Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oppanaikalin Koothu
Oppanaikalin Koothu
Oppanaikalin Koothu
Ebook356 pages1 hour

Oppanaikalin Koothu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூல் எதற்காக?

வரலாற்றை மறைப்பது திருட்டுத்தனம். வரலாற்றைத் தவறாகச் சித்திரிப்பது அயோக்கியத்தனம். ஆனால், வரலாற்றைத் திருத்துவது பாசிசம். 'பாசிசம்' என்பது பிற்போக்கான சித்தாந்தம்; அது எதையும் ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்ற அழிவு சக்தி; அது மனித குலத்தின் விரோதி.

நாம் வரலாற்றைக் கற்க விரும்புகிறோம். சரியான, உண்மையான வரலாற்றினையே கற்க விரும்புகிறோம். அதற்காக, உண்மையான வரலாற்றினைத் தேடுகிறோம். வரலாற்றைக் கற்க விரும்புகின்ற நமக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எனவேதான், உண்மையான வரலாற்றை எழுதுவதும் உண்மையான வரலாற்றிற்கு எதிரான கற்பனைகளை அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகிவிடுறது.

எனவே முடிந்த வகையில் சரியானதைச் செய்யும் முயற்சியில் இறங்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நமது முயற்சியில் முதலாவதாக இடம்பிடிக்கிறாள் குயிலி. யாரிந்தக் குயிலி? 1780 ஆம் ஆண்டில் ஆற்காட்டு நவாப், புதுக்கோட்டைத் தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும், வேலுநாச்சியார், மருதுபாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று, சிவகங்கை மீட்டெடுக்கப்படும்போது அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கினில் தனது உடலெங்கும் நெய்பூசி, நெருப்பு வைத்துக் கொண்டு குதித்த ஒரு தற்கொலைப் போராளியாக, வீரத் தியாகியாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருப்பவள்தான் குயிலி. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், குயிலி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தவளாகவும் குறிப்பிடப்படுவதுதான்.

அக்காலகட்டங்களில் ஆங்கிலேயக் கம்பெனிக்கு எதிராக நின்றவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிசயமானது அல்ல. தென் மாவட்டச் சமூக வரலாறானது முழுக்கவும் சாதிய எழுத்துக்களால் நிரம்பியது. சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என எதையும் குறிப்பிடுமளவிற்கான பதிவுகள் இதுவரை அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தமிழக வரலாறுகளில் இல்லை. இன்றளவும் இல்லை. எனவே, தமிழ் மண்ணின் வரலாற்றினை எப்போதுமே நாம் கவனத்துடன் அணுக வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வுடன் சிவகங்கை வரலாற்றின் சில பகுதிகளை அணுகத் தயாராவோம்.

தமிழக அரசு சார்பாக, சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கான நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆணையிடப்பட்டு அதனடிப்படையில் 18.07.2014 அன்று வேலுநாச்சியாருக்கு எனத் திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் ரூபாய் இருபத்தியேழு இலட்சத்தி ஐம்பதாயிரம் (27,50,000) செலவில், குயிலிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. குயிலி மறத்தி (மறவர்/தேவர் சாதி என்றும்; ஆதி திராவிடப் (பறையர்) பெண் என்றும்; அருந்ததியப் (சக்கிலியர்) பெண் என்றும் தேவேந்திர குல வேளாளப் (பள்ளர்/மள்ளர்) பெண் என்றும் குறிப்பிட்டு நூல்களும் மற்றும் பல இணையத் தளங்களும் உள்ளன. பல்வேறு வகையான கட்சிகளும் அமைப்புகளும் இப்போக்குகளை ஆதரிக்கின்றன, வரவேற்கின்றன.

நாம் இந்த நூலினை எழுதியது, குயிலியை குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த பெண் என அழுத்தமாக நிறுவி, ஏனைய சாதிப் பெண் அல்ல என மறுப்பதற்காக அல்ல. மேலும் குயிலி எந்த சாதியைச் சேர்ந்த பெண் என ஆராய்வதற்காகவும் அல்ல. மாறாக, சிவகங்கை வரலாற்றில் குயிலியின் பங்களிப்பினை இடங்காட்டவும் அதன் மூலம் சிவகங்கை வரலாற்றை இனங்காணவும் முயல்வதற்காகவே.

எமது நூலாக்கத்திற்கான இலக்கானது இரண்டு அடைவிடங்களைக் கொண்டிருக்கின்றன. 1. குயிலியின் இடங்காட்டல். 2. குயிலி மறைக்கப்பட்டதற்கு சிவகங்கை வரலாற்றாய்வாளர்களின் சாதியமனம்தான் காரணம் எனத் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்ற தவறினைக் கண்டித்தல்.

இதைத் தொடர்ந்து, சிவகங்கை வரலாற்று நாயகர்களாக விளங்குகின்றவர்கள் குறித்த ஆய்வு நூல்கள் எழுதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், படவேண்டும். வரலாறு குறித்த செய்திகளின் மீதான கேள்விகளையெல்லாம் ஆராய்வதன் மூலமாக உண்மையான வரலாற்றினை அறிந்து கொள்வதற்கான முயற்சியைத் தொடங்கிவிட முடியும் எனும் நம்பிக்கையோடு நீங்கள் இந்நூலுக்குள் சென்று திரும்பலாம். ஒப்பனைகளே கூத்தாடினாலும் கூட கூத்தின் முடிவில் ஒப்பனைகளும் கழன்றுதானே ஆக வேண்டும்.

இந்நூலினை எழுதிவரும்போது சில இடங்களில் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுத வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் எனது அசலான எழுத்தினை நான் மறைத்த குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறேன். அவ்வாறு கட்டுப்படுத்திக் கொண்ட இடங்களை ஊகித்து, உணர்ந்து பொருள் கொள்ளக் கோருகிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க! நூலை வாங்கவும் வாசிக்கவும் முன்வந்த உங்களை வரவேற்கிறேன். வாழ்க!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125003873
Oppanaikalin Koothu

Related to Oppanaikalin Koothu

Related ebooks

Related categories

Reviews for Oppanaikalin Koothu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oppanaikalin Koothu - Kurusamy Mayilvaganan

    http://www.pustaka.co.in

    ஒப்பனைகளின் கூத்து

    (சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு)

    Antic of Makeups

    (An analysis of the history of Sivagangai)

    Author:

    குருசாமி மயில்வாகனன்

    Kurusamy Mayilvaganan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kurusamy-mayilvaganan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    1800 – 1801

    இங்கிலாந்து முதலாளிகளின் காலனியாதிக்கத்திற்கு எதிராக சிவகங்கையில் நடந்த போரில் வீரத்துடன் போரிட்டு உயிரிழந்த போராளிகளுக்கும் அப்போரில் உயிரிழப்பதைப் பெருமையாகக் கருதிய அவர்களின் குடும்பத்தார்க்கும்.

    ***

    என் அப்பாவின் நினைவுகளுக்கு...

    மு.குருசாமி

    21.12.1931-27.10.1982

    தெக்கூர், பெரிய கோட்டை, சிவகங்கை

    பொருளடக்கம்

    என் அப்பாவின் நினைவுகளுக்கு...

    நன்றிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

    ‘அணிந்துரைக்குப் பதிலாக!'

    0. இந்த நூல் எதற்காக?

    1. வரலாறு - ஆய்வு - ஆய்வாளர்

    2. வரலாற்றுப் பெருமிதங்கள்

    3. சிவகங்கை - வரலாற்றுப் பதிவுகள்

    4. குயிலி: அவசியமும் அறிமுகமும்

    5. குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி

    6. குயிலி - இராணி வேலு நாச்சியாரின் பெண்கள் படைத் தளபதி

    7. ஆதாரங்களும் மறுப்புகளும்

    8. ஜீவபாரதியின் வேலுநாச்சியாரில் ஜீவபாரதியின் குயிலி

    9. மு. கீதாவின் முனைவர் பட்ட ஆய்வு

    10. ஜீவபாரதியின் கற்பனைப் பாத்திரங்களும் குயிலியும்

    11. சிவகங்கையில் போர்கள்

    12. குயிலியின் கால கட்டம் எது?

    13. ஹுஸைன்பூரின் கதை

    14. வெடிக்கக் காத்திருந்த எரிமலை

    15. பிழை புரிந்த பெரும்பழி

    16. குயிலி வளர்கிறாள்

    17. குயிலியின் காட்ஃபாதர்கள்

    18. இரண்டு கேள்விகள், ஒரு சவால்!: குயிலி கற்பனையே!

    19. 1772 காளையார்கோவில் படுகொலைகளுக்குப் பிறகு நடந்தது என்ன?

    20. சிவகங்கை மீட்டெடுப்பின்போது நடந்தது என்ன?

    21. தற்கொலை செய்துகொள்ளும் வரலாறு

    22. சுத்தானந்த பாரதியாரும் குயிலியும்

    23. வாய்மொழிப் பாடல்கள் வரலாற்றாதாரங்களாகுமா?

    24. வரலாற்றாய்வாளர்கள் மீது சுமத்தப்படும் பழி

    25. ஆதாரமற்ற உண்மைகள் இருக்க முடியுமா?

    26. அறியப்பட்ட வரலாற்றில் குழப்பங்கள்

    27. தமிழக அரசின் வேலு நாச்சியாரும் குயிலியும்

    28. குயிலி நிறுவப்பட்ட கதையின் சுருக்கம்

    29. சாதி: அமுதமும் விசமும்

    30. முடிக்கிறோம்!

    அறியப்பட்டதும் பயன்பட்டதும் கேள்விப்பட்டதுமான நூல்கள்

    ***

    நன்றிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

    இந்நூல் கவனிக்கத்தக்க நூலாக அமையுமென்பது தோழர்களின் கணிப்பு. அக்கணிப்பு சரியானதாக இருந்தால் அதற்கான முழுக்காரணமாக இருக்கப்போகும் குயிலிக்கு எனது முதல் வாழ்த்து. தனது நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த கவிஞர் சந்திமாவோவிற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்றுதான் ஒரு நீண்ட கட்டுரைக்கான விசயமாக மட்டுமே இருந்ததை, ஒரு நூலாக வளர்க்குமளவிற்கு குயிலி என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

    முன்னோடி ஆய்வாளர்களான டாக்டர் இராஜய்யன், பேராசிரியர் ந.சஞ்சீவி, அவரது மகள் முனைவர் ச.எழிலரசி, அவரது கணவரும் எங்கள் அன்பிற்குரிய தொப்பி டாக்டர் மருதைவாணனின் சகோதரருமான முனைவர் பாலசுப்பிரமணியன், முனைவர் கு. மங்கையர்க்கரசி, அவரது கணவர் முனைவர் ப. கிருஷ்ணன், டாக்டர் எஸ்.எம்.கமால் மற்றும் அவரது மகன் ஷேக் முஜம்மில் மற்றும் அய்யா மீ.மனோகரன் ஆகியோர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சென்றடையட்டும்.

    1970களில் அப்பா என தன்னை அழைக்கின்ற வாய்ப்பினை எனக்கும் கொடுத்திருந்த, பாப்பாத்துரை என மக்களால் அழைக்கப்பட்ட, மரியாதைக்குரிய திரு. வே. திருவரங்கராசன் அவர்களின் மூத்த மகனும் 3 முதல் +2 வரை மன்னர் பள்ளியில் ஒன்றாகப் படித்தவரும் 'சண்மு' என என்னால் அன்போடு அழைக்கப்பட்டவரும் மிகவும் அழகான கையெழுத்தைக் கற்று வைத்திருந்தவரும் 'திரு' பதிப்பக உரிமையாளரும் பள்ளிக்காலத்தில் பிரிந்ததிலிருந்து இந்த நன்றியுரையை எழுதும் வரைக்கும் இன்னும் சந்திக்காமலேயே இருக்கின்ற எனது நண்பன் சண்முகராம் சுப்பிரமணியனுடைய (V.S.S.R.S) தம்பியாக இருப்பதால் எனக்கும் தம்பியான சிவகங்கை வழக்கறிஞர் எஸ்.குமரகுரு; பேராசிரியர் இரா.காளீஸ்வரன்; நண்பர் எக்ஸ்ரே மாணிக்கம்; கவிஞரும் பாடலாசிரியருமான அண்ணன் பூவை செங்குட்டுவன்; அண்ணன் மாரி, எனது வகுப்பு ஆசிரியர் கே. இராமகிருஷ்ணன், மன்னர் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மு. பாலகிருஷ்ணன், தோழர் ராஜிவ்காந்தி, மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் மற்றும் ஜீவபாரதி ஆகியோர் வழங்கிய தகவல்களுக்காகவும் அன்னார்களுடன் நடத்திய உரையாடல்களுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூல் வெளிவருவதற்கான பலவிதமான உதவிகளைத் தந்த காளையார்கோவில் மு. சேகரது மருமகள் திருமதி மாலினி மணிமாறன், சிவகங்கை அருங்காட்சியகக் காப்பாளர் திரு. பக்கிரிசாமி, இயக்குனர் தினகரன் ஜெய், விடியல் பதிப்பகம் தோழர் இராமச்சந்திரன், மாணவர் நகலகம் அறிவழகன், காரைக்குடி தோழர் உறவு பாலசுப்பிரமணியன், பாகனேரி தோழர் கனி, ஆகியோர்களுக்கும் நன்றி.

    இந்நூலினை எழுதுவதற்கான மனஉறுதி வரக் காரணமாக இருந்தது முனைவர் மு.கீதாவின் ஆய்வு நூல். அந்நூலினைக் கொடுத்த, அன்பு நண்பர் எஸ்.செல்லமணிக்கும் Vestiges of old madras நூலின் பக்கங்களை மொழிபெயர்ப்பு செய்து கொடுத்த தோழர் சந்திரகாந்தனுக்கும் மற்றும் எனது அன்புப் பிள்ளைகளில் ஒருவனும் சாம்பவிகா ஆசிரியருமாகிய ஆனந்திற்கும் நன்றிகளைக் கூடுதலாகக் கொடுக்கிறேன்.

    சிவகங்கை மாவட்ட மைய நூலகம் மற்றும் கோகலே ஹால், சாஸ்திரி தெரு, பெரிய கோட்டை, வேம்பத்தூர், பாகனேரி நூலகங்களுக்கும் நூலகர்களுக்கும் நன்றி. முன்னேற்றப் பதிப்பகம் வீரபாலன் மற்றும் தம்பி வீ.மதிச்செல்வன் ஆகியோர்க்கும் நன்றி. இந்நூலின் அழகிய வடிவமைப்பிற்காகச் சிந்தித்த மதிப்பிற்குரிய அடவி முரளி அவர்களுக்கும் அச்சிட்ட மாணவர் நகலகம், சென்னை - 1 அச்சகத்தாருக்கும் மற்றும் கட்டமைத்த அச்சகத் தொழிலாளிகளுக்கும் நன்றி.

    இந்நூல் எழுதுவதற்கான, காகிதமும் மையமாக அல்லது கணிணியும் மின்சாரமுமாக இருந்தவர்கள் முனைவர் தோழர் தங்கமுனியாண்டியும் தோழர் குணாவும்தான். அவர்களில்லாமல் இந்நூல் சிறப்புற்றிருக்காது. உண்மையைச் சொல்லப்போனால் இந்நூலே உருவாகியிருக்காது. நாங்கள் மூவருமே இந்நூல். இருப்பினும் அவர்களுக்காக நான் தனியாக நன்றி சொல்வது சாத்தியமில்லை. காரணம், இப்படியான நூல்களை யார் எழுதினாலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கடமையாகக் கொண்டிருப்பது எங்களது பொதுப் பண்பு.

    நூல் விவரங்களைக் கேட்டுக்கொண்டு ஆதரித்த சூரியபிரதமனுக்கும் மேலட்டையை வடிவமைத்துக் கொடுத்த குருமார்க்ஸ்க்கும் இருவரையும் தந்த அமுதாராணிக்கும் என் சிறப்பு நன்றி.

    எட்டாவது வயதிலிருந்தே என்னைப் புத்தக வாசிப்பாளானாக மாற்ற முயன்று வெற்றிபெற்ற சிவகங்கை அன்னபூரணா ஹோட்டலின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான எனது அப்பா மு.குருசாமி அவர்களின் நினைவிற்கும் என்னை எப்படியாவது ஒரு பட்டதாரி ஆக்கவேண்டுமென்று போராடித் தோல்வியடைந்த எனது அம்மா ராக்கம்மாளின் பாசத்திற்கும் என் நினைவுள்ளவரையிலும் நன்றி!

    இந்நூலைக் கொண்டு வருவதற்காகத் தொடக்கத்திலிருந்தே தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் நீந்தும் மீன்கள் வெளியீட்டகத்தின் தோழமைக்கு எனது முதல் நன்றியைக் கொடுக்கிறேன்.

    குருசாமி மயில்வாகனன்

    9488525882

    gmayil64@gmail.com

    ***

    ‘அணிந்துரைக்குப் பதிலாக!'

    தென்னிந்தியப் பாளையக்காரர்களின் வரலாற்றை முதன்முதலாக நமக்கு வழங்கியவர்; 1801இல் சின்னமருது எழுதிய ஜம்புத்வீபப் பிரகடனம் எனும் இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் அரசியல் அறிக்கையை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தவர்; இந்நூலினை வாசித்தோ அல்லது வாசிக்கக் கேட்டோ அணிந்துரை வழங்க இயலாத நிலையினைத் தனது வயது முதிர்வு தந்திருந்தபோதும் நூலின் உள்ளடக்கத்தினைக் கேட்டு ஆமோதித்தார்; வரவேற்றார்; நூலினை வெளியிடுவதற்காகச் சிவகங்கை வரவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். சென்ற மற்றும் வரவிருக்கின்ற வரலாற்று ஆய்வாளர்களின் மற்றும் ஆர்வலர்களின் முன்னோடியாக, வழிகாட்டியாக எப்போதும் நிலைபெற்றிருக்கின்ற டாக்டர் இராஜய்யனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ***

    0. இந்த நூல் எதற்காக?

    வரலாற்றை மறைப்பது திருட்டுத்தனம். வரலாற்றைத் தவறாகச் சித்திரிப்பது அயோக்கியத்தனம். ஆனால், வரலாற்றைத் திருத்துவது பாசிசம். 'பாசிசம்' என்பது பிற்போக்கான சித்தாந்தம்; அது எதையும் ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்ற அழிவு சக்தி; அது மனித குலத்தின் விரோதி.

    உலகமெங்கும் உண்மையான வரலாறுகள் மறைக்கப்படுகின்றன, தவறாகச் சித்திரிக்கப்படுகின்றன, திருத்தப்படுகின்றன. இவ்வாறு செய்யப்படுவதற்குத் தனித்தனியான நோக்கங்கள் உள்ளன. இந்த நோக்கங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன. பொதுமக்களின் வாழ்க்கை நலன்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. எனவே, இந்த வரலாற்றுத் திரிபுகள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதும் எச்சரிக்கை கொள்ள வேண்டியதும் அவசியமானதாயிருக்கிறது.

    நாம் வரலாற்றைக் கற்க விரும்புகிறோம். சரியான, உண்மையான வரலாற்றினையே கற்க விரும்புகிறோம். அதற்காக, உண்மையான வரலாற்றினைத் தேடுகிறோம். வரலாற்றைக் கற்க விரும்புகின்ற நமக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அது ஜனநாயகத்திற்கு ஆதரவானதாக இருக்கும். அது பொதுமக்களின் வாழ்க்கை நலன்களுக்கு ஆதரவானதாக இருக்கும். எனவேதான், உண்மையான வரலாற்றை எழுதுவதும் உண்மையான வரலாற்றிற்கு எதிரான கற்பனைகளை அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகிவிடுறது.

    இது ஒரு பெரிய வேலை. இதைத் தனி நபர்களால் முழுவதுமாகச் செய்ய முடியாது. வரலாற்றுத் திரிபுகளைத் தடுத்து உண்மையை நிலை நிறுத்த வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். ஆனால், நிலைமைகள் இங்கு அவ்வாறு இல்லை. நேர்மாறானதாக இருக்கிறது. வரலாற்றுத் திரிபுகளுக்கு ஆட்பட்டு அதில் ஏதேனும் ஆதாயம் பார்க்கும் வியாபார நோக்குடன்தான் இங்கு செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    எனவே முடிந்த வகையில் சரியானதைச் செய்யும் முயற்சியில் இறங்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நமது முயற்சியில் முதலாவதாக இடம்பிடிக்கிறாள் குயிலி. யாரிந்தக் குயிலி? 1780 ஆம் ஆண்டில் ஆற்காட்டு நவாப், புதுக்கோட்டைத் தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும், வேலுநாச்சியார், மருதுபாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று, சிவகங்கை மீட்டெடுக்கப்படும்போது அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கினில் தனது உடலெங்கும் நெய்பூசி, நெருப்பு வைத்துக் கொண்டு குதித்த ஒரு தற்கொலைப் போராளியாக, வீரத் தியாகியாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருப்பவள்தான் குயிலி. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், குயிலி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தவளாகவும் குறிப்பிடப்படுவதுதான்.

    அக்காலகட்டங்களில் ஆங்கிலேயக் கம்பெனிக்கு எதிராக நின்றவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிசயமானது அல்ல. தென் மாவட்டச் சமூக வரலாறானது முழுக்கவும் சாதிய எழுத்துக்களால் நிரம்பியது. சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என எதையும் குறிப்பிடுமளவிற்கான பதிவுகள் இதுவரை அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தமிழக வரலாறுகளில் இல்லை. இன்றளவும் இல்லை. இது வரலாறு குறித்த அறிவியல் ரீதியான பார்வையினையே அச்சப்படுத்துகிறது. காரணம், பெரும்பான்மைச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் - சமூகத்தின் உயிர்நாடியான உற்பத்தியில் ஆகப்பெரும் பங்களிப்பைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களின் - பங்களிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்படாமலிருப்பது என்பது தமிழ்ச் சமூகத்தின் சாதிய மனநிலையினையைத்தான் வெளிப்படுத்துகிறதேயன்றி வேறெதையுமல்ல. நாகரிகமுள்ளவர்களுக்கு இது வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழலே. இங்கே ஒப்பனைகளே கூத்தாடிக் கொண்டிருக்கின்றன. எனவே, தமிழ் மண்ணின் வரலாற்றினை எப்போதுமே நாம் கவனத்துடன் அணுக வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வுடன் சிவகங்கை வரலாற்றின் சில பகுதிகளை அணுகத் தயாராவோம்.

    தமிழக அரசு சார்பாக, சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கான நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆணையிடப்பட்டு அதனடிப்படையில் 18.07.2014 அன்று வேலுநாச்சியாருக்கு எனத் திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் ரூபாய் இருபத்தியேழு இலட்சத்தி ஐம்பதாயிரம் (27,50,000) செலவில், குயிலிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    குயிலி மறத்தி (மறவர்/தேவர் சாதி என்றும்; ஆதி திராவிடப் (பறையர்) பெண் என்றும்; அருந்ததியப் (சக்கிலியர்) பெண் என்றும் தேவேந்திர குல வேளாளப் (பள்ளர்/மள்ளர்) பெண் என்றும் குறிப்பிட்டு நூல்களும் மற்றும் பல இணையத் தளங்களும் உள்ளன. பல்வேறு வகையான கட்சிகளும் அமைப்புகளும் இப்போக்குகளை ஆதரிக்கின்றன, வரவேற்கின்றன.

    நாம் இந்த நூலினை எழுதியது, குயிலியை குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த பெண் என அழுத்தமாக நிறுவி, ஏனைய சாதிப் பெண் அல்ல என மறுப்பதற்காக அல்ல. மேலும் குயிலி எந்த சாதியைச் சேர்ந்த பெண் என ஆராய்வதற்காகவும் அல்ல. மாறாக, சிவகங்கை வரலாற்றில் குயிலியின் பங்களிப்பினை இடங்காட்டவும் அதன் மூலம் சிவகங்கை வரலாற்றை இனங்காணவும் முயல்வதற்காகவே.

    எமது நூலாக்கத்திற்கான இலக்கானது இரண்டு அடைவிடங்களைக் கொண்டிருக்கின்றன. 1. குயிலியின் இடங்காட்டல். 2. குயிலி மறைக்கப்பட்டதற்கு சிவகங்கை வரலாற்றாய்வாளர்களின் சாதியமனம்தான் காரணம் எனத் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்ற தவறினைக் கண்டித்தல்.

    இதைத் தொடர்ந்து, சிவகங்கை வரலாற்று நாயகர்களாக விளங்குகின்றவர்கள் குறித்த ஆய்வு நூல்கள் எழுதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், படவேண்டும். வரலாறு குறித்த செய்திகளின் மீதான கேள்விகளையெல்லாம் ஆராய்வதன் மூலமாக உண்மையான வரலாற்றினை அறிந்து கொள்வதற்கான முயற்சியைத் தொடங்கிவிட முடியும் எனும் நம்பிக்கையோடு நீங்கள் இந்நூலுக்குள் சென்று திரும்பலாம். ஒப்பனைகளே கூத்தாடினாலும் கூட கூத்தின் முடிவில் ஒப்பனைகளும் கழன்றுதானே ஆக வேண்டும்.

    இந்நூலினை எழுதிவரும்போது சில இடங்களில் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுத வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் எனது அசலான எழுத்தினை நான் மறைத்த குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறேன். அவ்வாறு கட்டுப்படுத்திக் கொண்ட இடங்களை ஊகித்து, உணர்ந்து பொருள் கொள்ளக் கோருகிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க! நூலை வாங்கவும் வாசிக்கவும் முன்வந்த உங்களை வரவேற்கிறேன். வாழ்க!

    ***

    1. வரலாறு - ஆய்வு - ஆய்வாளர்

    வரலாறு எது? - ஒரு சீனச் சிறுவனின் கதை

    சீனாவில் கல்வி கற்கும் வாய்ப்பில்லாத ஒரு சிறு கிராமத்தில் சற்று வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவன் சீன வரலாற்றைக் கற்கவேண்டும் என்பதற்காகவே வீட்டைவிட்டு வெளியேறுகிறான். பலவிதமான துன்பங்கள், இடர்பாடுகளுக்கிடையே பல பள்ளிகளில் முயற்சி செய்தும் படிக்க வாய்ப்புக் கிடைக்காத நிலையில், அச்சிறுவனுக்கு அந்த வட்டாரத்திலேயே மிகச் சிறந்த பள்ளியெனப் புகழ்பெற்ற ஒரு பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கிறது. மிகவும் சிரமப்பட்டு அப்பள்ளியில் சேர்ந்து சீன வரலாற்றினை ஆர்வமுடன் படிக்கத் தொடங்குகிறான் அச்சிறுவன். சீனத்தின் பல்வேறு வம்சங்களின் பேரரசர்கள், மன்னர்கள், யுத்த பிரபுக்கள் பற்றியும் அவர்களுக்குள் நடைபெற்ற போர்களைப் பற்றிய கதைகளும் அப்பள்ளியில் வரலாற்றுப் பாடங்களாக இருந்தன.

    சிறுவயதிலேயே விவசாயியாக வளர்ந்த அச்சிறுவனுக்கு இதைக் கண்டதும் கோபம் வந்துவிடுகிறது. எனது மக்களாகிய விவசாயிகளைப் பற்றி எதுவுமே சொல்லித் தராத இந்த வரலாற்றை நான் எதற்குப் படிக்க வேண்டும் எனக்கூறி அப்பள்ளியிலிருந்து வெளியேறுகிறான். இவர்கள் சொல்லித் தருகின்ற கல்வியின் லட்சணம் இதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அச்சிறுவன், தானே சொந்தமாகப் பாடங்களை வகுத்துக் கொண்டு கற்க ஆரம்பிக்கிறான். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமைப் பொறுப்பாளராகி அதன் மூலமாக சீன மக்களின் மாபெரும் தலைவனாக உருவெடுத்து, சீனத்தைச் சிவப்பாக்கி, சீனத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி, சீன நாட்டிற்கு மக்கள் சீனம் (PEOPLES CHINA) எனப் பெயர் சூட்டினான். அவர்தான் தோழர் மா-சே-துங்.

    சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவராக உயர்ந்த மாசேதுங் நடத்திய கலாச்சாரப் புரட்சியின்போது மக்களைக் குறித்து எதுவுமே பேசாத, மன்னர்கள் மற்றும் யுத்த பிரபுக்களைப்பற்றி மட்டுமே பேசியிருந்த சீனத்தின் வரலாற்றுப் பாடங்கள் அனைத்தும் சீன மக்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மக்கள் அடிமைப்பட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1