Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathi Alaigal
Sathi Alaigal
Sathi Alaigal
Ebook115 pages38 minutes

Sathi Alaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466671
Sathi Alaigal

Read more from K.G.Jawahar

Related to Sathi Alaigal

Related ebooks

Related categories

Reviews for Sathi Alaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathi Alaigal - K.G.Jawahar

    18

    1

    ‘படக் படக்’ இதயத்தோடும், ‘தடக் தடக்’ உள்ளத்தோடும் நாவல் முழுக்க வியர்க்கப் போகும் என் இனிய வாசக ரசிகர்களே, உங்களுக்கு என் நவரத்தினமாகிய வணக்கம்.

    உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். என் படத்தை பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களும் இருப்பீர்கள். இப்போது என்னைப் பற்றிய கவலையில் நீங்கள் இறங்க வேண்டாம்.

    ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே... என்னிடத்தில் வாருங்கள்’ என்று இரக்கமாய் அழைக்கும் தேவகுமாரனைப்போல, நான் உங்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறேன். இது சாதாரண மனிதனின் அறைகூவல் அனிதாவிற்காக விடப்படும் அறைகூவல்.

    அனிதா என்பவள் யார்?

    சட்டென்று சொல்லி விடுவீர்கள். இக்கதையின் நாயகி என்று உங்களை ஏமாற்ற முடியுமா? உங்களுக்கு அல்வா கொடுக்க முடியுமா என்ன?

    ‘சரி... நாயகிக்காக வாசகர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று உங்கள் சட்டை பட்டனை திறந்துவிட்டு, புலிப்புல் செயின் வெளியே தெரிய புறங்கையின் உதவியால் உங்கள் தலைமுடியைப் பின்னுக்கு தள்ளி ஸ்டைலாக எழுதுகிறீர்கள் தானே.

    கரெக்ட்.

    அனிதாவை நீங்கள் காப்பாற்ற வேண்டும். அவள் இன்னும் சில பக்கங்களில் சின்னாபின்னமாக போகப் போகிறாள். அவளைக் காப்பாற்றுங்கள்.

    ‘அட என்னய்யா... கதாநாயகியை ஹிரோதானய்யா காப்பாற்றணும்...’ என்று நினைக்கிறீர்களா?

    தப்பு... தப்பு...

    என்னைப் பொறுத்தவரை என் வாசகர்கள்தான் எனக்கு ஹிரோ அவர்களால் முடியாதது ஒன்றும் இல்லை. அவர்கள் மயிரைக் கட்டிகூட மலையை இழுத்து விடுவார்கள். அவர்களை எந்தக் கொம்பாலும் ஏமாற்ற முடியாது.

    ஆகவே உங்களை நான் அழைக்கிறேன், அனிதாவை காப்பாற்ற.

    ஏன்... என்ன தயக்கம்?

    ஓ... அத்தனை பேரும் சேர்ந்தால் எப்படி சாத்தியமாகும் என்றா? அப்படியானால் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். என்ன சம்மதம் தானே? அட... என்ன... அதுக்குள்ளே முடிவு எடுத்துவிட்டீங்களா? எங்கள் சார்பில் யார் என்ற குழப்பமா? என்ன... தஞ்சாவூர் எம். முருகேசன், விருத்தாசலம் சிவநேசன், திருவண்ணாமலை டி.வி. சிவா, திருவல்லிக்கேணி கீதா நாராயணன், சென்னை விஜயா... இன்னும்... ஓ... மைகாட்.

    ஆபத்தில் இருக்கும் அனிதாவை காப்பாற்றும்போது எத்தனை ஆபத்துக்கள் உண்டு என்று தெரிந்தும் எனக்காக இப்படி முன்வரும் என் நவரத்தின வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ஆனால் டியர் வாசகர்களே...

    சில விஷயங்களுக்காக, சில அம்சங்களுக்காக நான் திரு. வரதனையும், குமாரி மேனகாவையும் செலக்ட் செய்கிறேன். ஓக்கே தானே. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே? (காரணத்தை பிறகு அறிவீர்கள்.)

    கரெக்ட். உங்கள் அத்தனை பேரின் ஆசியுடனும் இதோ இருவரும் கிளம்பி விட்டார்கள்.

    வாருங்கள் திரு. வரதன்... குமாரி மேனகா.

    இதோ என் முன்னாடி நிற்கும் உங்கள் சக வாசக ரசிகர்களை வணங்கிக் கொள்ளுங்கள். வணங்கி விடை பெற்றுக் கொண்டீர்களா?

    கம்... இனி இவர்கள் உங்களை வாட்ச் பண்ணப் போகிறார்கள். நானும் ஒதுங்கிக் கொள்கிறேன். உங்களுக்கு வேண்டிய தகவல்கள்... இதோ... தந்து விட்டேன்.

    கமான்... சியர்ஸ்...

    உங்களை நாங்கள் வழி அனுப்புகிறோம்.

    வரதன்-மேனகா, உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். எங்களுக்கு வேண்டியது குமாரி அனிதா உயிருடன்.

    2

    அனிதா புரண்டு படுக்கையில் ‘கிலுங்’ என்ற சத்தம் ஹாலில். கீழே.

    துணுக்குற்றாள் என்ன சத்தம். யாரும் வீட்டில் கிடையாது. இத்தனை பெரிய பங்களாவில். அப்பா கிடையாது, பிஸினஸ் விஷயமாக வெளிநாடு டூர். வேலைக்காரன் மகளுக்கு கல்யாணம். மதுரை போய்விட்டான். கூர்க்காவிற்கு காலில் விபத்து. ஆஸ்பத்திரியில் இருக்கிறான். ஆகவே சொந்தமான பங்களாவில் அனிதா மட்டும். கல்லூரி, லைப்ரரி, ஹோட்டல் அல்லது கிச்சன், ஷெல்டன் புத்தகங்கள். சிலசர்தார்ஜி ஜோக்ஸ் பிறகு தூக்கம் என்பதுதான் அவளின் அன்றாட மெனு. இன்று படுப்பதற்கு லேட்டாகி விட்டது. காரணம் கல்லூரி கலை விழா. அவள்தான் ஏற்பாடு எல்லாம். அந்த கேசவன் பிளடிஃபூல் வந்து, சில சில்லரைக் குளறுபடிகளைச் செய்யாமல் இருந்தால், சீக்கிரமே பங்ஷன் முடிந்திருக்கும். ஆனால் கேசவன் ஏனோ தடுமாறிக்கொண்டே இருந்தான். நாக்கில் தடவியவாறே அவளை வெறித்துப் பார்த்தான். சீனியர் ஸ்டூடண்ட் ஃபைனல் இயர். நன்றாகத்தான் இருந்தான். சில நாட்களாக அவன் அவளைப் பார்க்கும் பார்வையில் ஏதோ கோளாறு. பெண்ணாயிற்றே. பட்டென்று அவன் பார்வையின் பொருள் விளங்கி விட்டது.

    காமம்.

    இவனுக்கு எதனால் இது வந்தது என்று அனிதா என்ற இந்த அழகி மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டாள். நல்லவன் கேசவன். எப்படி பத்து நாட்களில் திடுதிப்பென்று மாறிப் போய் கண்களில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்ட மாதிரி...

    அவளுக்கு லேசான நடுக்கம்.

    டிராமா நிகழ்ச்சிகளில் குளறுபடிகள். கேசவன் தான் காரணம். அவனைத் திட்டினாள். லேட்டாகி விட்டது. காரைக் கிளப்பி வீட்டிற்கு வந்தவள் இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது தான் ஹாலில் கிலுங் சத்தம். மெள்ள எழுந்து கீழே இறங்கினாள். ஹாலில் ஒரு உருவம் நடமாடி, படக்கென்று பதுங்கியதைப் பார்த்தது வியர்த்து விட்டது.

    ஒரு கணம் வியர்த்தாலும் மறு கணம் அனிதாவிற்குள்ளேயே அடங்கிக் கிடக்கும் துணிச்சல் குணம் தருணம் பார்த்து எட்டி பார்த்தது. மறுபடி மாடியேறினாள். அப்பாவின் அறைக்குள் நுழைந்து அவர் ஷெஃபில் இருந்த ரிவால்வரை எடுத்துக் கொண்டாள். கையில் உறுதியாகப் பிடித்துக்கொண்டு மறுபடி இறங்கு கையில் அவளின் பாதங்கள் துணிச்சலையும் மீறி நடுங்கின.

    ஒருவன் பங்களாவில் நுழைந்திருக்கிறான். ஒருவனா, இருவரா, பலரா... அவளால் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும், வருவது வரட்டும். புலியை முறைத்தால் விரட்டிய சங்ககாலத்துப் பெண் நினைவில் வந்தாள்... இறங்கினாள். சத்தமில்லை.

    யாரது?

    மௌனம்.

    யாரங்கே...?

    மறுபடி மௌனம்.

    இறங்கினாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1