Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Kolai Ariya Aaval
Kolai Kolai Ariya Aaval
Kolai Kolai Ariya Aaval
Ebook81 pages53 minutes

Kolai Kolai Ariya Aaval

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466664
Kolai Kolai Ariya Aaval

Read more from K.G.Jawahar

Related authors

Related to Kolai Kolai Ariya Aaval

Related ebooks

Related categories

Reviews for Kolai Kolai Ariya Aaval

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Kolai Ariya Aaval - K.G.Jawahar

    11

    1

    பச்சைப் பசேல் இருட்டு. ஆம். பச்சை இருட்டு. சூரியன் உள்ளே புகமுடியாமல் அந்த வன ஏரியாவே பச்சையாக லேசான ஒளியுடன் காட்சியளித்தது. ரம்மியமாகவும் அதே சமயம் பயங்கரமாகவும் இருந்தது. எங்கு பார்த்தாலும் வானை முத்தமிட்டு மேகத்தைக் குசலம் விசாரிக்கும் மரங்கள். ரப்பர், ரப்பர், ரப்பர். பிறகு என்னென்ன மரங்களோ. ஏகப்பட்ட மரங்கள்.

    அந்த காட்டுப் பிரதேசத்தில் தான் மித்ரன் எச்சரிக்கையாகவும். வேகமாகவும் நடந்து கொண்டு இருந்தான். சில இடங்களில் மேடுகள். பல இடங்களில் பள்ளங்கள். கடந்தான். சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்தான். உல்லாசப் பயணியாய் அல்ல. ஒருவித வெறியனாய்.

    முரட்டு ஜீன்ஸ். அழுக்கு பனியன். பாக்கெட்டில் ஒரு கூர்மையான கத்தி. இதுவே இப்போதைக்கு அவன் செய்யப் போகிற காரியத்திற்கு அசாத்திய தைரியம் வேண்டுமே.

    ஆறு ஒன்று சலசலத்தவாறே குறுக்கிட்டது. காட்டு யானைகள் வந்து, தண்ணீர் குடித்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். அடையாளமாய் சாணக் குவியல்களும், கால் தடங்களும் இருந்தன. அவன் சின்னச் சின்ன பாறையில் கால் வைத்து ஆற்றைக் கடந்தான். தெளிவான தண்ணீரில் மீன்கள் கோரஸாக நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. ரசிப்பதற்கு நேரமில்லை.

    பசித்தது. ச்சே. இந்தப் பாழும் பசி.

    சுற்றும் நோக்கினான். ஒரு கொக்கோ மரம் தென்பட்டது. வேகமாய்ச் சென்று லேசாக ஏறி காய்களைப் பறித்து, உடைத்தான். பருப்பு வெளிப்பட்டது. லேசாகக் கசந்தது. ‘பரவாயில்லை. கசந்தால்கூட பசி எடுக்க நேரமாகும்.

    மறுபடியும் நடந்தான். சற்று மேட்டில் ஏறி இறங்கினால் ரப்பர் தொழிலாளர்களுக்காக அந்தக் காட்டில் அரசாங்கம் அமைத்து இருக்கிற ரேஷன் கடை ஒன்று வரும்... அதுதான் மித்ரனின் தற்போதைய இலக்கு.

    வேகமாய் நடந்தான். சருகுகளுக்கு இடையே இருந்து சரசரவென்று தப்பி ஓடியது பாம்பு ஒன்று. விருட்டென்று காலை இழுத்துக் கொண்டான். இந்தப் பிரதேசத்து பாம்புகள் ஆபத்தானவை. கடித்த இடத்தை பிளேடால் கீறி இரத்தம் உறிஞ்சித் துப்புவதற்குள் உடலில் விஷம் பாய்ந்துவிடும். இந்தியாவில் மட்டும் வருடம் பத்தாயிரம் பேர் பாம்பு கடித்து இறக்கிறார்களாம். அந்த பத்தாயிரத்தில் மித்ரன் ஒருவனாக இருக்க விரும்பவில்லை. காரணம் அவன் முன்னே பெரிய பெரிய விஷயங்கள் இருந்தன.

    சற்று தூரம் நடந்த பிறகு சின்ன பாதை ஒன்று தென்பட்டது. தூரத்தே சில மனிதர்களின் நடமாட்டம்! ஆகா, கிராமம் - வனத்தின் நடுவில் இருக்கும் கிராமம் வந்துவிட்டது. அதோ அந்த ஷெட் போட்ட கட்டிடம் ரேஷன் கடையாகத்தான் இருக்கவேண்டும்.

    மனதில் தெம்பு வந்தது. நடந்தான்.

    அருகில் தெரிவது மாதிரி இருந்த அந்தக் கடை வந்து கொண்டே இருந்தது! மரங்களையும், புதர்களையும் கடந்து, சின்னதாக வளையும் ஒரு சாலையில் திரும்பி, இறங்கி, பாறை ஒன்றில் குதித்து பின் லேசாகத் திரும்பியதும்தான் ஒற்றையடிப் பாதையும், சற்று தள்ளி அந்த கடையும் தென்பட்டது!

    அந்தக்காடும் மலைப் பகுதியும் தமிழகத்தைச் சேர்ந்ததுதான் எனினும் கேரள பார்டரில் இருந்ததால் மக்களிடம் கேரள நடை உடை பாவனைகள் வாளிப்பான பெண் ஒருத்தி எதிர்ப்பட்டாள். சந்தன நிறம். மின்னும் மேனி. நுனியில் நீர் சொட்ட தொங்கும் கருங்கூந்தல். இவனை நோக்கி வந்தாள். திடுக்கிட்டான்.

    ஸாரே...

    என்ன...?

    சிரித்தாள் அவள். ஸார் எவிட போகுனு...?

    திடுக்.

    இவள் யார்? போலீஸ்காரன் மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டு. எச்சரிக்கை மித்ரா. எச்சரிக்கை.

    சும்மா... வாக்கிங்...!

    வாக்கிங்கோ...?-பெரிதாய்ச் சிரித்தாள் ஸாரே... இது பயங்கரமான ஸ்தலமானு.

    எனக்குத் தெரியும்...! என்றான் அவள் அறிவுரையைப் பொருட்படுத்தாமல்.

    ஸாரே... பறயுன்னதை கேட்டு...!

    மித்ரன் கோபத்தின் எல்லைக்கு வந்தான். வேறு எவராவது ஒரு ஆண் குறுக்கிட்டிருந்தால் அவன் கழுத்தை அப்படியே நெரித்துக் கொன்றே போட்டிருப்பான். அவனுக்கு முக்கியமான வேலை இருக்கிறது. அது முடிவதற்குள், எதிர்ப்படுவர் அனைவரும் அவனின் எதிரிகளே!

    ச்சீ... போ... மைண்ட் யுவர் பிஸினஸ்

    இந்தத் திடீர் தாக்குதல் அவளை நிலைகுலையச் செய்தது. அதிர்ந்தாள்.

    விருட்டென்று மேட்டில் ஏறிச் சென்றுவிட்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1