Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoondirp Puzhukkal
Thoondirp Puzhukkal
Thoondirp Puzhukkal
Ebook71 pages1 hour

Thoondirp Puzhukkal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466404
Thoondirp Puzhukkal

Read more from Indhumathi

Related to Thoondirp Puzhukkal

Related ebooks

Reviews for Thoondirp Puzhukkal

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoondirp Puzhukkal - Indhumathi

    8

    1

    ஜன்னல் கம்பியைப் பற்றியவாறு நின்று கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி. தெரு முழுவதும் தெரிந்தது. தார் போட்டு மூடப்படாத செம்மண் தெரு. அதில் ஸ்டம்ப் நட்டுச் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். முட்டுச் சந்தானதால் விளையாடுவது அவர்களுக்குச் சுலபமானதாக இருந்தது. அங்கு அனாவஸ்யமான போக்குவரத்து இடைஞ்சல் எதுவுமில்லை. வரிசையாக இரு பக்கங்களிலும் எண்ணிப் பத்தே வீடுகள். வெறும் சைக்கிளும், அதிகபட்சமாய் ஸ்கூட்டரும் மட்டுமே வாகன வசதியாகக் கொண்ட மத்தியதர வர்க்கங்கள் வசிக்கிற சின்னச் சின்ன வீடுகள். பெட்டி பெட்டியாக அறைகள், மாடி கட்டி வீடுகள் வாடகைக்கு விட்டிருந்தனர். நல்ல வேளையாக இவள் குடியிருந்த இந்த வீட்டின் சொந்தக்காரர் மாடியில் தனிப் போர்ஷன் கட்டவில்லை. ஒரே ஒரு அறை மட்டுமே கட்டியிருந்தார். அதை யாராவது ஒரு தனிக் கட்டைக்கு வாடகைக்கு விடப் போவதாகச் சொன்னதும் இவர்களே எடுத்துக் கொண்டு விட்டார்கள். அந்த அறையையும் சேர்த்து ஐந்நூற்று ஐம்பது ரூபாய் வாடகை. கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது இவளுக்கு. எதற்காக அந்தத் தனியறை என்றும் பட்டது. அதைச் சொன்னபோது ராஜாராமன்,

    இருக்கட்டும் ராஜி. யாராவது கெஸ்ட் வந்தால் படுக்க சௌகர்யமாக இருக்கும். கீழ நமக்கு ஒரே ஒரு பெட்ரூமும், ஒரு சமையலறையும் சின்னதா ட்ராயிங் ரூம் என்ற பேருக்கு இந்த வராந்தாவும்தானே இருக்கு. அதனால் அந்த ரூமும் கூட இருந்தால் வசதியாகத்தான் இருக்கும்...

    நமக்கு எந்த கெஸ்ட் இருக்காங்க வர்றதுக்கு...?

    உங்க மாமாதான் அடிக்கடி கோர்ட், கேஸுன்னு தஞ்சாவூர்லேருந்து ஓடி வராரில்ல? அவரு படுத்துக்கட்டுமே...

    இத்தனை நாளா அவரு இந்த வராந்தாவுலதானே படுத்துக்கிட்டாரு. இப்ப மட்டும் எதுக்கு அவருக்குன்னு தனி ரூம்...?

    இருக்கட்டும் ராஜி! நூறு ரூபாய்தானே வாடகைல அதிகம் தரப்போறோம். அதுக்கு இத்தனை வசதியா தனியாப் படியேறிப் போற மாதிரி ஒரு ரூம் எங்க கிடைக்கும்னு நினைக்கிறே? அவனவன் இந்த மாதிரி ஒரு தனி ரூமுக்கு அலையறான். நமக்கு அதிர்ஷ்டம் தேடாமலே கிடைச்சிருக்கு. இருக்கட்டும்.

    அந்த அறைக்கும் சேர்த்து வாடகை கொடுக்க ஆரம்பித்து நான்கு மாதங்களாகின்றன. இந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறையை அழகுபடுத்த ஆரம்பித்தான் ராஜாராமன். மாதம் ஒரு சாமானாக வாங்கிப் போட்டான். ஒரு இரட்டைக் கட்டில், ரப்பர் மெத்தை, சின்னதாய் காட்ரெஜ் பீரோ. ஒரு டிரஸ்ஸிங் டேபிள்...

    இவள் போய்ப் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

    ஏங்க... நம்ம பெட்ரூம் கூட இத்தனை அழகாயில்ல. இதை இப்படி அழகு படுத்தறீங்க. என்னவோ ஓட்டல் ரூம் மாதிரி காட்டனெல்லாம் போட்டு வச்சிருக்கீங்க. எங்க மாமா வந்து தங்கறதுக்கா இத்தனை...?

    அப்போது அவன் பதில் சொல்லவில்லை. மென்மையாய்ச் சிரித்துக் கொண்டே போய் விட்டான். ஆனால் அடுத்த முறை மாமா வந்தபோது அந்த அறையில் அவரைப் படுக்கவிடவில்லை.

    ஏங்க, மாடி ரூம் சாவி தரீங்களா? மாமா வந்திருக்காரு... படுக்கச் சொல்றேன்...

    வேணாம் ராஜி. அவரை வழக்கப்படி வாசல்லியே படுக்கச்சொல்லு...

    என்னங்க இது. அவருக்குன்னு ரூம் எடுத்-

    ஷ்... சொன்னபடி செய் ராஜி. சும்மா தொண தொணக்காதே...

    அன்று இவள் பேசாமல் இருந்துவிட்டாள். அதன் அர்த்தம் என்ன என்று யோசிக்கவில்லை. ஆனால் இன்று அதற்கெல்லாம் அர்த்தம் புரிந்தது. அந்தத் தனி அறையை எடுத்தது, கட்டில் மெத்தை வாங்கிப் போட்டது. பூட்டிச் சாவியைத் தன்னிடமே வைத்துக் கொண்டது...

    செஸ் காய்களை நகர்த்துகிற சாமார்த்தியத்தில் வேலை செய்திருக்கிறான் அவன். எதற்காக என்பது புரியாத அளவில் யோசித்து, நிதானமாக நகர்த்தி, இவளை முட்டாளாக அடித்திருக்கிறான்.

    அவனுடைய ஆட்டத்தில் இவள் -

    அவுட்! க்ளீன் போல்ட்...!

    தெருவிலிருந்து வந்த பெரிதான கத்தலில் இவளது கவனம் சட்டென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பையன்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1