Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma
Amma
Amma
Ebook226 pages1 hour

Amma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எங்களின் 23-வது வெளியீடாக திருமதி. லதா முகுந்தன் அவர்களின் 'அம்மா' எனும் இந்த அற்புத நாவல் உங்கள் கரங்களில் தவழ்கிறது.

இந்த நாவல் -

ஒரு தாயை - அவளின் நியாயமான ஆசைகளை (அவளைப் பொறுத்தவரை) அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

லதா முகுந்தன் - ஒரு வித்தியாசமான எழுத்தாளர் - வாழ்க்கையின் வித்தியாசமான நிகழ்வுகளை அற்புதமாகச் சொல்வதில் அவர், மிகவும் தேர்ந்தவர். அவரது மற்றொரு முயற்சிதான் 'அம்மா' எனும் இந்த நாவல்.

அன்புடன்

சோ.சொர்ணவல்லி

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580131505067
Amma

Read more from Latha Mukundan

Related to Amma

Related ebooks

Reviews for Amma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma - Latha Mukundan

    http://www.pustaka.co.in

    அம்மா

    Amma

    Author:

    லதா முகுந்தன்

    Latha Mukundan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lathamukundan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 1

    சற்று சாயம்போன ஜரிகைக் கரைபோட்ட நீலநிற பருத்திப் புடவையை முன் கொசுவம் வைத்து பாந்தமாக அணிந்திருக்கிறாள் காமாட்சி. வெள்ளைப் பஞ்சாக நரைத்த தலை. நன்றாக ஒட்டி உலர்ந்த தேகம். ஏழ்மையினாலும், வயோதிகத்தினாலும் சுட்ட சருகாய்ப் போன உடல். நெற்றியின் மத்தியில் சிறியதான குங்குமப்பொட்டு சுமங்கலி என்பதைச் சொல்லாமல் சொன்னது.

    இன்று வியாழக்கிழமை அல்லவா? கையில் மூன்று அகல்களை எடுத்து வந்திருக்கிறாள். பஞ்சைத் திரித்து திரிகளை எடுத்து வந்திருக்கிறாள். ஒரு சின்ன பாட்டிலில் நல்லெண்ணெயும் கொண்டு வந்திருக்கிறாள். கோவிலுக்குள்ளே வந்து சிவபெருமானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பின் ஒரு அகலை எடுத்து அதில் திரி வைத்து எண்ணெய் ஊற்றி, விளக்கை ஏற்றி மனமுருகி, கண்கள் குளமாக நெஞ்சு விம்ம நிற்கிறாள். இறைவா... என் பிரார்த்தனையை செவி சாய்க்க மாட்டாயா? 'பிரம்ம முராஜ்ஜித...' பாடலை வாய் முணுமுணுக்கிறது. 'ஓம் நமச்சிவாயா' என்று மனம் மறுபடியும் உருகி உருகிப் பிரார்த்தனை செய்கிறது. பின் அம்பாளின் சன்னதியில் நிற்கிறார்.

    தாயாரைப் பார்த்ததுமே கண்களில் பிரவாகம். தாயே பொன், பொருள் இதை எல்லாமா நான் கேட்டேன்? நான் கேட்பது எல்லாம் ஒரே ஒரு சின்ன வஸ்து தானே. அதைத் தருவதினால் நீ என்ன குறைந்து போய் விடுவாய்? ஆயிரம் கண்ணுடையவள் அல்லவா? அன்னை அல்லவா நீ? உன் மனதில் இரக்கமில்லையா? என் நினைவுகளைப் பின்னிப் பின்னிப்போட்டு என்னை ஏன் இத்தனை துன்பப்படுத்துகிறாய்? ஒரு முறை முழுக்கண்ணால்கூட என்னைப் பார்க்க வேண்டாம். அரைப் பார்வையாவது என் மேல் வீசக் கூடாதா? தாயார் முன் தினமும் புலம்பும் புலம்பல். திருமணம் ஆன நாளிலிருந்து தினமுமே இந்தக் கோவிலுக்கு வருவாள். ஏறக்குறைய நாற்பது வருடங்கள் இருக்கலாம். கோவில்களின் அமைப்புகள் மாறிவிட்டது. ஆனால் தெய்வங்கள் மாறவில்லை. புதுப்புது விழாக்கள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அவளின் பிரார்த்தனையும் மாறவில்லை.

    இந்தக் கோவிலை எந்த நூற்றாண்டோ கட்டப்பட்ட கோவில் என்கிறார்கள். ஆயிரத்து முன்னூற்றாறோ அல்லது பதினாறோ என்று தான் கோவிலின் ஒரு பக்கமாக உள்ள கல்வெட்டில் பார்த்த ஞாபகம். முதலில் எல்லாம் இருளோ என்று இருக்கும் நடைகள். பிரகாரங்கள் கூட இருளோ என்றுதான் இருந்தது. கும்பாபிஷேகம் முடிந்த பின்தான் சில புண்ணியவான்கள் கோவிலைச் சுற்றியும் கோவிலின் உள்ளேயும் பிரகாசமான விளக்குகளைப் பொருத்தினார்கள். சுற்றிலும் பெயிண்ட் அடிக்கப்பட்டு, சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டு தரையெல்லாம் மார்பிள் போடப்பட்டு, துர்க்கை இருக்கும் சன்னதி எல்லாம் டைல்ஸ் ஒட்டப்பட்டு.... எல்லாமே மாறி விட்டது. இப்போது கோவிலுக்குள் கற்பூரம் ஏற்ற தடை. அப்படியும் கட்டிகட்டியாக கற்பூரத்தை வைத்து சாமியையே எரிக்கும் ஜனங்கள். கற்பூரம் ஏற்றியதை பார்த்து விட்டாலோ மானம் போவது போல் வரும் கேள்விகள்.

    பக்தியையும், அன்பையும், அமைதியையும் போதிக்க வேண்டிய கோவில்களிலும் சச்சரவுகள்தான். இங்கே வந்து மன அமைதி இழந்து போவோர்களும் சில பேர் இருக்கத்தான் இருக்கின்றனர். தெரிந்தவர்கள் என்றால் வாழைப்பழம், தேங்காய், பூ, குங்குமம், விபூதி என்று பிரசாதங்கள். தெரியாதவர்கள் என்றால் ஒன்றுமே கிடையாது. சிட்டிகையாக விழும் குங்குமமும் விபூதியும் ஒரு நல்ல நாள் என்றால் காசு கொடுத்து பக்தியைக் காண்பிக்கும் ஜனங்கள். இறைவனோடு ஒன்றாகக் கலந்தவர்கள் போல், இறைவனையே மறைத்தவாறு முக்கியமானவர்கள் நிற்க, ஒரு முறை காண மாட்டோமா என்று வெளியே தவித்து ஏங்கும் சாதாரண ஜனங்கள்.

    காமாட்சியின் மனதில் இத்தனை வெள்ளோட்டங்கள். பின் தாயாரையும் சேவித்து விட்டு மெதுவாகப் பிரகாரத்தைச் சுற்றுகிறாள். இங்கே எழுந்தருளியிருப்பது வைஷ்ணவ துர்க்கை, கண்ணீரோடு துர்க்கை அம்மனின் திருவடிகளில் தலைபதித்து அழுகிறாள். தான் கொண்டு வந்த எண்ணெயை துர்க்கையின் சன்னிதானத்தில் இருக்கும் விளக்கில் ஊற்றுகிறாள். தாயே திருவுள்ளம் இறங்காதா? மறுபடியும் மனமுருகும் பிரார்த்தனை. பின் தக்ஷிணாமூர்த்தியிடம் சென்று அகல் விளக்கில் பஞ்சுதிரி போட்டு நல்ல எண்ணெயை ஊற்றி கண்களில் கண்ணீரோடு, ஓம் குரு பிரம்மா... என்று மெல்லிய குரலில் பாடுகிறாள். ஸ்ரீகுரு ஜெய்குரு என்று மனமுருகிப் பாடுகிறாள்.

    மீண்டும் ஏதோ அழுகை மனம் பிரார்த்தனையில் ஆழ. கண்களை மூடிப் பிரார்த்தனையில் காமாட்சி. தட்சணா மூர்த்தியின் கழுத்தில் இருபதுக்கு மேற்பட்ட வெள்ளை கொண்டை கடலை மாலைகள். முல்லை, மல்லி, ரோஜா, கதம்பம், தாமரை என்று நிறைய பூக்கள் அவரைச் சுற்றி இருக்க, நெற்றியில் சந்தனப் பொட்டும், குங்குமமாக சிரித்தபடி இருக்கிறார். யாரோ மஞ்சள் நிற துணியை தந்திருக்க, அதையும் சார்த்தி இருக்கிறார்கள்.

    என்ன மாமி லேட்? பூசை எல்லாம் முடிஞ்சுடுத்து. அர்ச்சனைகள் முடிஞ்சுடுத்தே. கோவில் குருக்கள் கேட்கிறார்.

    முறுக்கு சுத்தப் போயிருந்தேன். கல்யாண முறுக்கில்லை. சீர் முறுக்கு. சட்டுனு எழுந்து வர முடியலே. முடிக்கறதுக்கு இத்தனை நேரம் ஆச்சு. மெதுவாகச் சொல்கிறாள் காமாட்சி.

    ஏன் மாமி இப்ப தான் சீர் முறுக்கு கடையிலே வாங்கிடறாளே.

    இல்லைப்பா. நம்ப சாம்பு மாமாவுக்குக் கல்யாண ஆர்டர். அதுக்கு நான் சீர் முறுக்கு இருபத்து அஞ்சு. நூறு சாதா முறுக்கு எல்லாம் சுத்தி முடிச்சிட்டு வந்தேன். காத்தால் ஆரம்பிச்ச வேலை இப்பதான் முடிஞ்சுது.

    கொண்டாங்கோ அர்ச்சனை தட்டை வாங்கியவர், குங்குமத் தட்டை நீட்டுகிறார். தொட்டவுடன், நட்சத்திரம் கேட்டவர்... நான் ஒருத்தன்... பாலாஜி பேர்லதானே... என்று மந்திரங்களைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

    கூப்பிய கைகள் கூப்பியபடி, மனம் அதிலேயே உழன்று இறைவனைப் பார்த்தபடியே இருக்க, தன்னையறியாமல் கண்கள் கண்ணீரைப் பொழிய, அர்ச்சனையை முடித்த குருக்கள்,

    அடடே... என்ன மாமி?... ஏன் இப்படி அழறேள்? உங்க பிள்ளை கல்யாணம் தானே கட்டாயம் நடக்கும். அதுக்கு அழுவாளா?

    என்ன இப்படிச் சொல்றேள்? மத்த பசங்க மாதிரியா என் பையன். எல்லோரையும் போல இருந்தா நான் ஏன் கவலைப்படப் போறேன்? எல்லாம் என் தலை எழுத்து.

    மாமி கல்லினுள் தேரை, கருப்பை உயிரைக்கூட காப்பாற்றுகிற கடவுளுக்கு உங்க பையனை கண்ணுக்கு தெரியாதா? பகவான்கிட்டே விட்டுட்டேன் இல்லையா? அவர் பார்த்துப்பார்.

    எங்கே பார்க்கிறார்? இந்த ஆனிக்கு முப்பத்து இரண்டு வயசு. இனிமே எப்ப ஆகும்? எத்தனை வயசு கழிச்சு?

    "மாமி நேரம் வரணும். காலநேரம் வந்தா எல்லாம் மடமடன்னு நடந்திடும். எதுவும் நிக்காது. அவனுக்குன்னு இனிமேயா ஒருத்தி பிறந்திருப்பா? எங்கியாவது இருப்பா. நேரம் வரலே. வராத நேரத்திற்காக கவலைப்படறதை விட்டுட்டு வரப்போகும் நல்ல நேரத்திற்காக சந்தோஷப் படுங்கோ.

    காமாட்சி கண்களைத் துடைத்துக்கொண்டாள். குருக்கள் சொல்வதும் சரிதான். பூச்சி புழுவிலிருந்து கோடானு கோடி உயிரினங்களைக் காப்பாற்றும் அந்தக் கடவுள், தன்னைக் காப்பாற்ற மாட்டாரா? தன் கோரிக்கையை ஏற்க மாட்டாரா? பிரகாரத்தைச் சுற்றுகிறாள். வெளிப் பிரகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு இறையாக வணங்கிக்கொண்டே போகிறாள். நவக்கிரக சன்னதிக்குச் சென்றபின் குரு பகவானுக்கு ஒரு அகல் எடுத்து புது திரி போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றி வைத்து, ஒன்பது முறை சுற்றி விட்டு மெதுவாக வெளியே வருகிறாள். ஒரு ஓரமாகத் தூணின் அருகில் போய் சற்று சாய்ந்தவாறு உட்கார்ந்தாள்.

    கோடி வீட்டு கௌரி வயது இருபத்து ஒன்பது. முகத்தில் வடியும் கறுப்பு மின்ன, தலை மயிருக்கும் தோலின் நிறத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு கறுப்புடன் வருகிறாள். இளமை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுப் போய் விட்டது முகத்தில் தெரிந்தது. எட்டாவதோடு படிப்பு நின்றாகி விட்டது. மேலே படிக்க வசதியில்லை. ரொம்ப ஏழ்மையான குடும்பம் வேறு, வரிசையாக ஐந்து பெண்கள். பிள்ளை வேண்டும் வேண்டும் என்று தவம் இருந்து வரிசையாக ஐந்து பெண்களைப் பெற்றவுடன் தான் அப்பா குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டாராம். உறவுக்காரர்கள் பேசிக் கொள்வதை கேட்டிருக்கிறாள். கௌரியின் தந்தை ஏதோ அரசு அலுவலகத்தில் 'லோயர் டிவிஷன் கிளார்க்காக' இருப்பவர். வருகிற சம்பளத்தில் ஏழு ஜீவன்கள் அதுவும் ஆறும் பெண்கள் என்றால் மிக மிக கடினம்தான். இந்த அழகில் திருமணம் எங்கிருந்து செய்ய முடியும்?

    கௌரி கோவிலை அடி பிரதஷ்ணம் செய்து கொண்டிருக்க 'இந்த பெண் என்ன வேண்டிக்கொள்ளும்.'

    'வேறு என்ன ராஜா மாதிரி புருஷனைக் கொடு என்று வேண்டிக் கொள்ளுமோ. ம்ஹூம் சான்ஸே இல்லை. பணம் இல்லாத குடும்பத்தில் ஒரு பொம்மை ராஜா கூட வர சந்தர்ப்பம் இல்லை. இவள் என் மகனுக்கு கிடைத்தால் கூட போதும் கிடைப்பாளா? தன் மகன் சற்று சிகப்புதான். இவள் அத்தனை வழித்தெடுத்த கறுப்பு இல்லை. தாங்கள் இவர்கள் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மேலானவர்கள். தனக்கு அவளின் தந்தையை விட சற்று அதிக வருமானம்தான்.' எந்தப் பணத்தையும் செலவழிக்காமல் வரும் மருமகளுக்கு பாத்திரச் சீட்டு, நகைச் சீட்டு எல்லாம் கட்டி வருகிறாள். தன் பெண்ணுக்கு சேர்த்து வைப்பது போல் ஒவ்வொன்றாக வாங்கி சேர்த்து வைத்திருக்கிறாள். இத்தனை இருந்தும் தன் மகனுக்கு ஒருவரும் பெண் தரவில்லையே. இந்த சிந்தனையுடன் இருக்கும்போதே கௌரி பிரகாரத்தின் ஒரு மூலையில் அமர்வது தெரிந்தது.

    அம்மா... அம்மா என்னைப் பிடிக்க வரான் என்று சொன்னவாறே ஓடி வந்தவன் அம்மாவின் அருகில் தொப்பென்று விழ, அப்படியே உருண்டு கௌரியின் கால்களுக்கிடையில் கிடக்கிறான் காமாட்சியின் மகன் பாலாஜி.

    *****

    அத்தியாயம் 2

    கௌரி பதறிப்போய் எழுகிறாள். என்ன மாமி, உங்க பிள்ளைக்கு விவஸ்தை வேண்டாம் கண்டிக்கும் குரலில் அவள் கேட்க,

    வாயில் விரலை வைத்துக்கொண்டு எச்சில் ஒழுக, ஹ... ஹ... சிரிக்கிறான் பாலாஜி.

    புதியவர்களைக் கண்டால் வெட்கப்படும் சிறு குழந்தை போல் வெட்கப்படுகிறான். வாயில் விரலை வைத்துக்கொண்டு. அம்மா மடியில் கவிழ்ந்துகொண்டு ஓரக்கண்ணால் கௌரியையே பார்க்கிறான். மறுபடியும் கையால் வாய்பொத்தி தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறான்.

    டேய் பேசாமல் இருடா, காமாட்சி அதட்ட போம்மா என்று சிணுங்குகிறான்.

    நல்ல பிள்ளை. ஏம் மாமி... இத்தை ஏன் கோவிலுக்குக் கூட்டிண்டு வரேள்... ஏதோ நம்ம கஷ்டத்தைச் சொல்லலாம்னு கோவிலுக்கு வந்தா இங்கேயுமா? கௌரி பொரிய.

    காமாட்சியின் கண்களில் கண்ணீர். 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாய்' என்று எழுதினார் திருவள்ளுவர். இவனைப் பெற்றதில் உவக்க முடியுமா?

    ஏய் போடா இங்கே எல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனோ இல்லையோ.

    போம்மா... பாலாஜி தலையை அசைத்து அம்மாவுக்கு பழிப்பு காட்ட...

    டேய் அம்மாவைக் கோபப்படுத்தாதே. அப்புறம் விளாசிடுவேன்.

    மாமி கத்த, போம்மா நீ எப்பவுமே இப்படித்தான் என்றவாறே அவிழ்ந்து கிடந்த வேஷ்டியை கோணாமாணாவென்று சுற்றிக்கொண்டு தலையைச் சிலுப்பியபடி முகத்தை கோணிக் கொள்கிறான். பாலாஜி முகத்தைக் கோணிக் கொண்டதும், பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் வேதனைப்பட்டது.

    டேய் இந்தா காசு போய் சாக்லேட் வாங்கிக்க ஒரு ஐந்து ரூபாய் காசைக் கையில் வைத்தும், ஐயா... காசு... காசு... என்று பாடியவாறே ஓடுகிறான். ஓடியவன் சட்டென்று எதிரே வந்த ஒரு முதியவள் மேல் முட்டிக் கொண்டுவிட, முதியவள் பிலுபிலு என்று பிடித்துக்கொண்டாள். கட்டைல போறவனே. என்று ஆரம்பிக்க, காமாட்சி ஆவேசமாக வருகிறாள்.

    என்னம்மா வாய்க்கு வந்ததைப் பேசறே?

    பேசாமே. எருமை மாடு மாதிரி வந்து உம்பையன் மேலே இடிக்கிறான். பொம்பளைங்கன்னா உரசுவானா?

    ஏம்மா இப்படிப் பேசறே? எம் பையனைப் பத்தி உனக்குத் தெரியாது.

    ஏன் தெரியாது? ஒண்ணும் தெரியாது. தெரியாதுன்னு சொல்லி அதை அசடுன்னு சொல்லி ஏமாத்திகிட்டு இருக்கே? அவன் பொம்பளைங்களை இடிக்கிறான். உம் பிள்ளை விளங்குவானா? நாசமாத்தான் போவான்.

    கைகளை முறித்து சாபம் கொடுக்க,

    காமாட்சி கண்ணீரோடு எழுந்திருக்கிறாள். பெண் புலியாகிறாள்.

    நீ யாரு எம்பையனைப் பத்திப் பேச, போற வயசானா கூட நீ இருக்கணும். சின்னப்பசங்க சாகணுமா?

    என்ன இப்படிப் பேசறே? இத்தனை பெரிய பொம்பளையா இருக்கே. அதான் புள்ளை விளங்காம இருக்கு. முதியவள் பதிலுக்குப் பேச,

    ஏம்மா சண்டை போடறீங்க? இது கோவில். இதை ஏன் பெரிசு படுத்தறீங்க? ஒருவன் கூற,

    விடுங்கம்மா. போங்கம்மா...' இன்னொருவர்

    Enjoying the preview?
    Page 1 of 1