Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பொன் வானம் பன்னீர் தூவுது...
பொன் வானம் பன்னீர் தூவுது...
பொன் வானம் பன்னீர் தூவுது...
Ebook122 pages42 minutes

பொன் வானம் பன்னீர் தூவுது...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கட்டைப் பையை தூக்கிக்கொண்டு புகழேந்தி வாசலுக்கு விரைய... வியப்புடன் பின்னேயே வந்தாள் ஜனனி.
“மாமா... கடைக்குப் போறீங்களா?”
“ஆமா... அப்படியே ஏடிஎம்-ல கொஞ்சம் கேஷ் எடுக்கணும். நாளைக்கு கரண்ட் பில் கட்டணுமே! உனக்கு ஏதாவது வாங்கணுமா? நான் ஃப்ரூட்ஸ் வாங்கதான் போறேன்!”
“அந்த பேகை இப்படிக் குடுங்க! நைட்டெல்லாம் சரியா தூங்கலே நீங்க... இருமல் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சே...!”
“அதுக்குதான் கஷாயம் வச்சுக் குடுத்தியே! நந்தன் தினமும் மாதுளம் பழம் ஜூஸ் குடிப்பான். ஃப்ரிட்ஜ்ல பழமே இல்லை. வாங்கிட்டு வந்திடறேன். கொஞ்சம் நடந்தா உடம்புக்கு நல்லாருக்கும்னு தோணுது!”
“அதான் தினமும் நடக்கறீங்களே! இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தப்பில்லே. நான் போய் வாங்கிட்டு வர்றேன். உங்க பாஸ்வேர்டும் எனக்குத் தெரியுமே... கார்டு குடுங்க... எவ்வளவு எடுக்கணும்!” அவரிடமிருந்த பேகை உரிமையுடன் பிடுங்கினாள்.
“விடமாட்டியே... இந்தா கார்டு. எட்டாயிரம் எடு! பழமும் வாங்கிக்க... -- குழந்தை எந்திரிக்கறதுக்குள்ளே வந்துடு. என் ஆக்டிவாலப் போய்டு... சாவி கீபோர்டுல இருக்கு பார்!”
“சரிங்க மாமா!”
வாசலில் நின்றிருந்த வாதமரத்தின் இண்டு இடுக்குகளின் இடையே சில்லறையைக் கொட்டி தரையில் பரப்பியிருந்தான் கதிரவன்.
வாசலில் வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கனத்த பழப்பையுடன் ஏடிஎம்-மின் உள்ளே நுழைந்தாள்...
செக்யூரிட்டி அவளையும், அவள் கட்டைப் பையையும் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்இவளைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தனர்.
அதில் ஒருவன்... மிஷின் துப்பிய பணத்தை எண்ணியபடி இவளையே நெற்றிச் சுருங்கப் பார்த்தான்.
ஜனனி எடுத்த பணத்தை சரி பார்த்து தன் ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு வெளியில் வந்தாள்...
வண்டியை ஸ்டார்ட் செய்தபோது அவன் அருகில் வந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ...”
“…...?!”
பார்த்தாள்.
“நீங்க... நீங்க... சாய்மதி ஃப்ரெண்ட்தானே?”
“ஆமாம்... நீங்க?” வியப்புடன் கேட்டாள்.
“என்னைத் தெரியலே...”
“இல்லையே... யார் நீங்க?” வியப்புடன் கேட்டாள்.
“என்னைத் தெரியலே...”
“இல்லையே... யார் நீங்க? சாய்மதியோட கஸினா? எனக்குத் தெரிஞ்சு அவளுக்குக் கூடப் பிறந்த அண்ணன்னு யாருமில்லே!”
“உண்மையிலேயே என்னைத் தெரியலியா?”
அவன் அப்படிக் கேட்டதும் எரிச்சல் உண்டானாலும் எங்கோ ஒரு பொறித் தட்டியது. அவனை இதற்குமுன் பார்த்தது போல் மசமசப்பாய் ஒரு நினைவு! அந்த நினைவே உடம்பெங்கும் சூடாய்ப் பரவியது.
“சார்... எனக்குப் பேச நேரமில்லே... உங்களை எனக்குத் தெரியல...”
“ஹோட்டல்... பப்ல...!”
அந்த வார்த்தை அவளை எங்கோ சுருட்டி தூக்கி எறிந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
பொன் வானம் பன்னீர் தூவுது...

Read more from ஆர்.மணிமாலா

Related to பொன் வானம் பன்னீர் தூவுது...

Related ebooks

Reviews for பொன் வானம் பன்னீர் தூவுது...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பொன் வானம் பன்னீர் தூவுது... - ஆர்.மணிமாலா

    1

    விசிலடித்த ரைஸ் குக்கரை ஸ்டவ்விலிருந்து இறக்கி வைத்தாள் ஜனனி. வியர்த்த நெற்றியை புறங்கையால் துடைத்தவளின் பார்வை ஜன்னல் வெளியே பாய்ந்தது.

    எதிர்வீட்டின் மாடி பால்கனியில் புறாக்கள் தஞ்சமடைந்திருந்தன.

    கர்... கர்... என்று அவற்றினிடையே எழுந்த சப்தம்... அதன் மென்மையான அழகுக்கு எதிராய் இருந்தது. படபடவென சிறகை அடித்துப் பறந்து சுற்றிவிட்டு மீண்டும் அமர்ந்தது.

    விசாலமான கிச்சன். கடப்பா கல்லினால் நீளமாய், வளைவாய் மேடை அமைத்து இருந்தனர். அங்கே விதவிதமான உணவுப் பதார்த்தங்கள்... வாசனையோடு அமர்ந்திருந்தன.

    ஜனனி... ஹாலிலிருந்த மாமியார் லோகா குரல் கொடுத்தாள்.

    இதோ வர்றேன் அத்தே...

    சமையல் வேலை முடிஞ்சாச்சா?

    முடிச்சிட்டேன் அத்தே... ரசம் ஸ்டவ்ல இருக்கு... அவ்ளோதான்!

    சரி... அவங்க வர்றதுக்குள்ளே குழந்தைக்கு சாப்பிடக் கொடுத்திடு...

    சரியத்தே... மறுபடி கிச்சனிற்குள் நுழைந்தாள் ஜனனி.

    அவளின் பின்புற அழகே... ‘ஆஹா’ என்றிருந்தது. ஒரு அழகான பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற அம்சம்... அதைவிட கூடுதலாய் இருந்தாள் ஜனனி.

    அந்த வீட்டின் இளைய மருமகள்தான் ஜனனி. கணவன் நந்தனை காதலித்து மணந்தவள். மூன்று வருடக் காதலில் ரொம்பவே அவள் அன்பில் உருகித் திளைத்த நந்தன்... வீட்டின் எதிர்ப்பை சரிக்கட்டி மணந்து கொண்டான். அப்பர் மிடில் க்ளாஸ் ஃபேமிலியான அவன் குடும்பத்தை ஈடுகட்டுமளவு வசதியற்றவள் ஜனனி. அவள் பின்புலம் கொஞ்சம் ‘உச் கொட்ட வைப்பவை.

    பெரிய மருமகள் அதிதி! மாடர்ன் வாழ்க்கையில் ஊறித் திளைத்தவள். விதவிதமாய் ஜீன்ஸ் அணிவதில் ஆர்வம் அதிகம். கணவர் உதயன் ஜெர்சியில் பணிபுரிபவர். இரண்டு பெண் குழந்தைகள்... எட்டு, ஆறு வயதுகளில்! அவ்வப்போது மாமியார் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து போகும் அதிதி, அடையாறில் ஒரு உயர்தர ஃப்ளாட்டில் வசிக்கிறாள்.

    அவர்களுக்காகத்தான் விதவிதமாய் சமையல் தயாராகி இருந்தது. ரசத்தை இறக்கி வைத்துவிட்டு தன்னறைக்குச் சென்றாள் ஜனனி.

    கட்டிலில் குப்புறக் கவிழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் பத்து மாதக் குழந்தை துருவன். தலைமாட்டில்... சுவற்றில் மிகப் பெரிய சைஸில் நந்தனின் தோளில் சாய்ந்தபடி ஜனனி தொற்றிக் கொண்டிருக்கும் போட்டோ... வெகு பாந்தமாய் இருந்தது.

    இளம் புன்னகையோடு வசீகரமாய் பார்த்தபடி நின்றிருந்த கணவனை சின்ன சிரிப்புடன் பார்த்துவிட்டு குழந்தையின் அருகில் சென்றாள்.

    இவள் கரம் பட்டதும் சிணுங்கினான்.

    அதே நேரம் செல்போன் அழைத்தது.

    மை டாலு! என்று ஸ்க்ரீனில் ஸ்க்ரோலிங் ஓட... ஆச்சரியமாய் எடுத்து ‘ஹலோ’ என்றாள்.

    ஹாய் ஸ்வீட்டி... என்ன பண்ணிட்டிருக்கே? அண்ணி, எல்லாரும் வந்துட்டாங்களா? எனக் கேட்டான் நந்தன்.

    அப்ப... எனக்காக போன் பண்ணல...

    ஏன்டி, பொண்டாட்டி... டெய்லி இந்த டைம்ல நான் போன் பண்றது வழக்கம்தானே?

    ஆனா, இன்னைக்கு எனக்காகப் பண்ணல...

    சரி... இந்த கால்... வழக்கமா உனக்குப் பண்றது. அடுத்து கட் பண்ணிட்டு மறுபடி லைன்ல வந்து அண்ணியப் பத்தி பேசுவேனாம்... எப்படி உன் மாமன் ஐடியா?

    அடடா... மூளை காது வரைக்கும் வழியுதே... ஒண்ணும் கட் பண்ண வேண்டாம்... பேசலாம்.

    இப்படி சிணுங்கியே மூடு ஏத்தறியே செல்லம்...!

    ரொம்ப வழியாதேப்பா... பாப்பாவுக்கு சாதம் ஊட்டணும்

    சரி... நான் சொல்ல வந்ததைச் சொல்லிடறேன்... இன்னைக்கு மெனுவுல பிரியாணி உண்டா?

    என்னப்பா நினைச்சிட்டிருக்கீங்க? ‘ஸீ ஃபுட், சிக்கன், மட்டன்னு... ஃப்ரை, குழம்பு, கிரேவி, சாம்பார், ரசம்னு காலைலேர்ந்து சரியான வேலை! முதுகு... வலியால பொளக்குது. இப்ப பிரியாணி சமைக்கலையான்னு கேக்கறீங்க!

    ஐயோ... என் செல்லமே... உன்னை அதை சமைக்கச் சொல்லவில்லை. நைட்டுக்கு... உன் முதுகை நல்லா அழுத்திவிடறேன்... ஓக்கே...

    யோவ்... குழந்தை அழறான். சொல்ல வந்ததைச் சொல்லி முடிங்க...

    அடியேய்... நீ இப்படிக் கூப்பிடறப்ப எப்படி இருக்கு தெரியுமா?

    என்ன பேசுவீங்கன்னுத் தெரியும். பாப்பாவுக்கு சாப்பாடு குடுக்கணும்... சீக்கிரம்ப்பா...!

    சரி... சரி... பாண்டியாஸ்ல பிரியாணிக்கு ஆர்டர் பண்ணியிருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. அதை சொல்லத்தான்!

    ம்... அண்ணி வீட்லர்ந்து வந்தா உங்களுக்கு தலைகால் புரியாதே... சரி...

    அதைவிடு... ரொம்ப வலிக்குதா செல்லம்? நைட்டு என் கைப்பட்டதும் வலியெல்லாம் எங்கே எங்கேன்னு தேடுவே பாரேன்!

    யோவ்... வைடா...!

    சிரித்தபடி கட் பண்ணியது எதிர்முனை.

    கணவனின் வார்த்தைகளை அசைபோட்டபடி... கொஞ்சம் வெட்கத்துடன் குழந்தையை அள்ளிக் கொண்டாள் ஜனனி.

    வீடே கலகலப்பாய் மாறிப் போயிருந்தது. மாமனார் புகழேந்தி பேத்திகளுடன் கொஞ்சிப் பேசி அவர்களுள் ஒருவராய் மாறிக் கொண்டிருந்தார். லோகாவின் முகம் பூரிப்பில் விரிந்திருந்தது.

    அதிதி மார்க்கெட் இழந்த நடிகையைப்போல் உடையிலும், நடையிலும் நாகரிகமாய் இருந்தாலும் அலட்டல் இல்லாத குணம். வீட்டின் பெரியவர்கள் அவளின் உடையைப் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பாந்தமாய் பழகும் அவளின் குணம்.

    உதயாக்கிட்டே சொல்லக்கூடாதாம்மா? இங்கே இல்லாத வேலையா... எங்கோ ஒரு நாட்டில், பொண்டாட்டி, குழந்தைங்களைப் பிரிஞ்சி வேலை செய்யணுமா?

    இட்ஸ் ஓக்கே அத்தே... நாளைக்கு நல்லாருக்கணும்னா இன்னைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுதானே ஆகணும்? நல்ல ஜாப், நல்ல சாலரி, அந்த எக்ஸ்பீரியன்ஸுக்கு இங்கே லாக்ஸ்ல ஜாப் கிடைக்கும். இன்னும் ஒரு அஞ்சு வருஷம்... நாங்க அவரை கோ-ஆப்ப ரேட் பண்ணிதான் ஆகணும்...

    என்னமோ நீயும் சொல்றே... ஆனா மனசு சமாதானம் ஆகமாட்டுதேம்மா. தவமிருந்து பெத்த பிள்ளை... எங்கேயோ தனியா இருக்கு!

    ம்... உங்கப் பிள்ளை மட்டும்தானா? லட்சக்கணக்கான இண்டியன்ஸ் எத்தனை கன்ட்ரில வேலை செய்யறாங்க? அவங்க அத்தனை பேருக்கும் குடும்பம் இருக்கு. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. குடும்பத்தை அடுத்த லெவல்ல கொண்டு போகணும்னா சில விஷயங்களை இழந்துதான் ஆகணும். நல்லவேளை... குழந்தைங்க ஏங்கிப் போகாத அளவுக்குப் பார்த்துக்கறேன். டெய்லி ஸ்கைப்ல பேசிக்கறோம்! அத்தையின் தோள்களை இதமாய் அமுக்கினாள் அதிதி.

    ஒரே தம்பி கல்யாணத்துக்குக்கூட அவனால வர முடியலையே...!

    அதையே பேசி மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க அத்தை. டாப்லட்டெல்லாம் கரெக்டா எடுத்துக்கறீங்களா? சுகர் கண்ட்ரோல்ல இருக்கா?

    ரெண்டுப் பொண்ணுல... ஒண்ணு பையனாப் பிறந்திருக்கலாம்! ஆதங்கத்துடன் சொன்னாள் லோகா.

    "அந்தக் கவலை எனக்கு... ம்ஹூம்... எங்களுக்கு என்னைக்குமே வந்ததில்லே! இதோ, துருவன் குட்டி இருக்கானே அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1