Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathellam Margazhi
Manathellam Margazhi
Manathellam Margazhi
Ebook289 pages2 hours

Manathellam Margazhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லதா முகுந்தனின் நாவல்கள் இன்றைக்கு எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இவரது கதை சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்பொழுது உங்கள் கையில் அவரது 'மனதெல்லாம் மார்கழி.'

பெயரைக் கேட்கும் பொழுதே ஒருவிதக் குளுமை! அதே போல நாவலும் குளுமையான குடும்ப நாவல். படியுங்கள் - படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

அடுத்தடுத்து அவரது நூல்கள் வரத் தயாராய் உள்ளன. உங்களின் ஆதரவும் - வரவேற்பும் நிச்சயம் எங்களை உற்சாகப்படுத்தும்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131505082
Manathellam Margazhi

Read more from Latha Mukundan

Related to Manathellam Margazhi

Related ebooks

Reviews for Manathellam Margazhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathellam Margazhi - Latha Mukundan

    http://www.pustaka.co.in

    மனதெல்லாம் மார்கழி

    Manathellam Margazhi

    Author:

    லதா முகுந்தன்

    Latha Mukundan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 1

    அருணா கம்ப்யூட்டரில் கணக்கை சரி பார்த்தவாறே ஆழ்ந்திருக்கிறாள். கறுப்பு நிறக் கண்கள் நாவல் பழங்களாக மின்ன கண்ணும் கையும் மனமும் வேலையில் ஆழ்ந்திருக்க முன்னுச்சி மயிர் காற்றில் பறக்க கோதுமை நிற உடல் மினுமினுக்க தவம் செய்யும் தேவதையைப் போல் வேலையில் ஆழ்ந்திருக்கிறாள் அருணா. அவளுக்கு சற்று நேர் எதிரில் அமர்ந்திருந்த சரவணன் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறான். இது என்ன எப்போது பார்த்தாலும் வேலை, வேலை என்று வேலையைக் கட்டிக் கொண்டு அழுகிறதே இந்தப் பெண், வேலை செய்ய வேண்டியதுதான் அதற்காக இப்படியா? கைக்கடிகாரத்தை சற்று திருப்பிப் பார்க்கிறான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலக ஆரம்பமே பத்து மணிக்குதான். அதற்குள் இந்தப் பெண்ணுக்கு என்ன வந்தது? அதற்குள் ஊரில் இருக்கும் வேலையெல்லாம் தலையில் போட்டுக் கொண்டு... மனம் பொறுமுகிறது. டென்ஷன் தாங்காமல் கை நகங்களைக் கடிக்கிறான்.

    சரவணன் இருபத்து ஐந்து வயது இளைஞன். சற்று மாநிறமானவன். அடர்ந்த மீசையும், அலை அலையான கிராப்பும் உடலுக்கு ஏற்ற பருமனும், துறுதுறுவென்ற கண்களும் உடைய ஆறடி இளைஞன் அவன். பார்க்கிற எந்தப் பெண்ணுக்கும் ஒரு நிமிடம் பார்வை அவன் மேல் பட்டுச் செல்லாமல் இருந்ததில்லை. அப்படிப்பட்டவனை இந்தப் பெண் அருணா சாதாரணமாகக் கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லையே. இதை நினைக்கும் போதே மனம் தவிதவித்துப் போனது. இது ஒரு நாள். இரண்டு நாள் தவிப்பு அல்ல. கடந்த ஆறு மாதங்களான தவிப்பு.

    மூன்று வருடத்திற்கு முன் அருணா எப்போது இந்த அலுவலகத்தில் சேர்ந்தாளோ அன்று ஏற்பட்ட தவிப்பு. அவனுடைய அலுவலகத்தில் அருணாவையும் சேர்த்து எட்டு பெண்கள். எல்லோருமே அவனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் தான். சரவணன் அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி. அத்தனை பெண்களும் அவனை ஏதோ ஒரு காரணத்திற்காக சந்தித்தே ஆக வேண்டும். இதனால் அலுவலகத்தில் இருக்கும் மற்ற பெண்கள் எல்லாம் அவனை வசியப்படுத்த முயற்சிக்க, அருணா மட்டும் வித்தியாசமாகத்தான் இருக்கிறாள்.

    அலுவலகத்தில் எல்லோரும் வந்து விட்டார்களா? சுற்றும் முற்றும் பார்க்கிறான். இன்னும் பாதி நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தது. வந்திருந்த கொஞ்ச பேரும், டீ குடிக்க, தோழிகளோடு தோழர்களோடு அரட்டை அடிக்கச் சென்று விட, சற்று தைரியம் அடைந்தவனாய் சரவணன் லேசாக விசிலடித்துப் பார்க்கிறான். இரண்டு முறை மூன்று விசிலடித்தும் அருணா திரும்பிக்கூடப் பார்க்காததால் 'சே' கைகளை உதறிக் கொள்கிறான். ஒரு பேப்பரை லேசாக சுருட்டி அருணாவின் மேல் விட்டெறிகிறான். அருணா அதையும் கவனித்தாளில்லை, சட்டென்று ஒரு வேகத்தில் தன் ஸ்கூட்டர் சாவியை அவள் மேல் விட்டெறிய அதிர்ந்து போய் திரும்புகிறாள் அருணா.

    அருணா அதிர்ச்சியோடு பார்க்க மோகனப் புன்னகையை சிந்துகிறான் சரவணன்.

    சாரி சாவி சுத்திகிட்டு இருந்தேன். கையிலேந்து ஸ்லிப்பாகி விழுந்திடுச்சு. மன்னிப்பு கேட்கும் பாவனையில் சரவணன் எழுந்து வர, முகத்தின் கடுகடுப்பு மாறாமல் தன் காலின் கீழே கிடந்த சாவியை எடுத்துத் தந்துவிட்டு மறுபடியும் கம்ப்யூட்டரில் மூழ்குகிறாள்.

    ஹலோ... மிஸ் அருணா... சரவணன் அருகில் நின்றவாறே தயங்கி நிற்க,

    என்ன சார் வேணும்? எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணறீங்க?

    அருணா சுள்ளென்று விழுகிறாள். அந்த எரிச்சல், படபடப்பிலும் முகம் சிவந்து போய் வியர்வை முத்து முத்தாய் முகத்தில் நிற்க அவளையே ரசித்துப் பார்க்கிறான் சரவணன்.

    என்ன மிஸ் அருணா? எதுக்கு இப்படி வள்ளுன்னு விழறீங்க? நான் உங்க மேல் அதிகாரி. நான் எப்ப கூப்பிட்டாலும் நீங்க பிராப்பரா பதில் சொல்லியாகணும். அது தெரியுமா? சரவணன் லேசாக உதடுகளைக் கடித்தபடி சொல்ல, சட்டென்று இருக்கையை விட்டு எழுந்திருக்கிறாள் அருணா.

    மிஸ்டர்... நீங்க மேலதிகாரியாக இருக்கலாம். வேலை சம்பந்தமா எது கேட்டாலும் சொல்ல வேண்டியது என் டியூட்டி ஒத்துக்கறேன். வேலை சம்பந்தமாவா என்னைக் கூப்பிட்டீங்க. ஸ்... ஸ்னு விசில் அடிக்கறதும், சாவியை விட்டு எறியறதும் வேலை சம்பந்தமான விஷயங்களா? வாங்க நம்ப ரெண்டு பேருமே மேலே போய் கம்ப்ளைண்ட் பண்ணுவோம். யார் மேலே தப்பு இருக்கோ அவங்க ஆக்ஷன் எடுக்கட்டும். கண்கள் சற்று கோபத்தோடு விரிய ஆத்திரத்துடன் கத்துகிறாள்.

    சரவணனுக்கு தான் விசில் அடித்ததையும் அவள் கவனித்திருக்கிறாள் என்பதில் லேசான ஒரு ஆனந்தம் தான். இருந்தாலும் வெளிக் காண்பிக்காமல் சற்று எரிச்சலோடு பேசுகிறான்.

    என்ன மிஸ் அருணா விட்டா பேசிகிட்டே போறீங்க. நீங்க என்ன பெரிய ரம்பையா? இல்லை உலக அழகி ஐஸ்வர்யாராய்னு நினைப்பா? அவன் நக்கலாக கேட்க,

    ஓ.கே. எனக்கு எந்த நினைப்பும் கிடையாது. வேலையைத் தவிர சரி உங்களுக்கு இப்ப என்ன வேணும்? சற்று எரிச்சலோடு அருணா கூற,

    டேபிளுக்கு வாங்க கூறிவிட்டு மிடுக்கோடு நடக்கிறான் சரவணன்.

    அருணாவிற்கு எரிச்சல், ஆத்திரம் துக்கம் எல்லாம் சேர்ந்து வந்தது. தான் பிரமாதமான அழகி என்பது அவளுக்கு நன்கு தெரிந்த விஷயம்தான். எத்தனை எத்தனை கண்கள் தன்னை பிரமிப்போடும் ஏக்கத்தோடும் பார்க்கின்றன என்பதும் அவளுக்குத் தெரியும். தப்பித் தவறி பஸ்ஸில் போய் விட்டால் போதும் விரலைத் தொடுவதும் மேலே இடிப்பதும் பின்பக்கம் தடவுவதும் கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இல்லாமல் எருமை மாட்டைப் போல் நடந்து கொள்ளும் ஜனங்கள். விஜயா அத்தை சொல்வது போல் எந்த ஆம்பிளையும் யோக்கியனில்லை. சமயம் கிடைச்சா கை வச்சிடுவானுங்க.

    இப்போது இந்த சரவணனும் இதே லட்சணம் போல் இருக்கிறது இருக்கட்டும்... இருக்கட்டும்.. வேலையைத் தவிர ஏதாவது பேசட்டும். பிறகு பார்த்துக் கொள்வோம். ‘இந்த ஆளை உண்டு. இல்லை என்று செய்து விட மாட்டேன்' மனதிற்குள் கறுவிக் கொண்டவள் லேசான கோபத்தோடு சரவணனை பின் தொடருகிறாள்.

    என்ன இது? ஏதோ ஒரு பைலை எடுத்து அருணாவின் முன் போடுகிறான். கம்ப்யூட்டர்லே பீட் பண்ணிட்டா தப்பே வராதா? எல்லா கணக்குமே தப்பு.

    அருணா விழிக்கிறாள். ‘என்ன இது இப்படிச் சொல்கிறான்.’ அவளும் கடந்த மூன்று வருடங்களாக வேலையில் இருக்கிறாள். பத்தொன்பது வயதில் பி.எஸ்ஸி முடித்த கையோடு வேலையில் சேர்ந்தவள், பகுதி நேரப் படிப்பாக கம்ப்யூட்டர் படித்ததினால் கிடைத்த வேலை ஒரு முறை கூட யாருமே அவளின் வேலையைப் பற்றி இதுவரை குறை சொன்னதில்லை. ஏன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் கூட அவளை யாரும் திட்டியதில்லை. அவள் வேலையைப் பற்றி ஒருவர் கூட தவறாகச் சொல்லியதில்லை.

    ஆத்திரத்துடனும் எரிச்சலுடனும் ஒருவித பயத்துடனும் அவள் பைலை எடுத்துப் பார்க்கிறாள். கூட்டலில் தவறு. மேலே எடுத்து எழுதிய கணக்கு வேறு. எடுத்து எழுதும்போது ஒரு எண்ணிக்கையை விட்டு எழுதப்பட்டிருந்தது. அருணாவிற்கு திக்கென்றது. தான் இந்த மாதிரி தவறு செய்ததாய் நினைப்பே இல்லையே. இத்தனை கேவலமாக தான் வேலையே செய்திருக்க மாட்டோம். இதில் ஏதோ தவறு இருக்கிறது. படபடக்கும் இதயத்தை அடக்கியவாறே சற்று நிதானமாக ஆராய்கிறாள்.

    ஒரு சில நிமிடங்களில் முகம் மலர்ந்து பூத்துப் போனது.

    சார்... முதல்லே நீங்க அடுத்தவங்க தவறை சுட்டிக்காட்டு முன் உங்க தவறை புரிஞ்சுக்கங்க முகம் சிவக்க அவள் கூற,

    என்ன மிஸ் அருணா உங்க கண் எதிர்லேதானே கணக்கை காண்பிச்சேன். தப்பைப் பாத்தீங்க இல்லே. இப்ப என்ன?

    தப்பை பாத்தீங்க சார். ஆனா யாருடையதுங்கறது பார்த்தீங்களா? இது என் வேலையே இல்லை. இது மொத்தமும் கீதாவோடது. ஸோ என்னை கேட்டதே தப்பு.

    சரவணனுக்கு ஒரு நிமிடம் முகத்தில் அசடு வழிந்தது. பிறகு சமாளித்துக் கொள்கிறான்.

    என்ன இது? இது உன் டிபார்ட்மெண்ட் இல்லையா?

    சார் கொஞ்சம் கண்ணைத் திறந்து நல்லா பாருங்க. சற்று நக்கலாக அருணா கூற,

    ஸ்... ஆமாம் கீதா வேலை தான் இது என்றவன்,

    இருந்தாலும் மேடம் யாருடைய வேலையா இருந்தாலும் தவறைச் சுட்டிக் காண்பிச்சு சீர்திருத்தறதுல தப்பே இல்லை. எல்லோருமே கம்பெனி வளர்ச்சிக்கு தானே பாடுபடணும் சரவணன் தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் பேச,

    ரொம்ப கரெக்ட் சார். தவறு, சரிங்கறது எல்லாம் கண்டுபிடிச்சு திருத்தறது உங்களை மாதிரி மேலதிகாரிங்க வேலை. அதுக்குதானே உங்களுக்கு சம்பளமே கொடுக்கறாங்க. ஸோ வாங்கற சம்பளத்துக்கு அவுங்க அவுங்க வஞ்சனை இல்லாமல் உழைச்சா நல்லா இருக்கும்.

    நக்கலாகக் கூறிவிட்டு அருணா அந்த இடத்தை விட்டு அகன்று செல்கிறாள். மனம் ஆத்திரத்திலும், கோபத்திலும் கொந்தளிக்கிறது. ஜொள்ளு பார்ட்டி தான் சிக்க மாட்டோமா என்று அலைகிறான்.

    மதிய நேரத்தில் சாப்பிட ஒதுங்கும்போது கீதா அருகில் வந்து அமருகிறாள்.

    ஏய் என்னப்பா என்னாச்சு? ஹீரோ சுத்தி சுத்தி வராம் போலருக்கு.

    கீதா முடிக்கவில்லை. அருணா வள்ளென்று விழுகிறாள்.

    எல்லாம் உன்னால. ஒரு கணக்கைகூட ஒழுங்கா எழுத மாட்டியா? எடுத்து எழுதறதுலே கூடவா தப்பு பண்ணுவே.

    வேணும்னுதான் எழுதினேன். அந்த ஹீரோ என்னைக் கூப்பிடும் கொஞ்ச நேரம் ஜல்சா பண்ணலாம்னு நினைச்சேன். கண்களை சிமிட்டுகிறாள்.

    அருணா திகைத்துப் போய் பார்க்க, அது சனியன் உன்னைக் கூப்பிட்டுச்சு. சும்மாவா சொல்லியிருக்காங்க. வண்ணானுக்கு வண்ணாத்தி மேலே ஆசை. வண்ணாத்திக்கு கழுதை மேலே ஆசைன்னு சொல்லிவிட்டு ஓவென்று சிரிக்கிறாள் கீதா.

    ஏய் யாரடி கழுதைங்கறே? என்று செல்லமாக கீதாவின் முதுகில் தட்டியவள்,

    அவன் என்னதான் ஆளோ அவனை நினைச்சு ஹீரோ ஹீரோன்னு உருகறே சலித்துக் கொள்கிறாள்.

    நீ தெரிஞ்சு பேசறியா? இல்லை நடிக்கறியா புரியலை. மாசம் முப்பதாயிரத்துக்கு மேலே சம்பளம். ஆளே வாட்ட சாட்டமா ஹீரோ மாதிரி இருக்கான். எல்லாத்தை விட முக்கியம் ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. அவன் ஒரு சிகரெட் கூட புடிக்க மாட்டான்பா, சிகரெட் புடிக்க மாட்டானான்னு நானே ஏங்கியிருக்கேன். வேலையிலே ரொம்ப கரெக்ட். பொண்ணுங்களைப் பார்த்து ஜொள்ளு விடறது, பின்னாடி அலையறது எதுவும் கிடையாது கீதா சொல்லச் சொல்ல,

    அவனா? என்று குறுக்கிடுகிறாள் அருணா.

    ஏய் சும்மா பேசாதே. உன்னை டாவடிச்சா கெட்டவனாயிடுவானா? உன்னைப் பிடிச்சிருக்கலாம். ஒருத்தரைப் பிடிக்கறது தப்பா? லைக் பண்றது தப்பா? நம்ப ஊர்ல தாண்டி அன்பு செலுத்தறது கூட தவறுன்னு போதிக்கறாங்க.

    கீதா சொல்லச் சொல்ல வாயை மூடிக் கொள்கிறாள் அருணா. அவரவருக்கு அவரவரின் எண்ணங்கள். எது சரி என்று யார் சொல்ல முடியும்? எப்படியும் அத்தையிடம் இதைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும்.

    அத்தை விஜயாவைப் பற்றி நினைக்கையிலே கண்களில் நீர் நிறைந்தது. அம்மா என்பவள் பெற்றுப் போட்டாளே தவிர, தன்னை தூக்கி, எடுத்து, வளர்த்து அன்பைக் கொட்டியது எல்லாமே அத்தை தான். அத்தை விஜயா அவளைப் பொறுத்தவரையில் அம்மா. அந்த அத்தையிடம் தினம் நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் மண்டையே வெடித்து விடும். ஏற்கனவே இந்த சரவணனின் அணுகுமுறை பற்றி சொல்லியிருக்கிறாள்.

    அத்தை பதறிப் போனாள். வேணாம்டி கண்ணு. ஜாக்கிரதை ஆம்பளைங்க எல்லாம் பிணந்தின்னி கழுகுங்க. எவ உடம்பு கிடைக்கும்னு அலைஞ்சுகிட்டு இருக்கும். நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். எத்தனையோ ஜாக்கிரதையா இருந்தும், என்னையே... என்று சொல்லி முடிப்பதற்குள் அழுதே விடுகிறாள்.

    அத்தை வாழ்க்கையே ஒரு பாவமான வாழ்க்கை. மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகளோடு பிறந்தவள். குடும்பத்தின் மூத்த வாரிசு. தான் திருமணமே செய்து கொள்ளாமல் தம்பி, தங்கைகளை கரை ஏற்றி விட்டவள். அறுபத்து இரண்டு வயதாகும் இளைஞி என்று வேண்டுமானால் சொல்லலாம். கண் நிறைய மையும், நெற்றி நிறைய பொட்டும், தலை நிறைய பூவுமாக நல்ல புடவையுடன் எப்போதுமே சிக்கென்று இருப்பாள் அத்தை. இந்த அறுபத்து இரண்டு வயதில் உடல் சற்று பெருத்து இருந்தாலும் டாண் டாண் என்று வீர நடை போட்டு வருவாள்.

    அருணாவிற்கு கூடப் பிறந்தவர்கள் இரண்டே சகோதரிகள் தான். மூத்தவள் ப்ளஸ் டூ முடித்து விட்டு வீட்டோடு இருப்பவள். இரண்டாவது அருணா. மூன்றாவது மீனா கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவள். இதில் அருணா மட்டும்தான் நன்றாகப் படித்து கம்ப்யூட்டர் வேலையில் அமர்ந்திருக்கிறாள். அதற்கே அம்மாவிற்கு மிகுந்த கோபம் தான். அவ்வப்போது வந்து பெண்ணைப் பார்த்துவிட்டுப் போவாள். 'எத்தனை சம்பளம் என்று கேட்டுக் கேட்டு உயிரெடுப்பாள்.' ஆரம்ப நாட்களில் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் என்றதும், 'கொண்டா' என்று ஆறாயிரம் ரூபாயைப் பிடுங்கிக் கொண்டவள்.

    என்னம்மா எட்டாயிரம் ரூபாய் இருந்தாலும் கைக்கு வராது. ஆறாயிரத்து ஐநூறு. எல்லாத்தையும் நீ வாங்கிகிட்டயான்னா அத்தைக்கு என்ன கொடுக்கறது?

    அவளுக்கு எதுக்குடி ரூபாய்? அவளே கவர்மென்ட் வேலைலே இருந்து சம்பாதிச்சவ. இப்ப ரிடையராகி பென்ஷன் வேற வாங்கறா. போதாக் குறைக்கு இப்பவும் தனியார் கம்பனியிலே வேலை செய்யறா? இன்னும் என்ன கேடு?

    ஏம்மா நீ பேசறது நியாயமா இருக்கா? அப்பா சம்பளத்துலே மூணு பேரையும் வச்சுக்க முடியலைன்னு நீதானே தத்து கொடுத்தே. இத்தனை வருஷம் வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கின அத்தையை மறக்கலாமா?

    இதற்குள் அப்பாவும் லேசாக அருணா பக்கம் பேச, அம்மாவிற்குக் கோபம் வந்தது.

    ஆமா கல்யாணம் ஆகலே. அவளுக்குன்னு ஒரு துணை கிடையாது. எங்குழந்தையை இவ கிட்ட விட்டதுக்கு அவதான் கொட்டி கொடுத்திருக்கணும். இப்படி எல்லாம் அடாவடியாகப் பேசி, கடைசியில் அத்தையே வந்து ‘கொடுத்து ஒழி அருணா' என்று சொல்ல ஒரு ஐயாயிரம் ரூபாயை கொடுத்து அனுப்புவார். மாதா மாதம் வாடகை போல் அம்மா வந்து வசூல் பண்ணிக் கொண்டு போவாள்.

    அத்தையிடம் பாக்கி ரூபாயை நீட்டினால் ‘வேண்டாம் நீ வச்சுக்கோ' என்று பெருந்தன்மையாகக் கூறிவிடுவாள். அதற்கு மேல் அதிக பணம் வந்ததும் அருணா எச்சரிக்கை ஆனாள். பெற்றோரிடம் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பதில்லை. அத்தை பணம் வாங்கவில்லை என்பதால் நினைக்கும் போதெல்லாம் அத்தைக்கு புடவைகள் சின்ன சின்ன நகைகள் என்று தன்னால் முடிந்ததை எல்லாம் வாங்கிக் கொண்டு வருவாள். வீட்டிற்கு காய்கறி, சாமான் என்று வாங்கிப் போடுவாள்.

    இதை எல்லாம் நீ ஏன் வாங்கறே? அத்தை கடிந்து கொண்டாலும்,

    பேசாம இருங்க அத்தை என்று அத்தையின் வாயை அடைப்பாள்.

    அவள் உலகத்தில் அத்தையைத் தவிர வேறு ஜீவன் கிடையாது. அத்தை வாக்குதான் வேதவாக்கு. போன முறை சரவணனைப் பற்றி சொன்னபோதே, வேண்டாம்மா நல்ல டீசன்டான இடத்துக்கு வேலைக்குப் போ என்று உபதேசித்தாள். இன்று அத்தையிடம் சொல்லி விட்டு இந்த வேலையை விட்டுவிட வேண்டியதுதான்.

    வீட்டை அடைந்து அத்தை மூன்று மணிக்கு வந்து செய்து விட்டுப் போயிருந்த டிபன் காபி எல்லாவற்றையும் விழுங்கி விட்டு சற்று சாய்வாகப் படுத்து பேப்பரை எடுத்தபோது அழைப்பு மணி அழுந்த,

    'என்ன இது அத்தையா இத்தனை சீக்கிரம் வந்து விட்டார்கள்.' இரண்டு மணிக்கு வந்து விட்டு, மறுபடியும் நாலு மணிக்கு தான் திரும்பிப் போவாள் அத்தை. தனியார் மருந்துக் கடையில் வேலை. வருபவள் டிபன், காபி செய்து இரவு சமையலையும் முடித்து விட்டுப் போவாள். தனக்கு என்றுமே ஒரு கஷ்டமும் வைத்ததில்லை. நினைத்தவாறு ஆவலாகக் கதவைத் திறக்கிறாள். அம்மா, அப்பா வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருக்க, அதிர்ந்து போய் பார்க்கிறாள்.

    ‘ஒண்ணாம் தேதிகூட இல்லை எதற்கு வந்திருக்கிறாள் அம்மா.' அம்மா பக்கா காரியவாதி ஆயிற்றே.

    கண்ணு நல்ல வேளை. நீதானே இருக்கே. நல்ல வேளை உங்க அத்தை இல்லையே, நாம நிம்மதியா பேசலாம் என்கிறாள்.

    என்னம்மா?

    உங்கக்காவிற்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு.

    அப்பா இழுத்தாற்போல் சொல்ல,

    ஆமாண்டி இன்ஜினியர் மாப்பிள்ளை, சீர் செனத்தி எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க அம்மா சொல்ல,

    அதுக்காக நமக்கு மானம் மரியாதை இல்லையா?

    அப்பா அவசரமாகக் குறுக்கிடுகிறார்.

    அது தாண்டி கண்ணு. குறைச்சு குறைச்சுச் சொன்னாலும் நாலு இலட்சம் ஆயிடும். உங்க ஆபீஸுக்கு நாளைக்குப் போனவுடனே லோன் போட்டு வாங்கிக் கொடுத்துடு என்ன? அம்மா சொல்லச் சொல்ல உறைந்து போய் அம்மாவையே பார்க்கிறாள் அருணா.

    *****

    அத்தியாயம் 2

    என்னடி முகமே மாறிடுச்சு. அக்காவுக்குக் கல்யாணம்னு சொன்ன உடனே நீயே குதிச்சுகிட்டு கடனை வாங்கித் தரேன்னு உடனே ஆபீசுக்கு ஓடுவேன்னு பாத்தா, முகத்தை சுளிச்சுகிட்டு நிக்கறே?

    அம்மா எகிற, ஏம்மா அம்மாவைக் கஷ்டப் படுத்தலாமா? பெத்தவ இல்லை. அவ மனசு கஷ்டப்பட்டா நல்லதா? நீ நல்லாவா இருப்பே. அப்பா சபிப்பது போல் பேச அதிர்ந்து போகிறாள்

    Enjoying the preview?
    Page 1 of 1