Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum
Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum
Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum
Ebook154 pages52 minutes

Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரைப்படம் என்பது இருபதாம் நூற்றாண்டுக் கலைவடிவம். மனித இனத்திற்கு அறிவியல் வழங்கிய ஒரே கலை திரைப்படம் தான். இதர நுண்கலைகளான இசை, ஓவியம், சிற்பம், நாடகம், இலக்கியம் ஆகியவை ‘புகைப்படம்' எனப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புடன் இணைந்ததால் தோன்றியதுதான் திரைப்படக்கலை.

மற்ற கலைகள் எப்போது உருவெடுத்தன என்பதற்கு எந்தவொரு ஆதாரமோ வரலாறோ இல்லை. ஆனால் திரைப்படம் என்ற கூட்டுக்கலை (COMPOSITE - ART) 28.12.1895 அன்றுதான் தோன்றியது. ஆம், ஃபிரான்ஸ் நாட்டுத்தலைநகரான பாரீஸில் அன்றுதான் உலகின் முதல் திரைப்படத் திரையிடல் 'லூமியே சகோதரர்களால்' (LUMIERE BROTHERS) நடத்தப்பட்டது.

ஆதலின் உலகத்திரைப்பட வரலாறு அன்று முதல்தான் தொடங்கியது!

இந்தியத்திரைப்பட வரலாறு 1913ஆம் ஆண்டு தாதாசாகிப் பால்கே உருவாக்கிய “ராஜா ஹரிச்சந்திரா...” என்ற மவுனப் படத்திரையிடலுடன் அன்றைய பம்பாய் நகரில் தொடங்கியது.

தென்னிந்தியத் திரைப்பட வரலாறு 1916ஆம் ஆண்டு நடராஜ முதலியார் உருவாக்கிய "கீசகவதம்...” என்ற மவுனப்படத்திரையிடலுடன் அன்றைய ‘மதராஸ்' நகரில் தொடங்கியது.

இந்தியாவின் முதல் பேசும் படமான "ஆலம் ஆரா...” 1931ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அன்றைய 'பம்பாய்' நகரில் திரையிடப்பட்டதும் தமிழிலும் தெலுங்கிலும் பேசிய முதல் படமான “காளிதாஸ்" அதே ஆண்டு அக்டோபர் திங்கள் அன்றைய 'மதராஸ்' நகரில் திரையிடப்பட்டதும் யாவரும் அறிந்த வரலாறே.

இந்தியத் திரைப்பட வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் நூல்களெல்லாம் ஆண்டு வாரியாக, தேதி வாரியாக 1931 முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாகப் பதிவு செய்துள்ளன. நான் அவ்வாறு செய்யாமல் தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் நோக்கி, 1931 முதல் 2005ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலகட்டத்தில் வெளியான அத்தனை திரைப்படங்களையும் ஐந்து 'பார்வை'களாக, இந்நூலில் சில தலைப்புகளில் பதிவு செய்துள்ளேன். அவை:

1. திரைப்படங்களான இலக்கியங்கள்.

2. திரைப்படங்களான நாடகங்கள்

3. திரைப்படங்களில் யதார்த்தமும் மண்ணின் மணமும்

4. சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள்

5. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள்

உலகின் பல்வேறு நாட்டுத் திரைப்படங்களும் அந்தந்த நாட்டுப் பாரம்பரிய இலக்கியங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், மேடை நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில், எழுதப்பட்ட தமிழிலக்கியங்கள் எந்தளவிற்கு தமிழ்ப்படங்களாக உருவாகியுள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.

அதேபோல பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் மேடையேற்றப்பட்ட தொழில்முறை நாடகங்களும், பயில்முறை நாடகங்களும் எவையெவையெல்லாம் தமிழ்ப் படங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன என்பதையும் விவரிக்கிறது.

பெரும்பாலான தமிழ்ப்படங்கள், வர்த்தகரீதியிலான வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு 'ஜிகினாத் தாளினால் சுற்றப்பட்ட மசாலாப் பண்டங்’களாகத்தான் உருவாக்கப்படுகின்றன. 'கானல் நீரைத் தேடி அலையும் காட்டுமான்' போல அலைந்து திரிந்து, 'யதார்த்தமும் மண்ணின் மணமும்' கொண்ட சில தமிழ்ப்படங்களை இனம் கண்டு விவரித்துள்ளேன்.

இந்திய நாட்டு விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏராளமான மேடை நாடகங்களிலும் பல தமிழ்ப்படங்களிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான பாடல்களும், கதையமைப்புகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றைத் தேடிப்பிடித்து ஆய்வு செய்து “சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள்" என்ற பகுதியில் விவரித்துள்ளேன்.

ஒரு மொழியில் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் மற்றொரு மொழிக்கு மாற்றம் (DUB) செய்து வெளியிட முடியும் என்ற தொழில்நுட்பத்தை, இந்திய திரையுலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்ததே தமிழ்த்திரையுலகம்தான்! 1944ல் தொடங்கிய அந்த வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆய்வு செய்து இந்நூலில் விவரித்துள்ளேன்.

- அறந்தை மணியன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136806091
Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum

Read more from Aranthai Manian

Related to Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum

Related ebooks

Reviews for Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    திரைப்படங்களான இலக்கியங்களும் நாடகங்களும்

    Thiraipadangalana Ilakkiyangalum Naadagangalum

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திரைப்பட இரசனை

    திரைப்படங்களான இலக்கியங்கள்

    திரைப்படங்களான நாடகங்கள்

    தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்

    சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள்

    தமிழ்ப்படங்களில் யதார்த்தமும் மண்ணின் மணமும்

    முகவுரை

    திரைப்படம் என்பது இருபதாம் நூற்றாண்டுக் கலைவடிவம். மனித இனத்திற்கு அறிவியல் வழங்கிய ஒரே கலை திரைப்படம் தான். இதர நுண்கலைகளான இசை, ஓவியம், சிற்பம், நாடகம், இலக்கியம் ஆகியவை ‘புகைப்படம்' எனப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புடன் இணைந்ததால் தோன்றியதுதான் திரைப்படக்கலை.

    மற்ற கலைகள் எப்போது உருவெடுத்தன என்பதற்கு எந்தவொரு ஆதாரமோ வரலாறோ இல்லை. ஆனால் திரைப்படம் என்ற கூட்டுக்கலை (COMPOSITE - ART) 28.12.1895 அன்றுதான் தோன்றியது. ஆம், ஃபிரான்ஸ் நாட்டுத்தலைநகரான பாரீஸில் அன்றுதான் உலகின் முதல் திரைப்படத் திரையிடல் 'லூமியே சகோதரர்களால்' (LUMIERE BROTHERS) நடத்தப்பட்டது.

    ஆதலின் உலகத்திரைப்பட வரலாறு அன்று முதல்தான் தொடங்கியது!

    இந்தியத்திரைப்பட வரலாறு 1913ஆம் ஆண்டு தாதாசாகிப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா... என்ற மவுனப் படத்திரையிடலுடன் அன்றைய பம்பாய் நகரில் தொடங்கியது.

    தென்னிந்தியத் திரைப்பட வரலாறு 1916ஆம் ஆண்டு நடராஜ முதலியார் உருவாக்கிய கீசகவதம்... என்ற மவுனப்படத்திரையிடலுடன் அன்றைய ‘மதராஸ்' நகரில் தொடங்கியது.

    இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா... 1931ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அன்றைய 'பம்பாய்' நகரில் திரையிடப்பட்டதும் தமிழிலும் தெலுங்கிலும் பேசிய முதல் படமான காளிதாஸ் அதே ஆண்டு அக்டோபர் திங்கள் அன்றைய 'மதராஸ்' நகரில் திரையிடப்பட்டதும் யாவரும் அறிந்த வரலாறே.

    இந்தியத் திரைப்பட வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் நூல்களெல்லாம் ஆண்டு வாரியாக, தேதி வாரியாக 1931 முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாகப் பதிவு செய்துள்ளன. நான் அவ்வாறு செய்யாமல் தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் நோக்கி, 1931 முதல் 2005ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலகட்டத்தில் வெளியான அத்தனை திரைப்படங்களையும் ஐந்து 'பார்வை'களாக, இந்நூலில் சில தலைப்புகளில் பதிவு செய்துள்ளேன். அவை:

    1. திரைப்படங்களான இலக்கியங்கள்.

    2. திரைப்படங்களான நாடகங்கள்

    3. திரைப்படங்களில் யதார்த்தமும் மண்ணின் மணமும்

    4. சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள்

    5. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள்

    உலகின் பல்வேறு நாட்டுத் திரைப்படங்களும் அந்தந்த நாட்டுப் பாரம்பரிய இலக்கியங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், மேடை நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.

    அந்த வகையில், எழுதப்பட்ட தமிழிலக்கியங்கள் எந்தளவிற்கு தமிழ்ப்படங்களாக உருவாகியுள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.

    அதேபோல பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் மேடையேற்றப்பட்ட தொழில்முறை நாடகங்களும், பயில்முறை நாடகங்களும் எவையெவையெல்லாம் தமிழ்ப் படங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன என்பதையும் விவரிக்கிறது.

    பெரும்பாலான தமிழ்ப்படங்கள், வர்த்தகரீதியிலான வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு 'ஜிகினாத் தாளினால் சுற்றப்பட்ட மசாலாப் பண்டங்’களாகத்தான் உருவாக்கப்படுகின்றன. 'கானல் நீரைத் தேடி அலையும் காட்டுமான்' போல அலைந்து திரிந்து, 'யதார்த்தமும் மண்ணின் மணமும்' கொண்ட சில தமிழ்ப்படங்களை இனம் கண்டு விவரித்துள்ளேன்.

    இந்திய நாட்டு விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏராளமான மேடை நாடகங்களிலும் பல தமிழ்ப்படங்களிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான பாடல்களும், கதையமைப்புகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றைத் தேடிப்பிடித்து ஆய்வு செய்து சுதந்திர வேள்வியில் தமிழ்ப்படங்கள் என்ற பகுதியில் விவரித்துள்ளேன்.

    ஒரு மொழியில் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் மற்றொரு மொழிக்கு மாற்றம் (DUB) செய்து வெளியிட முடியும் என்ற தொழில்நுட்பத்தை, இந்திய திரையுலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்ததே தமிழ்த்திரையுலகம்தான்! 1944ல் தொடங்கிய அந்த வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆய்வு செய்து இந்நூலில் விவரித்துள்ளேன்.

    அறந்தை மணியன்

    98407-65669

    திரைப்பட இரசனை

    நம் நமது இரசனையை உயர்த்திக் கொள்ளும்போதுதான் தரமான திரைப்படங்கள் வெளிவரும்... இப்படிச் சொன்னார், ஃபிரான்ஸ் நாட்டுக் கலாசார அமைச்சராக இருந்த ‘ஆந்த்ரே மால்ரோ'.

    திரைப்பட இரசனை என்றால் என்ன, அது ஏன் தேவை, அதை எப்படி வளர்த்துக் கொள்வது? உலகின் பெரும்பான்மையான நாடுகளில் திரைப்படம் பார்ப்பது என்பது மக்களின் வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்று. 'சினிமா பிடிக்காது!' - என்றோ, சினிமாவே பார்ப்பதில்லை! என்றோ கூறுபவர்கள் மிகவும் அரிது. திரையரங்குகளுக்குச் சென்று பார்க்காதவர்கள் கூட, தொலைக்காட்சியிலோ, வீடியோ நாடாக்கள் அல்லது குறுந்தகடுகள் மூலமோ, பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஏன் தொலைக்காட்சியே கூட, சினிமாவின் தொடர்ச்சி தானே?

    திரைப்பட ரசனை எனும்போது ‘நல்ல' அம்சங்களை மட்டும் இனம் கண்டு ரசிப்பது அல்ல! 'நல்லன அல்லாதவற்றை' இனங்கண்டு கண்டிப்பதும், ஒதுக்குவதும் ஆகும். இது எல்லாக் கலைகளுக்குமே பொருந்தும் ‘விமர்சனம்' என்றாலே ‘கண்டனம்' என்று பொருளில்லை இங்கு பலர் அப்படித்தான் தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். அதுபோல 'இரசனை' என்றாலே ‘பாராட்டு' என்பதில்லை. 'விமர்சகரும் பார்வையாளரே' 'இரசிகரும் பார்வையாளர்தான்' ஆனால், விமரிசகர் தனது ரசனை மட்டத்தை உயர்த்திக் கொண்ட பார்வையாளர், அவ்வளவு தான்.

    பாமர ரசிகரால், திரைப்பட ரசனை வளருவதற்கோ அதன் மூலம், திரைப்படக்கலை வளருவதற்கோ எந்தப் பங்களிப்பும் இருப்பதில்லை.

    திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு படைப்புச் செயல்பாடு. 'படைப்பு' என்பது செயல்பாடு என்ற வகையில், ஒரு ‘கருத்தை' அல்லது 'உணர்வை' வெளிப்படுத்தும் சிக்கலான பணி. திரைப்படமாக்கல் என்பது உடல் ரீதியான, உணர்வு ரீதியான, அறிவுப் பூர்வமான மற்றும் தொழில் நுட்ப ரீதியில் படைப்பாளிக்கு இருக்கும் ஆற்றலின் தொடர்ச்சியான வெளிப்பாடுதான்.

    பல நேரங்களில் படைப்பாளியால் கூட தனது ‘படைப்பின்' இயல்பு குறித்து விளக்கிச் சொல்ல முடியாத அளவிற்கு அது அவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். அல்லது, அந்தந்த நேரத்தில் தோன்றிய எண்ணங்களுக்கு படைப்பாளி உடனடியாக வடிவம் கொடுத்திருக்கலாம். அல்லது தனது படைப்பைக் குறித்து, பகுத்தறிவுடன் விளக்கிச் சொல்லத் தேவையான சொல்லாற்றலோ, எழுத்தாற்றலோ அவருக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது, தனது படைப்பைக் குறித்து விளக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். இதன் காரணமாகத்தான் படைப்பாற்றல் என்பது சமயங்களில் மர்மமானதாகவும், 'மாஜிக்'காகவும் கருதப்படுகிறது. ஆயினும், ஒரு திரைப்படம் திரையிடப்பட்டவுடனேயே, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு அனுபவிக்க எளிதானதாகவும் அமைந்து விடலாம். அத்தகைய நிலைமையில், படைப்பாளியால் கூட விளக்க முடியாத அம்சங்களை, இரசிகத் தன்மையை மேம்படுத்திக் கொண்ட பார்வையாளரால் இனம் கண்டு கொள்ள முடியும்! இதுதான் உயர்ந்த ரசனை என்று அறியப்படுகிறது. இது இலக்கியத்திற்கும் நவீன ஓவியத்திற்கும் கூடப் பொதுவானது. ஒரு வேளை பார்வையாளரின் ரசனை மட்டம் தாழ்வானதாக இருப்பின், அல்லது அவரது உணர்வுகள் அறிவுத்திறன், கலாசார வளர்ச்சி மற்றும் சினிமா மொழியைப் புரிந்துகொள்ளவோ, ரசிக்கவோ முடியாமல் போய் விடும். இதனால்தான், திரைப்பட ரசனை அளவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட திரைப்படம் மிகவும் சிக்கலானதாகவும், முதல் முறை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடியாததாக இருக்கக் கூடும். (ஆரம்ப கால ஜெர்மானிய மவுனப்படங்கள் சில அவ்வாறிருந்தன) அல்லது

    Enjoying the preview?
    Page 1 of 1