Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saarana Iyakka Thanthai Baden Powell
Saarana Iyakka Thanthai Baden Powell
Saarana Iyakka Thanthai Baden Powell
Ebook102 pages34 minutes

Saarana Iyakka Thanthai Baden Powell

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை, தன்னம்பிக்கை, இயற்கையோடு ஒட்டிப்பழகும் இயல்பு போன்ற நற்குணங்களை விளையாட்டாகவே சிறுவர் மனத்தில் பதிய வைத்துவிடும் பயிற்சி சாரணப் பயிற்சி. இத்தகையப் பெருமைமிகு சாரண இயக்கத்தை உருவாக்கியவர் பெரியவர் பேடன் பவல் ஆவார். அஞ்சாத நெஞ்சம், விடாமுயற்சி, சமயோசிதபுத்தி, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாயார், மூத்தோர், ஆசிரியர் போன்றோரிடம் கொண்டிருந்த பெருமதிப்பு, மரியாதை இப்படிப் பேடன் பவல் வாழ்க்கையிலிருந்து சிறுவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி இந்நூலில் காண வாசிப்போம் வாருங்கள்…!

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580160609675
Saarana Iyakka Thanthai Baden Powell

Read more from Mayooran

Related to Saarana Iyakka Thanthai Baden Powell

Related ebooks

Reviews for Saarana Iyakka Thanthai Baden Powell

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saarana Iyakka Thanthai Baden Powell - Mayooran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாரண இயக்கத் தந்தை பேடன் பவல்

    Saarana Iyakka Thanthai Baden Powell

    Author:

    மாயூரன்

    Mayooran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mayooran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நான் ஒரு சாரணன்

    2. விளையும் பயிர்

    3. படிப்பும் நடிப்பும்

    4. சுவையான தண்டனை

    5. இராணுவம் அழைத்தது

    6. வேவு பார்க்கும் ஒற்றர்

    7. ஜூலு மணி மாலை

    8. பெரிய தொப்பிக்காரர்

    9. என்றும் தூங்காத ஓநாய்

    10. ஐந்தாவது டிராகன் படை

    11. மேஃபேகிங் காத்த மாவீரர்

    12. சாரணியம் பிறந்தது

    13. இரண்டாவது வாழ்க்கை

    14. மகிழ்ச்சியான திருமணம்

    15. கில்வெல் பிரபு

    16. போய் வருகிறேன்

    17. இறுதிச் செய்தி

    18. சாரணியம்

    19. சாரணர் பயிற்சி

    20. ஜனாதிபதி சாரணன்

    முன்னுரை

    "ஏடு தூக்கிப் பள்ளியில்

    இன்று பயிலும் சிறுவரே

    நாடு காக்கும் தலைவராய்

    நாளை வரப் போகிறார்."

    என்பது குழந்தைக் கவிஞரின் அமுத வாக்கு…

    இன்றையச் சிறுவன் நாளைய இளைஞன். நாளைய இளைஞன் அடுத்து நாடாளும் தலைவன். எனவே, ஒரு நாட்டின் எதிர்காலம் எங்கோ யாரிடமோ இல்லை. அந்நாட்டின் சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை நன்றாக அமைவதில் உள்ளது. நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய சிறுவர் சிறுமியரிடையே நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்க்கும் இயல்பு கொண்டது சாரண இயக்கம்.

    நாட்டுப்பற்று, சேவை மனப்பான்மை, தன்னம்பிக்கை, இயற்கையோடு ஒட்டிப்பழகும் இயல்பு போன்ற நற்குணங்களை விளையாட்டாகவே சிறுவர் மனத்தில் பதிய வைத்துவிடும் பயிற்சி சாரணப் பயிற்சி.

    எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அஞ்சி நடுங்கி மற்றவர்களையும் பீதியடையச் செய்யாமல் தன்னையும் காத்து, மற்றவர்களையும் காப்பாற்றும் சமயோசித ஆற்றலை வளர்க்கும் பயிற்சி சாரணப் பயிற்சி.

    உலகில் உள்ள பல்வேறு சமூக நல அமைப்புகளில் சாரண இயக்கம் பழமையானது, பரவலானது, புகழ்மிக்கது. உலகில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் சாரண இயக்கம் பரவி செயல்பட்டு வருகிறது. இத்தகையப் பெருமைமிகு சாரண இயக்கத்தை உருவாக்கியவர் பெரியவர் பேடன் பவல் ஆவார்.

    அஞ்சாத நெஞ்சம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சலியா உழைப்பு, கூர்ந்துநோக்கும் புலனறிவு, சமயோசித புத்தி, சிக்கனம், நகைச்சுவை உணர்வு இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாயார், மூத்தோர், ஆசிரியர் போன்றோரிடம் கொண்டிருந்த பெருமதிப்பு, மரியாதை இப்படிப் பேடன் பவல் வாழ்க்கையிலிருந்து சிறுவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நற்பண்புகள் பலப்பல.

    இத்தகையப் பெரியவரின் வாழ்க்கை வரலாற்றைக் குழந்தைகளுக்காக எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த முயற்சி தமிழறிந்த சிறுவர் சிறுமியருக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும் நம்புகிறேன்.

    சிறுவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சாரணியம் அதன் பயிற்சி முறைகள்பற்றி சிறு அத்தியாயங்களை இந்நூலின் கடைசியில் இணைத்திருக்கிறேன்.

    கே. குருமூர்த்தி (மாயூரன்)

    11

    பேடன் பவல்

    1. நான் ஒரு சாரணன்

    C:\Users\ASUS\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\22.jpg

    உலகப் புகழ் பெற்ற லண்டன் மாநகரில் ஒரு மாலை நேரம். அமெரிக்கப் பயணி ஒருவர் நடைபாதையில் நின்றுகொண்டிருந்தார். தாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அவருக்கு வழி தெரியவில்லை. யாரையாவது விசாரிக்கலாம் என்றால் மாலை மங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. பனி வேறு பெய்யத் தொடங்கிவிட்டது.

    சாலையில் ஒவ்வொருவரும் விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சிலரை அவர் விசாரித்துப் பார்த்தார். இந்தப் பனியிலும் குளிரிலும் யார் உதவி செய்ய வருவார்கள்? அந்தப் பயணி யோசனையில் ஆழ்ந்தார்.

    ஐயா என்று ஒரு குரல். எதிரே ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். சீருடை அணிந்திருந்தான். கழுத்தைச் சுற்றி ஒரு வண்ணத் துணியை மடித்துக் கட்டிக் கொண்டிருந்தான். அவனை வியப்போடு பார்த்தார் அந்த அமெரிக்கப் பயணி.

    ஐயா உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா? என்னால் இயன்றதைச் செய்யலாமா?" என்று பணிவோடு கேட்டான் அந்தச் சிறுவன்.

    அமெரிக்கப் பயணியின் வியப்பு அதிகமாகியது. இந்த இருளிலும் குளிரிலும் இந்தச் சிறுவனால் என்ன செய்ய முடியும்?

    ஐயா, உங்களைப் பார்த்தால் நீங்கள் இந்த நகருக்குப் புதியவர் போல் தோன்றுகிறது. நீங்கள் எங்கே போகவேண்டும்? நான் உதவி செய்கிறேன்.

    அந்தச் சிறுவனின் கனிவான குரல் அமெரிக்கரை மிகவும் கவர்ந்தது. அந்தப் பயணி, தான்

    Enjoying the preview?
    Page 1 of 1