Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deviyar Thirumanam
Deviyar Thirumanam
Deviyar Thirumanam
Ebook145 pages48 minutes

Deviyar Thirumanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், பார்வதி கல்யாணம், வள்ளி கல்யாணம், பத்மாவதி கல்யாணம், ஆண்டாள் கல்யாணம், தமயந்தி கல்யாணம் என எட்டு தேவியர்களின் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகளை தக்க சம்ஸ்கிருத சுலோகங்கள், தமிழ்ப் பாடல்களின் மேற்கோள்களுடன், பக்திச் சுவை ததும்ப எளிய தமிழில் வழங்கியுள்ளார் எழுத்தாளர் மாயூரன் அவர்கள். தெய்வத் தம்பதிகளின் திருக்கல்யாண வைபவத்தைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ திருமணம் ஆகாதவர்களுக்குத் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும், மனதை மாசுபடுத்தும் அழுக்குகளும், தாபங்களும் நீங்கி உள்ளம் தூய்மை அடையும், அவரவர்கள் இல்லங்களில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பது வழிவழி வந்த நம்பிக்கை.

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580160609683
Deviyar Thirumanam

Read more from Mayooran

Related to Deviyar Thirumanam

Related ebooks

Reviews for Deviyar Thirumanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deviyar Thirumanam - Mayooran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவியர் திருமணம்

    Deviyar Thirumanam

    Author:

    மாயூரன்

    Mayooran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mayooran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. சீதா கல்யாணம்

    2. ருக்மணி கல்யாணம்

    3. மீனாட்சி கல்யாணம்

    4. பார்வதி கல்யாணம்

    5. பத்மாவதி கல்யாணம்

    6. வள்ளி கல்யாணம்

    7. ஆண்டாள் கல்யாணம்

    8. தமயந்தி கல்யாணம்

    குருர் பிரம்ஹா குருர் விஷ்ணு

    குருர் தேவோ மஹேஸ்வர:

    குருர் சாக்ஷாத் பரபிரம்ஹா

    தஸ்மை ஸ்ரீ குரவே நம: ||

    His Holiness Sri Kanchi Kamakoti Peetadhipathi

    Jagadguru Sri Sankaracharya Swamigal

    Srimatam Samsthanam

    No.1, Salai Street, Kancheepuram – 631 502

    விடியல் என்ற பொருளைத் தரும் கல் என்ற வேர்ச்சொல்லிலிருந்து எழுந்த கல்யாணம் என்ற சொல் மங்களத்தைக் குறிக்கும். ஞான விடியலைக் குறிக்கும். சாஸ்த்ர நெறி நிற்றலைக் குறிக்கும். திருமணம் என்பது ஆண் பெண் இருபாலாரிடத்தும் ஒரு புதிய விடியலை, புதிய வாழ்வைத் தோற்றுவிக்கிறது. எனவே இது கல்யாணம் எனப்பட்டது. விவாஹத்திற்குப் பின்னரே ஒருவன் சாஸ்திர நெறியில் முழுமையாக ஈடுபடத் தகுதியுடையவனாகிறான். இதனாலேயே விவாஹம் கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது. இல்லறமல்லது நல்லறமன்று என்ற மூதுரைக்கேற்ப எல்லா ஆச்ரமங்களிலும் இல்லறம் சிறந்தது. இதுவே மற்ற ஆச்ரமங்களுக்கு வாழ்வளிப்பது. ஈச்வரனின் மூச்சுக் காற்றாயிருக்கும் வேதங்களில் சொல்லப்பட்ட தர்மங்களை க்ருஹஸ்தாச்ரமத்தில்தான் முழுமையாக அனுஷ்டிக்க முடியும். இவற்றை அனுஷ்டிக்கும் விருப்பத்துடனும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அனுஷ்டித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும் லீலா நிமித்தமாக ஈச்வரன் அவதரித்து விவாஹங்கள் செய்து கொள்கிறான். ஸ்த்ரீ தர்மங்கள் போஷிக்கப்படுவதும், வளர்க்கப்படுவதும் இல்லறத்தில்தான். இதன் பொருட்டே அம்பிகையும் ஈச்வரனுடன் அவதரித்து ஸ்த்ரீ தர்மங்களை அனுஷ்டித்துக் காட்டுகிறார். கயிலைவிட்டு இறங்கி வருவதும், வைகுண்டம் துறந்து பூமிக்கு வருவதும் விவாஹங்கள் செய்து காண்பிப்பதும் நமக்கு அருள் புரியவே. நித்யலீலா விபூதியின் திவ்ய தம்பதிகள் அவதரித்து நடத்திக்கொண்ட திவ்ய கல்யாணங்கள் பற்றிய வைபவங்கள் கேட்போர் படிப்போர் நெஞ்சிலுள்ள அழுக்குகளையும், தாபங்களையும் அப்போதே நீக்கும் வல்லமையுடையவை. இப்பெருமையை நன்குணர்ந்த திரு. கி. குருமூர்த்தி அவர்கள் அவரது தந்தையார் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்கள் எழுதிய திருவருள் பயக்கும் தெய்வத் திருமணங்கள் என்ற நூலை அடியொற்றி, சிற்சில மாறுபாடுகளுடன் புதிய வடிவில் வெளியிடுவது அறிந்து மிகவும் மகிழ்கிறோம்.

    தந்தையார் எழுதியிருந்த ஸீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம், பார்வதி கல்யாணம், ஆண்டாள் கல்யாணம் இவற்றுடன் ஸ்ரீ வள்ளி கல்யாணம், பத்மாவதி கல்யாணம், தமயந்தி கல்யாணம் என்ற மூன்று கல்யாண வைபவங்களை இணைத்து அஷ்டலக்ஷ்மி சொரூபமாக, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் நல்கும் வண்ணம் எட்டு கல்யாணங்களுடன் தேவியர் திருமணம் என்ற தலைப்பில் வெளியிடுவது பாராட்டத்தக்கது. ஸம்ஸ்க்ருத சுலோகங்களுடன் பொருத்தமான தமிழ்ப் பாடல்களையும் பொருளுடன் இணைத்திருப்பது நூலுக்கு மெருகூட்டுகிறது.

    ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வர ஸ்வாமி க்ருபையால் நூலாசிரியர் ஸ்ரீ. கி. குருமூர்த்தியின் இந்நூல் ஆஸ்திக அன்பர்களுக்குப் பெருமளவில் பயன்படவும், ஸ்ரீ. கி. குருமூர்த்தி அவர்கள் இதுபோன்ற நல்ல நூல்களை மேலும் எழுதவும் அனுக்ரஹிக்கிறோம்.

    நாராயணஸ்ம்ருதி

    ஸ்ரீ ஜயஜ்யேஷ்ட சுக்ல த்வாதசி

    ஸ்ரீ சாங்கர ஸம்வத்ஸரம் 2523

    காஞ்சீபுரம் - 631502

    முன்னுரை

    என்னுடைய தந்தை அமரர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்கள் வேதம் பயின்றவர். அரசுத் துறையில் தாசில்தாராகப் பணியாற்றியவராயினும், பணி ஓய்வு பெற்றதும் ஆன்மிக நூல்கள் பல எழுதினார். அவர் எழுதிய நூல்களில் மோக்ஷசாதனம், பக்திக் கதைகள், தெய்வத் திருமணங்கள், மாண்புமிக்க மாதர்கள், ஆன்றோர் அருள்வாக்கு, உபதேச ராமாயணம் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. தெய்வத் தம்பதிகளின் திருக்கல்யாண வைபவத்தைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், அவரவர்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்ற நல்லெண்ணத்தில் 1965-ஆம் ஆண்டு தெய்வத் திருமணங்கள் என்ற தலைப்பில் ஸ்ரீ சீதா, ருக்மணி, பார்வதி, மீனாட்சி, ஆண்டாள் ஆகிய தேவியர்களின் திருக்கல்யாண வைபவங்களை எழுதி வெளியிட்டார். காஞ்சி மகாபெரியவர்கள் அந்த நூலுக்கு அனுக்கிரகம் செய்து ஆசீர்வதித்ததோடு தமது ஸ்ரீமுகத்தில் உயர்ந்த நூல் என்றும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். எனது தந்தை இந்த நூல்களை எந்த பதிப்பகத்தின் மூலமாகவும் வெளியிடவில்லை. அவரே வெளியிட்டதோடு தாமே ஒவ்வொரு வீடாகச் சென்று, புத்தகத்தைக் கொடுத்ததோடு ஆசியும் வழங்கி வந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பல இல்லங்களில் ஏதேதோ காரணங்களால் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணங்கள் எளிதாகக் கைகூடின; மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் நடந்தேறின. ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா போன்றவர்கள் நேரில் வந்து பாராட்டிவிட்டுப் போனார்கள்.

    மும்பையிலிருக்கும் என் சகோதரி திருமதி. மைதிலி ராமச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் இந்த நூலை மறுபதிப்பாக மீண்டும் வெளியிட வேண்டும் என்ற தன் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். அந்த நூலில் வடமொழி சுலோகங்கள் நிறைய இருந்ததாலும், மேலும் நூல் மணிப்பிரவாள நடையில் இருந்ததாலும் இன்னும் எளிய தமிழில் எழுதி வெளியிடலாம் என்று நினைத்தேன். இதற்கிடையில் 2010ஆம் ஆண்டு

    திருமாங்கல்யம் சுபமுகூர்த்தம் என்ற மாதர் மாத இதழின் ஆசிரியை திருமதி. தாட்சாயணி தமது பத்திரிகையில் தெய்வீகத் திருமண நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எழுத வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை தேவியர் திருமணம் என்ற தலைப்பில் திருமாங்கல்யம் பத்திரிகையில் ஸ்ரீ ஆண்டாள், சீதா, ருக்மணி, மீனாட்சி, பார்வதி, வள்ளி, பத்மாவதி, தமயந்தி ஆகிய எட்டு தேவிகளின் திருமண வைபவத்தைச் சுருக்கமாக எழுதி வந்தேன். பத்திரிகையில் பக்கக் கட்டுப்பாடு இருந்ததால் விரிவாக எழுத முடியவில்லை.

    நான் இந்த நூலை எழுதத் தூண்டுகோலாக இருந்த சகோதரி மைதிலி ராமச்சந்திரனுக்கும் என் நன்றி.

    என்னை ஈன்றெடுத்து, வளர்த்து, அறிவூட்டி, ஆளாக்கியப் பெற்றோர் அமரர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி அய்யர் - இராஜலட்சுமி, எழுத்துலகில் என்னை ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தி, உருவாக்கிய அமரர் ஆர். வி, அவருடைய துணைவியார் மாதுஸ்ரீ பட்டம்மாள் என் ஆக்கப் பணிகளுக்கு உறுதுணையாய் இருந்த மூத்த சகோதரர் அமரர் கீ.ரா.கி. பஞ்சாபகேசன் - சுப்புலட்சுமி ஆகியோரின் நீங்காத நினைவுக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி அஞ்சலி செலுத்துகிறேன்.

    என்னை ஆசிர்வதித்து, இந்த நூலுக்கு ஸ்ரீமுகம் வழங்கி அனுக்கிரகம் செய்துள்ள, காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு என் நன்றி கலந்த பணிவான நமஸ்காரங்கள்.

    இந்த நூலை வாங்கிப்படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும், மகிழ்ச்சி பெருக வேண்டும் என்று இறைவனை

    Enjoying the preview?
    Page 1 of 1