Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Devathai
Kanavu Devathai
Kanavu Devathai
Ebook228 pages2 hours

Kanavu Devathai

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.

இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.

இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131505078
Kanavu Devathai

Read more from Latha Mukundan

Related to Kanavu Devathai

Related ebooks

Reviews for Kanavu Devathai

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Devathai - Latha Mukundan

    http://www.pustaka.co.in

    கனவு தேவதை

    Kanavu Devathai

    Author:

    லதா முகுந்தன்

    Latha Mukundan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 1

    கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை ஒரு முறைக்கு இருமுறை பார்க்கிறாள் தீபாராணி என்ற தீபா. அளவிற்கு மீறிய செழுமையான உடல் மாநிறத்திற்கும், வெண்மைக்கும் இடைப்பட்ட நிறம். சற்று செழுமை மிகுதியினால் நன்றாக உப்பிப் போயிருந்த கன்னங்கள். அதிக செழுமை ஒரு வித பூரிப்பையும் சற்றே வெண்மையையும் தர. அதுவே மிதமிஞ்சிய அழகாக கண்களுக்குத் தோன்ற கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் தீபா. தன் அழகில் திளைத்துக் கொண்டிருந்தாள். திருமணத்திற்குப் பின் தான் ஒரு சுற்று பெருத்து மிக, மிக அழகாக இருப்பது போல் தோன்றியது தீபாவிற்கு. இந்த அழகினால் தான் கணவன் தன் காலடியிலே கிடக்கிறான்.

    உதடுகளில் லேசான ஏளன புன்னகை, தனக்கு திருமணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது என்றால் யாராவது ஒத்துக் கொள்வார்களா? டி.வி விளம்பரத்தில் வரும் பெண் போல் தான் இன்னும் கல்லூரியில் படிக்கும் பெண் போலத்தான் இருக்கிறோம். மீண்டும் ஒரு குறுநகை.

    தீபா, தீபா... கணவன் கீழே இருந்து கத்துவது கேட்கிறது.

    'த்சு... என்ன அவசரம்? இன்னும் பவுடரைக் கூட போடலை.' நினைத்தவள் பேர் அண்ட் லவ்லி கிரீமை எடுத்து முகம். கழுத்து என்று தடவிக் கொள்கிறாள். பேனை இன்னும் சற்றுவேகமாக சுழலவிட்டு, பவுடரை தீற்றிக் கொள்கிறாள்... கண் இமைகளில் ஐ லைனர் இட்டு, கண் மையைத் தீட்டி, லேசாக லிப்ஸ்டிக்கைத் தீற்றிக் கொண்டிருக்கையில் மாமியாரின் குரல் கேட்கிறது.

    தீபா சந்தர் கூப்பிடறான் நாழியாயிடுச்சு இல்லே.

    'ஆமாம் ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கு நான் கண்ணாடி முன்னாடி நின்னாலே புடிக்காது. ஆரம்பிச்சிடும்.' மாமியாரை நினைந்து பல்லைக் கடிக்கிறாள்.

    இதோ வரேன் குரல் கொடுக்கிறாள். இருந்தாலும் எரிச்சல் வருகிறது. 'என்ன அவசரம்? அம்மா வீட்டிற்கு தானே போகப் போகிறேன். நான் லேட்டா போனா என்ன? சீக்கிரம் போனா என்ன? கீழே போகும்போது வாயை அடைக்கிற மாதிரி ஏதேனும் சொல்லிட்டுதான் போகணும். கிழவிக்கு வயதாகிறதே தவிர இங்கிதம் இருக்கா பாரு.' வாய் முணுமுணுக்க, பின்னும் புடவையைத் தேடி, தேடி அதற்கு மேட்சாக ரவிக்கை என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு கைக்கு, காதுக்கு கழுத்துக்கு என்று தேர்ந்து எடுத்து அணிந்து முடிக்கையில் பின்னும் அரைமணி நேரம் ஆனது. இதற்குள் கணவன் நான்கு முறையும். மாமியார் ஆறு முறையும் கூப்பிட்டுவிட ஆத்திரம் வந்தது. செருப்பு போட்டவாறே. தன் அறையைப் பூட்டியவள். தடதடவென்று இறங்கி வந்தவள், மாமியாரைப் பார்த்ததும் கடுகடுத்தாள்.

    அதான் வந்துட்டே இருக்கேன் இல்லே. ஏன் கத்திகிட்டே இருக்கீங்க?

    பிள்ளை மனைவியை எதிர்பார்த்து காத்துகிடக்கிறானே என்று தாய் மனது அடித்துக்கொள்ள, பிள்ளையின் அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் குரல் கொடுக்க வந்தது வினை. மாமியாரிடம் மட்டுமல்ல கணவனிடமும் சுள்ளென்று எரிந்து விழுகிறாள்.

    புத்தியில்லே நான்தான் வரேன். வரேன்னு கரடியாகக் கத்திகிட்டு இருக்கேன். அதுக்குள்ளே அந்த கத்து கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டு இருக்கீங்க? நீங்க ஒரு பக்கம்னா, உங்கம்மா அதுக்கு மேலே... கணவன் எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டவாறே கிளம்ப. உதட்டைச் சுழித்தவாறே கிளம்புகிறாள். "என்னிடம் தான் எல்லா வீராப்பும். எனக்கு அடுத்து வந்திருக்காளே இவங்க அழகான இரண்டாவது மருமக அவகிட்டே வாய் கொடுக்க வேண்டியது தானே. அவள் வம்புக்கு போனால் அவள் புருஷனும் சேர்ந்தல்லவா சண்டைக்கு வந்து விடுவான். தன் இரண்டாவது மருமகளிடம் தன் மாமியாரால் எதுவும் பேச முடியாது. கோபதாபம் எல்லாமே தன்னிடம் தான். தன்னிடம் மட்டும் தான் மாமியாருக்கு வாய் முகத்தில் கோபம் தாக்க. ரௌத்காரமாக போய் காரின் முன் பக்கம் போய் நிற்கிறாள். அவளின் கணவன் சந்திரன் பின்னாடியே போய் கார் கதவைத் திறந்து பெண்டாட்டி அமர்ந்ததும் கார்க் கதவை மூடி, டிரைவிங்க் ஸீட்டில் அமர்ந்து காரை செலுத்த, பார்த்துக் கொண்டிருந்த மாமியார் தங்கம்மா பெருமூச்சு விடுகிறாள். முதல் மருமகளிடம் பணமும் அதிகம். திமிரும் அதிகம் தான். வாயைத் திறந்தால் மற்றவற்றை தூக்கி எறியும் பேச்சுதான். மாமியார் என்ற மட்டு மரியாதையே இல்லாத பெண். அப்பன் வீட்டிலே பணம் அதிகம் இருக்கிறது என்ற திமிர் கொழுப்பு, மற்றவர் மனம் நோகுமே என்ற உணர்வு கூட இல்லாத ஒரு பெண் ஜன்மம். மாமியார் தன்னை விட பெரியவள் ஆயிற்றே, அதற்காகவாவது மரியாதை தரக் கூடாதா? பன்னிரண்டு வயதில் ஒரு பெண்ணும், பத்து வயதில் ஒரு பையனும் இருக்கிறது. ஆயிற்று வயதும் முப்பத்து ஐந்து வயதுக்கு மேல் ஆகி விட்டது இன்னும் என்ன மேக்கப் வேண்டியிருக்கு? கடந்த இரண்டு மணி நேரமாக அறையில் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு என்னதான் செய்கிறதோ? பிள்ளை வேறு அவளை விட்டு விட்டு டாக்டரிக்குச் செல்லவேண்டும். தவித்துக் கொண்டிருக்கிறானே என்று குரல் கொடுத்ததற்காகவா இத்தனை பேச்சு.

    பெரிய மருமகள் கணவன் கொண்டு வந்துவிட்டால் தான் பிறந்த வீட்டுக்கே போவாள். இன்றைக்கு வேலை இருக்கிறதம்மா. டிரைவரோடு போயேன். தப்பித் தவறி அவன் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் சரியாகவே இரண்டு நாட்கள் ஆகும். அப்புறம் அவன் பாடு திண்டாட்டம் தான். அவள் இல்லாத போது தைரியமாக இரண்டு வார்த்தைகள் சொல்பவன். அவள் வந்தால் பெட்டிப் பாம்புதான். பிள்ளையின் கையிலாகாத்தனத்தை நினைத்து வருந்துகிறாள் தங்கம்மாள். மனம் வேதனையில் விண்டது. எல்லாம் தன் தலை எழுத்து. மூன்று பிள்ளைகள் வேறு. 'மூன்று பிள்ளைகள் பெற்றால் முச்சந்தியில் தான் சோறு' பழமொழியே இருக்கிறதே. இரண்டாவது மருமகள் கீழே தன் அறையில் இருந்து வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. பெரியவள் தன்னை ஒரு பிடிபிடிக்க அடுத்த மருமகள் விமலா வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பது தெரிந்தது. மூத்த மருமகள் தீபா சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். இவளை ஏதாவது கேட்டு விட்டால் போதும் பிள்ளை வக்காலத்துக்கு வந்து விடுவான். சுருக்கென்று தன்னைக் கேள்விகள் கேட்பான்.

    அம்மா வாயை மூடிக்கிட்டு இருந்தா இருங்க. என்று என்னவோ இவன். வீட்டில் அம்மா இருப்பது போல் பேசுவான். தனக்கு வீடு, வாசல். பணம் என்று இருக்கும்போதே இந்த நிலமை? ஒன்றும் இல்லாமல் இருந்தால் தன் நிலமை? மறுபடியும் பெருமூச்சு விட்டவாறே உள்ளே போகிறாள் தங்கம்மாள்.

    பெரியவன் இன்ஜினியர். நன்றாக படித்து. தங்கப் பதக்கம் எல்லாம் வாங்கினவன். பார்ப்பதற்கும் சற்று அசத்தலாக சினிமா ஹீரோ போன்று இருப்பான். அதனால்தான் அவனுக்குத் தேடித்தேடி அலைந்து அவனுக்கு சரியாக இருக்க வேண்டுமென்று பணக்கார இடமாக முடித்தாள்.

    தீபாவின் வீட்டில் இரண்டே பெண்கள். அவளுடைய தந்தையும் பெரிய பிஸினஸ் மாக்னெட். தொட்டதெல்லாம் துலங்கும் வித்தை தெரிந்தவர். முதல் பெண்ணுக்கு கொட்டி கொட்டி சீர், செனத்தி என்று தான் செய்தார். முதல் மருமகளின் பணம். சீர் இவற்றில் மகிழ்ந்து போன தங்கம்மாள். மருமகளோடு வாழத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே மருமகளின் குணத்தை தெரிந்து துக்கப்பட்டாள்…

    தன் வீட்டு தூரத்து உறவுமுறை என்று வந்தாலும் விழுந்து, விழுந்து உபசரிக்கும் மருமகள் கணவனைச் சார்ந்தவர்கள் வருகிறார்கள் என்றால் லட்சியம் கூட செய்ய மாட்டாள். தூக்கிப்போட்டு வேறு பேசுவாள். அந்த வீட்டிலேயே அவள் பெற்ற ஒரு பெண்ணும், பிள்ளையும் தான் உலகத்திலேயே வாழத் தகுந்தவர்கள் என்ற நினைப்பு கொண்டவள் மருமகள். முதலிலெல்லாம் மருமகளின் செயல்கள் கோபமூட்டினாலும், பின்னால் எல்லாமே பழகி விட்டது. இன்றைக்கு பிள்ளைக்காக கத்தப் போய் தான் அசிங்கப்பட்டு விட்டோம். இன்னும் மூன்றாவது பையனுக்குத் திருமணம் ஆகவில்லை. வரப்போகும் மருமகளாவது நன்றாக இருப்பாளா? வந்தால்தான் அதுவும் தெரியும். இன்னுமொரு பெருமூச்சு விட்டவாறே உள்ளே போய் அமருகிறாள் தங்கம்மாள்.

    இங்கே காரில் வெடித்துக் கொண்டிருக்கிறாள் தீபா.

    அதென்ன உங்கம்மாவுக்கு நான்னா ஆகாதா? ஏதாவது சொல்லாம இருக்கவே மாட்டாங்களா? அதற்கு மேல் மாமியாரைக் கிழி, கிழி என்று கிழித்து வாயில் வந்தபடி பேசி கட்டாயம் கடவுள் பார்த்துக் கொள்வார். என்று சாபம் இடுகிறாள். சந்தர் பெருமூச்சு விடுகிறான். இவளிடம் வாயைக் கொடுத்து மீளவே முடியாது. வாயைத் திறக்காமல் அவளை வீட்டில் விட்டு விட்டு அவன் திரும்பிய போது, த பாருங்க. சாயங்காலம் சரியா ஆறு மணிக்கு வந்திடுங்க.' என்றவாறே வண்டியிலிருந்து கீழே இறங்குகிறாள்.

    'பெண் என்பவள் சுகமா, சுமையா? தெரியவில்லையே. தன்னைப் பொறுத்தவரையில் பெண்டாட்டி ஒரு பெரும் சுமைதான். இப்போதே மணி நாலரை. கம்பெனியில் வேலையில் இருந்தவனை வரச்சொல்லி அவசரம் அவசரமாக பாதி வேலையில் கொண்டு வந்து விட்டாகி விட்டது. அதற்கே மணி நாலரையைத் தாண்டி விட்டது. இந்த அழகில் நானே அழைத்துப் போகவும் வர வேண்டுமாம்.' மனம் முணுமுணுக்க சரிம்மா... என்றவாறே கிளம்பிச் செல்கிறான் சந்திரன்.

    *****

    அத்தியாயம் 2

    கணவன் செல்வதையே பார்க்கிறாள் தீபா. தீபாவின் உதடுகள் மேலும் விரிந்தன. கணவன் தன் கைப் பொம்மை தான் இவளின் கார் சப்தம் கேட்டதுமே அம்மா தன் பருத்த உடம்பைத் தூக்கியவாறே ஓடி, ஓடி, வருகிறாள். தீபா கண்ணு வந்துட்டியா? என்ன கண்ணுலேட்டு?

    ஆமா அப்படியே பெரிய பணக்கார இடத்துலே என்னை கொடுத்திட்டே ஏதோ நிலபுலன். வீடு பேக்டரி இருக்கு. மத்தபடி என்ன இருக்கு? எல்லாத்தையும் நான்தானே ஒழிச்சிட்டு வரணும். அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்ல வேண்டியதுதான் மாமியார்க்காரி மூஞ்சியே ஒரு மாதிரி ஆகிடும்.

    ஏண்டி பார்த்தா பூனை மாதிரி இருக்கா. இது தினமும் கேட்கும் கேள்விதான். தினமும் சொல்லும் பதில்தான். இருந்தாலும் புதிது போல அம்மா கேட்பதும், மகள் பதில் தருவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிதான்.

    ஒரு வழியா பிச்சுகிட்டு வரதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுச்சு. பொய்யாக சலித்துக் கொண்டவள்.

    ஆமா எதுக்கு என்னை வரச்சொல்லி போன் பண்ணே. என்கிறாள் தீபா.

    சரிதான் பொண்ணை வீட்டுக்கு வரச் சொல்லறதுக்கு கூட காரணம் வேணுமா என்ன?

    என்னம்மா நீ விஷயத்தை சொல்லு?

    சரி சொல்றேன். நம்ப மீனாவிற்கு நல்ல வரன் பார்க்கணும்னு சொன்னேனே ஏற்பாடு செய்தியா? மீனா தீபாவிற்கு பத்து வயது இளையவள். இருபத்து ஐந்து வயது நிரம்பியும் இன்னும் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையாதவள். சற்று ஒல்லியாக, கறுப்பாக முன் பல் லேசாக தூக்கலாக அப்படியே அப்பாவைக் கொண்டிருந்தவள் மீனா. சீர் செனத்தி என்று எக்கச்சக்கமாக செய்ய முன் வந்தாலும் திருமணம் மட்டும் ஏனோ தள்ளிக்கொண்டு தான் போனது.

    உங்கப்பா பிஸினஸ்ன்னு அலைஞ்சுகிட்டே இருக்காரு. பொண்ணுக்கு இருபத்து வயசாச்சேன்னு ஞாபகம் இருந்தா தானே. நம்ப பக்கம் நானும் சல்லடை போட்டு சலிச்சு தேடிப் பாத்தாச்சு. உங்க புகுந்த வீட்டு உறவுமுறையிலே யாராவது தேறுமா பாரேன்.

    மிக, மிக அவசரம் என்று கூப்பிட்ட விஷயம் இது.

    அம்மா என்ன தான் பொன்னாக கொட்டி கொடுத்தாலும் கொஞ்சம் சுமாராவது இருக்கணும்னு கட்டிக்கறவன் பொண்ணை எதிர்பார்ப்பானில்லே. என்னய மாதிரி வெள்ளையா அழகா இல்லேன்னா பரவாயில்லே. கொஞ்சம் பார்க்கறமாதிரி இருக்கணும் இல்லே. குற்றம் காணும் தொனியில் அவள் கூற.

    "இத பாரு. அதுக்கு தான் ஒன்னை யோசனை கேட்க கூப்பிட்டேன்.'

    அவள் சிறிதுநேரம் யோசித்தவள் ஆமா என் கடைசி மச்சினனுக்கு நம்ப மீனுவை முடிச்சிட்டா என்ன?

    அவள் கையை சொடுக்கி விஷயத்தை சொல்ல அதுக்கு தான் என் தீபா வேணுங்கறது. நானும் இதுதான் கண்ணு யோசிச்சேன். பையன் வெறும் பி.ஏ தான் ஆனா பார்க்கறதுக்கு ராஜா மாதிரி இருக்கானே.

    ம்..க்கும்... ராஜா மாதிரி இருந்து என்ன பிரயோசனம்? பையன் பி.ஏன்னு சொல்றாங்க. பி.ஏவிலே ரெண்டு பேப்பர் அரியர் வச்சிருக்கானாம்.

    இருக்கட்டுமே நம்ப பொண்ணு பிளஸ் டூவிற்கு மேலேயே படிக்கலையே.

    நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இந்த வரன் அப்படி ஒண்ணும் ஒசத்தி இல்லே. நம்ப பணத்துக்கும், பவிசுக்கும் இன்னும் எத்தனையோ நல்ல இடத்தை வாங்கலாம். இருந்தாலும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு. எங்க வீட்டுக்கார்ரு அளவு சம்பாதிக்கற திறமை இல்லேன்னாலும் கூட இவனுக்கும் ஒரு பங்கு உண்டே அதுவே கோடிக்கு மேலே தேறுமே.

    அதாண்டி கண்ணு உன்னைய கூப்பிட்டேன். எப்படியாவது முடிச்சு வை.

    "தீபாவின் மனம் குறுக்கு வேலை செய்தது. இந்த இடத்தை முடித்து விட்டால் தனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1