Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum
Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum
Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum
Ebook205 pages56 minutes

Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை அடித்தளமாய் நின்று உருவாக்குவது தமிழ்மொழியாகும். சமூகமும், மொழியும் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கியும், மாற்றியும் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. அவ்வகையில், தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ள மாற்றுருவமானது மொழி பேசும் மக்களிடம் வெளிப்படுகிறது. மொழி வாயிலான சமூக மாற்றமாக அறிஞர்கள் இதனைக் கூறுவர். தமிழ் மொழியின் இன்றைய மாற்றம் பெரும்பாலும் சிற்றிதழ்களினாலேயே நிகழ்த்தப் பெறுகின்றன.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580152808062
Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum

Related to Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum

Related ebooks

Reviews for Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum - B. Bharathi

    https://www.pustaka.co.in

    சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும்

    Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum

    Author:

    பா. பாரதி

    B. Bharathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/b-bharathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    முனைவர் த. ராஜீவ்காந்தி,

    ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

    தமிழ்த்துறை

    திருநின்றவூர்.

    ‘சிற்றிதழ் வரலாறும் புதுக்கவிதை வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் ஆய்வு நூலை படைத்துள்ள ஆசிரியர் பா. பாரதி அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். சிறந்த தலைப்பினை தேர்வு செய்து வரலாற்றுப் பார்வையோடு எழுதியுள்ள விதம் போற்றக் கூடியது. இவ்வாய்வு நூலில் ஏற்கவேண்டிய கருத்தை ஏற்றும் ஏற்காத கருத்தை எதிர்க்கும் உண்மையான ஆய்வு நெறிமுறைகளை ஆசிரியரிடம் பார்க்க முடிகிறது.

    சிற்றிதழ் தோற்றம் வளர்ச்சியில் சமகாலம் வரை நூற்றாண்டோடு ஒப்பிட்டு சிற்றிதழ் வளர்ச்சினை வெளிக்கொணர்ந்த ஆசிரியரின் கடின உழைப்பை இந்நூலில் காண முடிகிறது. சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகளைக் கால வரிசைப்படி செறிவான கவிதைகளைத் தேர்வு செய்து ஆய்வு செய்தமையால், அக்கவிதைகளுக்கு ஆசிரியர் உயிரூட்டியுள்ளார்.

    சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகளில் சமூகத்தில் அரங்கேறும் அவலங்களையும், வறுமைகள், குடும்ப சூழ்நிலைகள் இல்லாமைகள் முதிர் கன்னிகளின் சோகம் வேலையில்லாமல் வாழும் இளைஞர்களின் வறட்சி நிலைகளையும் ஒட்டுமொத்த ஏற்றதாழ்வுகள் பிரிவினைவாதங்கள் ஆகியவற்றை ஆசிரியர் சமூக அக்கறையோடு வெளிப்படுத்தியுள்ளார். இவை சிறப்பானதாக இந்நூலில் அமையப் பெற்றுள்ளன.

    இவ்வாய்வு நூல் சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு நூலின் பகுப்பு முறையே காரணமாகும். அவை தமிழ்ச் சிற்றிதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும், குடும்ப கவிதைப் போக்குகள், சமூகக் கவிதைப் போக்குகள், பொதுமைக் கவிதைப் போக்குகள் ஆகிய நான்கு தலைப்பின் கீழ் கட்டுரைகளைத் திறம்பட மேற்கொண்டுள்ளார். தமிழ்ச் சிற்றிதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் முதல் தலைப்பில் இதழ் விளக்கம் தரும் போது ஏடு, தாளிகை, பத்திரிக்கை, சஞ்சிகை போன்ற சொற்களும் இன்னும் வேறு பெயர்களான இலை, உதடு, கண்ணிமை, பனையேடு ஆகிய அகராதிப் பொருளை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார்.

    பத்திரம் என்ற வடசொல்லிலிருந்து பத்திரிக்கை என்னும் சொல் வந்தது என்று வரலாற்றுப் பதிவுகளோடு எடுத்துக்காட்டுகிறார். ஏடு, தாளிகை, சஞ்சிகை. பத்திரிக்கை போன்ற பல பெயர்களில் அழைத்தும் இதழ் என்ற சொல்லே பரவாலாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று தெளிவு காட்டியுள்ளார்.

    வெகுஜனப் பத்திரிக்கைகளில் மக்களின் விருப்பத்திற்கு இணங்க செய்திகள் கொடுத்தும் பணம் ஈட்டும் நோக்கத்தோடு சினிமா, கவர்ச்சிகள், வண்ணப் படங்கள் இவற்றை வெளியிடுகின்றன. ஆனால் சில சிற்றிதழ்கள் லாபம் கருதாமல் இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்ற வேட்கையோடு வெளியிடுகின்றன என்னும் செய்தியைப் பதிவு செய்கிறார். இதழின் தோற்றத்தை விடுதலைக்கு முன்பு இருந்தவும் விடுதலையடைந்த பின்பு காலவரிசைப்படுத்தி வெளிப்படுத்தினர். இவற்றில் கிறித்தவர்களின் உழைப்பும் பாரதி போன்ற அறிஞர்களின் உழைப்பையும் பதிவு செய்துள்ளார்.

    "எழுச்சியூட்டிய இதழ்’ என்னும் தலைப்பில் அறுபதுகளில் எழுத்துவின் காலம் என்று கூறுவதனால் எழுபதுகளை வானம்பாடியின் காலம் எனலாம் என்று அர்ச்சுண தட்சிணாமூர்த்தியின் பதிவானது இதழ் வளர்ச்சியானதுக்குச் சான்றாக அமைகிறது. மேலும் குழந்தைகளுக்கான இதழ்கள் புதுக்கோட்டை நகரில் மிகுதியான அளவில் அச்சிட்டும் அதில் அழ. வள்ளியப்பா அவர்களின் பாலார் மலர் இதழ் தனிச்சிறப்பு பெற்றது என சிறப்புச் செய்திகளை அறிய முடிகிறது. மேலும் சங்கங்களும். குழுக்களும், அமைப்புகளும் இதழ் நடத்தி வருவதோடு லாரி உரிமையாளர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் தன் கருத்துக்களைப் பரப்ப இதழ் நடத்துகின்றனர் என்ற கருத்துக்களைப் பார்க்க முடிகிறது.

    ‘குடும்பக்கவிதைப் போக்குகள்’ என்னும் தலைப்பில் வறுமைச்சூழலில் வாழும் மனிதர் வறுமை வந்த பின் தாயோடு ஒப்பிடும் அழகு சிறப்பானது, அவை

    "வறுமையே

    உன்னை எந்தாயினைப் போல்

    நேசிக்கிறேன்

    ஆம்

    வளம் என்னை

    விரட்டியடித்த போது

    வரவேற்றது நீ தானே"

    என்னும் கவிதை வறுமைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. ‘சமூகக் கவிதைப் போக்குகள்’ என்னும் தலைப்பில் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கவிஞர் இதழ் மூலம் வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

    "ஆயிரம் உண்டிங்கு சாதி

    உறுதி தந்தது அரசு

    சமத்துவபுரம்"

    "எந்த மாதத்தில்

    தேர்தல் வந்தாலும்

    மக்களுக்கு ஏப்ரல் தான்"

    "பதவிப் படகில் பயணிக்க

    மோடிவித்தை பண்னும்

    மோசடிப் பிரகிருதிகள்"

    என்னும். வி. ராஜேஷ் சந்திரன் போல் அரசியல்வாதிகளை இனம் காட்டும் வரிகளும்,

    "அடை காக்கும்

    இந்தக் கோழிகள்

    குஞ்சுகளைப் பெரிக்காமல்

    முட்டைகளை முட்டைகளாகவே

    வைத்திருக்கின்றன"

    என்னும் இராகுல தாசனின் வேலையில்லா பட்டதாரியின் சோக வரிகளும்,

    "வண்டியில் தீவன முட்டைகள்

    வயிற்றுப் பசியோடு இருந்தன

    மாடுகள்"

    மாண்புமிகு மனிதரின் வறுமை நிலைகளையும்,

    "சீதையாக இருந்தோம்

    தீக்குளிக்கச் செய்தீர்கள்

    சந்திர மதியாக இருந்தோம்

    விற்று விட்டீர்கள்"

    சுப்பையாவின் பெண் அடிமைத்தன வரிகளும்,

    "எங்கள் கைகள் குவளைகள் அல்ல

    கொழுந்து விட்டு

    எரியப்போகும் தீப்பந்தங்கள்"

    மஞ்சுவின் மகளிரை போற்றும் வரிகளும் சமூக கவிதையாய்; பயன்படுகிறது மேலும் பொதுமைக் கவிதைப் போக்குகள்,

    "வீட்டுக்குள் விளக்கு

    கூரையில் பேய்

    கோவிலில் தெய்வம்"

    என்ற மாயவனின் கற்பனைத் திறனும்,

    "காற்றும் கள்ளோ?

    தள்ளாடுகிறதே

    மரங்கள்"

    என்னும் மஞ்சுவின் கற்பனையும்,

    "கலியுகக் காதலைக் கணக்கிட்டு

    பார்த்தால் அது காதல்ல

    தர்மத்தின் மறுபக்கம்"

    எனும் கவிதைகள் பொய்யான காதலையும், பொதுமைக் கவிதைகளாகக் காணமுடிகிறது. மேலும் குடும்பம், தாய், அரவாணிகளின் அவலங்கள் ஆகியவற்றை இப்பகுதியில் பார்க்க முடிகிறது.

    நூல் நல்ல கருத்தமைவுகளுடன், ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் அமைந்திருக்கின்றன. இதழ்களின் வரலாறுகள் முக்கியமானவையாக பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன. நளினமான கவிதைத் தன்மை மிளர்வான கவிதைகள் சரியான பார்வையோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளன இது சிறப்பாகும் இதழியல் துறையில் சிற்றிதழ்கள் குறித்தான இன்னும் பலநூல்கள் வரவேண்டும். சிற்றிதழ் படைப்பாளர்கள்தான் உலகப் படைப்புகளுக்குப் போட்டி போட்டு தமிழ்ப் படைப்பைக் கொண்டு வருகின்றனர். அதனை தமிழுகம் உணர்ந்து பாராட்டத் தலைப்பட வேண்டும்.

    முனைவர் த. ராஜீவ்காந்தி

    வாழ்த்துரை

    பாரதிசந்திரன்

    (டாக்டர் செ.சு.நா. சந்திரசேகரன்)

    தமிழ்த்துறை தலைவர்,

    ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

    திருநின்றவூர்.

    தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை அடித்தளமாய் நின்று உருவாக்குவது தமிழ்மொழியாகும். சமூகமும், மொழியும் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கியும், மாற்றியும் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. அவ்வகையில், தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ள மாற்றுருவமானது மொழி பேசும் மக்களிடம் வெளிப்படுகிறது. மொழி வாயிலான சமூக மாற்றமாக அறிஞர்கள் இதனைக் கூறுவர். தமிழ் மொழியின் இன்றைய மாற்றம் பெரும்பாலும் சிற்றிதழ்களினாலேயே நிகழ்த்தப் பெறுகின்றன.

    சிற்றிதழ்கள் பேரிதழ்களுக்கு மாறாக உண்மைத் தன்மையும், உழைப்பும் மிக்கதாகி, புதுமையை விஸ்தாரமாக்க முயல்கின்றன. அதற்காகப் பேரிதழ்களில் உண்மையும், உழைப்பும் இல்லையென்பதில்லை. அதற்கு வணிக நோக்குண்டு. அனைத்து வயதினரையும் படிக்க வைக்க ஏதாவதொரு பொறிகளை வைத்தே ஆக வேண்டும். ஆனால் சிற்றிதழ்களுக்கு இச்சோக நிலையில்லை. எனவே கட்டுப்படா வானம் கைக்கு அருகாக இருப்பதாகக் கொண்டு எழுத்தால் சிறகடிக்கின்றன.

    சிற்றிதழ்களில் நான்கில் மூன்று பங்கு சிற்றிதழ்கள், படைப்பாளர்களால் நடத்தப்படுவதாகும். உலக வாசிப்பும். படைப்பு ஞானமும் சரிவர அவர்கள் மூலமாக ஒருங்குபடுத்தப் பெறுகின்றன. எது சரியானவை வழிப்படுத்துதல்கள். பிறவற்றிலிருந்து மாறுபட்டவை என்ற சிந்தனை மேம்பாடுகள், சிற்றிதழ்களின் தமிழ்ப்பணிக்கு அடித்தளமைத்துக் கொடுக்கின்றன.

    இத்தகு சிற்றிதழ்களின் வரலாற்றைக் கோர்வைப் படப் பதிவு செய்வது இத்துறைக்கு நாம் செய்யும் பெரும்பங்காகும். தோன்றி, சாதனை பல செய்து பின் மாயமாகும் இதழ்களின் வரலாறே மிகுதியாக இருக்கின்றன. சிற்றிதழ்களை அவற்றின் பணிகளைப் பதிவு செய்யப் பெறும் தளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் முழுமையாகப் பதிவு செய்ய இயலவில்லை. ஒரு விரிந்த பரப்பைச் சரியான கட்டமைப்புக்குள் கொணர்ந்து பதிவு செய்யும் முயற்சிகள் காணப்பெற வேண்டும். அப்போதுதான் நல்ல படைப்புகள் சமூகத்தில் வெளிவரும்.

    நூலின் மையப் பொருள் சரியானதாகவும் தேவையானதாகவும் அமைந்திருப்பதால், பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக இந்நூல் விளங்குகிறது.

    நூலாசிரியர் இந்நூலில், பல நூறு சிற்றிதழ்களின் வரலாறையும், தமிழ்ப்பணியையும் சேகரித்து அழகுபட பதிவு செய்திருக்கிறார். சிற்றிதழ்களின் தன்மை. அது தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை செய்திருக்கின்ற பணிகள் விரிவாகக்

    Enjoying the preview?
    Page 1 of 1