஆகியவற்றையும் விவரிப்பதேயானாலும், இசைக்கலையின் இலக்கணங்களையும் நன்கு விளக்குகிறது.

    இந்நூல் வாயிலாக பரத முனிவர் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்த 'கிரம மூர்ச்சன ஜாதி' வகை பற்றி விவரிக்கிறார். இக்காலத்தில் நாம் 'ராகம்' என்று குறிப்பிடுவதையே அவர் 'ஜாதி' என்று அழைக்கிறார்.

    ('ஜாதி' என்ற சமஸ்கிருத சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு: மல்லிகைப்பூ அதில் ஒன்று... 'புஷ்பேஷு ஜாதி..' என்கிறார் கண்ணன் கீதையில்! நமக்குத் தெரிந்தது CASTE தான்!)

    அடுத்தபடியாக, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில், 'மதங்க' முனிவர் என்பவர் 'பிருகத்தேசி' என்றோர் இசை நூலை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்.

    அநநூலில்தான் முதன் முதலாக 'ராகம்' என்னும் பதம் காணப்படுகிறது. அக்காலத்தில் வழங்கி வந்த 'ராகபத்ததி'யை மதங்க முனிவர் அந்நூலில் விளக்கியுள்ளார்.

    அத்துடன் இசைக்கருவிகளை எல்லாம் எப்படி வாசிக்க வேண்டும் என்றும் வகைப்படுத்தியுள்ளார். 'ராக பத்ததி'யின் தந்தை என்று மதங்க முனிவர் போற்றப் படுகிறார்.

    கி.பி.எட்டாம் நூற்றாண்டில் 'நாரதர்' என்பவர் 'சங்கீத மகரந்தம்’ எனும் நூலை எழுதிச் சென்றிருக்கிறார். புராண கால நாரதருக்கும், இந்த நாரதருக்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

    கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் 'பக்த ஜெயதேவர்' சமஸ்கிருதத்தில் 'கீத கோவிந்தம்' எனும் ஸ்ருங்கார ரச இசைக் காவியத்தைப் படைத்தார்.

    இசை வரலாற்றின் ஒரு முக்கிய மைல் கல்லாகத் திகழும் 'சங்கீத ரத்னாகர' எனும் நூல் 'சாரங்கதேவர்' என்பவரால் பதிமூன்றாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டது. இசைக்கலைக் கென்றே வகுக்கப் பட்ட பல முக்கியமான சூத்திரங்களைக் கொண்ட முதல் நூல் : சங்கீத-ரத்னாகர'' தான்!. ஏழு பகுதிகளைக்கொண்ட அந்நூலில் 'நாதம்', 'ஸ்வர வேறுபாடுகள்', 'ராகப் பிரிவுகள்', 'தாள விளக்கம்', இசைக்கருவிகளைப் பற்றிய விவரங்கள், பாடல் இயற்றுவதில் இருக்கக் கூடாத குணதோஷங்கள், போன்றவை விளக்கப் படிருக்கின்றன.

    'சாரங்கதேவர்' காலம் வரை இந்திய இசையில், எந்தவொரு பிரிவும் இருந்ததாகத் தெரியவில்லை.

    பதினான்காம் நூற்றாண்டில் 'ஹரிபாலர்' என்பவர், 'சங்கீத சுதாகரம்' எனும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில்தான் முதன் முதலாக, 'கர்நாடக இசை', 'ஹிந்துஸ்தானி இசை' என்ற இரு பிரிவுகளைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. (அப்பிரிவுகள் ஏன், எப்படி ஏற்பட்டன என்பதைப் பின்னர் பார்ப்போம்.)

    இசையைப் பற்றி சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட பிற நூல்கள் வருமாறு:

    Enjoying the preview?
    Page 1 of 1