Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Varam Thaa
Kaadhal Varam Thaa
Kaadhal Varam Thaa
Ebook99 pages37 minutes

Kaadhal Varam Thaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Kaadhal Varam Thaa

Read more from K.G.Jawahar

Related to Kaadhal Varam Thaa

Related ebooks

Related categories

Reviews for Kaadhal Varam Thaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Varam Thaa - K.G.Jawahar

    2

    1

    அந்த நட்சத்திர ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹால் மிக ஜில்லிப்பாக இருந்தது. மெத்தென்ற கம்பளமும் வானத்து நட்சத்திரங்களையே வம்பிற்கு இழுக்கும் சாண்ட்லியர்களும், எங்கோ மெலிதாக மிதந்து வந்த சுகந்தமான மணமும், மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்த உயர்ந்த வர்க்கத்தின் மனிதர்களும் அந்தச் சூழ்நிலையைப் பரபரப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    பட்டுத்துணி விரிக்கப்பட்ட வட்டமான சுழல் மேடையின் மீது ஒளி வெள்ளம் பிரத்யேகமாகப் பாய்ந்துகொண்டு இருந்தது.

    இந்த மேடையில்தான் அழகிகள் அணிவகுக்கப் போகிறார்கள்! பளபள உடையிலும் தளதள தொடையிலுமாய் வந்து தங்கள் வனப்பைக் காட்டி, தங்கக் கிரீடமும் வெள்ளிக் கிரீடமும் சூட்டிக்கொள்ளப் போகிறார்கள்.

    இன்றைய அழகிப் போட்டியில் கலந்துகொள்ளப் போகும் பெண்களில் தேவிகா முக்கியமானவள். நல்ல அழகி. நுனி நாக்கு ஆங்கிலம், வாளிப்பான உடம்புடன், வாரியடிக்கும் பெண்மை! முதல் பல ரவுண்டுகளில் அவள் தன் திறமையையும் அழகையும் காட்டிச்சென்று இப்போது ஃபைனலுக்கு வந்துவிட்டாள். அநேக பத்திரிகைகள் அவள்தான் ‘அழகு ராணி’ என்று ஜோதிடம் கணித்துச் சொல்லி, ஜொள்ளு பார்ட்டிகளைக் கொம்பு சீவி விட்டன.

    மெரூன் கலர் கோட், வெள்ளை பேண்ட் சகிதமாய் கிஷண் மேடை மேல் தோன்றினார். அவர் நிகழ்ச்சி அமைப்பாளர். இனிமையான சிரிப்புடன் கூடிய சிவப்பு முகம். கிஷண் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதே ஒரு வித்தியாசமாய் இருக்கும்.

    ஆனால் இன்று அவர் தொகுத்து வழங்கப்போகும் அழகிப் போட்டி நிகழ்ச்சி ஆபத்தில் முடியப் போகிறது என்று அவருக்குத் தெரியாது! நிகழ்ச்சிக்கு மிக அதிகமான நுழைவுக் கட்டணம் வைத்தும் அரங்கம் நிரம்பிப்போனது. பலத்த போலீஸ் பாதுகாப்பு வேறு.

    கடைசியாக வந்தான் சம்பத் எனப்படும் சம்பத்குமார். பின்னால் அவனது பட்டாளமும்தான். சம்பத், பயங்கர டென்ஷனாக இருந்தான். கழுத்தில் உதிர்த்த வியர்வை, அவன் மைனர் செயினுடன் மோதி, கசகசக்க வைத்தது. டென்ஷனுக்குக் காரணம் -

    தேவிகா!

    அவளால் இன்று அவனுக்கு இலட்ச ரூபாய் தருவதாக நண்பர்களின் பெட்!

    ‘அவள் வெல்ல வேண்டும்’ என்று சம்பத் தவித்துக் கொண்டிருந்தான். சம்பத், சுய நிதிக் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் படித்து முடித்திருந்தான். ஆள் சினிமா ஸ்டார் மாதிரி இருப்பான்.

    அவனைச் சுற்றிப் பணக்கார நண்பர்கள் கூட்டம். பணக்கார நண்பர்கள் என்றால், கொழுத்த பணம்!

    எல்லோரும் இரண்டு மூன்று மாருதி கார்கள் வைத்துக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு, பீச்சில் ஒதுக்குப்புற இடத்தில், படகு மறைவில் போய் குரூப்பாக ‘உறை’ பாக்கெட் வாங்கிக்கொண்டு, கொண்டு...

    இப்படிப் பல இத்தியாதி அம்சங்களுடன் இருப்பவர்கள்தான் அவர்கள்.

    ஆனால் பாவம்! சம்பத்குமார் ஒரு இரைதான் அவர்களுக்கு.

    நல்ல கட்டுடலும் இளமையும், அழகும் கம்பீரமும் கொண்டு விளங்கும் சம்பத்குமாரை அவர்கள் தலைவனாக வைத்திருக்கக் காரணம் -

    அவனைத்தேடி வரும் பல பெண் நண்பிகள்...!

    அந்த நண்பிகளைப் பிடித்துக் கொள்வார்கள், அவர்கள். பாவம், சம்பத்திற்கு இதெல்லாம் தெரியாது.

    அவனுக்குச் சுகபோக வாழ்க்கையும், பணமும், காரும், ஓட்டல் விருந்துகளும் கிடைத்துக் கொண்டிருந்ததால் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

    இன்று இவர்களின் தயவால் ஒரு லட்சம் கிடைக்கப் போகிறது? என்ன சாதிக்கலாம்; தங்கையின் கல்லூரி ஃபீஸ், அப்பாவின் ஆஸ்பத்திரி செலவு, அம்மாவிற்கு ஒரு நல்ல காஷ்மீரத்துக் கம்பளி வாங்கலாம். இன்னும் எத்தனையோ...!

    ‘தேவிகா ஜெயிக்கவேண்டும்!’ அவன் மனது முணு முணுத்துக் கொண்டிருந்தது.

    அதே சமயம் ஹாலின் இன்னொரு கோடியில், சீலன் இருந்தான். நல்ல கறுப்புக் கண்ணாடியும், அடர்ந்த தாடியுமாய்! தாடியை இழுத்தான். கையோடு வந்துவிடும் போல் இருக்கவே, அப்படியே அழுத்திக்கொண்டான். மறு கையால் பேண்ட் பைக்குள் இருக்கும் ரிவால்வரைச் சரிபார்த்துக் கொண்டான். அவன் கண்களும் அந்த வட்ட மேடையை நோக்கியே இருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

    நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. மாலா ரேணுகா அம்பிகா இதோ தேவிகா! இந்த வருடத்தின் இணையில்லா அழகு ராணி.

    அரங்கமே அதிர்ந்தது. கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தன!

    கம்ப்யூட்டரின் கணக்கு மூலம், கடைசி சில விநாடிகளில் தேவிகாவே அழகி, ‘மிஸ் அழகு ராணி’ என்று பட்டம் சூட்டப்பட்டாள். கிழட்டு மேனேஜர் அவள் கன்னத்தில் முத்தம் தந்தார்! பொக்கே பெற்றுக் கொண்டாள். மெத்தென்ற மார்பில் பதியுமாறு அவளுக்கு ‘ப்யூட்டிக்வீன்’ பட்டம் தாங்கிய பட்டை அணிவிக்கப்பட்டது.

    அச்சமயம்தான்...!

    சம்பத்குமார் சரேலென்று எழுந்தான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு நோ... என்று கத்தியவாறே ஸ்டேஜில் ஏறி அப்படியே தேவிகாவைக் கட்டிப்பிடித்தான்!

    மறுவினாடி!

    டூமில், டூமில் என்று இரண்டு குண்டுகள் அவள் உடம்பைத் துளைத்தன! ஆ... என்ற அலறல்! விளக்கு அணைந்து போயிற்று. பீதி, கொந்தளிப்பு!

    தேவிகாவைக் கட்டிப் பிடித்தவாறு மயங்கி இரத்த வெள்ளத்தில் விழுந்தான் சம்பத்!

    2

    எங்கும் வீறிடும் சத்தங்கள், ஓலங்கள்...! கூட்டமும், குழப்பமும், ஒரே பீதி.

    பிடி... பிடியுங்க அவனை...!- கூட்டத்தினர் சிலர் நட்சத்திர ஓட்டலின் கார்பெட்டுகளை நாசமாக்கிக்கொண்டு சீலனை விரட்டி ஓடினார்கள்!

    சீலன் கைதேர்ந்தவனாயிற்றே...! நாலே எட்டில் வெளியே ஓடினான். இஞ்சின் ஆஃப் செய்யப்படாத, இரத்தத் துளி மாதிரியான தனி சிவப்பு மாருதியை எடுத்துக்கொண்டு ‘மின்னல்போல் மறைந்து போயே விட்டான்!

    ஆம்புலன்ஸ் வந்தது.

    சம்பத்தைத் தூக்கிப் போட்டுக்கொண்டு குரல்வளை நெரிய சத்தம் போட்டுக்கொண்டு தெருவைக் கிழித்தவாறு ஓடி ஆஸ்பத்திரியை அடைந்தது. ‘தொப தொப’ வென்று குதித்த ஊழியர்கள் ஸ்ட்ரெட்சரில் சம்பத்தைத் தூக்கிக் கொண்டு ஐஸி யூனிட்டை நோக்கி ஓடினார்கள்.

    "இரத்த சேதம்

    Enjoying the preview?
    Page 1 of 1