Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Purana Thuligal Part - 2
Purana Thuligal Part - 2
Purana Thuligal Part - 2
Ebook105 pages32 minutes

Purana Thuligal Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் - இரண்டாம் பாகம் மலர்கிறது. பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது. புராணத் துளிகள் அம்ருத சாகர திவலைகளாக வாசகர்கள் மேல் தூவட்டும். அறம், பொருள், இன்பம், முக்திப் பேறு என புருஷார்த்தங்களான நான்கையும் வாசகர்கள் பெற்று மகிழட்டும் என எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை இறைஞ்சி வேண்டி இந்த நூலை வாசக அன்பர்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151007964
Purana Thuligal Part - 2

Read more from S. Nagarajan

Related to Purana Thuligal Part - 2

Related ebooks

Reviews for Purana Thuligal Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Purana Thuligal Part - 2 - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    புராணத் துளிகள் பாகம் - 2

    Purana Thuligal Part - 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    முதல் பகுதி

    புராண மஹிமை

    புராணம் பற்றிய ஒரு நூல் : புராணக் களஞ்சியம்

    18 புராணங்களையும் எளிதில் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்

    இரண்டாம் பகுதி

    பிரம்மாவின் வம்சம்

    சுகம் எது, துக்கம் எது?சத்ரு எவர், நண்பர் எவர்?

    வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

    ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

    வேதாங்கம் ஆறு

    வேதங்களின் புரோகிதர்கள்

    ஏழு சிரஞ்சீவிகள்

    ருணங்கள் மூன்று

    ப்ராண பிணம் யார்?

    சுபாஸ்ரயம் எது?

    லலிதா ஸஹஸ்ர நாம மஹிமை

    ஒருவர் அர்க்யம் விடுவது எதற்காக?

    பாகவத மஹிமை

    அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?

    மூன்று ஈஷணைகள்!

    கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!

    காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

    ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

    மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

    சரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு

    வாஹனம்!

    தேவியின் கண்கள்

    பாரத தேசத்தின் பெருமை

    தர்ப்பம் ஏன் புனிதமானது!

    வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?

    வாஹனம் - 2

    நவ கிரகங்கள்

    அழகாபுரியின் வர்ணனை!

    சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

    மும்மூர்த்திகளும் ஒருவரே!

    மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

    மாயைக்கு மருந்து

    தூக்கம் வராத நான்கு பேர்!

    பலன் தரும் யந்திரங்கள்!

    அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்

    சப்த ரிஷிகள் யார் யார்?

    சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?

    சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!

    காலமே ஈஸ்வரனுக்குச் சமம்!

    யார் யாரை வதம் செய்தனர் – 2

    பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

    சூரியனுடைய சஞ்சாரம்

    பவித்ர நதிகள்

    தேவர்களை சந்தோஷம் அடையச் செய்பவை!

    ப்ரளயம் நான்கு வகைப்படும்

    துர்கா ஸப்த சதி!

    நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

    தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?

    நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!

    மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!

    அணிந்துரை

    C:\Users\INTEL\3D Objects\picture\12.JPG

    என்னுடைய அருமை நண்பர் சந்தானம் நாகராஜன் அவர்கள் இறை உணர்வும் நாட்டுப்பற்றும் தன் இரண்டு கண்களாகக் கொண்டவர்.அன்னை மீனாட்சியின் அருளாசியுடன் மதுரை மாநகரில் தனது இளமை பிராயத்தைக் கழித்தவர். இவருடைய தந்தையார் சந்தானம் அவர்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து விளங்கிய பத்திரிகையாளர். சுதந்திர போராட்டக் களத்தில் திரு ஏ.என்.சிவராமனுடன் இணைந்து போராடிய தேசபக்தர். அவரே இவருக்கு வழிகாட்டி! அவருடன் நற்பணி மன்றங்களில் பணியாற்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அடியேனும் இணைந்து பயணித்த காலங்கள் இன்றும் பசுமையாக எனது எண்ணத்தில் நிழலாடுகின்றன.

    சந்தானம் நாகராஜன் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார்.

    நமக்குத் தொழில் கவிதை,நாட்டுக்கு உழைத்தல் இமைப்போதும் சோராதிருத்தல் என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை சிந்தனையில் கொண்டு இன்றுவரை சோர்வின்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அரும்பணியாற்றி வருகிறார்.

    இதுவரை அவர் ஆன்மிகம் தேசியம் அறிவியல் முதலான பலதுறைகளில் உன்னதமான கருத்துக்களுடன் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பாக்யா இதழில் பல்வேறு கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வுக்கு வித்திட்டிருக்கிறார்.

    பாரதியின் ஞானப்பாடல் வரிகளான ஊருக்கு உழைத்திடல் யோகம்! நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்! போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம்! என்ற கவிதை வரிகளே இவரை புராணத்துளிகள் படைக்க அடித்தளமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்

    புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த வேத உபநிடதங்கள் வியாச மகரிஷியால் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் இதிஹாச புராணங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1