Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Man Kuthirai
Man Kuthirai
Man Kuthirai
Ebook119 pages1 hour

Man Kuthirai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Man Kuthirai

Read more from Indhumathi

Related to Man Kuthirai

Related ebooks

Related categories

Reviews for Man Kuthirai

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Man Kuthirai - Indhumathi

    9

    1

    வீடு அமைதியாக இருந்தது. அதிநிசப்தமாக இருந்தது. வரவேற்பறையின் விளக்கு தவிர வேறு விளக்குகளின்றி இருட்டாகக் கிடந்தது. சிலுசிலுவென்ற கடற்காற்று தழுவிக்கொண்டு போனாலும், ஓர் இறுக்கம் காணப்பட்டது. வழக்கமாகிப் போனாலும் பதற்றத்தை அடக்கமுடியவில்லை, ஜெயந்தியால் வியர்த்து வடிந்த முகத்தைப் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டுக் கொண்டாள். இரவு முழுதும் தூங்காத களைப்பு கண்களில் தெரிந்தது. மீண்டும் மணி பார்த்தாள், 2-10. இரண்டாவது காட்சி, சினிமா, முடிந்துகூடப் போய்விட்டார்கள். அதன்பின் தட்டிக்கொண்டு வருகிற கூர்க்காவின் கைத்தடிச் சப்தம் கேட்டு அடங்கிவிட்டது. இன்னும் வாசுதேவன் வீடு திரும்பவில்லை. அந்தக் கவலை சிறிதுகூட இன்றி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் மகள் மீது கோபம் வந்தது.

    ‘பதினெட்டு வயதுப் பொண்ணுக்கு ஒரு பொறுப்பு வேணாம்...? இந்த வயசில் நான் இவளை வயிற்றில் சுமக்கலை.’ ஜெயந்தியின் கோபம் அதிகமாயிற்று. அருகில் போய் ராதிகாவை உலுக்கி எழுப்பினாள்.

    ஏய் எழுந்திருடி...

    ப்ச்சூ... போம்மா... திரும்பிப் படுத்துக் கொண்டாள் ராதிகா.

    அப்பா இன்னிக்கும் வீட்டுக்கு வரலேடி...

    உன் வீட்டுக்காரர் எப்போ ஒழுங்கா வந்திருக்கிறார்...?

    என் வீட்டுக்காரர் உனக்கு என்னடி வேணும்?

    தூங்கறவளை எழுப்பி என்னம்மா - கேள்வி இதெல்லாம்...?

    எனக்கென்னவோ பயமா இருக்குடி... இன்னிக்கும் உங்கப்பா வீட்டுக்கு வரலை.

    அதுக்கு இப்போ என்னம்மா செய்யமுடியும்?

    போய் பார்த்திட்டு வரலாம். வா... - சடாரென்று எழுந்து உட்கார்ந்தாள் ராதிகா. கைநீட்டி ஸ்விட்ச் தட்டி விளக்கெரிய விட்டாள். நெற்றி சுருக்கி அம்மாவைப் பார்த்தாள்.

    உனக்கென்ன பைத்தியமாம்மா...? இந்த நடுராத்திரி இருட்டுல எங்கேன்னு போய் அவரைத் தேடுவ? நாம ரெண்டு பொம்பளைங்க தனியா போக முடியுமா? என்னம்மா மூளையில்லாமல் பேசற...

    ஜெயந்திக்கு சுருக்கென்றது. கூடவே கோபமும் வந்தது.

    ஆமாண்டி, மூளையில்லாததுனால்தான் உங்கப்பாவைக் கட்டிக்கிட்டேன். ரெண்டாவது உன்னையும் பெத்துக்கிட்டேன்.

    அந்த வார்த்தையில் இறங்கிப் போனாள் ராதிகா. அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவள் அழகிற்கும் நிறத்திற்கும் எங்கோ வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள். இந்தக் குடிகார அப்பாவைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறாள். அம்மாவைப் பார்த்தால் யாரும் முப்பத்தேழு வயதுன்னு சொல்வார்களா...!? கூட வந்தால் கல்லூரியில் ஒருவர் பாக்கியில்லாமல் கேட்கிறார்கள், ‘என்னடி ராதிகா, உங்க அக்காவா...?’

    நோ, நோ, எங்கம்மா யா

    என்ன! அம்மாவா! அதிர்ந்து போய் ஆச்சரியமாய் பார்க்கிறார்கள். அது கேட்டு லேசாய் பொறாமை வர இவள்கூட சொல்லியிருக்கிறாள்.

    இனிமேல் என்கூட வராதம்மா...!

    ஏண்டி...?

    நீ என்னைவிட அழகா, இளமையா இருபத்திரண்டு வயசுன்னுகூடச் சொல்ல முடியாமல் இருக்கியாம்.

    வேண்டுமென்றே ஜெயந்தி அவள் வாயைக் கிளறுவாள்.

    அது உனக்குப் பெருமையா இருக்கா...?

    இல்லே... பொறாமையா இருக்கு.

    போடி பைத்தியக்காரி என்று சிரித்தாலும் ஜெயந்தியின் குரலில் ஒருவிதப் பெருமிதம் தொனிக்கும்.

    பாவம் அம்மா... மீண்டும் பெருமூச்சு விட்டாள் ராதிகா. அவள் அழகிற்கு இன்னொருத்தனாக இருந்தால் ஆராதித்திருப்பான். கண்களில் ஒற்றிக் கொண்டிருப்பான். தரையில் நடக்கவிடாமல். ஏந்திக் கொண்டிருப்பான். பின்னாலேயே வளைய வந்திருப்பான். ஆனால், அப்பா என்ன செய்கிறார்...? குடியும், கூத்தியும்...

    ஒழுங்காக ஆபீசுக்குப் போவதில்லை. பாதி சம்பளம் கூட வீட்டிற்கு வருவதில்லை. தாத்தா வைத்து விட்டுப்போன இந்தப் பெரிய வீட்டை விட்டால் வேறு எதுவுமில்லை. மாடியும் கீழுமாக நல்ல வீடு. அந்தக் கால வீடு. இந்த வீட்டைப் பார்த்து மயங்கித்தான் அம்மாவை அப்பாவிற்குக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கவேண்டும்.

    விவரம் தெரிந்த நாள் முதலாக அப்பா அம்மாவோடு சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. வெளியில் போய் கண்டதில்லை. கூட உட்கார்ந்து - டி.வி.கூடப் பார்த்ததில்லை. ஒரு புடவை, ஒரு நகை, ஒரு ஓட்டல், ஒரு சினிமா... ம்ஹும். ஒன்றுமில்லை. அப்பா என்றதும் கண்ணுக்குத் தெரிகிற உருவம் குடிகார உருவம்தான்.

    பாவம்தான் அம்மா. ஆனாலும் என்ன செய்யமுடியும்...? இதைத் தலைவிதி என்று எண்ணாமல் வேறு என்ன சொல்வது...?

    திரும்பிப் படுத்துத் தூங்கிப் போனாள்.

    வரவேற்பறையில் வந்து உட்கார்ந்துகொண்ட ஜெயந்திக்குத் தூக்கம் வரவில்லை. மீண்டும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்து விட்ட ராதிகாவை நினைத்துக் கோபம் வந்தது. சிறிதுகூடப் பொறுப்பற்று இருப்பதாகத் தோன்றியது. ராதிகா மட்டும்தானா பொறுப்பற்று இருக்கிறாள். வயதிற்கு வந்த பெண் இருக்கிறாள் என்பதோ அத்தனைப் பெரிய வீட்டில் நானும், அவளும் தனியாக இருப்போம் என்பதோ உறைத்திருக்கிறதா அவருக்கு? அவரிஷ்டத்திற்குக் குடித்து எங்காவது விழுந்து கிடப்பார். துணைக்கு யாருமின்றி, பெற்ற பெண்ணுடன் முழு இரவைக் கழிப்பதென்பது எவ்வளவு பெரிய சங்கடம்? இதெல்லாம், என்றாவது அவருக்குப் புரிந்திருக்கிறதா...? குடிப்பது தவிர வேறு எது தெரிந்திருக்கிறது.?

    முதலில் தனிமை கொடுமை. அதுவும் இவ்வளவு பெரிய வீட்டில் தனித்திருப்பதென்பது இன்னமும் கொடுமை. ராத்திரி எந்த சின்ன சத்தம் கேட்டாலும் தூக்கி வாரிப் போடுகிறது. பயத்தில் நெஞ்சு படபடக்கிறது. மெல்ல எழுந்து அத்தனை விளக்குகளையும் போடுவாள். வெளி இருட்டு இன்னமும் பயமுறுத்தும். மர நிழல்கள் பூதாகாரமாகத் தெரியும். வேண்டுமென்றே உரத்த குரலில் யாரது...? என்று கேட்பாள். பதில் வராது.

    யார் இருந்தாலும், எந்தத் திருடனானாலும் பதில் கொடுக்கமாட்டான் என்பது தெரியும். விளக்குகளை அணைக்காமல், அதன்பின் தூங்கவும் முடியாமல், ராத்திரி முழுதும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். எத்தனை நாட்கள் தூக்கமற்று அப்படி உட்கார்ந்திருப்பது...? தன் மேல்தான் அக்கறையில்லை; வேண்டாம். குறைந்தபட்சம் பெற்ற பெண் மீது அக்கறைப்பட வேண்டாம்...? யாரிடம் கேட்பது இந்தக் கேள்வியை...? சொல்வதற்குத்தான். எந்த சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்...? தானே கேள்வி கேட்டு, தானே பதில் சொல்லிக்கொண்டு, தானே எல்லாம் பண்ணிக்கொண்டு, தனியாய் வாழ்ந்து வாழ்ந்து... சீ! என்ன வாழ்க்கை இது...?

    சட்டென்று வேகம் குறைந்து மெதுவாகச் சுற்றத் தொடங்கிய மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள். ‘வோல்டேஜ் டிராப்’ அடிக்கடி இது போல் மின்சார வலிமை குறைந்து விளக்குகள் மங்குகின்றன. மங்குகிற விளக்குகளாவது தேவலாம். சில நேரம் சுத்தமாக மின்சாரம் நின்று போய் மணிக்கணக்கில் வராமலிருக்கிறது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிற போதெல்லாம் பதறிப் போகிறாள். பயமும் படபடப்பும் அதிகமாகிறது. காற்றில் திரைச்சீலைகள் ஆடுவதுகூட ஏதேதோ உருவங்களாகத் தெரிந்து பயத்தை அதிகப்படுத்துகிறது.

    அப்போதும் பொட்டென்று விளக்கணைந்தது. மின்சாரம் நின்று போயிற்று. ‘கடவுளே...’ என்றவள் தட்டுத்தடுமாறிப் போய் மெழுகுவர்த்தியை ஏற்றினாள். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அதன் நிழல் காற்றில் பூதாகாரமாக ஆடிற்று. இன்னொரு மெழுகுவர்த்தி பற்ற வைத்து எடுத்துப் போய் படுக்கையறைக்குள் நுழைந்தாள். விளக்கு போனது

    Enjoying the preview?
    Page 1 of 1