Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siruvargalukkaana Puraana Kathaigal
Siruvargalukkaana Puraana Kathaigal
Siruvargalukkaana Puraana Kathaigal
Ebook151 pages55 minutes

Siruvargalukkaana Puraana Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹிந்துப் புராணங்கள் ஒரு தங்கச் சுரங்கம். வற்றிடாத ஜீவ நதி! அரிய மூலிகைகளைக் கொண்டுள்ள ஹிமய பர்வதம்! பதினெட்டு புராணங்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மாற்றப்படக்கூடாதவை; மாற்றப்பட முடியாதவை! காலம் காலமாக கதாகாலட்சேபமாகவும், பாட்டிமார்கள் பேரன்களுக்குக் கூறும் கதை வடிவமாகவும், தெருக்கூத்துகளாகவும் மலர்ந்து ஹிந்து கலாசாரத்தையும் அறப்பண்புகளையும் பாரதத்திலே வேரூன்றச் செய்தவை, செய்து வருபவை புராணக் கதைகள். இவை இளம் மனங்களில் வேரூன்றச் செய்யப்பட வேண்டும். இந்த எண்ணத்தின் விளைவே இந்த நூல்.

இதில் துருவன், பிரகலாதன், பகீரதன், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரின் சரிதங்கள் சுருக்கமாகவும் உத்வேகம் ஊட்டும் வகையிலும் தரப்பட்டுள்ளது. நமது வீரர்கள் மற்றும் அவதாரங்களைப் பற்றிப் படித்து ஊக்கமும் உத்வேகமும் பெற விழைவோர் தான் படிப்பதோடு அனைவரும் படிப்பதற்குப் பரிசாக அளிக்கத் தக்க நூல் இது. இந்த நூலைப் படிப்போர் அறப்பண்புகள் கூடப்பெற்று இறைவன் அருளுக்குப் பாத்திரமாவது நிச்சயம்!

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580151009851
Siruvargalukkaana Puraana Kathaigal

Related to Siruvargalukkaana Puraana Kathaigal

Related ebooks

Reviews for Siruvargalukkaana Puraana Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siruvargalukkaana Puraana Kathaigal - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிறுவர்களுக்கான புராணக் கதைகள்

    (சிறுகதைகள்)

    Siruvargalukkaana Puraana Kathaigal

    (Sirukathaigal)

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் பதிப்பின் முன்னுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. துருவன்

    2. பிரகலாதன்

    3. பகீரதன்

    4. ஸ்ரீ கிருஷ்ணர்

    பின்னுரை

    முதல் பதிப்பின் முன்னுரை

    ஹிந்துப் புராணங்கள் ஒரு தங்கச் சுரங்கம். வற்றிடாத ஜீவ நதி! அரிய மூலிகைகளைக் கொண்டுள்ள ஹிமய பர்வதம்!

    காஞ்சி பரமாசார்யாரிடம் தொண்டையிலே உணவே செல்ல முடியாதபடி அவஸ்தைப்பட்டு டியூப் மூலமே உணவு செலுத்தப்பட்டு வந்த வட நாட்டுப் பணக்காரர் தன் நிலையைச் சொல்லி வருந்த, அவரை பதினெட்டு புராணங்களையும் அச்சிடுமாறு பரமாசார்யாள் அறிவுறுத்தினார். அவரும் பரமாசார்யாளின் ஆணையை சிரமேற்கொண்டு, பிரம்மாண்டமான இந்த பணியை மேற்கொள்ள சிறந்த வடமொழி வல்லுனர் குழு அமைப்பது உட்பட தேவைப்பட்ட அனைத்தையும் அவர் சிரத்தையுடன் செய்தார்.

    பதினெட்டாவது புராணம் அச்சில் ஏறும் நேரத்தில் அவரால் உணவை விழுங்க முடிந்தது. முற்றிலும் குணமானார். இதை ஆச்சரியத்துடன் கூறி பரமாசார்யாளின் அடி பணிந்தபோது அவர், இது என்னுடைய மகிமையால் ஏற்பட்டது அல்ல; புராணங்களுக்கு உரிய மகிமையால் ஏற்பட்டதே என்றார்.

    அற்புதமான அவரது தவ ஆற்றலையும் அவர் புராணங்களில் கொண்டிருக்கும் அபாரமான பக்தியையும் நம்பிக்கையையும் இந்தச் சம்பவம் நன்கு விளக்குகிறது!. நாம் புராணங்களை எப்படிப் போற்ற வேண்டும் என்பதை அவர் எடுத்துக்காட்டிவிட்டார்.

    பதினெட்டு புராணங்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மாற்றப்படக்கூடாதவை; மாற்றப்பட முடியாதவை!

    ‘புராணம் புளுகுமூட்டை’ என்பது நமது அறியாமையால் வரும் வார்த்தைகளே!

    ‘குளோனிங்’ யுகத்திலே காந்தாரியின் கர்ப்பம் பற்றியும், ஸகரனுடைய மனைவியான வைதர்ப்பி கர்ப்பம் பற்றியும் சற்று சிந்திக்க முடிகிறது!. குளோனிங் முறை கண்டுபிடிப்பதற்கு முன்னால் இவை புளுகுமூட்டை என்ற வார்த்தை ஜாலத்திற்குள் அடங்கி இருந்தன.

    இப்படியே எதிர்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளினால் மட்டுமே புராணங்களின் சத்தியம் வெளிப்படும்; வலுப்படும்!

    காலம்காலமாக கதாகாலட்சேபமாகவும், பாட்டிமார்கள் பேரன்களுக்குக் கூறும் கதை வடிவமாகவும், தெருக்கூத்துகளாகவும் மலர்ந்து ஹிந்து கலாசாரத்தையும் அறப்பண்புகளையும் பாரதத்திலே வேரூன்றச் செய்தவை புராணக் கதைகள். இவை இளம் மனங்களில் வேரூன்றச் செய்யப்பட வேண்டும். இந்த எண்ணத்தின் விளைவே இந்த நூல்.

    இப்படியொரு தொகுப்பை வெளியிட வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த விநாயகா பதிப்பக உரிமையாளர் திரு எஸ். சுவாமினாதன் என்னிடம் கூறியபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தப் பணியைச் செய்ய ஒப்புக்கொண்டேன். ஆகவே இந்த நூலை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்!

    இதேபோல பல நூறு தொகுதிகள் வெளியிடக்கூடிய அளவு ஏராளமான அற்புதமான நல்ல விஷயங்கள் நமது புராணங்களிலே குவிந்து கிடக்கின்றன. அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நூல் தூண்டுமானால் அதுவே இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

    இந்த நூலை எழுத தேவையான புத்தகங்களைக் கொடுத்து உதவிய என் சகோதரர்கள், என் மனைவி மற்றும் மகன்களுக்கு என் நன்றி.

    இந்த நூலைப் படிப்போர் அறப்பண்புகள் கூடப்பெற்று இறைவன் அருளுக்குப் பாத்திரமாக அருள்பாலிக்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    சென்னை

    ச. நாகராஜன்

    2-9-2002

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    2002ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் இருபது ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் அச்சுப் பதிப்பாகவும் மின்னணு வடிவிலும் மீண்டும் வெளி வர வேண்டும் என்று விரும்பும் வாசகர்களை மனதில் கொண்டு இப்போது வெளிவருகிறது.

    இந்த நூலை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதில் உள்ள துருவன், பிரகலாதன், பகீரதன் மற்றும் ஶ்ரீ கிருஷ்ணரின் சரிதங்கள் எல்லாக் காலத்திலும் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய சரிதங்களாகும்.

    அனைவரும் இந்தச் சரிதங்களைப் படித்துப் பயன் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    நன்றி.

    பங்களூர்

    ச. நாகராஜன்

    4-5-2023

    1. துருவன்

    உத்தானபாதன்

    முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தில் உத்தானபாதன் என்னும் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு சுநீதி, சுருசி என்று இரண்டு அரசிகள் இருந்தார்கள்.

    உத்தானபாதன் மூத்தவளான சுநீதியிடம் பிரியமில்லாதவனாகவும், இளையவளான சுருசியிடம் அளவில்லாத அன்பு கொண்டவனாகவும் இருந்தான்.

    மூத்தவளான சுநீதிக்குப் பிறந்த பிள்ளைக்கு துருவன் என்றும், இளையவளான சுருசிக்குப் பிறந்த பிள்ளைக்கு உத்தமன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

    ஒருசமயம் அரசன் சுருசியின் புதல்வனான உத்தமனை மடியில் வைத்துச் சீராட்டிக் கொஞ்சிக் கொண்டிருந்தான். சுநீதியின் பிள்ளையான துருவன் அங்கே வந்து தானும் தன் தந்தையின் மடியில் ஏறி அமர வேண்டும் என்று விரும்பினான்.

    ஆனால் அரசனோ துருவனை மடியில் ஏற்றிக் கொள்ளவில்லை. சுருசி துருவனை அழைத்து, நீ எனக்குப் பிறக்கவில்லை. சுநீதிக்கு பிறந்தவன் நீ. ராஜா ஸ்தானத்திற்கு நீ உரியவன் இல்லை. என் மகனுக்கே அரசுப்பட்டம் உரித்தாகும். உனக்குக் கிடைக்க முடியாத விஷயத்திற்கு நீ ஆசைப்படாதே. நீ தவத்தினால் இறைவனை ஆராதித்து அவன் அருளைப் பெற முயற்சி செய் என்று கடுஞ்சொற்களைக் கூறி துருவனைத் துரத்திவிட்டான்.

    துருவனின் வருத்தம்

    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச் சொல்லி அழுதான்.

    சுநீதி அவனை மடி மீது இருத்திக் கொண்டாள். சுருசியின் கொடிய வார்த்தைகளால் அவள் மனம் துடித்தது. துருவனிடம், மகனே! மற்றவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை. எவன் மற்றவருக்குத் துன்பம் விளைவிக்கிறானே, அவன் துன்பத்தையே அனுபவிக்க நேரிடும். என்னை அரசர் மனைவி என்று சொல்வதற்குக்கூட வெட்கப்படுகிறார் போலும்! ஆகையால், பொறாமைப்படாமல் உன் மாற்றாந்தாயான சுருசி சொல்வது போல தவத்தினால் இறைவனை ஆராதிப்பாயாக! உத்தமன் அரச ஸ்தானத்தில் ஏறி உட்காருவது போல நீயும் அந்த இடத்தில் உட்கார விரும்புவாயாகில் பகவானுடைய பாதாரவிந்தங்களை ஆராதிப்பாயாக! என்றாள்.

    தன் தாயான சுநீதி வருத்திப் புலம்புவதையும் தன் மனவிருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் கூறிய வழியையும் துருவன் சிந்தித்துப் பார்த்தான்.

    துருவனின் தவம்

    அரச பட்டணத்திலிருந்து கிளம்பினான் துருவன். அப்போது அவன் எதிரே தேவரிஷி நாரதர் தோன்றினார். சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் தன் தவ வலிமையால் அறியும் திறன் படைத்திருந்த அவர் துருவனின் மனதில் உள்ளதை அறிந்தார்.

    குழந்தாய்! துருவா! உன் வீட்டைத் துறந்து தனியாக எங்கே போகிறாய்?. உனது சுற்றத்தினரால் அவமானப்பட்டவன் போலக் காணப்படுகிறாயே என்று கேட்டார்.

    துருவன் நாரதரை வணங்கிக் கூறினான்:

    நாரதரே! இதென்ன ஆச்சரியம். நடந்ததை அப்படியே கூறிவிட்டீர்களே!. நான் என் மாற்றாந்தாய் சுருசி கூறிய வார்த்தை அம்புகள் ஏற்படுத்திய வலியால் துன்பப்படுகிறேன். இறைவனை நோக்கித் தவம் புரியப் போகிறேன் என்றான்.

    நாரதரோ, அப்பா, துருவா! பல ஜென்மங்கள் முயன்றும் முனிவர்களும் யோகிகளும் அவனை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உயரிய தெய்வத்தை நீ அறிய முயல்வது வீண். பிடிவாதம் செய்யாமல் நீ வீட்டிற்கே திரும்பிப் போ என்றார்.

    "தேவ ரிஷியே! என் மனதில் இருப்பதை அறிந்து நீங்கள் அதை நிறைவேறும் வழியைக் காட்டி அருளுங்கள். நான் என் தந்தை, தாத்தா முதலியோர் அடைய முடியாததும், ஏனையோர்க்கும் பெறுதற்கு அரிதானதும் ஆன ஒரு உயரிய இடத்தைப் பெற விரும்புகிறேன். அதை எப்படிப்

    Enjoying the preview?
    Page 1 of 1