Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ashok Thupparigiran
Ashok Thupparigiran
Ashok Thupparigiran
Ebook144 pages1 hour

Ashok Thupparigiran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘அஷோக் துப்பறிகிறான்’ சிறுவர் நாவல் ஒரு பரபரப்பான துப்பறியும் நாவல். திருட்டுப்பழி சுமக்கும் தந்தையின் களங்கத்தை அகற்ற சிறுவன் அஷோக் வீறுகொண்டெழுகிறான். அஷோக்கின் துணைக்கு மேகா எனும் சிறுமி. பந்தயக் குதிரைகளைப் பற்றி கதை எழுதவேண்டும் என்கிற ஆவலில் பல தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். பலமுறை குதிரைப்பண்ணைகளுக்கும் சென்று வந்தேன். ஏறக்குறைய அழிந்தே போய்விட்ட சர்க்கஸ் கலை பற்றியும் நாவலில் விவரித்துள்ளேன். சிறுவர் சிறுமியரை டிடெக்டிவ்களாக காட்டும்போது வாசகர்கள் நம்பும்படி இருக்க வேண்டும் இல்லையா? அஷோக் - மேகாவின் துப்பறிதல்களை லாஜிக்காகவே அமைத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580111007818
Ashok Thupparigiran

Read more from Arnika Nasser

Related to Ashok Thupparigiran

Related ebooks

Related categories

Reviews for Ashok Thupparigiran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ashok Thupparigiran - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    அஷோக் துப்பறிகிறான்

    Ashok Thupparigiran

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    ‘அஷோக் துப்பறிகிறான்’ சிறுவர் நாவல் ஒரு பரபரப்பான துப்பறியும் நாவல். திருட்டுப்பழி சுமக்கும் தந்தையின் களங்கத்தை அகற்ற சிறுவன் அஷோக் வீறுகொண்டெழுகிறான். அஷோக்கின் துணைக்கு மேகா எனும் சிறுமி. பந்தயக் குதிரைகளைப் பற்றி கதை எழுதவேண்டும் என்கிற ஆவலில் பல தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். பலமுறை குதிரைப்பண்ணைகளுக்கும் சென்று வந்தேன். ஏறக்குறைய அழிந்தே போய்விட்ட சர்க்கஸ் கலை பற்றியும் நாவலில் விவரித்துள்ளேன். சிறுவர் சிறுமியரை டிடெக்டிவ்களாக காட்டும்போது வாசகர்கள் நம்பும்படி இருக்க வேண்டும் இல்லையா? அஷோக் - மேகாவின் துப்பறிதல்களை லாஜிக்காகவே அமைத்துள்ளேன்.

    இத்தொகுப்பினை எனது இனிய நண்பர் வாய் மருத்துவர் டாக்டர் ச. இராமசாமி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்,

    ஆர்னிகா நாசர்

    அண்ணாமலை நகர்,

    12.10.2010

    1

    மகாத்மா காந்தி அடுக்குமாடி ஆடம்பரக்குடியிருப்பு சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் அமைந்திருந்தது.

    நான்கு - ஆறுமாடி பிளாக்குகள்.

    ஒவ்வொரு பிளாக்கிலும் 24 பிளாட்கள். ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு நான்கு பிளாட்கள். பிளாக்குகளுக்கு லிப்ட் வசதி உண்டு.

    நான்கு பிளாக்குகளுக்கும் நடுவே சதுரமாய் சிறுவர் விளையாடும் பூங்கா அமைந்திருந்தது. பூங்காவின் வலது கை ஒரத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றும் இருந்தது.

    ஸ்கூல் பஸ் வந்து பள்ளி சிறுவர் சிறுமியரை இறக்கிவிட்டு போயிருந்தது.

    அபார்ட்மென்ட் குழந்தைகள் யூனிபார்மை கழற்றினர். வண்ண ஆடை அணிந்தனர்.

    சிலர் கிரிக்கெட் ஆடினர்.

    சிலர் சறுக்குமரம் சறுக்கினர்.

    சிலர் கோகோ ஆடினர்.

    அந்த பிளாட்டில் தன்னந்தனியாக கம்ப்யூட்டர் தாத்தா வசித்து வந்தார். அவரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவரின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறானாம். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மகன் ‘அமெரிக்காவுக்கு வந்து விடு டாடி’ என வற்புறுத்துகிறான். அவருக்கு அங்கே போக பிரியமில்லை.

    சென்னையிலேயே தங்கி விட்டார்.

    தானே சமையல் செய்து சாப்பிடுவார்.

    காலையிலும் மாலையிலும் வாக்கிங் செல்வார்.

    குழந்தைகள் கதை புத்தகங்களை விடாமல் வாசிப்பார்.

    கார்ட்டூன் படம் பார்ப்பார்.

    மற்ற நேரம் டிவி ரசிப்பார்.

    இதுதவிர கம்ப்யூட்டர் வைத்திருந்தார். அதன் மூலம் உலகத்திலுள்ள யார் யாருடனோ பேசுவார். அதனாலேயே ‘கம்ப்யூட்டர் தாத்தா’ என அழைக்கிறார்கள் போலும்.

    தாத்தா சுவர் கடிகாரத்தை ஏறிட்டார்.

    மணி மாலை ஆறாக இன்னும் பத்தே நிமிடங்கள்.

    தாத்தாவுக்கு திடீரென்று சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது.

    பிஸ்கெட் பாக்கட்கள் எடுத்து வைத்தார்.

    ரஸ்னா தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்தார்.

    எல்லா கலரும் நிறைந்த வினோதமான அங்கி அணிந்து கொண்டார். தலையில் கோமாளித்தொப்பி.

    கையில் ஒரு மணியை எடுத்துக்கொண்டார்.

    பால்கனியில் வந்து நின்றார் அங்கிருந்து பார்க்க விளையாடும் சிறுவர்கள் அனைவரும் தெரிந்தனர்.

    மணியை வேகமாக ஆட்டினார்.

    ‘டிங் டிங் டிங்ங்ங்ங்’

    அவ்வளவுதான்...

    விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை நிறுத்தினர்.

    பால்கனியை நிமிர்ந்து பார்த்தனர்.

    ஹைய்யா கம்ப்யூட்டர் தாத்தா கத சொல்லப் போரார்

    ஆமா... இன்னைக்கி ப்ரைடே

    வாங்கடா... தாத்தா பிளாட்டுக்கு போகலாம்

    டிவி பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் எழுந்தான்.

    எங்கேடா போற? என கேட்டனர் பெற்றோர்.

    கம்ப்யூட்டர் தாத்தாகிட்ட கத கேக்கப்போரேன்

    சன் டிவில ரஜினி படம்டா

    யாருக்கு வேணும்? நீங்க பாருங்க

    இருடா... நாங்களும் வரோம் கதை கேக்க. அப்டி என்னதான் கம்ப்யூட்டர் தாத்தா கதை சொல்லி மயக்கிராருன்னு பாக்ரோம்

    பெருசுகளுக்கு நோ அனுமதி... ஸாரி

    இன்னும் தாத்தா மணியை ஒலித்துக்கொண்டிருந்தார்.

    நிமிடத்துக்கு நிமிடம் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருந்தது.

    ‘ஹோய்’ என இரைச்சல்.

    லிப்ட்டை புறக்கணித்துவிட்டு மாடிப்படிகளில் தபதபவென ஏறினர்.

    குயில்களும் கிளிகளும் முயல்களும் புறாக்களும் மனிதக்குரலில் பேசிக்கொண்டு படிக்கட்டு ஏறுவதுபோல் தெரிந்தது.

    ஐந்து நிமிடம் மணியை ஒலித்தபிறகு நிறுத்தினார் கம்ப்யூட்டர் தாத்தா.

    வீட்டுக்குள் நுழையும் சிறுவர் சிறுமிகளை ஆனந்தமாய் வரவேற்றார்.

    வாடா சூர்யா

    அர்ச்சனா மன்த்லி டெஸ்ட் முடிஞ்சிருச்சாம்மா?

    ரகு உங்க டீம் கிரிக்கெட்ல ஜெயிச்சிருச்சா?

    குண்டு வசந்த் நொறுக்குத் தீனியை குறைடா

    தாச்சுக்குட்டி வாவா

    பிரவீன் காலைல பால்காரரை கல் எடுத்து அடிச்சியாமே… தப்புப்பா... இனிம அதுமாதிரி செய்யக்கூடாது

    இப்படி ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்தனியாக பேசினார்.

    எல்லாரும் உக்காருங்க

    ஏறக்குறைய நாற்பது குழந்தைகள் அமர்ந்திருந்தனர்.

    இன்னைக்கி யார் வரல?

    அம்முலு வரல தாத்தா

    ஏன்? அவளுக்கு என்ன ஆச்சு?

    ஊருக்குப் போயிருக்கா தாத்தா

    தலையாட்டிக் கொண்டார் தாத்தா. புவனா இங்க வா

    என்ன தாத்தா?

    எல்லாருக்கும் பிஸ்கெட்டும் ரஸ்னாவும் குடு. பிரசன்னாவுக்கு மட்டும் ரஸ்னா வேணாம்

    புவனா பரிமாறினாள்.

    குழந்தைகள் மொறுக்மொறுக் என்று பிஸ்கெட் கடித்தனர். ரஸ்னா குடித்தனர்.

    வாயை துடைச்சிக்கங்க குழந்தைகளா

    துடைத்துக்கொண்டனர்.

    எல்லாரும் தினம் ரெண்டு தடவை பல்லை பிரஷ். பண்றீங்களா?

    ஓ அப்டித்தான் செய்ரோம் தாத்தா என்றாள் நிலா.

    வாரம் ஒருதடவை கைகால் நகங்களை வெட்றீங்களா?

    ஆமா என்றனர்.

    அம்மாப்பாவ எதிர்த்து பேசக்கூடாதுன்னு சொன்னேனே...

    எதிர்த்து பேசவே மாட்டோம் தாத்தா

    அன்னன்னைக்கு பாடங்களை அன்னன்னைக்கே படிக்றீங்களா?

    ஓ படிக்ரோம். தாத்தா கோரஸாய் கத்தினர்.

    கூட்டத்திலிருந்து ஒரு சிறுவன் எழுந்தான்.

    ஒவ்வொரு தடவையும் இதத்தான் கேக்றீங்களே தாத்தா? லேட் பண்ணாம கதைய ஆரம்பிங்க

    சிரித்தார் கம்ப்யூட்டர் தாத்தா.

    பாருடா அவசரத்தை. சரி இன்னைக்கி என்ன டைப் கதை சொல்ல? கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.

    குழந்தைகள் ஒன்றோடு ஒன்று கிசுகிசுத்துக் கொண்டன.

    கிருஷ் எழுந்தான். பேய் கதை சொல்லுங்க தாத்தா

    "கிருஷே பேய் மாதிரிதான் இருக்கான் – அதான் - பேய்கதை கேக்ரான். பேய் கதை கேட்டுகேட்டு சலிச்சு போச்சு. எங்களுக்கு பேய் கதை வேணாம்.

    வழிப்பம் காட்டியபடி கிருஷ் அமர்ந்தான்.

    போனவாரத்துக்கு முந்தின வாரம்தான் பேய்கதை சொன்னேன். அதனாலே இந்த வாரம் வேணாம். வேற எதாவது கேளுங்க

    கமல் எழுந்தான்.

    கம்ப்யூட்டர் தாத்தா ராஜாராணி கதை வேணும்

    கமலுக்கும் குழந்தைகள் இடையே பயங்கர எதிர்ப்பு.

    சரித்திரக்கதை ஓல்டு ஸ்டைல்... எங்களுக்கு வேணாம்பா...

    போர் போர் சரித்திரக்கதை போர் போர் மீண்டும் சிரித்தார் தாத்தா.

    "பேய்கதை

    Enjoying the preview?
    Page 1 of 1