Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thee Thithikkum Thee!
Thee Thithikkum Thee!
Thee Thithikkum Thee!
Ebook231 pages2 hours

Thee Thithikkum Thee!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன் சகாக்களுடன் பொது இடங்களில் நிஜ நாடகங்களை அரங்கேற்றுபவன் மனோகர். இலக்கியவாதியான ரத்னா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்குப் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் அவர்களின் திருமண வாழ்வு நிலைத்ததா? கருத்து வேறுபாடு இன்றி சேர்ந்தனரா? இல்லை விவாகரத்து பெற்றனரா? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580111008304
Thee Thithikkum Thee!

Read more from Arnika Nasser

Related to Thee Thithikkum Thee!

Related ebooks

Reviews for Thee Thithikkum Thee!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thee Thithikkum Thee! - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தீ தித்திக்கும் தீ!

    Thee Thithikkum Thee!

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    முஷ்கிந்தா பொழுது போக்கு பூங்கா. கொத்து கொத்தாய் சிறுவர் கூட்டம் அவரவர் பெற்றோருடன்.

    கல்விச் சுமையிலிருந்து தற்காலிகமாய் விடுபட்ட ஆயாசம் சிறுவர்கள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

    அந்தப் பூங்காவில் ரசிக்கப்படவேண்டிய அம்சமே சிறுவர்களின் குதூகலம், கும்மாளம் தான்.

    சுற்றுலா பேருந்துகளிலிருந்து இறங்கிய கூட்டமும் சிறுவர்களுடன் கலந்து போயிருந்தது.

    அத்தனை பரபரப்பான கூட்டத்துக்கு இடையே ஓர் இளைஞன் தென்பட்டான். கையில் ஒரு டேப் ரிக்கார்டரும், டவலும் வைத்திருந்தான்.

    வகிடெடுக்கப்படாத, தூக்கிச்சீவப்பட்ட முரட்டு கேசம். கிருதா முற்றிலும் நீக்கியிருந்தான். இடது காதில் ஒற்றை கம்மல். மூக்கு நுனி சிவந்திருந்தது. சீர் செய்யப்படாத யுவான்சுவாங் மீசை வைத்திருந்தான். மேல் உதடு தடித்து சிவந்திருந்தது. கீழ் உதடு நிகோட்டின் உபயத்தில் கறுத்திருந்தது. ஷேவ் செய்யப்படாத அனில்கபூர் கன்னம். தொள தொள ஜிப்பாவும், பேன்ட்டும் உடுத்தியிருந்தான். தோளில் ஜோல்னா பை.

    எல்லாரின் கவனத்தைக் கவர்ந்தபடியே கொண்டு வந்திருந்த டவலை தரையில் விரித்தான். டேப் ரிக்கார்டரை அதன் மீது வைத்து ‘ஆன்’ செய்தான்.

    முறையிடும் விதத்தில் இரு கைகளையும் வானம் உயர்த்தினான்.

    தயவு செஞ்சு எல்லாரும் கொஞ்சம் கவனிங்க!

    கூட்டம் சலசலப்பாய் திரும்பியது.

    நான் இங்கேயே தற்கொலை செஞ்சிக்கப்போறேன்...

    கூட்டம் திடுக்கிட்டது.

    வேடிக்கை பார்க்கும் ஆர்வமாய் இளைஞனை நெருங்கி வட்டம் அமைத்தனர்.

    சாகிறதுக்கு முன்னாடி உங்க அனைவர்கிட்டயும் மரணவாக்குமூலம் அளிக்க விரும்புகிறேன்!

    ஒருவன் தற்கொலை செய்வதை வேடிக்கைப் பார்த்தால் ஏதேனும் சிக்கல் வந்து சேருமோ என நினைத்து சிலர் விலகினர்.

    இளைஞன் கையில் சயனைடு!

    கூடிய கூட்டம் ஆளுக்கொரு திசையில் யோசித்தது?

    ‘அழகான இளைஞன் தற்கொலை செய்வதென்றால் அது காதல் தோல்வியாகத் தான் இருக்கும். எந்தப் பெண்ணிடம் ஏமாந்தான்?’

    ஒருவர் தைரியமாய் வினவினார்.

    ‘ஏம்ப்பா! ஏதாவது போதை மருந்து உபயோகிச்சு வீணாப்போயிட்டியா?’

    இளைஞன் தேம்பினான்.

    எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை சார்!

    கேண்டிட் கேமிரா நிகழ்ச்சி நடத்தி கிடத்தி எங்களை ஏமாத்றியா?

    சேச்சே... அபத்தமா என் செயலை சந்தேகிக்காதிங்க...

    கடன் தொல்லை?

    ம்ஹும்! அழுதான்.

    வயித்தவலி, கியித்தவலி?

    நோ... நோ... கிடையாதுங்க!

    மொதல்லயே கேக்கனும்னு நெனைச்சேன்... காதல் தோல்வி?

    ‘தூ! பொம்பளை வாசனையே பிடிக்காது...’

    பின்ன என்ன தான்... நீயே சொல்லேன்ப்பா...

    நம்ம இந்தியாவோட நிலையை நினைச்சு நினைச்சு துக்கம் தாங்கல... அதான்... இந்த முடிவுக்கு வந்தேன்!

    கூட்டத்தை உடைத்துக் கொண்டு உள்ளே பிரவேசித்தாள் ரத்னா.

    ஜீன்ஸும், டி சர்ட்டும் உடுத்தியிருந்தாள். மனிஷாகொய்ராலாவின் சாயல். ‘பாப்’ செய்யப்பட்ட கேசம். முன்னுச்சி கேசம் இருபுறமும் காற்றில் அசைந்தாடின. இடது கையில் நகம் வளர்த்திருந்தாள். அகல நீலக்கண்கள். திருத்தமான கூர்மை மூக்கு. சற்றே திறந்திருக்கும் வாய். நகை அணியாத கழுத்து. கால்களில் ஷூ.

    காதுகளில் அமர்ந்திருந்த ‘வாக்மேன்’ வளையத்தை விலக்கியபடி இளைஞனின் பதிலை உள் வாங்கினாள்.

    இவளின் பிரவேசத்தையும் ஒரு நொடி அந்த இளைஞன் கவனித்து விட்டான்.

    இந்தியாவுக்காக தற்கொலையா? ஏன்... ஏன்... இந்தியாவுக்கென்ன இப்ப மோசமாகிப் போச்சுது?

    இதவிட என்ன மோசமாகணும்?

    விலாவரியா விளக்கிச் சொல்லேன் பாப்பம்...

    சொல்றேன்... இந்தியா, வெளிநாடுகிட்ட கடன் வாங்கிக்கிட்டே போவுது. தலைக்கு ஏழாயிரம் ரூபா கடன். ஒவ்வொரு நாளும் கூடிக்கிட்டே போவுது! அடுத்து... இந்து - முஸ்லிம் பிரச்சனை... போற போக்கைப் பாத்தா ஸ்ரீலங்கா அடிச்சிக்கிற நிலை இங்கேயும் வந்திடும் போல... அப்புறம் மோசமான அரசியல்வாதிகள், அவர்களின் கொடூரமான சுரண்டல்கள்... நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை... சொல்லிக் கொண்டே போனான் இளைஞன். அத்தனையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா இந்தியாவுக்கு விடிவு காலமே புலப்படல... இந்த மோசமான சிச்சுவேஷன்ல நான் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து... அந்த குழந்தையும் அவதிப்படணுமா?"

    கேட்டவர் ஒரு மாதிரி சிரித்தார்.

    நீ சொல்றதெல்லாம் உண்மை தான்.. ஆனா அதுக்காக தற்கொலை பண்ணிக்கிறதா? நாடு எப்படியிருந்தா நமக்கென்ன? நீ பொழைக்கிற வழியைப் பாரு!

    இன்னொருவர் குறுக்கிட்டார்.

    நீங்க பேசுறது தப்பு... நாம இப்படி சுயநலமா இருக்கிறதாலத் தான் நம்ம அரசியல்வாதிகள் நம்மை சுரண்டுறாங்க... நாம இந்தாளைப் போல தற்கொலை பண்ணிக்க வேணாம்... அட்லீஸ்ட்... மோசமான அரசியல்வாதிகளுக்கு எதிரா போராடலாமில்லையா?

    மவுனமாய் வேடிக்கைப் பார்த்த ரத்னா பேச ஆரம்பித்தாள்.

    உன் பேரென்ன?

    இளைஞன் நிமிர்ந்தான். மனோகர்! நண்பர்கள் செல்லமா ‘மனோகா... மனோகா’ன்னு கூப்பிடுவாங்க...

    ஏம்பா மனோகா! எங்க வேலை பாக்ற?

    எல்.ஐ.சி.ல பாக்கிறேன்.

    அப்பாம்மா?

    இல்லையே...

    அதான் கொழுத்துப்போய் திரியுற... உலகத்தில் எந்த நாடு நிம்மதியா இருக்கு சொல்லு... எங்கயும் பிரச்சனை தான்... ஒப்பிட்டுப் பார்த்தா இந்தியா எவ்வளவோ பெட்டர்... நாம் சாதிக்க வேண்டியது ரெண்டே விஷயம். நூறு சதவீதம் கல்வியறிவு... அரசியல் புரட்சி... அந்த இரண்டையும் சாதிக்க முதல் அடி எடுத்து வைக்காம சாகிறேன்றியே? எந்திரிச்சு வா... மொதல்ல ஐஸ்கிரீம் சாப்பிடலாம்...

    நீ சொன்ன ரெண்டையும் இன்னும் ஐந்நூறு வருஷமானாலும் சாதிக்க முடியாது... விலகிப்போ... சயனைடை விழுங்கப் போறேன். அடுத்தப் பிறவிலயாவது பிரச்சனையில்லாத நாட்டுல பொறக்கிறேன்!

    உன் பிடிவாதத்துக்கு மருந்தில்ல... மனோகா! சரி... செத்திரு!

    ஒத்துழைப்புக்கு நன்றி! நெகிழ்ந்தான் மனோகர்.

    நீயா சயனைடை விழுங்கறியா? நான் ஊட்டி விடட்டுமா?

    மனோகரை நெருங்கினாள்.

    கூடிய கூட்டம் திகிலுற்றது.

    இந்தாம்மா... பேசாம இரு... செத்தான்னா நாமல்லாம் போலீசு, கேசுன்னு அலைய வேண்டி வரும்...

    பரவால்ல... ஒரு நா போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வருவோம்... நீங்கல்லாம் பத்திரமா திரும்பி வந்திடலாம். ஏன்னா ஆம்பளைய ஆம்பளை கற்பழிக்க மாட்டான்... நான் தான் ஜாக்கிரதையா செயல்படணும்...

    பேசாம இவனை பூங்கா செக்யூரிட்டிகிட்ட ஒப்படைச்சிடுவோம்!

    அதெல்லாம் வீண்! முடிவு பண்ணின ஆளை போட்டுக் குழப்பிக்கிட்டு... மனோகா! யோசிக்காத! முழுங்கிடு!

    மனோகர் தீர்மான முகம் பெற்றான்.

    ஏ வீணா போன இந்தியாவே! டாட்டா...

    சயனைடை விழுங்கினான் மனோகர்.

    விழுங்க மாட்டான் என நம்பியிருந்த ரத்னா கலவரமானாள்.

    கூட்டம்.சிதறி ஓடியது.

    சயனைடு விழுங்கிய மனோகர்.

    முகம் கோணல் மாணலானது.

    பாய்ந்தாள் ரத்னா.

    மனோகருடன் போராடினாள்... வாய்க்குள் விரலை விட்டு சயனைடை எடுக்க முயன்றாள்...

    பிரயோஜனமில்லை...

    மனோகர் வாயில் நுரைத்தான்.

    கண்கள் ஏகாந்தத்தில் சொருகின.

    கைகால்கள் ‘விலுக் விலுக்’ என்று அடித்துக் கொண்டன. சில நொடிகளில் மனோகர் இறந்து போனான்.

    இறந்து போன மனோகரின் உடலைப் போட்டு உலுக்கினாள்.

    நாடித்துடிப்பை ஆராய்ந்தாள் இல்லை!

    விளையாட்டு மனோபாவமாய் இருந்த ரத்னா முகமாறினாள். தனது முகத்தில் அறைந்து கொண்டு கதறினாள்.

    விளையாட்டுப் போக்கா பேசி ஒரு இளைஞனை கொன்னுட்டேனே... இவன் அவநம்பிக்கை பிடிச்ச ஆளு தான்... ஆனா இந்தியா மேல எவ்வளவு பற்று வச்சிருந்தான்? இல்லேன்னா இவன் தற்கொலை செஞ்சிப்பானா? உடலை விட்டுட்டு ஓடிடக் கூடாது... நின்னு தகனம் பண்ற வரைக்கும் காரியங்களை கவனிக்கணும்...

    ஓடிய கூட்டத்தில் சிலர் ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்தனர்.

    இயங்கிக் கொண்டிருந்த டேப் ரிக்கார்டர், கேசட் முடிந்து தானாகவே ஆப் ஆகியது.

    கூட்டத்தில் பேசிய இருவர் ஓடி வந்தனர்.

    நாடகம் வெற்றிகரமாக முடிந்தது... எழுந்திரு மனோகா!

    சோப் நுரையை துடைத்தபடி எழுந்தான் மனோகர்.

    ஒரு நொடி நடப்பை ஜீரணிக்க முடியாமல் ஸ்தம்பித்தாள்.

    தான் ஏமாந்தோம் என்றாலும், தன் முன் ஒரு தற்கொலை நடக்கவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு ரத்னாவிடமிருந்து பெரிதாய் வெளிப்பட்டது.

    ஏய் நீ சாவல?

    ஆமா...

    அன்பிலிவபிள்...

    அழகியே நீ விரும்பினா உண்மைலேயே செத்துப்போறேன்...

    சேச்சே... நான் அந்த அர்த்தத்ல சொல்லல... ஆமா... நீங்கல்லாம் யாரு?

    மனோகரின் சகா முன் வந்தான்.

    நாங்கள் மேடையில்லாமல், மேக்கப் இல்லாமல், எழுதி வைத்த வசனமில்லாமல் உயிர்ப்பு நாடகம் நடத்துபவர்கள்... இவன் தான் எங்கள் குழு தலைவன்... நிஜப் பெயரும் மனோகர் தான்... எல்.ஐ.சியில் அதிகாரியாய் பணிபுரிகிறான்!

    கிரேட்!

    இன்றைய நாடகத்தின் பெயர் நண்டுகளின் பிடியில் இந்தியா!

    சிறப்பான தலைப்பு! சிலாகித்தாள் ரத்னா.

    எங்கு படித்தீர்கள் மனோகா?

    டிகிரி படித்து விட்டு டெல்லியில் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் மூன்று வருட டிப்ளமா படித்தேன்... பிரேசில் நாட்டு நாடகக் கலைஞன் அகஸ்தா போவால் தான் என் குரு!

    கேட்க கேட்க சுவாரசியமாய் உள்ளது!

    இன்றைய நாடகத்தை டேப் ரிக்கார்டரில் பதித்துள்ளோம்... நீங்கள் விருப்பப்பட்டால் கேட்கலாம்...

    இருவரும் சம்பிரதாய வார்த்தைகளை விட்டு நீ, வா, போ என்றே பேசுவோமா?

    சரி... உன்னைப் பற்றி கூறேன்.

    என் பெயர் ரத்னா. நாங்கள் பெங்காளி. சில தலைமுறைகளுக்கு முன்னமே சென்னையில் வந்து ‘செட்டில்’ ஆகிவிட்டோம்... நான் எம்.ஏ., சைக்காலஜி படித்து விட்டு சாதாரண அரசுப் பணியில் உள்ளேன். ‘வாசவதத்தை’ என்ற புனை பெயரில் ‘கணையாழி’யில் கதை எழுதுபவள்."

    உங்களுக்கு ‘லிவ்விங் தியேட்டரில்’ ஈடுபாடு உண்டா?

    திரும்பவும் ‘உங்களுக்கு’ என்கிறாய் மனோகா!

    உனக்கு ஈடுபாடு உண்டா?

    தெருக்கூத்துக் கலையில் ஈடுபாடு உண்டு... உங்களின் இன்றைய நாடகத்தைப் பார்த்ததும் இதிலும் ஈடுபாடு வந்து விட்டது!

    மிக சந்தோஷம்!

    உன் முகவரி குடேன்... மீண்டும் சந்திப்போம்!

    மனோகர் முகவரி எழுதி தரும் போது சகாக்கள் கிசுகிசுத்தனர்.

    என்ன சொல்றாங்க?

    எங்க குழுவில் லேடி ஆர்ட்டிஸ்ட் இல்லை... நீ வந்து சேந்துக்கிறியான்னு கேக்கச் சொல்றாங்க!

    தோள்களை கவர்ச்சியாக குலுக்கிக் கொண்டாள் ரத்னா.

    நீ கேக்கலேன்னா நானே கேக்கிறதா இருந்தேன். நாளையிலிருந்து உன் குழுவில் நானும் ஒரு அங்கம்... ஓகே?

    ஓகே! என்றான் மனோகர்.

    அதற்கு முன் ஒருகாரியம்...

    என்ன?

    உன் அற்புத நடிப்பிலிருந்து இன்னும் நான் மீளவேயில்லை... அதனை சிலாகிக்க விரும்புகிறேன்... அனுமதிப்பாயா?

    ஓ!

    உன் வலது கையை நீட்டு!

    நீட்டினான் மனோகர்.

    கையைப் பற்றி ஜப்பானிய முறையில் குனிந்து முத்தமிட்டாள் ரத்னா. உடல் முழுக்க சிலிர்த்து ஸ்தம்பித்தான் மனோகர்!

    2

    முத்தமிட்ட ரத்னா நளினமாய் விலகிப் போனாள். வலது புறங்கையில் ஈரத்தடயம். அதிகாலை பனியில் நனைந்த நாணல் போல் ரோமங்கள் நனைந்து மடங்கியிருந்தன.

    ஆயிரம் வருடங்கள் புதைக்கப்பட்ட அபூர்வ போதைப் பானத்தை அருந்தியது போல் நிலை தடுமாறினான் மனோகர். இவனது நிஜ நாடகங்களுக்கு அனைத்து நாட்டு ஜனாதிபதிகளும் கூடி மரியாதை செய்திருந்தாலும் இவ்வளவு குதூகலித்திருக்க மாட்டான்.

    இத்தனைக்கும் மனோகர் அடிப்படையில் பெண்களை வெறுப்பவன். தீவிர கொள்கைவாதி. வீதி நாடகங்கள் மூலம் இந்தியாவை திருத்தப்போவதாய் சங்கல்பம் கொண்டவன். ஆனால் ஒரு முத்தம் இந்த கொள்கை வீரனை இப்படித் தத்தளிக்கச் செய்யுமா என்ன?

    என்ன நோக்கத்தில் இப்படி ஒரு முத்தத்தை கொடுத்து விட்டுப்போனாள்?

    வாழ்வின் சிறப்பான விஷயங்களை சிலாகிக்க முத்தம் கொடுப்பதென்றால் தினம் அவள் நூற்றுக்கணக்கான முத்தங்களை செலவழிக்க வேண்டுமே சாத்தியமா?

    சற்றே உணர்ச்சி வயப்பட்டாள் யுவதி. புறங்கையில் சைவ முத்தம்.

    அதீதமாய் உணர்ச்சிவசப்பட்டால் அச்சு அசல் ஆங்கில முத்தம் தருவாளோ?

    மனோகரின் சகாக்கள் அவனை சுற்றி குழுமினர்.

    "மனோகா! நீ பெரிய்ய ஆளுடா... கண்ணா! நாங்களும் இவ்வளவு நாளா உன் நிஜ நாடகங்கள்ல நடிச்சிருக்கோம். கல்லடி, செருப்படி தான் மிச்சம். விதிவிலக்கா அட்லீஸ்ட் ஒரு கிழவியாவது முத்தம் கொடுத்திருப்பாளா? இல்லையே... எல்லாம் உன் மச்சம் செய்யற வேலைடா... எங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1