Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனம் வருட வந்தாயா..?
மனம் வருட வந்தாயா..?
மனம் வருட வந்தாயா..?
Ebook116 pages39 minutes

மனம் வருட வந்தாயா..?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“என்னம்மா?” என்றான் அதிர்ச்சியாய்.
“இதை ஏன் சாப்பிட்டே?”
“ஏன் சாப்பிட்டா என்ன?”
“இதையெல்லாம் சாப்பிடக்கூடாது!”
“அதான் ஏன்?”
“இது நம்மளோடது இல்லே... பக்கத்தாத்துல புதுசா குடிவந்தவ கொடுத்தது இது!”
“சரி... இருக்கட்டுமே... இதை சாப்பிட்டா என்ன? ரொம்ப நல்லாதானே இருக்கு”
“என்ன அகில் புரியாமப் பேசறே? அவ யாரோ? நம்மவா கெடயாது. கண்டவங்க கொடுக்கறதெல்லாம் சாப்பிடலாமா? வேலைக்காரிக்கு கொடுத்தனுப்ப வச்சிருந்தேன்... நீ சாப்ட்டுட்டியே...”
அகிலனுக்கு அம்மாவை இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் பிடிப்பதிலை. ஜாதிப்பித்து அதிகம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியாச்சு... ஐம்பதில் வளையுமா என்ன? அதனால் அவள் இந்த டாபிக் பத்தி பேசும்போதெல்லாம் கப்சிப்பென்று வாயைப் பொத்திக் கொள்வான்.
“உடம்புதான் சரியில்லையேம்மா... சமைக்கறதுக்கு ஒரு ஆளைப்போட்டுக்கலாம்” என்றாலும் விடமாட்டாள்.
“அதெப்படி... அவாள்லாம் சுத்தபத்தமா இருப்பாள்ன்றது நமக்கு எப்படித் தெரியும்? ஏதோ, துடைக்க, கழுவன்னு ஒரு ஆளைப் போட்டாச்சு. அதுபோதும். என் கையும், காலும் நன்னாதானே இருக்கு? என் உடம்புல உசிர் இருக்கற வரைக்கும் என் ஒரே பிள்ளைக்கு நான்தான் சமைச்சிப் போடுவேன். அம்மா மேல நிஜமாகவே அக்கறை இருக்கற பிள்ளை... என் சுமையக் குறைக்க வேலைக்காரிய சேர்த்துக்கன்னு சொல்லமாட்டான்.”
“பின்னே?“சீக்கிரமா பொண்ணைப் பாரும்மா... இந்த வீட்டுக்கு ஒரு மாட்டுப் பொண்ணைக் கொண்டு வந்து உன் சிரமத்தை குறைக்கிறேன்னு சொல்வான்!”
“போச்சுடா... ஆரம்பிச்சிட்டியா?” சலித்துக் கொள்வான்.
“உனக்கும் வயசாகல்லியோ... ஏன் எப்பப் பார்த்தாலும் கல்யாணப் பேச்சை எடுத்தாலே சலிச்சுக்கறே?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா... இப்ப வேண்டாங்கறேன். அவ்வளவுதான்!”
“அதான் ஏன்?”
“பிஸினஸ்ல கொஞ்சம் சரிவு. அதை சரிக்கட்டணும். அதுவேதான் இப்ப என்னோட கான்ஸன்ட்ரேஷன் எல்லாம். அது சரியான பிறகு பண்ணிக்கறேன்.”
“எப்ப சரியாகும்?”
“இப்ப சொல்ல முடியாதும்மா!” என்று நழுவி விடுவான்.
அதனாலேயே அம்மா எதிரில் அதிகமாய் நிற்கமாட்டான். உடனே கல்யாணப் பேச்சை எடுத்து விடுவாளோ என்கிற பயம்.
இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதற்கு பிஸினஸின் சரிவு மட்டுமல்ல... இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது.
அது - வர்ஷினி!
“அம்மா டிபன் ரெடியா?”
“ரெடிதான்... நீ முதல்ல போய் குளிச்சிட்டு வா!”
அகிலன் முகம் மாறினான்.
“குளிச்சிட்டு வர்றதா? என்னைப் பார்த்தா பத்து நாளா குளிக்காதவன் மாதிரியாத் தெரியுது?” தன்னை குனிந்து பார்த்துக் கொண்டான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
மனம் வருட வந்தாயா..?

Read more from ஆர்.மணிமாலா

Related to மனம் வருட வந்தாயா..?

Related ebooks

Reviews for மனம் வருட வந்தாயா..?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனம் வருட வந்தாயா..? - ஆர்.மணிமாலா

    1

    கடவுள் தவறவிட்ட சிவப்புக்கல் மோதிரம் கிழக்கு வானில் விழுந்து கிடந்தது. பொழுது நன்றாக விடிந்து பூமியெங்கும் வெளிச்சம் விரவிக் கிடந்தது. பாகீரதி அம்மாள் பூஜையை முடித்துவிட்டு அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

    வீடு முழுக்க சந்தன ஊதுபத்தியின் மணம் நிறைந்து இருந்தது.

    ஒல்லியாய்... உயரமாய்... சிவப்பாய்... நெற்றியில் விபூதித் தீற்றலுடன் மடிசாரில் இருந்தாள் பாகீரதி. அவள் கணவர் அவளை விட்டுப்போய் பத்து வருடமாகி விட்டது. ஐம்பது வயதில் ரொம்பவே ஒடுங்கிப் போயிருந்தாள். பல நோய்களுடன் இதய நோயும் சேர்ந்திருந்ததால்... சற்று வேகமாய் நடந்தாலே மூச்சிரைக்கும். கிச்சனிற்குள் நுழைவதற்கு முன்... இடப்பக்க அறையை எட்டிப் பார்த்தாள்.

    அகிலன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவளின் ஒரே மகன்.

    பாவம் பிள்ளை... நாயாய் பேயாய் உழைக்கிறான். தூங்கக்கூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. படுக்கையில் விழறதுக்கே ஒரு மணி... ரெண்டு மணி ஆய்டறது மகனுக்காக விசனப்பட்டது வெகுளித்தனமான தாயுள்ளம்.

    மகனுக்காக காபிபோடும் ஆயத்தப்பணிகளில் இறங்கினாள். ஜன்னலை ஒட்டியிருந்த மாமரக்கிளையில் இருந்து அணில் ஒன்று தாவிக்குதித்து உள்ளே வர முயன்றது.

    ஏய்... ச்சூ. ச்சூ... இந்த அணில்களோடத் தொல்லை தாங்கமுடியல... காய்களையும் கடிச்சிப் போட்டு நாசம் பண்றதுங்க... அதை விரட்டி விட்டு... பாத்திர விளிம்பு தாண்டிப் பொங்க நினைத்த பாலை இறக்கி வைத்து... தயாராய் வைத்திருந்த டிக்காஷனை ஊற்றிக் கலக்கினாள்.

    கடா... முடா வென்ற சத்தம் வெளியிலிருந்து வந்தது. ஹாலின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டில் ஒரு ஆட்டோ நின்றிருந்தது. அதிலிருந்து சொற்ப பாத்திர பண்டங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

    ‘யாரோ புதிதாய் குடிவரப்போவதாக பக்கத்து வீட்டு ருக்மணி நேற்று சொல்லிக் கொண்டிருந்தாளே...’

    ‘லாரியிலோ... டெம்போவிலோ சாமான்கள் வரும் என்று பார்த்தால்... ஆட்டோவில் வந்து இறங்குகிறதே! குடும்பம் நடத்தப் போகிறார்களா, சொப்பு விளையாடப் போகிறார்களா?’ பாகீரதி கிண்டலாய் சிரித்தபடி மகனுக்கு காபி எடுத்துச் சென்றாள்.

    அகிலனின் உறக்கம் இன்னும் கலைந்தபாடில்லை. காபியை டேபிள் மீது வைத்து விட்டு மகனைத் தொட்டு எழுப்பினாள்.

    அகில்... அகில்... நாழியாய்டுச்சுப்பா... எந்திரி...

    ம்... ம்... கண்களைத் திறக்காமலேயே உடம்பை முறுக்கினான்.

    ம்... எந்திரி... காபிய குடி...!

    அகில் மெல்ல கண் திறந்தான். அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

    ஆறிடப்போகுது... குடிச்சிடு!

    நீ போம்மா... நான் பார்த்துக்கறேன்!

    மீண்டும் பக்கத்து வீட்டிலிருந்து சத்தம் வந்தது.

    என்னம்மா அங்கே சத்தம்?

    அதுவா? ரொம்ப நாளா பூட்டியிருந்த பக்கத்து வீட்டு கீழ் போர்ஷன்ல யாரோ குடி வந்திருக்கா. நாலஞ்சு பாத்திர பண்டங்களை ஆட்டோவில் போட்டு வந்து இறக்கறதுக்கு வெடிகுண்டு வெடிக்கறாப்பல சத்தம் போட்டுண்டு...

    ஓஹோ...

    காபி ஆறிடப்போகுது... முகத்தை அலம்பிட்டு வந்து குடிச்சுக்கோ...

    யாரோ வாசல்ல கூப்பிடற சத்தம் கேக்கறதே... என்றான் அகில்.

    யாரது... சித்த இருங்கோ...?! சொல்லிக்கொண்டே வெளியேற...

    அகில் போர்த்தி இருந்த போர்வையை விலக்கி கட்டிலுக்குக் கீழே விழுந்து கிடந்த லுங்கியை எடுத்து அணிந்துகொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

    சற்று நேரத்தில் டவலால் முகத்தைத் துடைத்தபடி கட்டிலில் வந்தமர்ந்தவன் காபியை எடுத்தான். ஃபில்டர் காபியின் நறுமணத்தையும் மீறி... விஸ்கி வாசம்தான் வந்தது. அது அவன் மூச்சுக் காற்றிலிருந்துதான் வந்தது. மகன் உழைத்துக் களைத்து லேட்டாய் வந்து படுக்கிறான் என்பது உண்மையல்ல. அவன் தன் மன உளைச்சலில் இருந்து விடுபட தினசரி போதையில் இரண்டறக் கலந்து விடுவது யாருக்கும் தெரியாது.

    இப்படியொரு பழக்கம் அகிலனுக்கு இருப்பது தெரிந்தாலே பாகீரதி பிராணனை விட்டுவிடுவாள். பாகீரதி மிகுந்த ஆச்சாரமிக்கவள், கண்டிப்பானவள்... அதே சமயம் மகன் மீது உயிரையே வைத்திருப்பவள். அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவள். அவனுக்கும் அம்மாதான் எல்லாமே!

    அது பழங்காலத்து வீடு! தாழ்வாரமும், தூண்களும், வெண்ணெயாய் வழுக்கும் சிவப்பு நிற சிமெண்ட் தரையுமாய்... பழமையும், அழகும் கைகோர்த்திருந்தது. அதனாலேயே பழுது பார்த்து ஆல்டர் பண்ணும் மனசு வராமல் அப்படியே விட்டிருந்தான். நான்கைந்து அறைகளுடன் விசாலமாய் இருந்தது.

    ஷெல்ஃபில் வைத்திருந்த வெங்கடேச பெருமாளின் படத்திற்கு சூடம் ஏற்றி வணங்கிய ராகவி... அழகான தந்தச் சிலை போலிருந்தாள்.

    ஒரே ஒரு ஹால்... ஒரு பாத்ரூம், சிறியதாய் நின்று சமைக்குமளவிற்கு கிச்சன், அவள் ஒருத்திக்கு இதுவே அதிகம்தான்.

    ஒரு டேபிள், இரண்டு சேர்... பாத்திர பண்டங்கள் அவ்வளவே! அதை அந்தந்த இடத்தில் வைக்க இருபது நிமிடம் போதுமானதாயிருந்தது.

    விரைவாய் செயல்பட்டு பால் காய்ச்சி... கேசரியும் செய்துவிட்டிருந்தாள்.

    ஹவுஸ் ஓனருக்கும், எதிர் வீட்டிற்கும் ஸ்வீட் கொடுத்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அடுத்து பக்கத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றாள்.

    காலிங்பெல் அலறும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த பாகீரதி அங்கு நின்றிருந்தவளைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.

    யாரும்மா நீ?

    என் பேரு ராகவி! பக்கத்து வீட்ல இன்னைக்குதான் புதுசாக் குடிவந்திருக்கேன். பால்காய்ச்சினேன்... வாங்கிக்குங்கம்மா!

    உங்க ஆத்துல எத்தனை பேர்? ரொம்ப சின்ன வீடாச்சே அது?

    நான் மட்டும்தான்! புன்னகைத்தாள். அது அவளுக்கு அவ்வளவு வசீகரமாய் இருந்தது.

    நீ மட்டும் தானா? என ஆச்சர்யத்தோடு அவளை ஆராய்ந்தாள்.

    கழுத்தில் மெல்லிய ஒற்றை செயின், வளையல், காலில் மெட்டி இல்லை.

    புரிந்து கொண்டவளாய், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்றாள்.

    எப்படி தனியா? அம்மா, அப்பா...

    எனக்கு அம்மா, அப்பா யாருமில்லே. அக்கா மட்டுந்தான். சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சது, வந்துட்டேன்!

    சின்னப் பொண்ணா இருக்கே... ஆனா, தனியா எப்படி இருப்பே?

    சொந்த பந்தங்களை விட, அக்கம்பக்கத்தாரை வேலியா நினைக்கறவ நான்! இந்தாங்க... தட்டை நீட்டினாள்.

    இ... இப்படி வச்சிட்டுப்போ!

    எடுத்துக்கிட்டு தட்டைக் கொடுத்தா நல்லாயிருக்கும். இன்னும் தெருவில சிலபேருக்குத் தரணும்... தயக்கமாய் சொன்னாள்.

    "தப்பா நினைச்சுக்காதே

    Enjoying the preview?
    Page 1 of 1